Monday, 16 November 2009

பத்து கேட்டவங்களுக்கு ஒரு "பத்து"...அல்லாருக்கும் வணக்கம், இதுவரை காணாமே போய் இருந்த என்னை, நம்ம தம்பி, திருநெல்வேலியின் திருத்துருவம், மும்பையின் முண்டாசு பையன், கண்ணாடி இதயம் கொண்ட நமது இரும்பு திரை அரவிந்த் அவர்கள் இதில் கோர்த்து விட்டு, உங்க பாவத்தை சம்பாதித்து கொள்கிறார் என்பதனை அறிவித்து...தொடங்குகிறேன், தொடர்கிறேன்...
******************************************************************

அரவிந்த்: வாங்க ஸ்டார்ஜன் அண்ணே... என்ன இந்த பக்கம்!!! இது மொக்கை ராஜாக்கள் எல்லாம் வாக்கிங் போற இடமாச்சே...

ஸ்டார்ஜன்: ஆமா தம்பி, நீங்க நல்லா இருக்கீங்களா... இங்கே மொக்கை ராஜாக்கள் சுத்துற இடம்னு, நீ நிக்குறப்பவே தெரிஞ்சுகிட்டு தான்.... ஓடிக்கிட்டு இருக்குற பஸ்சுலே இருந்து "டகால்னு" குதிச்சி இறங்கினேன்.

அரவிந்த்: (அடச்சே... நம்ம பிட்டை நமக்கே திருப்பிட்டாரே... நாம இனி கவனமா இருக்கோணும்) அமுல் பேபி மாதிரி இருந்துட்டு... அமுக்கி குத்துறே..லே... யாரை பார்க்க வந்தீங்க...

ஸ்டார்ஜன்: நம்ம நைனா, சரக்கை போட்டுட்டு இந்த பக்கம் தான் வருவாராம்.... அவருகிட்டே ஒரு பத்து கேட்கலாம்னு...

அரவிந்த்: ...க்கும்... வெளங்கிரும்.... எவனாவது நல்ல சரக்கு ஊத்தி வச்சிருப்பான் அதை ஆட்டைய போட்டு கள்ள சரக்கா மாத்தி ஊத்திட்டு வருவாரு... அவருகிட்டே... நீங்க பத்து வாங்கவா...

ஸ்டார்ஜன்: அட அது இல்லே தம்பி... இன்னிக்கு காந்தி ஜெயந்தி..., பார்டி சரக்கு இல்லாமே... தெளிவா வருவாரு... அவருக்கு அரசியல்லே, நடிப்புலே... இப்படி யாரை எல்லாம் பிடிக்கும்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு... பதிவு போட சொல்ல தான்...

அரவிந்த் : (ஆமா அவரு பெரிய "சார்லசு இளவரசர்"... இவரு... பெரிய "பாப்பரசி" நிருபர்... பின்னாடி விரட்டி கிட்டே போய் தான், மேட்டரும் படமும் எடுப்பாரு..... அடச்சே... நானே அதுக்கு தானே வந்திருக்கேன்...) ஆமான்னே... நானும் அதுக்கு தான் வந்திருக்கேன், ஆமா இதை ஒரு பொழப்பாவே வச்சி.. எல்லாரையும் கெளப்பி விட்டுகிட்டே தான் இருக்காங்களா.... இன்னும் பதிவுலகத்திலே...

ஸ்டார்ஜன்: தம்பி... அங்கே பாருங்க... அந்த மரதடிலே... நம்ம நைனா... யாருகிட்டயோ.... மொக்கை போட்டுக்கிட்டு இருக்காரு...
----------------------------------------------------------

நைனா: என்ன இப்படி கூட்டமா வந்திருக்கீங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: (ரெண்டு பேரு வந்ததுக்கே... இந்த பில்டப்பா... ) உங்க கிட்டே சில கேள்விகள் கேட்டு பதில் வாங்கிட்டு போலாம்னு... வந்திருக்கோம்....

நைனா: ஒ.. யூ மீன் பேட்டி...

ஸ்டார்ஜன் : (வேட்டிக்கே வக்கில்லாததெல்லாம், பேட்டிய பத்தி பேசுதே... !!!) அப்படியும் வச்சுக்கலாம்....

