Thursday, 28 May 2009

"சாரு" சாருக்காக ஒரு கதை.

சாரு அண்ணே.... வணக்கமுங்க.

உங்களோட "வன்முறையின் தோல்வி" படிச்சேன். ஆகா என்ன ஒரு எழுத்து, நடை, கருத்து ? சும்மா சொல்ல கூடாது. எல்லாமே அருமை. அருமை. என்ன ஒரு அலசல், தகவல் ஆராச்சி!!! நான் படிச்ச வரலாற்று பொஸ்தவத்திலெ கூட இப்படி எழுதி வைக்கலை அதற்காக உங்களுக்கு ஓராயிரம் கோடி நன்றிகள்.

நீங்க ஊருக்கே கதை எழுதி யாவாரம் பண்ணுற ஆளு. ஆனா நான் உங்கள மாதிரி ஆளுங்க சொல்லுற கதைகளை கேட்டு, படிச்சி பொழுத ஓட்டுற வெட்டிப்பய. நீங்க ஏற்கனவே இந்த கதைய கேட்டு இருப்பீங்க, நான் உங்க கிட்டே இந்த கதைய சொல்லுறதா நெனைக்கபுடாது. ஞாபகப்படுத்துறேன் அம்புட்டுதான்.

சரி இனி நாம கதைக்கு போலாமா...

ஒரு ஊருலே ஒருத்தன் இருந்தான். ஒரு ஊருனாலே பலபேரு இருப்பாங்க ஆனா ஏன் ஒருத்தன் இருந்தான் என்று சொல்லுறாங்க? அதை பற்றி நாம ரொம்ப விவாதிக்காமே சட்டுன்னு சொல்றேன், ஏன்னா அவன் நம்ம கதாநாயகன். நம்ம கதாநாயகன், நல்லவன் வல்லவன் ஏழைபங்காளன் தயாள குணம் உள்ளவன். அவன் பல பேருக்கு பல உதவிகள் செஞ்சிருக்கான். செய்வான். அவன் ஒரு நா ஒரு மருத்துவமனைக்கு சென்று உதவிகள் செய்யலாம்னு போனான். அங்கே இருந்த மருத்துவரும் அவனை கூட்டிகிட்டு போய் வார்டு வார்டா காமிச்சாரு.

ஒரு வார்டிலே ஒருத்தன் 'சேது' கணக்கா ஒருத்தன் இருந்தான் அவன் "மாயம்மா", "மாயம்மா" என்று கத்திகிட்டே இருந்தான்.

நம்ம கதாநாயகன், "இவன் யாரு? இவன் ஏன் மாயம்மா... மாயம்மான்னு கத்திகிட்டே கிடக்கான்" என்று கேட்டான்.

அதுக்கு அந்த டாக்டரு சொன்னாரு "இவன் ஒரு பயங்கர படிப்பாளி, இவன் படிச்சிகிட்டு இருக்கும் போது அந்த மாயம்மாங்குற பொண்ணை காதலிச்சான் ஆனா அவனோட காதல் நிறைவேறலை, அப்புறம் அந்த பொண்ணுக்கு போன வருஷம் மார்ச்சு மாசம் ரெண்டாம் தேதி கல்யாணம் ஆயிட்டு அன்னிலேருந்து இப்படி பைத்தியமா ஆயிட்டான்"னாறு.

"அச்..சச்சோ..ச்சோ.... ஐயோ பாவம்" அப்படின்ட்டு அடுத்த வார்டுக்கு போனாங்க, அங்கே போய் பார்த்தா அங்கே 'குணா' கமல் கணக்கா ஒருத்தன் இருந்தான் அவனும் சும்மா இல்லாமே "மாயம்மா" "மாயம்மா" ன்னு பொலம்பிகிட்டு இருந்தான்.

இதை பார்த்த வொடனே நம்ம கதாநாயகன் மூளை பயங்கரமா யோசிச்சிட்டு இப்ப உங்க மூளை யோசிச்சிருக்கே அந்தா மாதிரி "அட பார்ரா, இங்கேயும் ஒருத்தன் பொலம்பிகிட்டு இருக்கானே, அந்த மாயம்மா ஒரு அம்சமான பிகரா இருந்திருக்கணும் இப்படி பலபேரை பயித்தியமா அலைய வச்சிருக்காளே" என்று மனசுக்குள்ளே எண்ணி கிட்டு "என்ன....டாக்டர் அந்த மாயம்மா பெரிய பிகரோ? இப்படி பலபேரை அலைய வச்சிருக்காளே? இங்கே பாருங்க, இங்கேயும் அவளை காதலிச்சி ஏமாந்த ஒருத்தன் பொலம்பிகிட்டு இருக்கான் பாருங்க." ன்னானாம்.

