Wednesday 22 April 2009

வெட்கமாய் இல்லை இப்படி ஓட்டு கேட்க??

தமிழகத்தில் தேர்தல் - 2009 போட்டி நடக்கிறது. .தெரிந்த விஷயம். அதிக ஓட்டுக்கள் பெறுபவர் வெற்றிபெறுவார்... தெரிந்த விஷயம்..

தன் ஆற்றலினால், நல்ல எண்ணங்களினால் , நோக்கினால் சிறந்த வேட்பாளர்கள் எத்தனையோ இருக்கின்றார்கள். நேர்மையாக எல்லா வேட்பாளர்களையும் முடிந்த வரை ஆராய்ந்து அல்லவா ஓட்டு இட்டு ஒருவரை வெற்றி பெற செய்யவேண்டும்?..

ஒருத்தர் இன்று பதிவிட்டு இருக்கிறார்...

அவர் யாருரென்று எனக்கு தெரியாது. இது வரை என் பதிவுகளிள் நான் அவரை பார்த்தது இல்லை. பதிவு எழுதுகிறவர்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரி. சரி மக்கள் தொண்டு செய்து பெயர் பெற்றவரா? அல்ல வேறு மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்தவரா? அடித்தட்டு மக்களுக்காக தன் உடமை அத்தனையையும் இழந்தவரா? ஆனால் இது வரை இப்படி எதையும் செய்யாதவர். இப்போது வந்து இரண்டு வார்த்தை அவரை எல்லாரும் புகழ்கிறார்கள் என்று சொல்லி, தானும் சொல்லிவிட்டு, அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று...

ஒரு அரை பக்கத்திற்கு அவரின் சுய வாழ்வை பற்றி எழுதிவிட்டு, அந்த வேட்பாளரே, நடத்தும் வலைபக்கங்களின் சுட்டிகளை தனித்தனியாக சுட்டி ஓட்டு போடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்...

என்ன சுயநலம் ? எத்தனை சாமர்த்தியம்...?!! இப்படி கேவலமாக ஓட்டு கேட்க வேண்டுமா? சரி கேட்டாரே.. தனி மடல் அனுப்பி கேட்டு இருக்கலாம், கண்டிப்பாக கோபம் வந்து இருக்காது... சரி இமெயில் கிடைக்கவில்லை என்றால் சாதா மெயில் எழுதி அனுப்பி இருக்கலாம்.. எதுவும் இல்லாமல் தன்னுடைய ப்ளாக்'ஐ அவரின் ஓட்டு வேட்டை நடத்தவும், விளம்பர இடமாகவும் பயன்படுத்திக்கொள்ள நல்ல யுத்தியை முயற்சி செய்து இருக்கிறார். !! சின்ன சின்ன விஷயத்தில் கூட நம்மால் நேர்மையாக நடந்து கொள்ள முடியவில்லை.?. இப்படி எல்லாம் ஓட்டு வாங்கி வெற்றி பெற வேண்டுமா?

இப்படி எத்தனை 'ப்ளாக்' அவர் செய்து இருக்கிறாரோ தெரியவில்லை...

தமிழகத்தில் வெற்றி பெறுபவர் இப்படிப்பட்ட ஓட்டுகளினால் தான் என்றால்.. நினைத்து பார்க்கவே வேதனையாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக நல்ல வேட்பாளர்கள் பின்னால் தள்ளப்படுவர். இப்படி ஓட்டு கேட்டு தன் வேட்பாளர்களை முன் நிறுத்த தெரியாத பலர் காணாமல் போவார்கள். இப்படி கேவலமாக கொஞ்சமும் நாகரீகமும், நேர்மையும் இல்லாமல் தன் சுய வியாபார உக்திகளினால் வென்ற வியாபாரிகள் ஓட்டுகள் வாங்கி முதலில் நிற்பர்...

