Thursday, 12 March 2009

பதினாறு வயது பையனாக இருப்பதனால், வரும் பதினோரு சங்கடங்கள்!

1) நிச்சயமாக பதில் கடிதம் வரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, பதில் கடிதம் வரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் காதல் கடிதம் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) காதல் கடிதம் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்த பெண்ணின், குடும்பத்தை சார்ந்த 'டெரர்' செய்திகள் ஏதாவது குறிப்பாகவோ, தகவலாகவோ அறிய நேர்கிறது.

3) "எந்த பிகரையும் இரண்டொரு நாளில் மடித்து விடுவேன். பாருங்க. மடிச்சுட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல அல்வாவும் குடுத்துடுவேன்" – இது பதின்ம வயதில் இருக்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, பதின்ம வயதில் பிகருக்கு ஏங்கி இருப்பவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4) லெட்டர் கொடுத்து பல்பு வாங்கியவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர், "லெட்டர் கொடுத்த வீரன்" மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘அந்த சுஜாதா பொண்ணுகிட்டே பல்பு வாங்கியவர்' என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘பிகர் செட்டாகாத, டொக்கு பய' என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் லவ் லெட்டர் கொடுத்த பெண்ணிடம், இன்னொருவர் லவ் லெட்டர் கொடுக்கும் போது "நமக்கு பின்னாடியும் ரெண்டு பேரா?" என்ற சந்தோச குழப்பத்திற்கு அந்த அட்டு பிகரை ஆளாக்குகிறோம். அல்லது அவள் அந்த லெட்டரையும் வாங்கி கொண்டால் 'இரண்டு பேருக்கு பல்பு கொடுத்த' பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) வாங்கிய லவ் லெட்டரை தூர எறிவது, கிழித்து எறிவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல், "பிடிக்க வில்லை என்றால், என்னிடம் கொடுங்கள் இல்லை என்றால் உங்க தங்கையிடமோ, தோழியிடமோ கொடுத்து பதில் வாங்கி தாருங்கள்" என்று வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் தூர எறிவது, கிழித்து எறிவது போன்றவற்றை செய்தால், ‘இந்த அட்டு பிகருக்கு இருக்கிற நெனைப்பா பார்ரா' என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7) நம்மீது காதல் கொண்டு, பதில் தந்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து, "அடச்சே... இவளை விட சூப்பர் பிகருகிட்டே கொடுத்திருக்கலாமோ" என்று நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ள நேர்கிறது. உண்மையாகவே பிடிக்காமல், கிழித்தெறிந்து விட்டால் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) லெட்டர் கொடுத்து திரும்ப பதில் வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் லெட்டர் கொடுக்க, எழுத ஐடியா கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் மறுக்க, அட்வைசு கொடுக்க அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பன் மூலமா லெட்டர் கொடுத்தால் அந்த நண்பன், அந்தப் பெண், நட்பு, காதல், அதற்காக நாம் செலவிட்ட பணம், ஐயிந்தையும் நாம் இழக்க நேர்கிறது.

10) உண்மையாக காதலித்தால் உடனே எதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து செட்டப் செய்திருந்தால், அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாக... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நல்ல காதல் என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல காதலை கல்யாணத்தில் முடிப்பதால் அந்த நல்ல பெண் மூலமாக நம் பெற்றோருக்கு கிடைக்கும் "ராயல்டிக்கு" நாம் தடையாக இருக்கிறோம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
படிச்சிட்டீங்க.....! அப்படியே நீங்களாவது ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போவீங்க, அந்த பொண்ணு மாதிரி ஏமாத்தாமே என்று எண்ணுகிறேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

47 comments:

கோவி.கண்ணன் said...

:) பதிவை பங்கு(க்கு) போட்டாச்சா ?
:)

Ungalranga said...

//நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பன் மூலமா லெட்டர் கொடுத்தால் அந்த நண்பன், அந்தப் பெண், நட்பு, காதல், அதற்காக நாம் செலவிட்ட பணம், ஐயிந்தையும் நாம் இழக்க நேர்கிறது.//

ஆமாப்பு.. ஆமா..
அவ்வ்வ்வ் :((

நையாண்டி நைனா said...

/*கோவி.கண்ணன் said...
:) பதிவை பங்கு(க்கு) போட்டாச்சா ?
*/

ஹி... ஹி...ஹி...
ஆமாண்ணே
வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/* ரங்கன் said...
//நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பன் மூலமா லெட்டர் கொடுத்தால் அந்த நண்பன், அந்தப் பெண், நட்பு, காதல், அதற்காக நாம் செலவிட்ட பணம், ஐயிந்தையும் நாம் இழக்க நேர்கிறது.//

ஆமாப்பு.. ஆமா..
அவ்வ்வ்வ் :((
*/

வருகைக்கு நன்றியப்பு...

ஆண்ட்ரு சுபாசு said...

நல்ல காதல் என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல காதலை கல்யாணத்தில் முடிப்பதால் அந்த நல்ல பெண் மூலமாக நம் பெற்றோருக்கு கிடைக்கும் "ராயல்டிக்கு" நாம் தடையாக இருக்கிறோம்//

ஆமா..Truth..

ஆண்ட்ரு சுபாசு said...

நல்ல காதல் என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல காதலை கல்யாணத்தில் முடிப்பதால் அந்த நல்ல பெண் மூலமாக நம் பெற்றோருக்கு கிடைக்கும் "ராயல்டிக்கு" நாம் தடையாக இருக்கிறோம்//

ஆமா..Truth..

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆரம்பிச்சுட்டீங்களா .. போச்சுடா.. இன்னொரு எதிர்பதிவு சீசனா..

//நாம் லவ் லெட்டர் கொடுத்த பெண்ணிடம், இன்னொருவர் லவ் லெட்டர் கொடுக்கும் போது "நமக்கு பின்னாடியும் ரெண்டு பேரா?" என்ற சந்தோச குழப்பத்திற்கு அந்த அட்டு பிகரை ஆளாக்குகிறோம். அல்லது அவள் அந்த லெட்டரையும் வாங்கி கொண்டால் 'இரண்டு பேருக்கு பல்பு கொடுத்த' பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்//

இது பக்கா நையாண்டி நைனா..

சொல்லரசன் said...

"பதினாறு வயது பையானாக இருப்பதனால், வரும் பதினோரு சங்கடங்கள்!"
பதிவால் மீண்டும் தனது சுற்று வட்ட பாதைக்குநைனா திரும்பிவிட்டார்.
இது என்ன பரிசல் ஜுரமா

Mahesh said...

ஏண்ணே நீங்களுமா? அவ்வ்வ்வ்...
நம்ம கடைப்பக்கம் எட்டிப்பாருங்க... அங்க நான் வேற..... அவ்வ்வ்வ்...

ஆனா மேட்டர் ஜூப்பர்...

Mahesh said...

தலைப்பை கொஞ்சம் திருத்திக்கோங்க...

"பையானாக"ன்னு இருக்கு !!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்ம்! என்ன எல்லா எடத்துலயும் 11 ரொம்ப விஷேடமா இருக்கு?

முரளிகண்ணன் said...

நையாண்டி நைனா

பேருக்கேத்த பதிவு

வால்பையன் said...

//அந்த நல்ல காதலை கல்யாணத்தில் முடிப்பதால் அந்த நல்ல பெண் மூலமாக நம் பெற்றோருக்கு கிடைக்கும் "ராயல்டிக்கு" நாம் தடையாக இருக்கிறோம்.//

நகைச்சுவையான கோடிங்!
எல்லா பாயிண்ட்ஸும் ரசிக்க தக்கவாறு இருந்தது!

குவாட்டர் கோயிந்தன் said...