அதை கேட்ட டாக்டரு சிரிச்சிகிட்டே சொன்னாராம் "ஐயோ, ஐயோ உங்களோட ஒரு தமாசா இருக்கே, இவனும் படிப்பாளிதான் அறிவாளிதான் ஆனா இவன் மாயம்மாவை காதலிச்சவன் இல்லே, அந்த மார்ச்சு மாதம் ரெண்டாம்தேதி மாயம்மா கழுத்திலே தாலி கட்டுன புருஷன் தான் அவன்"ன்னாராம்.


கதை சொல்லும் நீதி: ஒரே மேட்டரு எல்லா பக்கமும் ஒர்க் அவுட் ஆகாது. நல்லா விசாரிக்கணும் அதுக்கு அப்புறம் தான் சொல்லணும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நானும் தவறு செய்திருக்கலாம் மதிப்பிற்குரிய சாருவும் தவறு செய்திருக்கலாம், அதற்காக கண்டிப்பாக உங்க கருத்தை பதிஞ்சி சொல்லிட்டு போங்க.

அன்பார்ந்த பதிவர்களே இந்த பதிவுக்கு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

34 comments:

Senthil said...

perfect!!!!!

KaviKutty said...

I agree with you.

ஆ.ஞானசேகரன் said...

நக்கலு.... எப்படி இப்படியெல்லாம் நண்பா... கலக்குரீங்க

வேத்தியன் said...

அண்ணே உங்க கடை காத்து வாங்குதுன்னு தெரிஞ்சவக சொன்னாக...
அதே வந்தேன்...

:-)))

வேத்தியன் said...

முதலிலேயே உங்களுடைய இந்தப் பதிவு படித்தேன்...
உண்மையில் எனக்கு மேட்டர் விளங்கவில்லை..
அதான் பின்னூட்டவில்லை...

வேத்தியன் said...

tags பிடிச்சிருக்கு...
:-)

நையாண்டி நைனா said...

/*
அண்ணே உங்க கடை காத்து வாங்குதுன்னு தெரிஞ்சவக சொன்னாக...
அதே வந்தேன்...

:-)))
*/

வந்ததுக்கு மிக நன்றி....

ஆனா அப்படி பரப்புனது எதிர் கட்சிகளின் சதி... சதி... சதி...

நையாண்டி நைனா said...

/* Senthil said...
perfect!!!!!*/

Thanks

நையாண்டி நைனா said...

/*
KaviKutty said...
I agree with you.
*/

Thank You Very Much.

நையாண்டி நைனா said...

/*
ஆ.ஞானசேகரன் said...
நக்கலு.... எப்படி இப்படியெல்லாம் நண்பா... கலக்குரீங்க
*/

நன்றி நண்பா

நையாண்டி நைனா said...

/*
வேத்தியன் said...
முதலிலேயே உங்களுடைய இந்தப் பதிவு படித்தேன்...
உண்மையில் எனக்கு மேட்டர் விளங்கவில்லை..
அதான் பின்னூட்டவில்லை...
*/

சரி இதை வச்சே அடுத்த பதிவு ரெடி பண்ணிடுறேன்.

வெற்றி said...

அடிச்சா இப்படித்தான் அடிக்கனும்.

குட் நைனா, கலக்கல்.

தலைக்கணம் அப்படியாவதும் குறையுமாத் தெரியல.

சுந்தர் said...

கத நல்லா இருக்கு

ராஜ நடராஜன் said...

பேரு சரியாத்தான் வச்சிருக்காங்க:)

சொல்லரசன் said...

ஏன் இந்த எதிர்வினை?

வால்பையன் said...

மாயம்மா!
மாயம்மா!!

rooto said...

best feedback for SAARu.

rooto said...

பிரபாகரன் பெண்ணாக அல்லது குடிகாரனாக இருந்திருந்தால் சாருவினுடைய கட்டுரை வேறுவிதமாக அமைந்திருக்கும்!!

மங்களூர் சிவா said...

மாயம்மா!
:))))))))

Anonymous said...

உங்களை மாதிரி ஆட்களைத் தான் "சாரு விசிறிகள் சங்க தொலைவரு" காய்ச்சி இருக்காரு.. கவனிக்கலையா???

ஆமா, இந்த சாரு என்ன அம்சமான பிகரா?? ஆளாளுக்கு எழுதிகிட்டு இருக்கீங்களே??

