Wednesday 11 February 2009

G.H-ச்சும், Jail-லும் ஒன்று?

நம்ம சென்ட்ரல் ஜெயிலே இடிச்சிட்டு, அங்கே வேற ஏதாவது கட்ட போறாங்களாம். "வேற ஏதாவது ஒண்ணு" அப்படிங்றதிலெ பல திட்டங்கள் இருக்கும் போல இருக்கு. இரயில் நிலையம் விரிவாக்கம், அரசு மருத்துவமனை என்று. அப்போது எனக்கு சில விடயங்கள் தோன்றியது, மருத்துவமனையும், ஜெயிலும் ஒன்று, ஒரு சில ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுடன் என்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த பதிவு.

Jail: இங்கே யூநிஃபார்ம் உண்டு. வார்டும் உண்டு.
G.H: இங்கேயும் யூநிஃபார்ம் உண்டு. வார்டும் உண்டு.

Jail: இங்கே கொடுக்கும் துட்டுக்கு(லஞ்சம்) ஏற்றவாறு கவனிப்பு உண்டு.
G.H: இங்கேயும் கொடுக்கும் துட்டுக்கு(லஞ்சம்) ஏற்றவாறு கவனிப்பு உண்டு.

Jail: இங்கே ஸ்பெஷலிஸ்ட் உண்டு. ( என்ன? என்பதை சென்று வந்தவர்களை. கேளுங்கள் )
G.H: இங்கேயும் ஸ்பெஷலிஸ்ட் உண்டு. ( என்ன? என்பதை சென்று வந்தவர்களை...!? கேளுங்கள் )

Jail: சின்ன திருடனா உள்ளே போவான், வரும்போது பெரிய பக்கா திருடனா வருவான் இல்லெ பொணமா வருவான்.
G.H: சின்ன வியாதியா போவான், வரும்போது பெரும் வியாதிக்காரணா வருவான் இல்லெ பொணமா வருவான்.

Jail: உடல் சார்ந்த சித்திரவதை மட்டும் இருக்கும்.
G.H: உடல் மற்றும் மனம் சார்ந்த சித்திரவதை இருக்கும்.

Jail: அடைத்து, காவலும் இருக்கும் ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு எல்லாம் கிடைக்கும்.
G.H:கதவே இருக்காது, காவலும் இருக்காது ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு மருந்துக்கும் எதுவும் கிடைக்காது.

Jail:சில நேரம் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் வருவாங்க.
G.H:சில நேரம் டாக்டர் பட்டம் பெறாதவங்களும் வந்திருவாங்க.

Jail: செத்தோம்டா... நம்ம ஆயுசு இங்கேயே. முடிஞ்சிரும், என்று வருவார்கள், சில பேரின் கருணையால் பிழைத்து கொள்வார்கள்.
G.H:அப்பாடா... இங்கே வந்துட்டோம்டா ... இனி பிழைத்து விடலாம் என்று நினைப்பார்கள், சில பேரின் கருணை இன்மையால் செத்து விடுவார்கள்.

last but not the least:
சாதாரண மக்கள், தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா Jail-க்கு வந்து அங்கே பண்ற சித்திரவத்தைக்கு தப்பித்து, ஆறுதலுக்காக G.H. வருவாங்க.சாதாரணமா அரசியல்வாதி தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா G.H வந்தும், இங்கே இருக்கிற சித்திரவதை தாங்காம, ஆறுதலுக்காக Jail-க்கு வருவாங்க.

9 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்லாதான் இருக்கு

நையாண்டி நைனா said...

Mr.ஆ.ஞானசேகரன், Thank you very much.
If I am right, this is your first visit to my site. Thanks for your visit.

pudugaithendral said...

ஆறு வித்தியாசம் மாதிரி அழகா ஒத்துமையைச் சொல்லியிருக்கீங்க.

ஒத்துக்கறோம்.

புருனோ Bruno said...

//G.H: சின்ன வியாதியா போவான், வரும்போது பெரும் வியாதிக்காரணா வருவான் இல்லெ பொணமா வருவான்.//

இது முற்றிலும் தவறான தகவல்

//G.H: உடல் மற்றும் மனம் சார்ந்த சித்திரவதை இருக்கும்.//
குறைந்த ஊதியத்தில் அதிகம் நேரம் பணி புரியும் மருத்துவர்களின் நிலையை தெளிவாக கூறியதற்கு நன்றி

புருனோ Bruno said...

//G.H:கதவே இருக்காது, காவலும் இருக்காது ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு மருந்துக்கும் எதுவும் கிடைக்காது.//

அரசு மருத்துவமனைகளில் மருந்து ஊசி எல்லாம் வழங்கப்படுவது உங்களுக்கு தெரியாதா

//G.H:சில நேரம் டாக்டர் பட்டம் பெறாதவங்களும் வந்திருவாங்க.//
விளக்க முடியுமா

//G.H:அப்பாடா... இங்கே வந்துட்டோம்டா ... இனி பிழைத்து விடலாம் என்று நினைப்பார்கள், சில பேரின் கருணை இன்மையால் செத்து விடுவார்கள்.//
முற்றிலும் தவறான தகவல்.

நையாண்டி நைனா said...

அய்யா மருத்துவர் அவர்களே... இது சீரியஸ் பதிவு அல்ல. தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம்.
* * * * * * * * *
நலமாய் இருக்கிறீர்களா. வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*புதுகைத் தென்றல் said...
ஆறு வித்தியாசம் மாதிரி அழகா ஒத்துமையைச் சொல்லியிருக்கீங்க.

ஒத்துக்கறோம்.*/

வருகைக்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

//சாதாரண மக்கள், தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா Jail-க்கு வந்து அங்கே பண்ற சித்திரவத்தைக்கு தப்பித்து, ஆறுதலுக்காக G.H. வருவாங்க.சாதாரணமா அரசியல்வாதி தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா G.H வந்தும், இங்கே இருக்கிற சித்திரவதை தாங்காம, ஆறுதலுக்காக Jail-க்கு வருவாங்க.//

முடியல.. சூப்பர்.. :-)

நையாண்டி நைனா said...

வருகைக்கு மிக நன்றி நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களே.