Thursday, 6 August 2009

அழகுக்கு எதிர்பெயர் நீதானே...உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்
பிரம்மனை சேவிக்கிறார்கள்..
நல்ல வேளை இப்படி ஒருத்தியை
தேவலோகத்தில் படைக்கவில்லையென...

*********

நீ சோம்பி தூங்கும்
அவலத்தை பார்த்தே தினம்
உக்கிரமாய் தகிக்கிறான்
சூரியன்.

*****

இறந்த பிணம் தான்
பேயாக வருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த பேய்களும் மிரண்டோடுகிறன..

*****

இந்தியாவின் இருண்டகாலம்
தற்போது தானாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19/91.


*****

என் கண்ணில்
விழுந்த தூசியை ஊதினாய் நீ..
தாளாமையால் அழுகிறது
என் நாசி..

******

இறுதி கவிதைக்கு பதில் அந்த கவிஞருக்கு ஒரு குறிப்பு:
இந்த கவிதைக்கு சொந்தமான கவிஞரே... உங்கள் ஐய்யம் தீர்ந்ததா... ஆனாலும் நீர் புத்திசாலி கண்டுபிடித்து விட்டீரே... சரி... சரி... அந்த ரகசியத்தை காப்பாற்றி வையும் உங்களுக்கு புண்ணியமா போகும்...Please...


*******
காதலுடன்???

41 comments:

அத்திரி said...

நாந்தான் மொதல்ல

அத்திரி said...

இது கவிதைதானா.............

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஹேமா said...

என்ன சொல்லன்னே தெரில நைனா.அழகாயிருந்தா ஆராதனை...இல்லாட்டி இப்பிடியா..?

Suresh Kumar said...

காதலுடன்???..................

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை சூப்பர்

பீர் | Peer said...

எப்பிடி நைனா இப்படில்லாம்... ஏதாவது சங்கம் வைக்கிறதா இருந்தா சொல்லி அனுப்புங்க...

//Blogger ஹேமா said...

என்ன சொல்லன்னே தெரில நைனா.அழகாயிருந்தா ஆராதனை...இல்லாட்டி இப்பிடியா..?//

அனுபவ கவித சொன்னா ஆராயக் கூடாது ;)

வழிப்போக்கன் said...

ரசித்தேன்...
:)))

வெண்பூ said...

கலக்குறீரு நையாண்டி... வாரம் ஒன்னாவது இந்த மாதிரி போடவும்...

கார்க்கி... படிச்சியாய்யா இதை??? நீயும்தான் எழுதுற கவிதைன்னு... எப்படி இந்த புள்ள உண்மைய வழிச்சி கொட்டியிருக்கு பாரு.. ஹி.ஹி.ஹி.. :)))

லோகு said...

நடத்து மாப்பு...........................

வால்பையன் said...

யாருப்பா அது இன்னைக்கு மாட்டுன புண்ணியவான்!

சூரியன் said...

மாமு யாரு பொறந்தது பிப்ரவரி 19/91.

துபாய் ராஜா said...

//உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்
பிரம்மனை சேவிக்கிறார்கள்..
நல்ல வேளை இப்படி ஒருத்தியை
தேவலோகத்தில் படைக்கவில்லையென//

யோவ் நைனா,உன்னை தூக்கி நரகலோகத்துல போட...எப்படிய்யா இதெல்லாம்.... !! :))

//நீ சோம்பி தூங்கும்
அவலத்தை பார்த்தே தினம்
உக்கிரமாய் தகிக்கிறான்
சூரியன்//

'க்ளோபல் வார்மிங்'கு இதுதான் காரணமோ ??!!. :))

//இறந்த பிணம் தான்
பேயாக வருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த பேய்களும் மிரண்டோடுகிறன..//

இதுல ஏதோ இடிக்குது.ஒரு வேளை ஓடி வந்த பேயா இருக்குமோ ??!!