நைனா: அப்படியா... எந்த பேப்பர், யூ.எஸ்.ஏ.டுடேயா? வால் ஸ்ட்ரீட் ஜர்ணலா? நியூ யார்க் போஸ்டா... ?

ஸ்டார்ஜன் :ஏய்.... அரவிந்து... பார்டி என்னடா...? என்னன்னோவோ பேரெல்லாம் சொல்லுது...

அரவிந்த் : (எனக்கும் இதை கேட்டு ரெத்தம் கொதிக்க தான் செய்யுது...) அதெல்லாம் சும்மா டுபாக்கூரு... தினத்தந்தி பேபரையே பார்டி, சலூன்லையும் டீ- கடையிலையும் மட்டுந்தான் 'பார்த்திருக்கும்'... இருந்தாலும் என்ன செய்ய நம்ம நேரம்...

ஸ்டார்ஜன்: பிளாக்கு... பிளாக்கு ஒன்னு இருக்கு அதுலே, எழுத தான்... நீங்க கூட ஒன்னு வச்சிருக்கீங்க...

நைனா : (காந்தி ஜெயந்தி அன்னிக்கு நாம பிளாக்லே சரக்கு வாங்கினது இவருக்கு எப்படி தெரியும்... ) ஆமா... நீங்க என்ன போலீசா?

அரவிந்த் (விழுந்து விழுந்து சிரித்து கொண்டே) :யோவ்... நைனா... அந்த பிஞ்சு மூஞ்சை பார்த்து... போலிசுன்னு சொல்றே, உன்னோட நகைச்சுவை உணர்வை பல பேரு சொல்ல கேட்டிருக்கேன், ஆனா இன்னிக்கு அது உண்மைன்னு தெரிஞ்சுகிட்டேன்...

ஸ்டார்ஜன் : தம்பி என்ன!!! நீ.... சேம் சைடு கோல் போடுறே? திடீர்னு...

அரவிந்த் : சாரிண்ணே... மன்னிச்சுகோங்க... இருந்தாலும் அவரு உங்கள போலிசுன்னு நெனச்சி பயப்படுறாரே அதை நெனச்சி சிரிக்கேன்...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அதெல்லாம் ஒன்னும் இல்லே... பிலாக்குக்காகா, அதாவது பதிவுக்காகா வந்திருக்கோம்.

நைனா : சரி என்னமோ போங்க... கேளுங்க..

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அரசியல்வாதி, எழுத்தாளர், கவிஞர், இயக்குனர், நடிகர், நடிகை, விளையாட்டு.. இதில் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க... பத்தி கொஞ்சம் சொல்லுங்க..

நைனா : என்ன? ஏழு தானா?

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: இப்போதைக்கு இவ்ளோ தான்.

நைனா :அண்ணனை டென்சன் பண்ணாதீங்க... நம்பர்லே எனக்கு பிடிக்காத நம்பர் ஏழு மட்டுந்தான். அந்த ஏழு கதை எழுதுறவர் என்னிக்கு திருநெல்வேலிகாரங்களை பிடிக்காதுன்னு சொன்னாரோ அன்னிலேருந்து எனக்கு ஏழு பிடிக்காத நம்பரா போச்சு... சோ, கொஞ்சம் அதிகமா கேளுங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: இதென்னடா பொல்லாப்பா இருக்கு... சரி, பிடிச்ச, பிடிக்காத பேச்சாளர். இதை சேர்த்து எட்டாக்கிகொங்க.

நைனா : அண்ணன் கிட்டே தானே கேட்குறீங்க.. கூட கேட்க வேண்டியது தானே.. நான் என்ன சொல்ல மாட்டேன்னா சொல்ல போறேன்...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: தொழிலதிபர், இசையமைப்பாளர் இதையும் சேர்த்து பத்தா சொல்லுங்க...

நைனா : இவ்ளோ தானா... என்கிட்டே கேட்க இவ்ளோ தான் இருக்கா.. உங்க கிட்டே... அண்ணன் கிட்டே கேட்கனும்னு வந்துட்டீங்க.. தயங்காமே கேளுங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: ஒ.. அப்படியா... பிடிச்ச, பிடிக்காத பதிவு, பாடகர், பாடகி இதையும் சேர்த்துகோங்க... பதி மூணு ஆகிரும்.

