Friday, 27 November 2009

சரக்கே உன்னை ஆராதிக்கிறேன்...போதை என்பதற்கு சரியான இலக்கணம் எது?அது நம் பார்வையை பொறுத்த விஷயம்.. எனக்கு பதிவுகள் மிகவும் பிடிக்கும்.. என் நண்பன்.. என்னா ரசனைடா உனக்கு? வேலை வெட்டி இல்லாமே போடுறது... என்பான்.. சற்றே தீவிரமாய் சிந்தித்து(?) இடதுசாரி, வலதுசாரி அப்பப்ப, ரம்பா சாரி சிலுக்கு சாரி... (சாரி நான் கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேன்...) என உரித்தெடுத்து எழுதி இருப்பார்கள், அவர்கள் (உரிமைதான்) அதுதான் ஒரு வித்தியாசமான அப்பீலை அவர்களுக்கு (தோ..பார்டா) கொடுத்திருக்கும்) லக லக லக..... தளத்தின் நையாண்டி நைனாவை "அவதாரில்" பார்த்தால் கேவலமாக இருப்பார். (ஹேய்... மிஸ்டர் பீன், கல்ல கொண்டு அடிக்காதே... நைனா பாவம்) ஆனால் நேரில்..? மேன்லி & மெஜஸ்டிக்... (ஹேய்... மிஸ்டர் நைனா, சொல்ல கொண்டு அடிக்காதே... பதிவர்கள்.. பாவம்.) ஏன்? 'டங்கள் அன் டங்களில்' எவர்சில்வர் பாத்திரம் எனக்கு அகோரமாய் இருந்தது.ஆனால் என் வீட்டு மண்சட்டி.. அது அழகு..ஒரு விளம்பர படப்பிடிப்பில் சிறந்த கவிஞர் விருது பெறாத அண்ணன் தண்டோரா அவர்களின் புகைப்படம் பார்த்தேன். மிக எளிமையான கிராமத்து இளைஞன்(?) முகம். வலிகள் தாண்டி கிடைத்தவெற்றியின் தாக்கம் அவர் முகத்தில் ஜொலித்தது.[இப்ப அண்ணி உங்களை அடிக்குறதை நிறுத்திட்டாங்களா அண்ணா... ஓ....... இது பொது தளமா.... மன்னிக்க.. அப்புறமா தனியா இருக்கப்ப... கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை எடுத்து வச்சிக்கிட்டு.. 108 க்கு போன் போடுங்க... (கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு நன்றி... இல்லேன்னா நானும்லோ போய் அடி வாங்கணும்...)] அப்படியொரு களை ..அந்த தன்னடக்கமான ,பெருமிதம் கலந்த மெல்லிய புன்னகையில் பேரழகாய் தெரிந்தார்.

போதையான விஷயங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்..பதிவு, எதிர் பதிவு, பின்னூட்டம், புண்ணூட்டம், கவுஜை, எதிர் கவுஜை, மொக்கை, மைனஸ் ஓட்டு, எதிர் வினை, தொடர் பதிவு, கதை போட்டி, கவிதை போட்டி, பலாப்பட்டறைகள இன்னும் இத்யாதிகள்.. ஆனால் திருப்தியே வரவில்லை. நண்பர் ஒருவர் சொன்னார். பக்கத்து ஊரில் ஒரு வி'அலம்பரக்காரர்' இருக்கிறார், அவருடன் ஒரு நாள் கழித்து விட்டு வா..

வி'அலம்பரக்காரரின்'எளிமையான அறை.... நாலைந்து ஆட்டு குட்டிகள், கோழிகள், ஒரு நாய். வேறு மனிதர்கள் இல்லை... (அவரு என்னிக்கு கவிதை எழுத ஆரம்பித்தாரோ அன்னிக்கு சுவரு ஏறி குதிச்சு ஓடி காணாமே போனவங்கதானாம்...)அப்புறம் ஒரு ரகசியம்.... அலமாரியின் பின்புறம், யாரோ ஒரு ஆங்கில பெண்மணி போஸ் கொடுத்து இருக்க, பளபள காகிதத்தில்... வெளிநாட்டு அச்சில்...(உங்களுக்கு ஏன் வடியுது எச்சில், அஸ்க்கு புஸ்கு... நீங்க எதிர் பார்க்குற புத்தகம் இல்லே...) கவிதை புத்தகம், இலக்கிய புத்தகம், வரலாற்று புத்தகம். "டேமிக்கோ படாக்கோவ்", "புஸ்க்கன் மிஸ்டா சூங்" போன்று வாயிலே நுளையாதது எல்லாம் அதுக்கு பேராம்.