//இந்தியாவின் இருண்டகாலம்
தற்போது தானாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19/91.//

91-லயும் சரி இப்போவும் சரி காங்கிரஸ்தான் மத்தியில ஆட்சியை பிடிச்சுது.நீ அதைதான் சொல்றியா ??!!

//என் கண்ணில்
விழுந்த தூசியை ஊதினாய் நீ..
தாளாமையால் அழுகிறது
என் நாசி..//

தூசி,நாசி எதுகை,மோனை தூள்.

'நல்லா அடிச்சு ஆடுய்யா' ன்னு சொன்னதுக்காக இப்படி போறவன், வர்றவனை எல்லாம் அடிச்சு ஆட விடுறியே... !! :))

எப்படியோ உன் காட்டுல மழை.
பட்டைய கிளப்பு பட்டாசு. :))

Prabhagar said...

கவிகள் பல படித்ததுண்டு
கதைகள் பல கேட்டதுண்டு
புவியினில் இதுபோன்று
பெண்ணவளை வர்ணித்து

மனதிலுள்ள உண்மைகளை
மறைவின்றி சொன்னதில்லை
நைனாநீர் கலக்குகின்றீர்
மடைதிறந்த வெள்ளம்போல்...

பிரபாகர்.

Arangaperumal said...

எப்பிடித்தான் யோசிக்கிராய்ங்களோ...

ஆ.ஞானசேகரன் said...

எங்கிருந்தோ எடுத்து எப்படியெல்லாம் மாற்றி... இப்படியெல்லாம் போட்டு கலக்கு கலக்குனு கலக்குரீங்க நைனா....

பாராட்டுகள் மட்டுமே

கார்க்கி said...

venbu anne,

agreed.. accepted.. admitted.. :)))

டக்ளஸ்... said...

இதுக்கு நான் பின்னூட்டம் போட்டா, க (கா)ண்டுபிடிச்சுருவாப்ல கவிஞரு..!
அதுனால அமைதியா ஓடிப் போயிருரேன்.
வர வர புதுப்புது தலையா தென்படுதுங்கோவ் நைனா பதிவுல.

குடந்தை அன்புமணி said...

யாரு அது யாரு...

அவர் பேரு என்ன அதை கூறு...

வழக்கம் போல கலக்கல்....

Anonymous said...

பேருக்கு ஏத்த நையாண்டித் தனம்.. நல்லாயிருக்குங்க....

SUBBU said...

//இந்தியாவின் இருண்டகாலம்
தற்போது தானாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19/91.//

புரியலயே :((((((((

நையாண்டி நைனா said...

நன்றி அத்திரி அவர்களே..
நீங்க தான் முதல்லே...
இது கவிதையே தான்.

நையாண்டி நைனா said...

/*அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!*/
அத்திப்பட்டி அஜீத்து மாதிரி இருந்துகிட்டு இப்படி அழலாமா???

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
என்ன சொல்லன்னே தெரில நைனா.அழகாயிருந்தா ஆராதனை...இல்லாட்டி இப்பிடியா..?*/

இதுவும் அழகியல் தான்.

ஆராதனை... சாரி ஆ"ரோதனை".

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
காதலுடன்???..................

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்*/

No Crying... Please.

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவிதை சூப்பர்
*/
Thanks Dear friend.

நையாண்டி நைனா said...

/* பீர் | Peer said...
எப்பிடி நைனா இப்படில்லாம்... ஏதாவது சங்கம் வைக்கிறதா இருந்தா சொல்லி அனுப்புங்க...*/

//Blogger ஹேமா said...

என்ன சொல்லன்னே தெரில நைனா.அழகாயிருந்தா ஆராதனை...இல்லாட்டி இப்பிடியா..?//

அனுபவ கவித சொன்னா ஆராயக் கூடாது ;)*/

தலைவர் போஸ்ட் கூட எடுத்துக்கங்க..

உங்களுக்கு புரியுது, அவங்களுக்கும் புரியும்...!!!

நையாண்டி நைனா said...

