Thursday, 12 February 2009

இடைத் தேர்தல்... கடைக்கண் பார்வை..அழகியல்! கும்பர்...

"அவள பார்த்தியா,என்னா திமிர் இருந்தா அப்பிடி ஒரு கேள்வி குதர்க்கமா கேட்பா?"

"யாரு கமலா? என்ன கேட்டா?"

"அந்த ராஜிதான்...என்ன இப்ப செளக்கியமானு கேட்குறா?"

"அதுல என்ன தப்பு..சாதாரணமா கேட்குறதுதானே?"

"ம்ஹூம்..அதுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கு..எனக்கா தெரியாது? என் அப்பா இந்த தொகுதி M.L.A. அவரை போட்டு தள்ளி இந்த தொகுதிலே இடை தேர்தல் வர வச்சதே அவங்க ஆளுங்க தான்.. எங்க வீட்லே வேற ஆண் வாரிசு இல்லை அப்படிங்குறத தைரியத்துலே கேட்குறா?"

"நீயா வேற அர்த்தம் எடுத்துக்கிட்டா யாரு என்ன பண்ணமுடியும்?? அட்லீஸ்ட் நல்ல சுவாரயஸ்யமான மேட்டர்லயாவது இந்த மாதிரி கற்பனையா நிறைய அர்த்தம் எடுத்தாலும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.. இப்பிடி ஒன்னுமே இல்லாத மேட்டருக்கு இந்த ரியாக்ஷன் தேவையா?"

"என்னோட இந்த ரியாக்ஷன விடு.. வர்ற இடை தேர்தல்லே நானே நின்னு எங்கப்பா இடத்தை பிடிக்கலே என் பேரு கமலா இல்லை"

* * * * *
அவளோட காதலன் அழகன் கிட்டே கமலா " தேர்தல எப்படி கையாளனுமோ, கையாண்டுக்கோ ஆனா நான் ஜெயிக்கணும்".என்று சொல்லி ஜெயித்து விட்டாள். நடந்த காட்சிகளை கும்பன் விவரிக்கிறான்...

அழகன், எலேச்சன் டையதிலே ஊத்து, கூத்துன்னு பல கைங்கர்யங்கள் செய்து, பூத்து கைப்பற்றுதல், பணத்தை வாரி இறைத்தல், மிரட்ட வேண்டிய ஆளுங்களை மிரட்டி உரைத்தும் ஒரு வழியா ஜெயிக்க லைன் கிளியர் பண்ணி, இப்போ பதவி ஏற்பு விழாவும் ஏற்பாடாயிருச்சு. அழகான அழகன் இன்னும் அழகா வந்தாச்சு..இப்போ கமலா, அழகன், அழக பார்க்கணும்.. என்ன? தான் இந்த காலத்து பொண்ணா இருந்தாலும், அரசியல்வாதி பொண்ண இருந்தாலும், காதலனை பல பேரு முன்னே பார்க்க கூச்சமாய் தான் இருக்கிறது அவளுக்கு.

ஆனாலும் அவங்க கண்ல மண்ண தூவிட்டு அழகன் அழக பார்த்தே ஆகணும், அதனால சிம்பிளா தன்னோட கையாலே, நெற்றி, சிகை மற்றும் அந்த சிறிய அளவிலான முக அலங்காரம் ஆகியவற்றை சரி செய்யும் சாக்கில் ஒரு பார்வ‌ பாக்குறா கமலா..

அப்போது அவளுக்கு அவனை பற்றி பல எண்ணங்கள்? எப்போதும் சரி, பார்க்க சாதுவா இருக்கும் இவனா நமக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தேடி தந்தவன். இவன் உண்மையிலேயே சாதுவா இல்லை நம் மேல் பயித்தியமாய் இருக்கும் சேதுவா என்று எண்ணி, சந்தேகம் கொண்டு பார்க்கிறாள்.

* * * * *

"இது எல்லோரும் பண்றது தானே.."

"எது?"

"காதலனை காதலி பார்ப்பது, மற்றும் இன்ன பிற... செயல்கள். "

" O.k.. தான் ஆனா இந்த பாட்டிலே... ஏன் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை சரி பண்றமாதிரின்னு கும்பர் எழுதியிருக்கணும்?"

"ஏன்?"

"எல்லா பெண்களும், தான் அழகோ இல்லையோ, அடுத்தவ அழகா? என்று காணுவதிலேயே பெரும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். அந்த சைக்காலஜியை பயன்படுத்தி, பிற பெண்களின் பார்வையை அவன் மேல் விழாதவாறு தன் பக்கம் திருப்பி, தன் காதலனை காணுகிறாள். இது ஒரு கோணமா?"