எனக்கு பிடிக்காத பட்சத்தில் கண்டிப்பாக அந்த பதிவை ரிஜெக்ட் செய்ய எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது இப்படி பதிவு போட வேண்டிய அவசியமில்லை தான். ஆனால் மேலே சொன்ன படி அவர் சுய வாழ்வில் என்ன செய்தார் என 2 வரிகள் எழுதாமல், நேரடியாக ஓட்டு கேட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் நானும் படித்து பார்த்து பிடித்து இருந்தால் ஓட்டில் சேர்த்து இருப்பேன், இல்லையேல் விட்டு இருப்பேன்..ஆனால், தன்னை மிகவும் சாமர்த்தியசாலியாக நினைத்து, தன் பதிவுக்கு வருபவர்கள், பொது 'பார்வைகள்' அற்றவர்கள் அத்தனை பேரும் மூடர்கள், ஒருவரின் சுய வாழ்வை மட்டும் தந்து, பொதுவாழ்வில் என்ன சாதித்தார் என்று தராமல் ஓட்டு கேட்கலாம் என நினைத்து, ஓட்டு கேட்க வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள, தன் பதிவினை பயன்படுத்திக்கொள்ள நினைத்து போடப்பட்ட பதிவு என்பதால் இதை எழுத வேண்டியதாகிவிட்டது. தன் பதிவை பற்றி, கருத்தை பற்றி ஒரு வரி கூட யாரும் எதிராக எழுதக்கூடாது என்று அவர் நினைத்தால்.. :)))) அப்படி ஒரு பதிவும், பதிவரும் எனக்கு பொதுவில் தேவையில்லை.!! :)))

அவரின் பெயரை குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.. காரணம் அதனால் திரும்பவும் அவருடைய பதிவுகள் என்னால் விளம்பரப்படுத்தபடும்.

இப்படி கேவலமாக ஓட்டு கேட்பதை விட தோற்று போகலாமே?!!

30 comments:

Raju said...

நைனா, நீங்க ஒருவேளை அவர சொல்றீங்களோ.!
ஒருவேளை இவர சொல்றீங்களோ.!
ஒருவேளை அவரையும் இவரையும் கலந்து சொல்றீங்களோ.!
இரு வேளை அவர சொல்றீங்களோ.!
இருவேளை இவர சொல்றீங்களோ.!
இருவேளை இவரையும் அவரையும் கலந்து சொல்றீங்களோ.!

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
நைனா, நீங்க ஒருவேளை அவர சொல்றீங்களோ.!
ஒருவேளை இவர சொல்றீங்களோ.!
ஒருவேளை அவரையும் இவரையும் கலந்து சொல்றீங்களோ.!
இரு வேளை அவர சொல்றீங்களோ.!
இருவேளை இவர சொல்றீங்களோ.!
இருவேளை இவரையும் அவரையும் கலந்து சொல்றீங்களோ.!*/

புரியலையா....

ஹை... அப்பா நானும் பெரிய பதிவராயிட்டேன்...

ஹை... அப்பா நானும் பெரிய பதிவராயிட்டேன்...

ஹை... அப்பா நானும் பெரிய பதிவராயிட்டேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க யாரை சொல்றீங்கன்னு தெரியலை நைனா.. இருந்தாலும் தன்னோட சுயநலத்துக்காக இப்படி யார் செஞ்சாலும் தப்புத்தான்.. சுட்டிக் காமிச்சதுக்கு நன்றி..

Unknown said...

//நைனா, நீங்க ஒருவேளை அவர சொல்றீங்களோ.!
ஒருவேளை இவர சொல்றீங்களோ.!
ஒருவேளை அவரையும் இவரையும் கலந்து சொல்றீங்களோ.!
இரு வேளை அவர சொல்றீங்களோ.!
இருவேளை இவர சொல்றீங்களோ.!
இருவேளை இவரையும் அவரையும் கலந்து சொல்றீங்களோ.!//

பொதுப்பார்வைகளே இல்லாத டக்ளஸை வன்மையாகக் கண்டிக்கிறேன் ;-)

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
நீங்க யாரை சொல்றீங்கன்னு தெரியலை நைனா.. இருந்தாலும் தன்னோட சுயநலத்துக்காக இப்படி யார் செஞ்சாலும் தப்புத்தான்.. சுட்டிக் காமிச்சதுக்கு நன்றி..*/

நண்பா...
இப்போ ஒரு நல்லவரு, படிச்ச படிப்பெல்லாம் வேண்டாம், அமெரிக்க வேலையும் வேண்டாம் என்று கிளம்பி இருக்காராம், தேர்தல்லே நிற்க. அவரை ஆதரிச்சு ஒரு அக்கா பதிவு போட்டிருந்தாங்க. அவரு பொது வாழ்கையிலே என்ன சாதிச்சாரு என்று யாரும் சொல்லக்காணோம், இவரு ஜெயிச்சி மக்கள் பிரதிநிதியாகி தான் நல்லது செய்வாராம்.......

