மதுரை ரயில் நிலையம். ஈரோடு வழியாக பெங்களூர் வரை செல்லும் ரயிலுக்காக காத்திருந்தேன். பிளாட்பாரம் எங்கும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனர். வண்டி அரை மணி நேரம் தாமதமாக வந்தது. வண்டியின் உள்ளேயும் பயங்கர ஜனத்திரள். எல்லோருக்கும் பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கிறது ஆனால் பணம்? (அட நமக்குள்ளும் தத்துவ முத்தா? கண்ட்ரோல் பண்ணுடா என்று ஒரு பெருங்குரல் என்னுள்ளே). கஷ்டப்பட்டு அடித்து பிடித்து ரயிலில் ஏறினால் நிற்கக் கூட இடம் இல்லை. பின்னே முன்பதிவு செய்திருப்பவர்கள் போன்று வசதி எல்லாம் நான் எதிர்பார்க்க முடியுமா? என்னருகில்.. ஒரு பாட்டி கையோடு ஒரு சிறு குழந்தையையும் கூட்டி வந்து இருந்தார்கள். அழகான, பெரிய பேத்தி வீட்டில் இருப்பாளோ என்று என் சிந்தனைய தூண்டியது பழனிபாரதியின் வரிகள்.
"தம்பி.. கொஞ்சம் இடம் விட்டீங்கன்னா வயசானவ உக்காந்துக்குவேன்.."
"ஆமா நீயெல்லாம் வரலேன்னு... இப்ப யாரு வருத்தப்பட்டா?" என்று என் மனதில் தோன்றிய எண்ணம், "பரவா இல்லை பாட்டி.. இப்படி கீழ உக்காருங்க.." என்று வார்த்தை முத்தாய் உதிர்ந்தது. இனி பழனிபாரதியின் பாடல்களையும் கேட்பதில்லை என்று "தேர்தல் கால" கொள்கை முடிவு எடுத்தேன்.
மெதுவாக கீழே அமர்ந்தவர், சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடி கேட்பார்கள்.." சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்து கதவை ஒட்டி நின்று கொண்டேன். ரயில் நகரத் தொடங்கி இருந்தது. காற்று மிதமாக என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. இரவின் குளிர் காற்றில் எங்கும் பாவி இருந்தது. ஒரு கட்டிங் ஓல்டு மாங்கினால், உடல் சுகமாய் இருந்து, உள்ளம் தான் ஆர்பரித்து ஆடியது. "அவன்" கண்ணில் மட்டும் பட்டு விடவே கூடாது என்றும் மனம் வேண்டியது.
என்னை ஒட்டி நின்று இருந்த சிலர் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். வடமாநிலத்தவர், வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? ஆம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, தமிழர்கள் வெறுப்பது தேவை இல்லாமல் புகுத்தப்படும் ஹிந்தியை தான், ஹிந்தி மொழி பேசுபவர்களை அல்ல. சரிதானே... அவர்கள் எண்ணம் சரிதானே. இதை இங்குள்ள சில மக்களுக்கு புரிய வைப்பது எப்படி? எனக்குள் நிறைய கேள்விகள்.
வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் இருள், மரங்களும் தந்திக் கம்பங்களும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன. எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது. ஆம் 'அவன்' கையில் மட்டும், நான் சிக்கினால், என் வாழ்கையும் பின்னோக்கி ஓடி விடும், இருண்டு விடும். வாசற்படியில் அமர்ந்து இருந்த ஒரு ஹிந்தி இளைஞன் காதில் செல்போனை மாட்டிக் கொண்டு சத்தமாக பாடிக் கொண்டு இருந்தான். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். ஆனால் ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. சட்டென்று தீர்ந்து போன பிரிபெய்ட் பாலேன்சு போல போல, எனது பதிவு கண்டு மக்கள் ஒடுங்குவது போல் அவனுடைய பாடல் தானாகவே தொலைந்து போனது. எதற்காக அவன் பாடலை நிறுத்தினான்? நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அன்றைய சூழலில் நான் அப்படி நினைக்க வில்லை. எனக்கு எப்போதுடா? ஈரோடு நிலையம் வரும் என்று இருந்தது. எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. இவன் வேறு பாட்டு பாடி வம்பை இழுத்து விடுவானோ என்ற பயமும் தான். மெதுவாக ரயிலின் உள்ளே திரும்பி நின்று கொண்டேன்.
