Friday, 3 April 2009

வலி மிகும் இடங்கள், மிகா இடங்கள்...

வாங்க வாங்க கண்ணுங்களா, வந்துடீங்களா, ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை இன்னிக்கு உங்களுக்கு சொல்லபோறேன். இன்னைக்கு நம்ம இணையத்துலே தப்பில்லாம யாரு எழுதுறா? சொல்லுங்க பார்போம். ....

@#$% ரு ...., *&^%ரு..... , *&^$#ரு.....

வெய்ட். வெய்ட். இருக்காங்க... இருக்காங்க.. விரல் விட்டு எண்ணுற அளவிற்கு தானே இருக்காங்க. ஆனா தப்பும் தவறுமா, சக்கையும் மொக்கையுமா எழுதரவங்கதானே அதிகமா இருக்காங்க.

இவங்கல்லாம் எழுதுனா தானே சொட்ட டாமேஜர் கிட்டே இருந்து நமக்கும் கொஞ்சம் ரிலீப் கிடைக்கும், டைம் சீட்லே "ஸ்கில்ஸ் இம்ப்ரோவமேன்ட்" 4 அவர்ஸ் அப்படின்னு பில் பண்ண முடியும்? இவங்க எழுதலை என்றால் என்ன ஆகும் கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க... அப்புறம் பூட்ட கேசுங்க படிக்கிற மாதிரி தான் பதிவுலகமும் இருக்கும். இந்த நெலைமை இப்படி இருக்கும் போது திடீர்னு நம்ம சிங்கை பதிவுலக சிங்கம், அண்ணன் கோவியாரு தப்பா எழுதுரவங்கல்லாம் இனி எண்ணத்தையும் எழுதி கிழிக்க வேண்டாம் என்று சொல்லிட்டு போய்ட்டாரு.

நாம யாரு சொன்னாலும் கேட்க மாட்டோம் அப்படிங்குறது, நமக்கு மட்டுமே தெரிஞ்ச உலக ரகசியம். சரி, அப்படியும் சில தப்பி பொறந்த மானஸ்தன் இருந்து எழுதுறதா நிறுத்தி, நாம பதிவு படிக்கிற கொரசிட்டா, அப்புறம் இங்கே டைம் சீட்லே "ஸ்கில்ஸ் இம்ப்ரோவமேன்ட்" 4 அவர்ஸ் அப்படின்னு எப்படி பில் பண்ண முடியும்?

இதற்கு ஒரு மாற்று கண்டு பிடிச்சே தீரனும், எழுதுறவங்க, எழுதிகிட்டே இருக்கணும் படிக்கிறவங்க படிச்சிக்கிட்டே இருக்கணும். அப்ப தப்பு தப்பா எழுதுறவங்களை என்ன செய்யிறது? அதுக்குள்ளே அவசரப்படாதீங்க,
அதுக்கு தானே வலி மிகும் இடம், வலி மிகா இடம் பற்றி ஆராச்சி பண்ணி வச்சிருக்கேன் சொல்லுவோம்லோ?

இந்த காது மடல், கன்னம், மொழி என்று சொல்லக்கூடிய விரல் மூட்டு இதெல்லாம் வலி மிகும் இடங்கள் இங்கே நாம் ஒன்னும் செய்யக் கூடாது. உள்ளங்கை, கால், பின்புறம் ஆகியவைகள் வலி மிகா இடங்கள் இங்கேயும் நாம ஒன்னும் செய்ய வேண்டாம், அவர்களின் பதிவை படிச்சிட்டு ஒரு ஸ்மைலிய போட்டுட்டு நண்பா இங்கே, இங்கே இன்ன இன்ன தப்பு இருக்கு என்று சொல்லிக்காட்டுங்க. அந்த பதிவருக்கும், உங்களுக்கும் ரொம்ப நெருக்கம் என்றால் மேற்கண்ட இடங்களில் செல்லமா ரெண்டு அடிய போட்டு கரெக்க்டா எழுத சொல்லுங்க.

என்னது?தமிழ் பாடம்னு நெனச்சி வந்தீங்களா? இப்படி ஐடியா கொடுத்த என்னை தேடி வாரீங்களா... க்கும்... இப்படி எதை, எதையோ நெனச்சி நெனச்சி ஏமாந்து போறதே உங்க பொழப்பா இருக்கு, இப்ப எலெக்சன் வேற வருது!!!! ஐ அம் எஸ்கேப்பு .....

ஹாய்... ஹாய்... நீங்க எங்கே எஸ்கேப்பு ஆறீங்க.... பின்னூட்டம் போட்டுட்டு போங்க...

17 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ரைட்டு.. ஆரம்பிச்சாச்சா.. வேணுக்குன்னே பல இடங்கள்ல தமிழ்ல தப்பு பண்ண மாதிரி தெரியுதே? இதுல எங்கெங்க அடிக்கலாம்னு ஐடியா வேற?

கார்த்திகைப் பாண்டியன் said...