அதே அக்கா முன்னே ஒரு நாள், அவரு பதிவுலே போய் வேறு ஒரு பதிவரு அவங்க பதிவுலே போயி ஒட்டு போட சொன்னாராம், அன்னைக்கு பெரிய அலப்பறையா போட்ட அந்த பதிவுதான், இன்னிக்கு இப்படி இருக்கு.

நையாண்டி நைனா said...

அன்பு K.V.R அவர்களே தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.

தங்களுக்கு புரிந்துவிட்டதா?

Raju said...

பிரபல பதிவர் நைனா,

இப்பத்தான் ஒரு பிரபல பதிவரோட பதிவுக்கு போயிட்டு வாரேன்..அதுல உங்க பின்னூட்டத்தப் பார்த்ததும்
புரிஞ்சுருச்சு..!

\\பொதுப்பார்வைகளே இல்லாத டக்ளஸை வன்மையாகக் கண்டிக்கிறேன் ;-)\\


யோவ்..யார்யா அந்த டக்ளஸ்..அவனுக்கு பொதுப்பார்வை இல்லையாமே..!
அதுனால நானும் அவனை வன்மையாக கண்டிக்கிறேன்..!

Raju said...

பிரபல பதிவர் நைனா,

இப்பத்தான் ஒரு பிரபல பதிவரோட பதிவுக்கு போயிட்டு வாரேன்..அதுல உங்க பின்னூட்டத்தப் பார்த்ததும்
புரிஞ்சுருச்சு..!

\\பொதுப்பார்வைகளே இல்லாத டக்ளஸை வன்மையாகக் கண்டிக்கிறேன் ;-)\\


யோவ்..யார்யா அந்த டக்ளஸ்..அவனுக்கு பொதுப்பார்வை இல்லையாமே..!
அதுனால நானும் அவனை வன்மையாக கண்டிக்கிறேன்..!

Raju said...

பிரபல பதிவர் நைனா,

இப்பத்தான் ஒரு பிரபல பதிவரோட பதிவுக்கு போயிட்டு வாரேன்..அதுல உங்க பின்னூட்டத்தப் பார்த்ததும்
புரிஞ்சுருச்சு..!

\\பொதுப்பார்வைகளே இல்லாத டக்ளஸை வன்மையாகக் கண்டிக்கிறேன் ;-)\\


யோவ்..யார்யா அந்த டக்ளஸ்..அவனுக்கு பொதுப்பார்வை இல்லையாமே..!
அதுனால நானும் அவனை வன்மையாக கண்டிக்கிறேன்..!

நையாண்டி நைனா said...

என்ன டக்கு மாப்பி... கும்மிக்கு தயார் ஆகிறாயா?

"உழவன்" "Uzhavan" said...

அவங்களுக்கு இதெல்லாம் ஒரு கேவலமா பாஸ்..

Jackiesekar said...

*டக்ளஸ்....... said...
நைனா, நீங்க ஒருவேளை அவர சொல்றீங்களோ.!
ஒருவேளை இவர சொல்றீங்களோ.!
ஒருவேளை அவரையும் இவரையும் கலந்து சொல்றீங்களோ.!
இரு வேளை அவர சொல்றீங்களோ.!
இருவேளை இவர சொல்றீங்களோ.!
இருவேளை இவரையும் அவரையும் கலந்து சொல்றீங்களோ.!*/

புரியலையா....

ஹை... அப்பா நானும் பெரிய பதிவராயிட்டேன்...

ஹை... அப்பா நானும் பெரிய பதிவராயிட்டேன்...

ஹை... அப்பா நானும் பெரிய பதிவராயிட்டேன்...//


டக்லஸ் நிலமைதான் எனக்கும் இதுல உனக்க பெருமை வேரையா?

அத்திரி said...

நைனாவுக்கு என்ன ஆச்சு?

சொல்லரசன் said...

இவரை ஆதரித்து ஒட்டு கேட்ட சக்கரைகட்டியிடம் கேள்வி கேட்டு இங்கே வந்தால்,இஙகேயும் அவரை பற்றி விளம்பரம்.
இதுவும் ஒரு வகையான விளம்பரம்தான்

சொல்லரசன் said...

//பின்னூட்டம் போடுகிறவர்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

Dude,
Settle down. You are over reacting.
You sound like some one jealous of all the publicity the candidate is getting.

Cable சங்கர் said...

நைனா.. உங்களுக்கு கோபம்னா வேற எதையாவது சொல்லி திட்டுங்க.. எதுக்காக பின்னூட்டமிடறவஙகளை திட்றீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்..