சிறிது நேரத்திற்குப் பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. ஏதாவது கிராசிங்கா இருக்கும் என்றார்கள். வெகு நேரமாக வண்டியின் உள்ளேயே இருந்ததால் மூச்சு முட்டுவது போல் இருந்தது. கொஞ்ச நேரம் கீழே நிற்கலாம் என்று இறங்கினேன். ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஒரு மனிதர் "கடலை சார், டைம்பாஸ் கடலை சார்.." என்று கத்தியவாறே கடலை விற்றுக் கொண்டிருந்தார். அட பரவா இல்லையே, இவன் சாதரண ஆள், இல்லை. எவ்வளவு சுலபமா வாழ்கை தத்துவத்தை சொல்லி போகிறான், "கடலை", "கடலை", "டைம்பாசுக்கு கடலை". ஹும்ம்.... இதையே மூணு லைன்லே மூணு வாட்டி எழுதி ப்லோகுலே போட்டு பெரிய கவுஜைன்னு சொல்லி பேரு வாங்கிரனும். என்று முடிவு செய்து, அருகில் கிடந்த சிமென்ட் பெஞ்சின் மீது படுத்துக் கொண்டேன். படுத்துக் கொண்டே கவுஜைக்கு தலைப்பு யோசிக்கலாம் ஆனால் என்னோட நிலைமை இப்ப அப்படியா இருக்கு.... விரித்து வைத்த கடலை பேப்பராய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெள்ளை கடலைகளாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன. நிலா ஏதோ ஒரு மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருந்தது வட்ட வடிவ வெள்ளரி துண்டு தட்டுக்கு கீழே ஒளிந்து கொள்வது போல. பொதுவாக எனக்கு தனிமை பிடிப்பதில்லை. எனக்கு கும்பல் தான் பிடிக்கும், அதுவும் இப்போதைய எனது நிலைமைக்கு கண்டிப்பா தனிமை கூடவே கூடாது.
திடீரென.. யாரோ என்னை பார்ப்பதுபோல் ஒரு குறுகுறுப்பு. ஐய்யையோ அது அவனாக மட்டும் இருந்து விடவே கூடாது என்று மனது ஓலமிட்டது. ஆனால் அது ஒரு பெண். என்னை திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் இனம் புரியாத ஒரு ஆர்வமும் சிநேக பாவமும் இருந்தன. அவள் என்னை ரசித்து கொண்டு இருந்திருக்கிறாள். (ரசித்து???? என் மனம் அப்படிதான் ஒயிலாட்டம் போட்டது.) எனக்கு அவளைப் பார்க்கையில் சொல்லவொண்ணாத உணர்வுகள் தோன்றின. முக்கால் மணி நேரம் கழித்து ரயில் கிளம்பியபோது நான் அவளை எனக்கு மிகவும் நெருக்கமானவளாக உணர்ந்தேன்.
ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது மணி ஒன்றாகி இருந்தது. அந்தப்பெண்ணும் ஈரோடுதான் போல.. இறங்கி எனக்கு முன்னே நடக்கத் தொடங்கினாள். அந்தப் பெண்ணின் முகமும் அவள் உதடுகளில் தேங்கி நின்ற சிரிப்பும் எனக்குள் நன்றாக பதிந்து விட்டிருந்தது. அவள் நின்று, என்னைப்பார்த்து கை அசைப்பாளா என்று ஏக்கத்துடனே சென்றேன். "அட.... அவளை எதிர் கொண்டு அழைக்க வந்திருப்பது யார்? அவளோட அண்ணனோ........? தம்பியோ.......? சத்தியமாக புருசனாக மட்டும் இருக்கவே கூடாது." அடுத்த விளக்கு கம்பத்து விளக்கில் பார்த்த போது, தெரிந்தது......
