Wednesday, 15 April 2009

செய்யுமா? தினத்தந்தி...

தமிழகத்திலே பாமரனையும் படிக்க தூண்டிய பத்திரிக்கை தினத்தந்தி என்றால் அது மிகையோ? இல்லை, இல்லவே, இல்லை. அல்லவா? அது மக்களுக்கு செய்தியை வழங்கிய விதங்கள் மற்றும் சொல் பயன்பாடுகளும் மக்களுக்கு சென்று அடைந்தது அல்லவா? அது மக்களுக்கு வழங்கிய சொற்றொடர்கள் குறிப்பாக இரட்டை கிளவிகள் இன்றும் மக்கள் மனதிலே நீங்கா இடம் பிடித்து இருக்கிறது அல்லவா? அந்த இரட்டை கிளவிகளை நான் இங்கே பதிந்தால் அது உங்களை நான் கதற-கதற, மாறி-மாறி கொடுமை செய்தவனாவேன். நீங்களும் என்னனை சதக்-சதக் என குத்திக் கிழிக்க கொடுவாளை தேடி புறப்பட்டு விடுவீர்கள்.

தினத்தந்தி; தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அளப்பரிய தொண்டு செய்துள்ளது. அந்த தொண்டுக்கு எனது மரியாதை மற்றும் வணக்கங்கள். இன்றும் இங்கே மும்பையிலே அதன் பதிப்பு வருகிறது. இங்கே இருக்கும் சில மக்கள் தமிழ் மொழியை மறந்து விட கூடாது என்பதற்காகவும், தற்போதுள்ள இளைய தலைமுறையினர் தமிழை அறிந்து கொள்ளவும், அந்த பதிப்பிலே "தமிழ் கற்றுக்கொள்ளலாம் வாங்க" என்று தலைப்பிட்டு, அழைப்பு விடுத்து ஒரு பகுதி ஒதுக்கி தமிழை சொல்லிக்கொடுக்கும் முறையாக பாடங்களை வரிசையாக பதிக்கிறது. நன்றி நன்றி. நன்றி.

சரி. இப்போது விடயத்திற்கு வருகிறேன், அந்த பாடங்களில் சில வடமொழி எழுத்துக்களையும், தமிழ் எழுத்து என்றே சொல்லி வருகிறது? அது எப்படி சரியாகும்? இது வடமொழி எழுத்து, என்று முதலிலேயே அறிவுறுத்த வேண்டாமோ? அது நாம் சொற்களை பலுக்குதலுக்கு வேண்டி பயன்படுத்துகிறோம் என்று கூறவேண்டாமோ? இனி வரும் பதிப்பிலாவது அப்படி அறிவிப்பை செய்து தொடருமா? தினத்தந்தி.

இது ரொம்ப முக்கியமா? என்று கூறாதீர்கள். இது முக்கியமே. ஒரு மொழிக்குன்டான எழுத்துக்களே சரிவர அறியாமல், தெரியாமல் நாம் எப்படி அந்த மொழியை கற்றவர்களாவோம். இதை ஒத்துக்கொண்டால், தமிழ் எழுத்துக்கள் எத்தனை? என்ற அடிப்படை இலக்கணமே மாறிவிடுகிறதே? அதற்காக தான் இந்த பதிவே. நாமும் சொல்லவில்லை என்றால் பின் யார்தான் சொல்வது.

நிற்க. "போய் புள்ளைங்களை படிக்க வைங்கடா" என்றும் " இதை விட்டு விட்டு போய் வேறு வேலை பாரு" என்று சொல்ல முனையும் அனானி நண்பர்களே, தயவு செய்து நீங்கள் வேறு வேலை பார்க்க போய், ஆக்கமா சிந்தியுங்கள். மற்ற நண்பர்கள் நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உங்கள் கருத்துகளை பின்னூட்டமாய் சொல்லி விட்டு, போங்களேன்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

39 comments:

ttpian said...

யார் கண்டது? மாமியும்,மாமாவும் சேர்ந்து போட்டி போட்டு நம்மை எமாட்ரும் காலம் விரைவில் வரலாம்!

நையாண்டி நைனா said...

