Wednesday, 25 March 2009

"கேபிள்" அண்ணனுக்கு ஒரு பகிரங்க பாடல்.

,பலபேரு பல பேருக்கு பகிரங்க மடல், எழுதுறாங்க அதனாலே நான் ஒரு சேஞ்சுக்கு பகிரங்க பாடல் எழுதலாம்னு முயற்சி செஞ்சேன். சொந்தமா எழுத நமக்கு எங்கு நேரம்? ( மூளைன்னு எழுதற இடத்துலே எப்படி நேரம்னு போட்டு சமாளிச்சேன் பார்த்தீங்களா? இது தான் நேரங்குறது.)

அண்ணன் கேபிள் அவர்களுக்கு இந்த பாடல்களை சமர்பிக்கிறேன்...

இது ஒரு புகழ் பெற்ற பாடல்.

அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே...
அதை சொன்னா............ வெட்ககேடு
அதை சொல்லாட்டி....... மானகேடு


உங்க உங்க இஷ்டம் போலே
பல "widget" சேர்துட்டீங்க.
ஒன்னரை செகண்டில் லோ......டாறதை
முக்கா மணி ஆக்கிபுட்டீங்க.


அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே
அதை சொன்னா ............ வெட்ககேடு
அதை சொல்லாட்டி ....... மானகேடு

பதிவு பக்க மூலையிலே சோடி ஒன்னு சேர்ந்திருச்சு..

அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே


இதன் முழு வடிவம் தெரியாததால் பாதியிலேயே நிற்கிறது. அண்ணன் கேபிள் மீது ஆழ்ந்த அன்பு (காண்டு?!?! ) உள்ளவர்கள் முழுப்பாடலையும் கொடுத்து உதவினீர்கள் என்றால் நல்லா இருக்கும்.
அடுத்து அண்ணன் கேபிளை பாராட்டி ஒரு பாடல் ( சத்தியமா. பாராட்டிதாங்க...)

பதிவுக்கு பெயர்தான் கேபிள்
அந்த பதிவினில் எங்கே கேபிள்
உன் பிரிவினில் தேடுதே கேபிள்
உன் உறவிற்கு தானே கேபிள்


நீ போட்ட பதிவை நான் படித்து கண்டேன் கேபிள்.
நீ காட்டும் அன்பால் நான் நீக்கி கொண்டேன் கேபிள்.
நீ சொன்ன மொக்கை படம் பார்த்து துடித்தேன் கேபிள்.
நீ வந்த பின்னே நான் இழந்து நின்றேன் கேபிள்.


எல்லோரும் வாழ்வில் தேடிடும் கனெக்சன் கேபிள்.
மக்கள் உயிரோடு கலந்து வாழ்ந்திடும் கனெக்சன் கேபிள்.
எது வந்த போதும் மறவாத கனெக்சன் கேபிள்.
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே கேபிள்

வில்லு படம் பார்த்த சிலகாலம் போதும் கேபிள்
மண்ணோடு மறையும் நாள்வரை பாறேன் கேபிள்
கோலிவுட்டு வடிக்கும் நீர் என்று மாறும் கேபிள்
பொன் ஏடு எழுதும் உன் படம் வாழ்த்தும் கேபிள்.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெருந்தன்மையுடன் அனுமதி தந்த அண்ணன் திரு.கேபிள்சங்கர் அவர்களுக்கு நன்றி.

உள்ளத்தை அள்ளித் தா படத்திலே கவுண்டமணி சொன்ன மாதிரி நான் இங்கே என்னிட்டே இல்லாத மூளையெல்லாம் தேடி செலவழிச்சு எழுதி இருக்கேன். பணம் தான் தரமாட்டீங்க அட்லீஸ்ட் பின்னூட்டமாவது போட்டுட்டு போங்க கண்ணுங்களா.....
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

30 comments:

பார்சா குமார‌ன் said...