நைனா : என்னாது பதிமூனா... விஞ்சானதிலே விஞ்சி இருக்குற வெள்ளைக்காரனே... பதிமூனை பார்த்து அலறுவான், அதனாலே கூட கேளுங்க. பொது அறிவை வளர்த்து கொங்க..

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: என்ன இது...!!!! சரி, 'சமூக சேவகர்' இவரை சேர்த்து பதினாலா ஆக்கிருங்க...

நைனா : என்னாப்பா இது, ஒன்னு ஒண்ணா கூட்டுறீங்க... அண்ணன் கிட்டே என்ன காசு பணமா கேட்குறீங்க... உலக விசயங்களை தானே கேட்குறீங்க... அதனாலே யோசிக்காமே கேளுங்க... யோசிக்க கேளுங்க.

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அப்படியா... நீங்க பல பத்திரிகை பேரு சொல்லும்போதே நெனச்சோம், ... நீங்க பெரிய ஆளாத்தான் இருப்பீங்கன்னு.... முனைவர், வைத்தியர், ஆராச்சியாளர், கேமரா மென், பெண் கவிஞர், பெண் எழுத்தாளர்னு போட்டு இருபது ஆக்கிருங்க... எங்களுக்கும் படிக்க நல்லா பொழுது போகும்.... திடீர்னு எப்படியாது, எங்கேயாவது சண்டை பிச்சுகிசின்னா... இன்னும் ரெண்டு வாரத்துக்கு... மேட்டர் போடாமலேயே.. பொழுதை ஓட்டிரலாம்...


நைனா :எப்பா... நல்லவங்களா... இப்படி தான் இருக்கணும், அண்ணனோட அறிவுகண்ணை தொறந்து வச்சிட்டீங்க... அதோடு பல வாசகர்களோட அறிவுகண்ணையும் தொறந்துட்டீங்க... அண்ணன் பதில் சொல்லாமலையே... இன்னும் கேளுங்க... கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு எப் எம் ரேடியோ மாதிரி சொன்னாலும், கேட்டு கிட்டே இருந்தீங்களே.... அந்த தன்னம்பிக்கைக்கு இந்த அண்ணன் தலை வணங்குறேன்...

ஒரு கேள்வியா ரெண்டு கேள்வியா... இருபது, இருபது கேள்வி கேட்டிருக்கீங்க... ஆனா அண்ணனுக்கு மொக்கை போடுறது மட்டுந்தானே தெரியும், இப்படிலாம் கேள்வி கேட்டு அண்ணனை பெரிய ஆளா ஆக்கி புட்டீங்களே... இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்னு தெரியலையே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஒன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்... கேள்வி கேட்குறது ஈசி ஆனா பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்னு... இப்போ தெரிஞ்சி கிட்டேன்னு சொன்னா ரொம்பா சாதாரணம்...அதை விட ஒன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்... அது வேற ஒன்னும் இல்லே... " நீங்க ரெண்டு பெரும் ரொம்ப நல்லவங்கன்னு" புரிஞ்சிகிட்டேன்... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


டிஸ்கி 1: அண்ணன் ஸ்டார்ஜன் அவர்களே, மன்னிச்சிகோங்க... சும்மா மொக்கை போடுறதுக்கு தான் செஞ்சிருக்கேன்... காண்டாகிராதீங்க.
டிஸ்கி 2: பதில் சொல்லாமே தப்பிக்க, என்னவெல்லாம் செய்யா வேண்டி இருக்கு...

23 comments:

♠ ராஜு ♠ said...

\\ஸ்டார்ஜன் : (வேட்டிக்கே வக்கில்லாததெல்லாம், பேட்டிய பத்தி பேசுதே... !!!)
அப்படியும் வச்சுக்கலாம்.... \\

இதுதான் ஜூப்பரு...டாப் டக்கர்.

இரும்புத்திரை அரவிந்த் said...

அது என்ன எழு கதை கிசுகிசு எழுதி வம்பு இழுக்கலைனா தூக்கம் வராதே..

