Tuesday 1 December 2009

வேட்டை ஆரம்பிச்சிடுச்சி.. டோய்...


உடைத்தது எதுவென்று
தெரியாமலும்
உடைத்தது தீர்ந்ததென்று
அறியாமலும்
இன்னமும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்
உருண்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னார்கள் என்று சொல்ல
இயல்பாய் ஒரு பதத்தைத் தேடி
போதையின் சுழலில் சிக்கித் தவிக்கிறேன்.
குடிகாரரின் குழந்தைகள் என்கிறார்கள் சிலர்.
அதுவாயின்
குடிகாரனுக்கு உடனடியாய் தேவை
மூனு கிலோ அரிசியும்
முன்னூறு ரூபாயும்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *



"எம்.கே.டி".யுடன் வந்தேன்.
தந்தேன்.
முகம் சுளித்துக் கொண்டு வந்தாள்
"சிவாஜி கணேசனை"
தத்துக் கொடுத்தேன்.
சோர்ந்து போய் வந்தாள்.
இவனை விட்டு "ஜெமினியை" பிடியென்றேன்
சிவனே என்று திரும்பினாள்.
முன்னரே
"கமல் ஹாசனை" தந்திருந்தால்
முத்தமிட்டிருக்கலாம்
என்றேன் நண்பனிடம்.
"விஜய்" என்றான் அவன்..
நான் செருப்பணிந்த பெண்ணிடம் பேசியதை
நினைவுப்படுத்திவிட்டு திரும்பினேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிஸ்கி:
"அது என்னடா.. உ... ஊ... ?"
" சரக்கு போட்டு ஊதுரியா...."
"இல்லே.. வேட்டை ஆரம்பிச்சாச்சு... அதான் சங்கு ஊதுறேன்..."
"யாருக்கு..?"
"யாருக்கோ!"

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
"சூரையாடல்" போட்டி ஆரம்பம் ஆகி விட்டது... அதற்க்கு மக்கள் சூளுரைத்து களம் காண புறப்பட்டு விட்டார்கள்... அதனால் நானும் எனது... மேற்கண்ட துதி பாடலுடன் களம் இறங்கியாச்சு....

ஒ... நான் இன்னும் போட்டிய பத்தி சொல்லவே இல்லே பாருங்க... போட்டி ரொம்ப சிம்பிள். இது எங்கே இருந்து சூரையாடப்பட்டதுன்னு கண்டு பிடிச்சி நீங்க மனசுக்குள்ளே வச்சிக்கணும்... பின்னூட்டத்திலே என்னை மட்டும் பாராட்டி பின்னூட்டம் போடணும்... யாரும் ரொம்ப அதிகம் பின்னூட்டம் போட்டிருக்காங்களோ அவங்களுக்கு...... அஸ்க்கு புஸ்க்கு... பரிசு பின்னர் அறிவிக்கப்படும்...


"வேட்டை ஆரம்பிச்சிடுச்சி.. டோய்..."



12 comments:

மணிஜி said...

டாய்...........
-ரமேஷ் வைத்யா
(தண்டோரா அலுவலகத்திலிருந்து)

அ.மு.செய்யது said...

ஹா ஹா...சிரிச்சி மாளல..

குறிப்பா இந்த "சூரையாடல்" வார்த்தைப் பிரயோகம்.

ஸ்டார்ட் மீஜிக்.

பெசொவி said...

//போட்டி ரொம்ப சிம்பிள். இது எங்கே இருந்து சூரையாடப்பட்டதுன்னு கண்டு பிடிச்சி நீங்க மனசுக்குள்ளே வச்சிக்கணும்...//
ஓ, அங்கே இருந்துதானா? ( மனசுல வச்சிகிட்டேன்). நீங்க ரொம்ப நல்லவருதான். (பாராட்டியும் பின்னூட்டம் போட்டுட்டேன்.)
மன்னா.......அரசே......பரிசு எங்கே?(...மொதல்ல இந்த பால்காரன் பாக்கியக் குடுத்துடணும்)

cheena (சீனா) said...

நல்லாருக்கு கவிதை - பரிசு எங்கே ( அப்புறம் விடையச் சொல்றேன் )

நல்வாழ்த்துகள்

Anbu said...

:-)))

VISA said...

:)))))))))))

Unknown said...

//.. பின்னூட்டத்திலே என்னை மட்டும் பாராட்டி பின்னூட்டம் போடணும். //

நைனா வாழ்க..

நைனா வாழ்க..

நைனா வாழ்க..

நைனா வாழ்க..

நைனா வாழ்க..

.

.

.

.

நைனா வாழ்க..

//.. யாரும் ரொம்ப அதிகம் பின்னூட்டம் போட்டிருக்காங்களோ ..//

இது போதுமா?

Unknown said...

இப்போதான் ஒரிஜினல் கவிதைய படிச்சேன்.. :-)

ஆ.ஞானசேகரன் said...

பரிசு என்னான்னு சொல்லுங்க நைனா>.. ஆனா நல்லாயிருக்கு

கோவி.கண்ணன் said...

//இது எங்கே இருந்து சூரையாடப்பட்டதுன்னு கண்டு பிடிச்சி நீங்க மனசுக்குள்ளே வச்சிக்கணும்... பின்னூட்டத்திலே என்னை மட்டும் பாராட்டி பின்னூட்டம் போடணும்...//

:)

ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுகிறேன். தொடர்பில்லை என்று சொல்லக் கூடாது.

"போட்டியில் வெல்ல வாழ்த்துகள் !"

Jawahar said...

//பயபுள்ளே அங்கே, அப்படி என்ன? ஆராச்சி பண்ணுது???//

பிரியாமணியும் சிந்தால்தான் உபயோகிக்கராங்களான்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம்!

http://kgjawarlal.wordpress.com

மேவி... said...

uncle satyamaa mudiyala....

yen youth madiri iththanai salambalu....

he he he he he