அவருக்கு எழுபது வயதிருக்கலாம். ஆனாலும் "யூத்து" என்று அவரை சேர்ந்தவர்கள் சொல்லி "கொல்வார்கள்", இவரிடம் என்ன போதைய காண்பது என்று அந்த அறை.. விட்டு வெளியேறி விட்டேன்..அன்றைய தினம் பொழுது சாய்ந்தது... பாருக்கு கிளம்பினேன்.. அந்த மாலையில், அந்தி வேளையில் எதுவும் அழகாய்த்தான் இருந்தது... ஒரு மரத்தடி. அந்த "யூத்தை" பார்த்தேன்.. அவரா இவர்? என்னால் நம்பமுடியவில்லை.. ஒழித்து வைத்திருந்த ஒரு பேரல் சரக்கை ஒற்றை ஆளாய் முடித்து கொண்டிருந்தார்.. "கொலை வெறி" ராகத்துடன் ஏதோ ஒரு டப்பாங்குத்து பாடல்.. செவி கிழிந்தது... அவர் தலைக்கு பின்னால் கதிரவன்.. என் கோணத்தில் இவர் குரல் "இனிமை" தாங்காது... ஆதவன் அரண்டு ஓடுவதாகவே.....

பலர் கண்ணை குத்தி, பதமாக மறைந்து, நவிழும் கோப்பையை அழகாய் பற்றி, அதுவும் நழுவினாலும், நழுவி விடும் என்று எண்ணி ஒரு புட்டியில் அடைத்து, ரப்பரும் மாட்டி கையில் பற்றி கொண்டு.. குழந்தைக்கு முதல் முலைப்பாலை ஊட்டும் தாயை போல் அவர் கைகள் போதையில் நர்த்தனம் புரிய எனக்குள் விவரிக்க இயலாத பிரமிப்பு தோன்றியது.. உலகில் இதை விட போதைய காண முடியாது என்றே தோன்றியது.. அவரையே அப்பட்ட காப்பி அடிக்க ஆரம்பித்தேன்.. அப்போது நீங்கள் என்னை பார்த்திருக்க வேண்டும்!! என்னை விட கேனையன் யாரும் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள்... பின்னே.... நான் அவரை காப்பி அடிக்கேறேன் என்று சொல்லி "ஒரிஜினல் காப்பி"யை தானே அடித்துகொண்டிருந்தேன்.. கிளாசு கிளாசாய்..... (ஏதோ ஒரு பதிவுலே.. அப்படின்னு சொல்லி... இன்னும் மொக்கை போட விரும்பலே... இன்றைய பதிவுலே... எழுத்தாளர் தண்டோரா அண்ணன் போட்டத கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன்... உல்ட்டா அடித்திருக்கிறேன்...)

போதை என்பது என்ன?உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்கள்..விதிமுறைகள் இல்லை... நான் அழைப்பது.. வேண்டாம்... நான் கூப்பிடாமலையே... எல்லாரும் காண்டாகி... வந்து கிட்டு இருக்காங்க... இருந்தாலும் பதிவுலக கடமை மீறக்கூடாது... பாருங்க.. அதனாலே அழைசிடுறேன்..

1 . "தமிழ் தாயின், கலைச்செல்வன்" அண்ணன் தண்டோரா.
2 . "மும்பை தாயின், தத்து பையன்" இரும்புத்திரை அரவிந்த்.
3 . "சூரத் கோட்டையின் சிங்ககுட்டி" ராசு...
4 . "கோடம்பாக்கத்தின் கோடை இடி" அண்ணன் கேபிள் சங்கர்.

டிஸ்கி: முன்பு எழுதிய ஒரு மரண சாசனம்:

சமையல் கட்டில் இருக்கிறேன்!!
பயமாய் இருக்கிறது...

அதே வரிகள்தான்..ஆனால்
இந்த முறை
நான் சமைத்ததை பார்த்து..!!