அட அவனே தான், அவனே தான்... ஈரோடு ரயில்வே போலிசின் ஏட்டு...! அய்யயோ இவன் கண்ணில் தானே படக்கூடாது என்று இருந்தோம். அப்படியானால் இவள்??? அவள் தான், அவளே தான். அன்று மதுரை ரயில் நிலையத்தில் போட்டு அடி பெண்டு நிமித்தினாலே அவளே தான். மதுரை ரயில்வே போலிசின் பெண் சப்-இன்ஸ்பெக்டர். அடச்சே...! வாய்க்குள்ளே நுழையாத பேரு வச்ச புஸ்தகமெல்லாம் படிச்சி, அதெல்லாம் ஞாபகத்திலே இருக்கு, வர்ணனையா வருது... நாயடி, பேயடி கொடுத்த இவளை எப்படிடா மறந்தோம்? இனி ரயில்லே எவனாவது படிச்சிட்டு வச்சிட்டு போன புஸ்தகத்தை எடுத்து படிக்கவே கூடாது. அப்படியே படிச்சா மனசிலே வசிக்க கூடாது. அப்படியே மறந்துறணும் மனசுலே வச்சி ப்லோகுலே எழுதி பேரு வாங்க நெனைக்க கூடாது. அவனே அதை படிக்க முடியாமே, மரண அவஸ்தையிலே தானே வச்சிட்டு போய் இருப்பான்.
நான் ரயிலை பிரிந்து, அவளையும் மறந்து தப்பி ஓடினேன். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. "ஜேப்படிகள்" தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். "ஜேப்படிகள்" தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதை நான் தேர்தல் நேரம் என்பதால் சொல்லவில்லை, நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை, நகைச்சுவை, நகைச்சுவைக்காக மட்டுமே.
இது பொன்னியின் செல்வன் - கார்த்திகை பாண்டியன் அவர்களின் பதிவுக்கு எதிர் பதிவே.
அனுமதி கொடுத்த பொன்னியின் செல்வன் - கார்த்திகை பாண்டிக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Thursday, 9 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நைனா.. சான்சே இல்லை.. பிரிச்சு மேஞ்சிருக்கீங்க.. ரசிச்சு படிச்சேன்..
//அழகான, பெரிய பேத்தி வீட்டில் இருப்பாளோ என்று என் சிந்தனைய தூண்டியது பழனிபாரதியின் வரிகள்.
ஒரு கட்டிங் ஓல்டு மாங்கினால், உடல் சுகமாய் இருந்து, உள்ளம் தான் ஆர்பரித்து ஆடியது.
சட்டென்று தீர்ந்து போன பிரிபெய்ட் பாலேன்சு போல போல, எனது பதிவு கண்டு மக்கள் ஒடுங்குவது போல் அவனுடைய பாடல் தானாகவே தொலைந்து போனது.
"கடலை", "கடலை", "டைம்பாசுக்கு கடலை". ஹும்ம்.... இதையே மூணு லைன்லே மூணு வாட்டி எழுதி ப்லோகுலே போட்டு பெரிய கவுஜைன்னு சொல்லி பேரு வாங்கிரனும். //
ஐயா சாமி.. சக்க கடி.. என்னால முடியல.. சூப்பரா ஓட்டி இருக்கீங்க நைனா..
பதிவப் பாத்ததும் "ஆஹா, காப்பி அடிச்ச நைனாவ காய்ச்சி ஒரு பதிவு போடலாம்"னு நினைச்சா கடசியில
இப்படி கவுத்திட்டயே நைனா....