/*ttpian said...
யார் கண்டது? மாமியும்,மாமாவும் சேர்ந்து போட்டி போட்டு நம்மை எமாட்ரும் காலம் விரைவில் வரலாம்!*/

அண்ணே வருகைக்கு நன்றி....

ஆனா.. இந்த பின்னூட்டதிற்கு நான் என்ன சொல்லட்டும்?

மணிஜி said...

ஆண்டி பண்டாரம்,சிந்துபாத் கதை டீக்கடைகளிலும்,சலுன் கடைகளிலும் சிறந்த பொழுது போக்கு வாங்க பேசலாம்

நையாண்டி நைனா said...

/* தண்டோரா said...
ஆண்டி பண்டாரம்,சிந்துபாத் கதை டீக்கடைகளிலும்,சலுன் கடைகளிலும் சிறந்த பொழுது போக்கு வாங்க பேசலாம்*/

வருகைக்கு நன்றி நண்பரே...

Dhavappudhalvan said...

nainaa....! nallaadhan solli irukkinninga.

நையாண்டி நைனா said...

/*Dhavappudhalvan said...
nainaa....! nallaadhan solli irukkinninga.*/

புது வரவு... நல்வரவு ஆகுக.
வருகைக்கு மிக நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

//அதற்காக தான் இந்த பதிவே. நாமும் சொல்லவில்லை என்றால் பின் யார்தான் சொல்வது.//

கண்டிப்பா கண்டிக்கத்தக்கது என்னங்க சரியா..

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
//அதற்காக தான் இந்த பதிவே. நாமும் சொல்லவில்லை என்றால் பின் யார்தான் சொல்வது.//*/

கண்டிப்பா கண்டிக்கத்தக்கது என்னங்க சரியா..

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி நண்பரே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

இப்பதிவு நையாண்டி இல்லை என நம்புவோம்

நையாண்டி நைனா said...

/* T.V.Radhakrishnan said...
இப்பதிவு நையாண்டி இல்லை என நம்புவோம்*/

ஐய்யா...!!! இது நையாண்டி அல்ல, நையாண்டி அல்ல.. நையாண்டி அல்ல...

இந்த பேரு வச்சு...இங்கே போட்டிருப்பதால் இப்படியோ?

எனினும் வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி ஐயா.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நைனா சமூக அக்கறையோட ஒரு பதிவு போட்டிருக்கார்.. தினத்தந்தியா பாராட்டுற அதே நேரம் தப்பையும் சுட்டிக் காட்டி இருக்கேங்க.. திருத்திக்குவாங்கன்னு நம்புவோம்..

chaks said...

Hai. You write very well. This is a general comment and not for this particular piece.

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
ரொம்ப நாளைக்கு அப்புறம் நைனா சமூக அக்கறையோட ஒரு பதிவு போட்டிருக்கார்.. தினத்தந்தியா பாராட்டுற அதே நேரம் தப்பையும் சுட்டிக் காட்டி இருக்கேங்க.. திருத்திக்குவாங்கன்னு நம்புவோம்..*/

நண்பா நம்ம பதிவுலே எல்லாம் இருக்கும்.

அவங்க கண்டிப்பா செய்வாங்கன்னு எதிர்பார்கிறேன்.

நையாண்டி நைனா said...

/* chaks said...
Hai. You write very well. This is a general comment and not for this particular piece.*/

Thank you very much. But why don't you say your opinion with your real name.

சொல்லரசன் said...

//ஒரு மொழிக்குன்டான எழுத்துக்களே சரிவர அறியாமல், தெரியாமல் நாம் எப்படி அந்த மொழியை கற்றவர்களாவோம். //

நல்ல கேள்வி.

சொல்லரசன் said...

யாருங்க நகைகடை நைனா
உங்கநண்பரா?
நம்ம கடைக்கு வந்து பாருங்க அவரை.

Anonymous said...

At the outset, my sincere apologies for writing in English; however, this does not distract my opinions and sending the message across. I am fluent in Tamil, read, write, speak; yet do not know how to type in Tamil. My aoplogies, again....

Your views are 100% correct. This has been done since I studied in Madras some decades back. I scored very high marks in Tamil in the S.S.L.C exam, but, the pity is, a couple of decades ago, I realized that I scored very high marks in NOT in Tamil as most of the words are NOT Tamil...