"பெண்களுக்கு, ஆபரணங்களை விட அவளை சுமங்கலியாய் அறிவிக்கும் நெற்றிக் குங்குமம், மற்றும் சூடும் பூ மேலேயே அலாதி பிரியம் இருக்கும். ஸோ..இவ நெற்றி, சிகை, சரிசெய்யுற மாதிரி, இன்று வெற்றி திலகம் தாங்கும் இந்த நெற்றி, நாளை உன்னுடைய மங்கள திலகத்தையும் தாங்கும் என்றும், இன்று வெற்றி மகுடம் சூட்டப்படும் இந்த சிரசு நாளை உன் கையால் பூ முடித்து தாங்கும் என்றும் உணர்த்துபவளாக அந்த செய்கையை செய்கிறாள் என்று கும்பர் நமக்கு உணர்த்து கிறார். "
"இது ஒரு கோணமா??

அதனால்தான் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை திருத்துபவளாக காட்டினான் கும்பன்.. ஓக்கேயா??"

அந்த பாடல்..
உடைய பூத் வளைத்ததும் இறைத்ததும் உரைத்தும்,
இடைய தேர்தல் இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
பையனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
சிகை தலை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்..

(எல்லோரும் இருக்கும் இடமாதலால், அன்று நமக்காக பூத்து கைப்பற்றுதல், பணத்தை வாரி இறைத்தல், மிரட்ட வேண்டிய ஆளுங்களை மிரட்டி உரைத்தல் போன்ற வேலைகளை செய்து இன்று சாதுவாய், பையன் போல, ஏதும் அறியா சிறுவன் போல நிற்கும் இவனா? அவன். என் அழகன். என்ற ஐயம் நீங்க, தன் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை திருத்துவது போல் என் நெற்றியில் எந்த திலகமும் உன்னால் தான், நான் சூடுவது கல்யாணமாலையாய் இருந்தாலும் உன்னால் தான் என்று குறிப்பாய் உணர்த்தி கடைக் கண்ணால் பார்த்தாள்)

எது எப்படியோ.. மிக தற்காலத்தில் தேர்தல் நடக்கும் அழகான காட்சியையும், கமலாவின் வெட்கம் கலந்த கடைக்கண் பார்வையும் கண்முன் நிறுத்தும் என்ன! ஒரு அழகான பாடல்...

கும்பர் வாழ்க‌.

29 comments:

Vidhya Chandrasekaran said...

சபாஷ் சரியான போட்டி.

narsim said...

நைனா.. வழக்கத்தைவிட கலக்கல்.. நல்லா இருக்கு..

narsim said...

மிக நுட்பமாக உட்டாலக்கடி செய்திருக்கிறீர்கள்... மிக ரசித்தேன் தல..

முரளிகண்ணன் said...

கரெக்டாத்தான் பேர் வச்சுருக்கீங்க

கார்க்கிபவா said...

// narsim said...
நைனா.. வழக்கத்தைவிட கலக்கல்.. நல்லா இருக்கு//

சமாளிக்க கூடாது தல.. இப்படி ஓட்டறாரு.. வாய்ப்புகளே இல்ல நைனா.. அடி பின்றீங்க

கூட்ஸ் வண்டி said...

///எல்லா பெண்களும், தான் அழகோ இல்லையோ, அடுத்தவ அழகா? என்று காணுவதிலேயே பெரும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். அந்த சைக்காலஜியை பயன்படுத்தி, பிற பெண்களின் பார்வையை அவன் மேல் விழாதவாறு தன் பக்கம் திருப்பி, தன் காதலனை காணுகிறாள்.///

ஆனாலும் உனக்கு நக்கல் ஓவருடீ..மா... கண்ணு.
நல்லா இருக்கு உங்க கற்பனை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இடைத் தேர்தல்... கடைக்கண் பார்வை..அழகியல்! கும்பர்... //

கலக்கல் சாமியோவ்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//உடைய பூத் வளைத்ததும் இறைத்ததும் உரைத்தும்,
இடைய தேர்தல் இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
பையனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
சிகை தலை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்..//
நைனா.. பின்னி எடுக்கிறீங்க.. ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

நைனா.. உங்களை தொடர்வதற்கான option கொடுத்தா நல்லா இருக்கும்ல..

ரமேஷ் வைத்யா said...

நையாண்டி நைனா,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் கும்பன் எழுதியது அல்ல. அதை எழுதியவர் பெயர் வம்பன்.
(அப்பாடா, ஓரளவு வெறி அடங்கினா மாதிரி இருக்கு.)

Anonymous said...

நைனாவின் நையாண்டி அருமை!!!

நையாண்டி நைனா said...