எவ இவ?? அப்படி என்ன பண்ணித்தொலைச்சா??

T.V.ராதாகிருஷ்ணன் said...

நையாண்டி...ம்ம்..ரொம்பதான் நக்கலாய் போச்சு

"உழவன்" "Uzhavan" said...

நைனா.. நான் வன்முறையின் தோல்வி படிக்கல.. ஆனா உங்க கதையை படிக்கும்போது ஏதோ உள்குத்து இருக்கே.. சாரு சாரு எதாச்சும் பதில் சொன்னாரா?

நையாண்டி நைனா said...

/*விஜயராஜா said...
அடிச்சா இப்படித்தான் அடிக்கனும்.

குட் நைனா, கலக்கல்.

தலைக்கணம் அப்படியாவதும் குறையுமாத் தெரியல.
*/
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி...

இதை நான் தலைகனமாக கருதவில்லை. சற்றே இடறி விட்டார் என்றே எண்ணுகிறேன்.

To Err Is Human.

நையாண்டி நைனா said...

/* தேனீ - சுந்தர் said...
கத நல்லா இருக்கு*/

தாங்க்ஸ் நண்பரே...

நையாண்டி நைனா said...

/* ராஜ நடராஜன் said...
பேரு சரியாத்தான் வச்சிருக்காங்க:)*/

யாரோட பேரு பொருத்தமா இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
ஏன் இந்த எதிர்வினை?*/

அப்படின்னா என்ன செய்யலாம் சொல்லுங்க?

ஒருவன் ஓட்டப்ப் பந்தயத்திலே ஓடுறான். அவனை நீங்க ஒன்னும் செய்யலே. ப்பச் ஆனா அவன் தோதுடுறான், அதுக்கு அப்புறம் அவனை கூப்பிட்டு நீ செஞ்சது தப்பு இப்படியா ஓடுறது...??? பென் ஜான்சனை பாரு, மைகேல் ஜாக்சனை பாரு, பி. டி உசாவை பாரு உடஞ்சி கிடக்குற சீசா வை பாருன்னு வியாக்கியானம் பேச கூடாது. அதைத்தான் நான் சொல்லி இருக்கேன். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கவேண்டும், செயல்படவேண்டும் என்றால் என்ன செய்வது..???

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
மாயம்மா!
மாயம்மா!!*/

வருகைக்கு நன்றி

நையாண்டி நைனா said...

/*வா(வ)ரம் said...
”புது இணைய இதழ் “
இது ஒரு திரட்டி அல்ல.*/

பார்க்கலாம்.

வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*rooto said...
best feedback for SAARu.*/

Thanks for your opinion.

நையாண்டி நைனா said...

/*rooto said...
பிரபாகரன் பெண்ணாக அல்லது குடிகாரனாக இருந்திருந்தால் சாருவினுடைய கட்டுரை வேறுவிதமாக அமைந்திருக்கும்!!*/

இந்த மாதிரி ஊகங்களும், தாக்குதலும் வேண்டாம் என்று நான் எண்ணுகிறேன் நண்பரே.

வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*
மங்களூர் சிவா said...
மாயம்மா!
:))))))))
*/

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க.....

வாங்க... வாங்க... வீட்லே எல்லாரும் சுகமா?

அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/*Anonymous said...
உங்களை மாதிரி ஆட்களைத் தான் "சாரு விசிறிகள் சங்க தொலைவரு" காய்ச்சி இருக்காரு.. கவனிக்கலையா???

ஆமா, இந்த சாரு என்ன அம்சமான பிகரா?? ஆளாளுக்கு எழுதிகிட்டு இருக்கீங்களே??

எவ இவ?? அப்படி என்ன பண்ணித்தொலைச்சா??*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி...
இதை நீங்க உங்க பேருலேயே வந்து சொல்லலாமே...

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
நையாண்டி...ம்ம்..ரொம்பதான் நக்கலாய் போச்சு*/

ரொம்ப நன்றி சார்.
வருகை மற்றும் கருத்துக்கு.

நையாண்டி நைனா said...

/*
" உழவன் " " Uzhavan " said...
நைனா.. நான் வன்முறையின் தோல்வி படிக்கல.. ஆனா உங்க கதையை படிக்கும்போது ஏதோ உள்குத்து இருக்கே.. சாரு சாரு எதாச்சும் பதில் சொன்னாரா?
*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி...

இதோ உங்களுக்காக அந்த சுட்டி:சாருவின் வன்முறையின் தோல்வி