//பணம் தான் தரமாட்டீங்க அட்லீஸ்ட் பின்னூட்டமாவது போட்டுட்டு போங்க கண்ணுங்களா.....//

போட்டாச்சு!!!
போட்டாச்சு!!!
போட்டாச்சு!!!

நையாண்டி நைனா said...

வருகை தந்து, பின்னூட்டமும் போட்ட குமரன் அவர்களே வருக வணக்கம் மற்றும் நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏன் நண்பா கேபிள் மேல இப்படி ஒரு கொலைவெறி?

கார்த்திகைப் பாண்டியன் said...

//வில்லு படம் பார்த்த சிலகாலம் போதும் கேபிள்
மண்ணோடு மறையும் நாள்வரை பாறேன் கேபிள்
கோலிவுட்டு வடிக்கும் நீர் என்று மாறும் கேபிள்
பொன் ஏடு எழுதும் உன் படம் வாழ்த்தும் கேபிள்//

அவ்வ்வ்வ்வ்... முடியல

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நையாண்டி நைனா said...

/*ஏன் நண்பா கேபிள் மேல இப்படி ஒரு கொலைவெறி?*/

கொல வெறி இல்லை நண்பா... பாசம், அதீத பாசம்.

வெகு விரைவில் உங்களுக்கும் ஒரு பாட்டு போடுறேன் நண்பா...

நையாண்டி நைனா said...

/*//வில்லு படம் பார்த்த சிலகாலம் போதும் கேபிள்
மண்ணோடு மறையும் நாள்வரை பாறேன் கேபிள்
கோலிவுட்டு வடிக்கும் நீர் என்று மாறும் கேபிள்
பொன் ஏடு எழுதும் உன் படம் வாழ்த்தும் கேபிள்//

அவ்வ்வ்வ்வ்... முடியல*/

இதுக்கே இப்படியா....???

கார்த்திகைப் பாண்டியன் said...

//வெகு விரைவில் உங்களுக்கும் ஒரு பாட்டு போடுறேன் நண்பா...//

ரொம்ப நன்றி.. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. ஆனா விஜய் பாட்டு மட்டும் போட்டுராதீங்கோவ்வ்வ்...

நையாண்டி நைனா said...

/*ரொம்ப நன்றி.. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. ஆனா விஜய் பாட்டு மட்டும் போட்டுராதீங்கோவ்வ்வ்...*/

இப்படி சொன்னா......
நான் வேணுமின்னே டாக்டர் பாட்டைத்தானே தேடுவேன் ஹி.. ஹி... ஹி

narsim said...

கலக்கல் நக்கல் நைனா.. பிண்றீங்களே தல.. கேபிள் பதிலைக்காணோமே?

Cable Sankar said...

ஆனாலும் ரொம்பதான் நெஞ்சை நக்கிட்டிங்க நைனா.. மிக்க நன்றி.. நீஙக் சொன்ன விஷயங்களை கரெக்ட் பண்றேன்.

சொல்லரசன் said...

//வில்லு படம் பார்த்த சிலகாலம் போதும் கேபிள்//

வில்லு லொள்ளு விடுவதாக இல்லையா?

சொல்லரசன் said...

//*ஏன் நண்பா கேபிள் மேல இப்படி ஒரு கொலைவெறி?*//

கொல வெறி இல்லை நண்பா... பாசம், அதீத பாசம்.

வெகு விரைவில் உங்களுக்கும் ஒரு பாட்டு போடுறேன் நண்பா...//

கா.பா வை பற்றி பாடலா? சீக்கிரம் போடுங்கள்

நையாண்டி நைனா said...

/*கலக்கல் நக்கல் நைனா.. பிண்றீங்களே தல.. கேபிள் பதிலைக்காணோமே?*/

வருகை புரிந்த அண்ணன் திரு. நர்சிம் அவர்களுக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*ஆனாலும் ரொம்பதான் நெஞ்சை நக்கிட்டிங்க நைனா.. மிக்க நன்றி.. நீஙக் சொன்ன விஷயங்களை கரெக்ட் பண்றேன்.*/

நன்றி அண்ணே....
உங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றால் செய்துவிடுங்கள்.