தல நீங்க போடா சொன்னத அப்படியே போட்டுட்டேன்

நையாண்டி நைனா said...

/*இரும்புத்திரை அரவிந்த் said...
அது என்ன எழு கதை */

தேவையான இடத்திலே காலை உடைக்குறதும்,

/*தல நீங்க போடா சொன்னத அப்படியே போட்டுட்டேன்*/

தேவை இல்லாத இடத்திலே.. காலை சேக்குறதும்.. உனக்கு ஒரு பொழப்பாவே போச்சி....

நையாண்டி நைனா said...

/*இரும்புத்திரை அரவிந்த் said...
அது என்ன எழு கதை கிசுகிசு எழுதி வம்பு இழுக்கலைனா தூக்கம் வராதே..

தல நீங்க போடா சொன்னத அப்படியே போட்டுட்டேன்*/

எப்பா.. இரும்பு திரை, நீ எப்ப குசும்பு திரையான !!!

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
\\ஸ்டார்ஜன் : (வேட்டிக்கே வக்கில்லாததெல்லாம், பேட்டிய பத்தி பேசுதே... !!!)
அப்படியும் வச்சுக்கலாம்.... \\

இதுதான் ஜூப்பரு...டாப் டக்கர்.*/

அடப்பாவிகளா... இதுலே உங்களுக்கு ஒரு சந்தோசமா...

♠ ராஜு ♠ said...

\\நையாண்டி நைனா said...
தேவையான இடத்திலே காலை உடைக்குறதும்,\\

ஆமா, அவரே தான் நம்ம தண்டோரா அன்ணன் காலை உடைச்சது..இப்போ உங்களுக்கும் பிளான் பண்றாப்ல.
பீ கேர் "புல்".

ஹேமா said...

நைனா நல்லா இருக்கீங்கதானே !

ஸ்ரீ said...

:-)))))))

சூரியன் said...

சூப்பரப்பூ...

சூரியன் said...

பெண்டாஸ்டிக்

தண்டோரா ...... said...

நைனா நல்லா இருக்கீங்கதானே....

அதேதான்.. தங்கச்சியை ரீப்பிட்டுகிறேன்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நைனா சும்மா புகுந்து அடிச்சி ஆடுங்க ....

ரொம்ப சூப்பர் .

Anonymous said...

அண்ணா நிஜ‌மாவே க‌ல‌க்க‌ல் காமெடி

பித்தன் said...

அண்ணா நிஜ‌மாவே க‌ல‌க்க‌ல் காமெடி

கலையரசன் said...

இதுக்கு நீ அந்த பத்தையே எழுதியிருக்கலாம்... சீக்கிரமா முடிச்சிருக்கும்!!

Achilles/அக்கிலீஸ் said...

ரைட்டு.. :)

தராசு said...

"அகம் பிரம்மாஸ்மி"

கோவி.கண்ணன் said...

ஸ்ப்பா............பா கண்ணக் கட்டுதே

ஆ.ஞானசேகரன் said...

///பதில் சொல்லாமே தப்பிக்க, என்னவெல்லாம் செய்யா வேண்டி இருக்கு...///

இப்போதைக்கு தப்பிச்ச மாதுரி தெரியும்,,,,,,,....

அரங்கப்பெருமாள் said...

பதிலே சொல்லாமலே... சும்மா பட்டையக் கிளப்புரீங்களே... சூப்பர் போங்க.

//யோசிக்காமே கேளுங்க... யோசிக்க கேளுங்க.//

எனக்கு ‘மாயி’ பட வடிவேலு ஜோக் நெனப்பு வருது.

துபாய் ராஜா said...

இனிமே யாராவது நைனாவை தொடர்பதிவிற்கு கூப்பிடுவீங்க.... :))

கிறுக்கல் கிறுக்கன் said...

"பத்து கேட்டவங்களுக்கு ஒரு "பத்து"..." நிஜமாவே போட வேண்டியது வரும்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சூப்பர் அண்ணே, இப்ப நான் ரெடி, இதே மாதிரி, முன்னூறு கேள்வி கேட்டாலும் அசராம பதில் சொல்லுவேன், தெரியுமில்ல?