\\
அட அவனே தான், அவனே தான்... ஈரோடு ரயில்வே போலிசின் ஏட்டு...! அய்யயோ இவன் கண்ணில் தானே படக்கூடாது என்று இருந்தோம். அப்படியானால் இவள்??? அவள் தான், அவளே தான். அன்று மதுரை ரயில் நிலையத்தில் போட்டு அடி பெண்டு நிமித்தினாலே அவளே தான். அடச்சே...! வாய்க்குள்ளே நுழையாத பேரு வச்ச புஸ்தகமெல்லாம் படிச்சி, அதெல்லாம் ஞாபகத்திலே இருக்கு, வர்ணனையா வருது... நாயடி, பேயடி கொடுத்த இவளை எப்படிடா மறந்தோம்? இனி ரயில்லே எவனாவது படிச்சிட்டு வச்சிட்டு போன புஸ்தகத்தை எடுத்து படிக்கவே கூடாது. அப்படியே படிச்சா மனசிலே வசிக்க கூடாது. அப்படியே மறந்துறணும் மனசுலே வச்சி ப்லோகுலே எழுதி பேரு வாங்க நெனைக்க கூடாது. அவனே அதை படிக்க முடியாமே, மரண அவஸ்தையிலே தானே வச்சிட்டு போய் இருப்பான்.\\
சான்ஸே இல்ல நைனா....ரொம்ப நேரம் ஆபிஸ்ல இருக்கறதையும் மறந்து சிரிச்சேன்...
தேங்க்ஸ் நைனா...
\\இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை\\
என் வயிறை புண்படுத்திட்டீங்களே நைனா...
\\அனுமதி கொடுத்த பொன்னியின் செல்வன் - கார்த்திகை பாண்டிக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்\\
அவரோட பெருந்தன்மைக்கு நானும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்றேன்...
நையான்டி கம்மியாக இருப்பதால்,நைனாவுக்கு எனது கண்டனம்.
//சொல்லரசன் said...
நையான்டி கம்மியாக இருப்பதால்,நைனாவுக்கு எனது கண்டனம்.//
ரிப்பீட்டேய்,..................
/*கார்த்திகைப் பாண்டியன் said...
நைனா.. சான்சே இல்லை.. பிரிச்சு மேஞ்சிருக்கீங்க.. ரசிச்சு படிச்சேன்..*/
மிக நன்றி நண்பரே...
/*ஐயா சாமி.. சக்க கடி.. என்னால முடியல.. சூப்பரா ஓட்டி இருக்கீங்க நைனா..*/
என்னைய இப்படி ஓவரா புகழக்கூடாது.
/*டக்ளஸ்....... said...
பதிவப் பாத்ததும் "ஆஹா, காப்பி அடிச்ச நைனாவ காய்ச்சி ஒரு பதிவு போடலாம்"னு நினைச்சா கடசியில
இப்படி கவுத்திட்டயே நைனா....*/
அதெல்லாம் நாங்க நேக்கா "எஸ்" ஆகிருவோம்லோ!!!!
/*சான்ஸே இல்ல நைனா....ரொம்ப நேரம் ஆபிஸ்ல இருக்கறதையும் மறந்து சிரிச்சேன்...
தேங்க்ஸ் நைனா...*/
மிக மிக நன்றி நண்பரே.....
/*என் வயிறை புண்படுத்திட்டீங்களே நைனா...*/
மனதை தான் சாமி நாங்க புண் படுத்த மாட்டோம்...
/*அவரோட பெருந்தன்மைக்கு நானும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்றேன்...*/
நீங்களும் அவரை நையாண்டி பண்ண தயாரா காத்துகிட்டு இருக்கீங்களா? நண்பரே...
/*நையான்டி கம்மியாக இருப்பதால்,நைனாவுக்கு எனது கண்டனம்.*/
இதுக்கு மேல பண்ணுனா அவரு அழுதுருவாரு... அதுவும் வேற அவரு மதுரைக்காரராம்....
/*அத்திரி said...
//சொல்லரசன் said...
நையான்டி கம்மியாக இருப்பதால்,நைனாவுக்கு எனது கண்டனம்.//
ரிப்பீட்டேய்,..................*/
நம்ம நண்பர் சொல்லரசனுக்கு கொடுத்த பதில் தான் உங்களுக்கும்
ரிப்பீட்டேய்,..................
//விரித்து வைத்த கடலை பேப்பராய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெள்ளை கடலைகளாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன//
அட்டகாசம்
அவள் தான், அவளே தான். அன்று மதுரை ரயில் நிலையத்தில் போட்டு அடி பெண்டு நிமித்தினாலே அவளே தான். மதுரை ரயில்வே போலிசின் பெண் சப்-இன்ஸ்பெக்டர். அடச்சே...! //
அடி வாங்குனது யாரு??? அவனா நீ :-)
Post a Comment