டிஸ்கி : 2
இந்த இடுகையை நீங்கள் படிக்கும் போதும், பின்னூட்டம் இடும் போதும், வாக்களிக்கும் போதும்...அப்படியே மெர்சலாகி என்னை திட்டும்போதும்... .ஆஹா....எவ்வளவு போதை !!

15 comments:

அதி பிரதாபன் said...

இதுதான் எதிர்/தொடர் தொடர்/எதிர் பதிவா?
---
டிஸ்கி 2 நல்லாத்தான் இருக்கு, மொதல்ல தமிழ்மணத்துலயும் தமிலிஷ்லயும் கோர்த்து வுடுங்க...

♠ ராஜு ♠ said...

இதுக்கு மணி அண்ணனை கெட்ட கெட்ட வார்த்தைல பச்சையா பச்சையா சிவப்பு வப்பா திட்டிருக்க‌லாம்.

பைத்தியக்காரன் said...

எக்ஸலண்ட் :)

முடியல... அதுவும் அந்த ஃபோட்டோ... அண்ணன் இன்னிக்கி தூங்கவே மாட்டாரு...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

♠ ராஜு ♠ said...

\\என்னை விட கேனையன் யாரும் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள்...\\

ஹி..ஹி... நான்லாம் அப்பவே அப்பிடியாக்கும்..!

♠ ராஜு ♠ said...

\\பைத்தியக்காரன் said...
எக்ஸலண்ட் :)
முடியல... அதுவும் அந்த ஃபோட்டோ... அண்ணன் இன்னிக்கி தூங்கவே மாட்டாரு...
தோழமையுடன்
பைத்தியக்காரன்\\

சைடு கேப்புல அவரை அண்ணன்னு சொல்லி இன்னோர் யூத்து தம்பியாயிட்டாருடோய்ய்..!

அதே தோழமையுடன்
♠ ராஜு ♠

Cable Sankar said...

போதைன்னு எழுதறத விட போட்டோல இருக்கிற அயிட்டத்தை ஹி..ஹி.. பார்த்தாலே போதையாத்தான் இருக்கு:)

பக்கத்தில இருக்கிற தண்டோராவை பாத்தா வயிரெல்லாம் எரியுது..:( ( இந்த போட்டோக்கு பின்னாடி நடந்த மேட்டர் தெரிந்ததினால் இன்னும் வயிறு எரிகிறது.. புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

தண்டோரா ...... said...

கழகத்துக்கு காப்பு நிதி அனுப்பிடு உடன்பிறப்பே..

♠ ராஜு ♠ said...

\\த‌ண்டோரா ...... said...
கழகத்துக்கு காப்பு நிதி அனுப்பிடு உடன்பிறப்பே..\\

நோ காப்பு நிதி அண்ணே..ஒன்லி ஆப்பு நிதிதான்..!

அகல்விளக்கு said...

//இதுதான் எதிர்/தொடர் தொடர்/எதிர் பதிவா?//

same doubt

சொல்லரசன் said...

எதிர்கவுஜயை போய் இப்போ எதிர் தொடர்பதிவா?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துக்கள் போதையுடனான சரக்கின் காதலுக்காக

துபாய் ராஜா said...

புகைப்படத்தைப் பார்த்து பலபேர் மனம் புகை விடப்போறது உறுதி நைனா... :))

ஸ்ரீ said...

:-))))))))))))))))))

ஆ.ஞானசேகரன் said...

வாங்க நைனா..... அப்படியே அதே கலக்கல்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

போதை பற்றி போதையான பதிவு.
போதை ஒரு relative term. உங்கள் கண்ணுக்கு போதையாய்த் தெரிவது, எனக்கு சப்னு தெரியலாம். நம் மனத்தை பேர்த்து (பீர் இல்லப்பா, பேர்) ஒரு நிமிடம் நம்மை மறக்க வைப்பது எதுவோ, அதுவே நமக்கு போதை என்பது என்னுடைய போதையான கருத்து
(ஒரு அவசிய பின்குறிப்பு: அண்ணன் தண்டோரா பதிவில் என்னுடைய பின்னூட்டத்திற்கும், இந்த பின்னூட்டத்திற்கும் சம்பந்தம் தெரிந்தால், நீங்கள் இன்னும் போதையிலிருந்து மீளவில்லை என்று பொருள்)