90% of the words were INSERTED by the elite community showcaisng as Tamil. For example,to mention a few, they are such as Kalyanam (Thirumanam), Purushan (man, husband,etc), Vathiyar (aasiriyar), purogithar (priest), etc.

But the beauty is Tamilans celebrate new years with 100% sanskrit names. If that is the Tamil new year then how come NOT a single year's name is in Tamil???

In addition people also say that it denotes Hindu calendar!!!The irony here is kannadas, telugus, and Gujarthis celbrate their respective new year NOT on the same day as Tamil New year, aka, Hindu calendar.

My question is "ARE TELUGUS, KANNADIGA, etc who celebrte their new year's day differently are NOT Hindus?" they celebrate on different days as opposed to us. Then why so much division among Hindus???

You may want to see the names of OUR NEW year in sansKrit in this link

http://kiruththiyam.blogspot.com/2009/04/blog-post_15.html

Cable சங்கர் said...

நைனா அருமையான பதிவு.. வர வர சீரியஸாகிட்டியே நைனா.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//ஒரு மொழிக்குன்டான எழுத்துக்களே சரிவர அறியாமல், தெரியாமல் நாம் எப்படி அந்த மொழியை கற்றவர்களாவோம். //

நல்ல கேள்வி.*/

நண்பரே வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
யாருங்க நகைகடை நைனா
உங்கநண்பரா?
நம்ம கடைக்கு வந்து பாருங்க அவரை.*/

நண்பா...! ரெண்டு பேரும் ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள் மாதிரி இருக்கோமா? ரெண்டு பேரும் அண்ணன் தம்பி தான், அவன் அண்ணனா இருக்கப்ப நான் தம்பியா இருப்பேன், நான் தம்பியா இருக்கப்ப அவன் அண்ணனா இருப்பான்.

ஆமா நான் ஏன் அவர் கடையை கொள்ளை அடிக்க போறேன். கடையே என்னுது தானே.(இதை அவருகிட்டே போட்டு கொடுதுறாதீங்க)

நையாண்டி நைனா said...

/*Anonymous said...
At the outset, my sincere apologies................

.....Tamil new year then how come NOT a single year's name is in Tamil??? ......

You may want to see the names of OUR NEW year in sansKrit in this link

http://kiruththiyam.blogspot.com/2009/04/blog-post_15.html*/


வருகை மற்றும் நீண்ட பின்னூடத்திற்கும் மிக நன்றி.

ஆமா.. இதை நீங்க உங்கள் சொந்த முகவரிலேயே கூறலாமே?

கோவி.கண்ணன் said...

நேற்றே பதிவை படித்தேன், நேற்று விரலில் மோதிரம் அணியவில்லை, இன்று தான் அணிந்து இருக்கிறேன்.

:)

*****
சரி. இப்போது விடயத்திற்கு வருகிறேன், அந்த பாடங்களில் சில வடமொழி எழுத்துக்களையும், தமிழ் எழுத்து என்றே சொல்லி வருகிறது? அது எப்படி சரியாகும்? இது வடமொழி எழுத்து, என்று முதலிலேயே அறிவுறுத்த வேண்டாமோ? அது நாம் சொற்களை பலுக்குதலுக்கு வேண்டி பயன்படுத்துகிறோம் என்று கூறவேண்டாமோ? இனி வரும் பதிப்பிலாவது அப்படி அறிவிப்பை செய்து தொடருமா? தினத்தந்தி.

சரியான அவதனிப்பு !

வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் காலப் போக்கில் அந்த நாட்டையே தாய்நாடு ஆக்கிக் கொள்வது இல்லையா ? அவை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்வதைவிட தமிழில் இல்லா ஒலிப்பைத் தரும் தமிழ் எழுத்துக்கள் என்று சொல்வதே சிறப்பு. தமிழ் அயல் எழுத்துக்கள்,தமிழ் திசை எழுத்துக்கள் என்று சொல்வதே சரி என நினைக்கிறேன்.

Jackiesekar said...