நான் குவாட்டர் அடிக்க காரணமே, இந்த மாதிரி ஒரு பதிவை படிக்காதது தான்.

Anonymous said...

நொந்த அனுபவமோ?அடச்சீ, சொந்த அனுபவமோ?

இப்படிக்கு
நொந்த தேவதாஸ்.

நையாண்டி நைனா said...

/*ஆண்ட்ரு சுபாசு said...
நல்ல காதல் என்பதால் ... "ராயல்டிக்கு" நாம் தடையாக இருக்கிறோம்//

ஆமா..Truth..*/

வருகைக்கு நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
ஆரம்பிச்சுட்டீங்களா .. போச்சுடா.. இன்னொரு எதிர்பதிவு சீசனா..

//நாம் லவ் லெட்டர் கொடுத்த பெண்ணிடம், ...... பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்//

இது பக்கா நையாண்டி நைனா..*/

வருகை மற்றும் கருத்துக்கு, ரொம்ப நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
"பதினாறு வயது பையானாக இருப்பதனால், வரும் பதினோரு சங்கடங்கள்!"
பதிவால் மீண்டும் தனது சுற்று வட்ட பாதைக்குநைனா திரும்பிவிட்டார்.
இது என்ன பரிசல் ஜுரமா*/

வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*Mahesh said...
ஏண்ணே நீங்களுமா? அவ்வ்வ்வ்...
நம்ம கடைப்பக்கம் எட்டிப்பாருங்க... அங்க நான் வேற..... அவ்வ்வ்வ்...

ஆனா மேட்டர் ஜூப்பர்...*/

நம்ம பொழப்பே அது தானே....
உங்க கடை சரக்கும் நல்ல தான் இருந்துச்சு, சும்மா அடிச்சு ஆடுங்க.

நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*Mahesh said...
தலைப்பை கொஞ்சம் திருத்திக்கோங்க...

"பையானாக"ன்னு இருக்கு !!*/

திருத்தியாச்சு.
சுட்டியதற்கு மிக நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*ஜோதிபாரதி said...
ம்ம்ம்ம்! என்ன எல்லா எடத்துலயும் 11 ரொம்ப விஷேடமா இருக்கு?*/

ஆமாம். அண்ணா.
"ஊரோடு ஒத்து வாழ்."

வருகைக்கு நன்றி அண்ணா.

நையாண்டி நைனா said...

/*முரளிகண்ணன் said...
நையாண்டி நைனா

பேருக்கேத்த பதிவு*/

வருகை மற்றும் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
//அந்த நல்ல காதலை கல்யாணத்தில் முடிப்பதால் அந்த நல்ல பெண் மூலமாக நம் பெற்றோருக்கு கிடைக்கும் "ராயல்டிக்கு" நாம் தடையாக இருக்கிறோம்.//

நகைச்சுவையான கோடிங்!
எல்லா பாயிண்ட்ஸும் ரசிக்க தக்கவாறு இருந்தது!*/

வருகை மற்றும் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*குவாட்டர் கோயிந்தன் said...
நான் குவாட்டர் அடிக்க காரணமே, இந்த மாதிரி ஒரு பதிவை படிக்காதது தான்.*/

நண்பரே வருகைக்கு நன்றி.
இது பாராட்டா, இல்லை குத்தா..?

நையாண்டி நைனா said...

/* Anonymous said...
நொந்த அனுபவமோ?அடச்சீ, சொந்த அனுபவமோ?

இப்படிக்கு
நொந்த தேவதாஸ்.*/

பதிவ படிச்சி நொந்து போனீங்களா, இல்லை பிகரினாலா???
ஆவ்வ்வ்வ்வ்......

குடுகுடுப்பை said...

சூப்பரப்பு.

cheena (சீனா) said...

பதினொன்ன எண்களில் இருந்து ஒழித்து விட வேண்டும். பத்துக்கு அப்புறம் பத்து - அ. அப்புறம் பன்னிரண்டு - இப்படி வச்சிக்கலாம்

புருனோ Bruno said...