//இவங்கல்லாம் எழுதுனா தானே சொட்ட டாமேஜர் கிட்டே இருந்து நமக்கும் கொஞ்சம் ரிலீப் கிடைக்கும், டைம் சீட்லே "ஸ்கில்ஸ் இம்ப்ரோவமேன்ட்" 4 அவர்ஸ் அப்படின்னு பில் பண்ண முடியும்? //

இது வேறையா.. அப்படி என்னத்த இம்ப்ரூவ் பண்றீங்களோ.. பாவம் அந்த டாமேஜர்

அத்திரி said...

அது எப்படி இப்படியெல்லாம் திங் பண்ணி எழுதுறீங்க ...........கொஞ்சம் சொல்லிக்குடுங்க

சொல்லரசன் said...

//எதையோ நெனச்சி நெனச்சி ஏமாந்து போறதே உங்க பொழப்பா இருக்கு//

உண்மையிலே நாறபொழப்புதானுங்க‌

T.V.Radhakrishnan said...

//அத்திரி said...
அது எப்படி இப்படியெல்லாம் திங் பண்ணி எழுதுறீங்க ...........கொஞ்சம் சொல்லிக்குடுங்க//

repeateyyyyy
அங்கங்க இடத்துக்கு ஏற்றார் போல அரை மாத்திரை..ஒரு மாத்திரை அதிகப்படுத்தினால் வலி மிகுவது சரியாகிடும்.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
ரைட்டு.. ஆரம்பிச்சாச்சா.. வேணுக்குன்னே பல இடங்கள்ல தமிழ்ல தப்பு பண்ண மாதிரி தெரியுதே? இதுல எங்கெங்க அடிக்கலாம்னு ஐடியா வேற?*/

ஹம்ம்ம்... முதல் வருகைக்கு நன்றி நண்பரே.
என்ன பண்றது சொல்லுங்க.

நையாண்டி நைனா said...

/*இது வேறையா.. அப்படி என்னத்த இம்ப்ரூவ் பண்றீங்களோ.. பாவம் அந்த டாமேஜர்*/
ஏனுங்க, சில தமிழ் பட டைரடக்கர் மாதிரி ஒண்ணுமே இல்லமே, பெரிய மொக்கை எழுதுறோம். அப்புறம் பதிவு படிக்கிறோம், பின்னூட்டம்லாம் போடுறோம் இதெல்லாம் ஸ்கில்ஸ் இல்லையா.

நையாண்டி நைனா said...

/*அது எப்படி இப்படியெல்லாம் திங் பண்ணி எழுதுறீங்க ...........கொஞ்சம் சொல்லிக்குடுங்க*/

இப்படி சொல்லி நீங்க என்னை பாராட்டினா (வெறுப்பேத்தினா), இன்னும் ஆழ்ந்த சிந்தனை (மரண மொக்கை) பதிவுகள் வரும்.

வருகைக்கு நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*உண்மையிலே நாறபொழப்புதானுங்க‌*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*அங்கங்க இடத்துக்கு ஏற்றார் போல அரை மாத்திரை..ஒரு மாத்திரை அதிகப்படுத்தினால் வலி மிகுவது சரியாகிடும்.*/

அட அருமையா இருக்கே. இந்த சிந்தனை நமக்கு வரலியே.

ஐயா,
வருகைக்கு மிக மிக நன்றி.

thevanmayam said...

எப்படிங்க
தோழரே
இப்படி?

thevanmayam said...

வெய்ட். வெய்ட். இருக்காங்க... இருக்காங்க.. விரல் விட்டு எண்ணுற அளவிற்கு தானே இருக்காங்க. ஆனா தப்பும் தவறுமா, சக்கையும் மொக்கையுமா எழுதரவங்கதானே அதிகமா இருக்காங்க.///

சக்கையும் மொக்கையும் ! ஆமாமா?

குடந்தைஅன்புமணி said...

வலிக்கிது வேணாம்... அழுதுருவேன் என்ற வடிவேலின் காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது.

Bendz said...

Superb. You spend a lot of time in thinking :(
Nice blog and Keep it up.
:-)
Insurance

நையாண்டி நைனா said...

/*thevanmayam said...
எப்படிங்க
தோழரே
இப்படி?*/

அதெல்லாம் அதுவா வருது... நான் என்ன செய்யட்டும்.

நையாண்டி நைனா said...

/*thevanmayam said...
வெய்ட். வெய்ட். இருக்காங்க... இருக்காங்க.. விரல் விட்டு எண்ணுற அளவிற்கு தானே இருக்காங்க. ஆனா தப்பும் தவறுமா, சக்கையும் மொக்கையுமா எழுதரவங்கதானே அதிகமா இருக்காங்க.///

சக்கையும் மொக்கையும் ! ஆமாமா?*/

இது... இது... இதுக்கு பேரு கற்பூர புத்தி.
வருகைக்கு மிக நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*குடந்தைஅன்புமணி said...
வலிக்கிது வேணாம்... அழுதுருவேன் என்ற வடிவேலின் காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது.*/

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது....
அப்படி அழாம இருந்தா அண்ணன் உனக்கு குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருவேனாம், நீயும் வாங்கி சாப்டுட்டு, பதிவை படிச்சி பின்னூட்டம் போடுவியாம்.

நண்பரே இது உங்கள் முதல் வருகை போல் இருக்கிறதே.... வருக வருக. வருகைக்கு நன்றி.