சரி. இப்போது விடயத்திற்கு வருகிறேன், அந்த பாடங்களில் சில வடமொழி எழுத்துக்களையும், தமிழ் எழுத்து என்றே சொல்லி வருகிறது? அது எப்படி சரியாகும்? இது வடமொழி எழுத்து, என்று முதலிலேயே அறிவுறுத்த வேண்டாமோ? அது நாம் சொற்களை பலுக்குதலுக்கு வேண்டி பயன்படுத்துகிறோம் என்று கூறவேண்டாமோ? இனி வரும் பதிப்பிலாவது அப்படி அறிவிப்பை செய்து தொடருமா? தினத்தந்தி.// kandippaka thodara vendum

anbudan
jackiesekar

Bleachingpowder said...

//மக்களுக்கு வழங்கிய சொற்றொடர்கள் குறிப்பாக இரட்டை கிளவிகள் இன்றும் மக்கள் மனதிலே நீங்கா இடம் பிடித்து இருக்கிறது அல்லவா?//

தினத்தந்தியில் என்னோட ஃபேவரைட், " பஸ் ஸ்டாப்பில் வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்த அழகி கைது, செல்போன் பறிமுதல்" வாரத்துல மூனு நாளாவது இந்த செய்தி வந்திடூம் :)

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
நைனா அருமையான பதிவு.. வர வர சீரியஸாகிட்டியே நைனா.*/

அண்ணாத்தே.... உங்கிட்டே பாடம் படிச்சிகினு இருக்கப்போ சும்மா கீரலாமா? அப்பாலிக்கா ஒரு மேட்டர், நாம எல்லாம் பண்ணனும், இல்லாங்காட்டி உங்க தம்பியா இருக்க முடியுமா?

நையாண்டி நைனா said...

/* Nellaitamil.com said...
ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

குரூப் அமைப்பதற்கான வசதி...
வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு....
ஓட்டளிப்பு பட்டை...
இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்....

தளமுகவரி*/

சரி... மக்கா... செஞ்சிருவம்ள...

நையாண்டி நைனா said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...

/*நேற்றே பதிவை படித்தேன், நேற்று விரலில் மோதிரம் அணியவில்லை, இன்று தான் அணிந்து இருக்கிறேன்.
:)*/

கொஞ்சம் சின்ன மோதிரமா போட்டிருந்திருக்கலாம்.....
(என்ன!!! ஒரு வலி....)
* * * * * * * * * * * * * * * * * *
/* சரியான அவதனிப்பு !*/

நன்றி.
* * * * * * * * * * * * * * * * * *
/*வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் காலப் போக்கில் அந்த நாட்டையே தாய்நாடு ஆக்கிக் கொள்வது இல்லையா ?*/

அண்ணே.....! இப்படி ஒரு ஆசை வேணாம்னே... சிங்கபூரு பொழச்சி போகட்டும்...
* * * * * * * * * * * * * * * * * *
/*அவை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்வதைவிட தமிழில் இல்லா ஒலிப்பைத் தரும் தமிழ் எழுத்துக்கள் என்று சொல்வதே சிறப்பு.*/

எனது கணிப்பு என்னவென்றால், தமிழ் சொற்களுக்கு, தமிழ் எழுத்துக்களே போதுமானது. வேறு மொழி சொற்களுக்கு தான் இந்த மாதிரியான இரவல் எழுத்துக்கள் தேவைப்படும்.

பூவோ, மலரோ (இரண்டுமே தமிழ் சொல் தானே? தவறென்றால், திருத்திக் கொள்கிறேன்) அது அப்படியே இருக்கும் வரை நல்லது தான். எப்போது நமக்கு "புஷ்பமாக" தேவைப்படுகிறதோ அப்போது தான் இரவல் வாங்கும் இழி நிலைக்கு தள்ளப்பட்டு, "புய்ப்பமாக" நாறி விடுகிறோம்.
* * * * * * * * * * * * * * * * * *
/*தமிழ் அயல் எழுத்துக்கள்,தமிழ் திசை எழுத்துக்கள் என்று சொல்வதே சரி என நினைக்கிறேன்.*/
இருக்கலாம்.
* * * * * * * * * * * * * * * * * *
கருத்துக்கு மிக, மிக, மிக நன்றி அண்ணா.