/*வழிப்போக்கன் said...
ரசித்தேன்...
:)))*/

நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*கலக்குறீரு நையாண்டி... வாரம் ஒன்னாவது இந்த மாதிரி போடவும்...

கார்க்கி... படிச்சியாய்யா இதை??? நீயும்தான் எழுதுற கவிதைன்னு... எப்படி இந்த புள்ள உண்மைய வழிச்சி கொட்டியிருக்கு பாரு.. ஹி.ஹி.ஹி.. :)))*/

அட பழைய தலைங்கல்லாம் இப்ப தான் நான் படுற வேதனைய பார்த்து வாறீங்க... வாங்க..வாங்க...
வருகைக்கு நன்றி.
கருத்துக்கு நன்றியோ நன்றி.

நையாண்டி நைனா said...

/* லோகு said...
நடத்து மாப்பு...........................*/

நன்றி மச்சி.

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
யாருப்பா அது இன்னைக்கு மாட்டுன புண்ணியவான்!*/

நம்ம மச்சி லோகு தான்.

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
மாமு யாரு பொறந்தது பிப்ரவரி 19/91.*/
இப்படில்லாம் கேட்டு புண்பட்ட நெஞ்சை கிளறாதே மாமு.

நையாண்டி நைனா said...

/* துபாய் ராஜா said...
//உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்
........
படைக்கவில்லையென//

யோவ் நைனா,உன்னை தூக்கி
எப்படியோ உன் காட்டுல மழை.
பட்டைய கிளப்பு பட்டாசு. :))*/

துபாய் ராசா... தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
வருகைக்கு நன்றி, நன்றி....

நையாண்டி நைனா said...

/*
Prabhagar said...
கவிகள் பல படித்ததுண்டு
கதைகள் பல கேட்டதுண்டு
புவியினில் இதுபோன்று
பெண்ணவளை வர்ணித்து

மனதிலுள்ள உண்மைகளை
மறைவின்றி சொன்னதில்லை
நைனாநீர் கலக்குகின்றீர்
மடைதிறந்த வெள்ளம்போல்...

பிரபாகர்.*/

Thanks Nanbaa.

நையாண்டி நைனா said...

/*
Arangaperumal said...
எப்பிடித்தான் யோசிக்கிராய்ங்களோ...
*/
வருகை மற்றும் பாராட்டிருக்கு நன்றி ஐயா.

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
எங்கிருந்தோ எடுத்து எப்படியெல்லாம் மாற்றி... இப்படியெல்லாம் போட்டு கலக்கு கலக்குனு கலக்குரீங்க நைனா....

பாராட்டுகள் மட்டுமே*/

தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*கார்க்கி said...
venbu anne,

agreed.. accepted.. admitted.. :)))*/
Thanks and visit frequently.

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்... said...
இதுக்கு நான் பின்னூட்டம் போட்டா, க (கா)ண்டுபிடிச்சுருவாப்ல கவிஞரு..!
அதுனால அமைதியா ஓடிப் போயிருரேன்.
வர வர புதுப்புது தலையா தென்படுதுங்கோவ் நைனா பதிவுல.*/

ஹக்காங்...அவருக்கு சின்ன வயசிலேயே எம்பூட்டு அறிவு...

உங்க பதிவை பார்த்து நீங்களே கண்ணு வைக்கலாமா???

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
யாரு அது யாரு...

அவர் பேரு என்ன அதை கூறு...

வழக்கம் போல கலக்கல்....
*/
That is secret.
Thanks for your visit and "karuthu".

நையாண்டி நைனா said...

/*தமிழரசி said...
பேருக்கு ஏத்த நையாண்டித் தனம்.. நல்லாயிருக்குங்க....*/

நன்றிங்க...
உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
அடிக்கடி வாங்க

நையாண்டி நைனா said...

/*SUBBU said...
//இந்தியாவின் இருண்டகாலம்
தற்போது தானாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19/91.//

புரியலயே :((((((((*/

அப்படின்னா சத்தியமா இது கவிதை தான் நான் கவிஞன் தான்.