நையாண்டி நைனா said...

/*வில்லு லொள்ளு விடுவதாக இல்லையா?*/

அப்படிதான் போலே இருக்கு.
நல்லாவேளை நான் அந்த படத்தை பார்க்கவில்லை.

நன்றி.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//*ஏன் நண்பா கேபிள் மேல இப்படி ஒரு கொலைவெறி?*//

கொல வெறி இல்லை நண்பா... பாசம், அதீத பாசம்.

வெகு விரைவில் உங்களுக்கும் ஒரு பாட்டு போடுறேன் நண்பா...//

கா.பா வை பற்றி பாடலா? சீக்கிரம் போடுங்கள்*/

கண்டிப்பா போடுவோம். ஆனா அது அவரை பழிவாங்கவா இல்லை என்னை பழிவாங்கவா.?

அத்திரி said...

)))))))))))

Suresh Kumar said...

பலபேரு பல பேருக்கு பகிரங்க மடல், எழுதுறாங்க அதனாலே நான் ஒரு சேஞ்சுக்கு பகிரங்க பாடல் எழுதலாம்னு முயற்சி செஞ்சேன்.//////////////////


பாடல் நல்லா இருக்கு நண்பரே

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
)))))))))))*/

அண்ணாச்சி உங்க வருகைக்கு நன்றி அண்ணாச்சி.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
பலபேரு பல பேருக்கு பகிரங்க மடல், எழுதுறாங்க அதனாலே நான் ஒரு சேஞ்சுக்கு பகிரங்க பாடல் எழுதலாம்னு முயற்சி செஞ்சேன்.//////////////////


பாடல் நல்லா இருக்கு நண்பரே*/

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி நண்பரே.

கோவி.கண்ணன் said...

:)

மும்பையில்(ஒரு) கோடை காலம் !

thevanmayam said...

நைனா!
கலக்குங்க!

thevanmayam said...

பதிவில்
குத்தல்,
நக்கல்,
பாராட்டு
எல்லாம்
சரளமா
வந்து
இருக்கு!

தண்டோரா said...

நைனா... நீங்க "கேபிள் தாசனா?" வஞ்சபுகழ்ச்சி அணி மாதிரி தெரியுதே?

" உழவன் " " Uzhavan " said...

எங்க கேபிளில் எல்லா புது படங்களும் போடுறாங்க. அதனால எனக்கு எங்க கேபிள பிடிக்கும். ஸ்லம் டாக் கூட கேபிள்லதான் பார்த்தேன் :-)

நையாண்டி நைனா said...

/*கோவி.கண்ணன் said...
:)

மும்பையில்(ஒரு) கோடை காலம் !
*/

அண்ணே, நன்றி. நன்றி.. நன்றி...

நையாண்டி நைனா said...

/*
thevanmayam said...
நைனா!
கலக்குங்க!

thevanmayam said...
பதிவில்
குத்தல்,
நக்கல்,
பாராட்டு
எல்லாம்
சரளமா
வந்து
இருக்கு!
*/

வருகை மற்றும் கருத்திற்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
நைனா... நீங்க "கேபிள் தாசனா?" வஞ்சபுகழ்ச்சி அணி மாதிரி தெரியுதே?*/

நான் கேபிள் தாசநெல்லாம் கிடையாது. நமது அன்பு பதிவர் "கேபிள் சங்கர்" அவர்களின் அன்பிற்கு பாத்திரமான ஒரு நண்பன்.

வருகை மற்றும் கருத்திற்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/* " உழவன் " " Uzhavan " said...
எங்க கேபிளில் எல்லா புது படங்களும் போடுறாங்க. அதனால எனக்கு எங்க கேபிள பிடிக்கும். ஸ்லம் டாக் கூட கேபிள்லதான் பார்த்தேன் :-)*/

அண்ணே நான் நம் நண்பர் "கேபிள் சங்கர்" மற்றும் கேபிள் கனெக்சன் இரண்டையும் வைத்து தான் எழுதி இருக்கேன். வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அண்ணா.