:) :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நையாண்டி நைனா said...

மலேசியன் என்ற பெயரில் பின்னூட்டியுள்ள, அனானியே...
வருகைக்கு நன்றி.

ஆனால் நண்பரை மரியாதை குறைவாக விளிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. அவர் உங்களுக்கும் நண்பர் என்றால், நீங்கள் அவரது தளத்திலோ, அவர் முன்னிலையிலோ உரிமையுடன் பேசிக்கொள்ளுங்கள். இங்கே வேண்டாமே.

அதனால் இங்கே உள்ள உங்கள் பின்னூட்டத்தை நீக்குகிறேன்.

நையாண்டி நைனா said...

/* புருனோ Bruno said...
:) :)*/

வாங்க டாக்டர் வாங்க...
உங்கள் ஆதரவிற்கும், வருகைக்கும் நன்றி.

நையாண்டி நைனா said...

/* cheena (சீனா) said...
பதினொன்ன எண்களில் இருந்து ஒழித்து விட வேண்டும். பத்துக்கு அப்புறம் பத்து - அ. அப்புறம் பன்னிரண்டு - இப்படி வச்சிக்கலாம்*/

வருகைக்கு நன்றி,

சரி... உங்களுக்கு ஏன் "11" மேலே இப்படி ஒரு காண்டு.

நையாண்டி நைனா said...

/*குடுகுடுப்பை said...
சூப்பரப்பு.*/

எல்லாம் உங்க அருள் வாக்கு தான் குடுகுடுப்பையாரே...

கூட்ஸ் வண்டி said...

மிக அருமை, மிக அருமை...

Sanjai Gandhi said...

உங்கள் அனுபவம் மிக நன்றாக இருக்கிறது. :))

Unknown said...

:)) Super.. :))

narsim said...

நைனா.. கலக்கல்..

narsim said...

11(ம்) நச்

நையாண்டி நைனா said...

/*SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
உங்கள் அனுபவம் மிக நன்றாக இருக்கிறது. :))*/

வருகைக்கு மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*ஸ்ரீமதி said...
:)) Super.. :))*/

வருகை மற்றும் கருத்துக்கு, ரொம்ப நன்றி.

நையாண்டி நைனா said...

/* narsim said...
நைனா.. கலக்கல்..
11(ம்) நச்*/

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி தல...

மதிபாலா said...

நடத்துங்க நடத்துங்க...பதினொன்னு முடிஞ்சி பண்ணெந்து எப்போ?? அப்ப வந்து நான் ஒரு பதிவு போடோனும்....!

நையாண்டி நைனா said...

/*மதிபாலா said...
நடத்துங்க நடத்துங்க...பதினொன்னு முடிஞ்சி பண்ணெந்து எப்போ?? அப்ப வந்து நான் ஒரு பதிவு போடோனும்....!*/

வருகைக்கு நன்றி.

நாங்களும் உங்க பதிவை ஆர்வமா எதிர் பார்க்கிறோம்.

david santos said...

Great posting, my friend, great!!!
Congratulations!!!!
Have a nice week.

"உழவன்" "Uzhavan" said...

பொதுவா எல்லோரும் 16 வயசுல 11 வது தான் படிப்போம்.. அதனாலதான் 11 சங்கடங்கள் வருதோ??? :-)))

நையாண்டி நைனா said...

/*david santos said...
Great posting, my friend, great!!!
Congratulations!!!!
Have a nice week*/

Thank you very much for your visit and comments.

நையாண்டி நைனா said...

/* " உழவன் " " Uzhavan " said...
பொதுவா எல்லோரும் 16 வயசுல 11 வது தான் படிப்போம்.. அதனாலதான் 11 சங்கடங்கள் வருதோ??? :-)))*/

அட ... இப்படி கூட ஒன்னு இருக்கா....

வருகைக்கு நன்றி. நன்றி.