நையாண்டி நைனா said...

jackiesekar said...
..... தொடருமா? தினத்தந்தி.// kandippaka thodara vendum

anbudan
jackiesekar*/

அன்பு அண்ணா.. நான் பல முறை உங்கள் கடைக்கு வந்து நையாண்டி பண்ணி இருக்கேன்...

இன்று என் கடைக்கு வருகை தந்து இருக்கீங்க. மிக மகிழ்ச்சியா இருக்கு.

நையாண்டி நைனா said...

/*Bleachingpowder said...
//மக்களுக்கு வழங்கிய சொற்றொடர்கள் குறிப்பாக இரட்டை கிளவிகள் இன்றும் மக்கள் மனதிலே நீங்கா இடம் பிடித்து இருக்கிறது அல்லவா?//

தினத்தந்தியில் என்னோட ஃபேவரைட், " பஸ் ஸ்டாப்பில் வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்த அழகி கைது, செல்போன் பறிமுதல்" வாரத்துல மூனு நாளாவது இந்த செய்தி வந்திடூம் :)*/

அன்பு நண்பரே... வருகை மற்றும் கருத்துக்கு மிக மகிழ்ச்சி... மற்றும் நன்றிகள்.

அவையாவும் சமூகத்திலே நடப்பது தானே????

லோகு said...

நல்ல ஆதங்கம், நிறைவேற வாழ்த்துக்கள்...

அத்திரி said...

நல்ல பதிவு நைனா......... அப்புறம் இந்த பதிவ எழுதியது நீங்க தானா????

நையாண்டி நைனா said...

/* லோகு said...
நல்ல ஆதங்கம், நிறைவேற வாழ்த்துக்கள்...*/

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
நல்ல பதிவு நைனா......... */

கருத்துக்கு மிக நன்றி நண்பரே...

/*அப்புறம் இந்த பதிவ எழுதியது நீங்க தானா????*/

அப்புறம் மண்டபத்திலே எவனாவது எழுதி கொடுத்ததையா இங்கே வந்து என் பதிவுன்னு போட்டு இருக்கேன்? என்னுடையது தான். என்னுடையது தான், ஐயா.

Anonymous said...

"" April 16, 2009 10:54 AM

நையாண்டி நைனா said...
/*Anonymous said...
At the outset, my sincere apologies................

.....Tamil new year then how come NOT a single year's name is in Tamil??? ....

ஆமா.. இதை நீங்க உங்கள் சொந்த முகவரிலேயே கூறலாமே? ""
___________________________
Yes, I could have done that but I do not know to type in Tamil; and I thought that is one of the essential criteria to be a part of this group.

But please do understand that I am NOT hiding in the name of as 'Anon'

Sincerely,

Cholan Mari. Ramasamy

PS: please do tell me how to subcribe to this group....Thanks

நையாண்டி நைனா said...

Dear Friend,
mr.Cholan Mari. Ramasamy

Soon I will put an article on blogging.

"உழவன்" "Uzhavan" said...

ஒரு ஒன்னரையணா ப்ளாக் வைச்சிருக்கிற நாமே (என்னதாங்க சொன்னேன். நிச்சயமா உங்கள இல்லை) அயல்மொழி கலக்காம எழுதனும்னு நினைக்கும்போது, தினத்தந்தி மாதிரியான பெரிய செய்தித்தாள்களுக்கு இன்னும் நிறைய சமூகப்பொறுப்பு கண்டிப்பா இருக்கனும். நல்லாதான் சொல்லியிருக்கீங்க நைனா..

நையாண்டி நைனா said...

/* " உழவன் " " Uzhavan " said...
ஒரு ஒன்னரையணா ப்ளாக் வைச்சிருக்கிற நாமே (என்னதாங்க சொன்னேன். நிச்சயமா உங்கள இல்லை) அயல்மொழி கலக்காம எழுதனும்னு நினைக்கும்போது, தினத்தந்தி மாதிரியான பெரிய செய்தித்தாள்களுக்கு இன்னும் நிறைய சமூகப்பொறுப்பு கண்டிப்பா இருக்கனும். நல்லாதான் சொல்லியிருக்கீங்க நைனா..*/

மிக நன்றி அண்ணே...

உங்க ஆதரவிற்கும் மற்றும் கருத்திற்கும்.