/* வித்யா said...
சபாஷ் சரியான போட்டி.*/

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நையாண்டி நைனா said...

/*narsim said...
நைனா.. வழக்கத்தைவிட கலக்கல்.. நல்லா இருக்கு..*/

/* narsim said...
மிக நுட்பமாக உட்டாலக்கடி செய்திருக்கிறீர்கள்... மிக ரசித்தேன் தல..*/

மிக மிக நன்றி..
எல்லாம் தங்களின் ஊக்கம் தான் அண்ணே...

நையாண்டி நைனா said...

/*முரளிகண்ணன் said...
கரெக்டாத்தான் பேர் வச்சுருக்கீங்க*/

வருகைக்கு மிக நன்றி. திரு.முரளிகண்ணன் அவர்களே.

நையாண்டி நைனா said...

/*கார்க்கி said...
// narsim said...
நைனா.. வழக்கத்தைவிட கலக்கல்.. நல்லா இருக்கு//

சமாளிக்க கூடாது தல.. இப்படி ஓட்டறாரு.. வாய்ப்புகளே இல்ல நைனா.. அடி பின்றீங்க*/

மிக மிக மிக நன்றி.

ஆனா நான் அண்ணன் நர்சிம் அவர்களை ஓட்ட வில்லை.

நையாண்டி நைனா said...

/*ஆனாலும் உனக்கு நக்கல் ஓவருடீ..மா... கண்ணு.
நல்லா இருக்கு உங்க கற்பனை.*/

மிக நன்றி கூட்ஸ் வண்டி அவர்களே....

நையாண்டி நைனா said...

/*ஆனாலும் உனக்கு நக்கல் ஓவருடீ..மா... கண்ணு.
நல்லா இருக்கு உங்க கற்பனை.*/

மிக நன்றி கூட்ஸ் வண்டி அவர்களே....

நையாண்டி நைனா said...

/*ஜோதிபாரதி said...
//இடைத் தேர்தல்... கடைக்கண் பார்வை..அழகியல்! கும்பர்... //

கலக்கல் சாமியோவ்!*/

ரொம்ப நன்றி. அண்ணே

நையாண்டி நைனா said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...

/*நைனா.. பின்னி எடுக்கிறீங்க.. ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறீங்க..*/

மிக நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*நைனா.. உங்களை தொடர்வதற்கான option கொடுத்தா நல்லா இருக்கும்ல..*/

எனக்கு இந்த ப்லோக் மானேஜ்மன்ட் தெரிய மாட்டேன்குது. கத்துக்கலாம்னா பதிவு போடவே நேரம் கிடைக்க மாட்டேங்குது. சரி... சரி... சீக்கிரம் எல்லாம் பண்ணுவோம்.

நையாண்டி நைனா said...

/*நையாண்டி நைனா,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் கும்பன் எழுதியது அல்ல. அதை எழுதியவர் பெயர் வம்பன்.
(அப்பாடா, ஓரளவு வெறி அடங்கினா மாதிரி இருக்கு.)*/

எப்படியோ நீங்க குளிர்ந்து போனால் சரி.
என் மேல் கோபம் கொள்ளாமல்.

நையாண்டி நைனா said...

/*நரேஷ் said...
நைனாவின் நையாண்டி அருமை!!!*/

வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி.

கோவி.கண்ணன் said...

:) பதிவு போட்டால் மின் அஞ்சல் அனுப்புங்கள் !

நையாண்டி நைனா said...

/*கோவி.கண்ணன் said...
:) பதிவு போட்டால் மின் அஞ்சல் அனுப்புங்கள் !*/

O.K.அனுப்புறேன் அண்ணா....

But
"இடைத் தேர்தல்... கடைக்கண் பார்வை..அழகியல்! கும்பர்..."
எப்படி இருக்கு?

உண்மைத்தமிழன் said...

நைனா

ரசித்தேன் கும்பரே..

இடைத்தேர்தல் என்றதும் நான் ஏதோ அதுவோ என்று நினைத்து ஏமாந்து போனேன்..

அதிலும் அந்த 'இடை' செய்யுள் அருமை..

Udhayakumar said...

nice attempt and it is too good to read!!!

நையாண்டி நைனா said...

/*உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நைனா

ரசித்தேன் கும்பரே..

இடைத்தேர்தல் என்றதும் நான் ஏதோ அதுவோ என்று நினைத்து ஏமாந்து போனேன்..

அதிலும் அந்த 'இடை' செய்யுள் அருமை..*/

வருகை மற்றும் வாழ்த்துக்கு நன்றி அண்ணா...

நையாண்டி நைனா said...

/* Udhayakumar said...
nice attempt and it is too good to read!!!*/

வருகைக்கு நன்றி.... நன்றி....