நையாண்டி நைனா said...

/* " உழவன் " " Uzhavan " said...
அவங்களுக்கு இதெல்லாம் ஒரு கேவலமா பாஸ்..*/

வருகைக்கு மிக நன்றி....

அண்ணே உங்களுக்காச்சும் புரிஞ்சதா???

நையாண்டி நைனா said...

/*jackiesekar said...
டக்லஸ் நிலமைதான் எனக்கும் இதுல உனக்க பெருமை வேரையா?*/

நீங்கல்லாம் பழைய பெரிய பதிவரு உங்களுக்கும் புரியலையா?

ஆவ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
நைனாவுக்கு என்ன ஆச்சு?*/

அம்மாவை பாலோ பண்ணும் 'Blog' Cat-ஏ வருக.. வருக..

நான் நல்லாத்தான் ராசா இருக்கேன். மிக நன்றி உங்கள் அன்பிற்கு.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
இவரை ஆதரித்து ஒட்டு கேட்ட சக்கரைகட்டியிடம் கேள்வி கேட்டு இங்கே வந்தால்,இஙகேயும் அவரை பற்றி விளம்பரம்.
இதுவும் ஒரு வகையான விளம்பரம்தான்.*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி. நண்பா...

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//பின்னூட்டம் போடுகிறவர்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.*/

அண்ணே...! இது உங்களை சொல்லவில்லை. தங்களுக்கு மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். அந்த வரியை நீக்கி விடுகிறேன்.

நையாண்டி நைனா said...

/*Anonymous said...
Dude,
Settle down. You are over reacting.
You sound like some one jealous of all the publicity the candidate is getting.*/

Why should I have jealous on him? Am I going to file nominations against him? No.

But why you campaigners are not concentrating on other constituencies. Don’t you find any good candidate on other constituencies?

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
நைனா.. உங்களுக்கு கோபம்னா வேற எதையாவது சொல்லி திட்டுங்க.. எதுக்காக பின்னூட்டமிடறவஙகளை திட்றீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்..*/

அண்ணே... உங்களை சொல்வேனா? உங்களை இல்லை. உங்கள் உளைச்சலில் நானும் பங்கு கொண்டு அந்த வரிகளை நீக்கி விடுகிறேன்.

நையாண்டி நைனா said...

என்னை, இந்த பதிவு எழுத தூண்டிய பதிவு
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/04/blog-post_22.html.

இந்த பதிவிற்கான ஆக்கத்தையும், ஊக்கத்தையும் கொடுத்தது இந்த பதிவு.
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/01/blog-post_3637.html

எனக்கு இதனை விளம்பரம் படுத்த ஆசை இல்லை...ஆனால் அநேக நண்பர்கள் புரியாமல் தடுமாறுகிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாக.

சொல்லரசன் said...

நையாண்டி நைனா said...
//அண்ணே...! இது உங்களை சொல்லவில்லை. தங்களுக்கு மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். அந்த வரியை நீக்கி விடுகிறேன்.//

நீக்கியதற்கு நன்றிங்க நைனா

"உழவன்" "Uzhavan" said...

//அண்ணே உங்களுக்காச்சும் புரிஞ்சதா??? //

தெரியலயே தம்பி

Raju said...

\\மாப்பி டக்குலசு... இருக்கியாமா நீயி....\\

இன்னா நைனா,
பேரா பதிவுல நம்மள டாராக்கீட்டீங்களே...!
இந்த நாள் உங்க மொபைல்ல ரிமைன்டர் வச்சுக்கோங்கோ.!
நீங்க எப்டி என்னைய ஒட்டுனீங்களோ அதே மாதிரி நானும் உங்கள ஓட்டல்ல..
நான் "டக்" இல்ல நைனா...?
அதெமாதிரி "பேரா" வந்து "பேரா" இல்ல...

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. நேத்து நீங்க கூப்பிட்டப்ப பைக் ஓட்டிக்கிட்டு இருந்திருக்கேன்.. கால் மணி நேரம் கழிச்சுத்தான் பார்த்தேன்.. தப்ப எடுத்துக்காதீங்க.. ப்ரீயா இருக்குறப்ப கூப்பிடுங்க

Unknown said...

//அன்பு K.V.R அவர்களே தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.

தங்களுக்கு புரிந்துவிட்டதா?//

எஸ்ஸு எஸ்ஸு :-)