Thursday 26 February 2009

A.R.ரகுமான் விருது வாங்க நானே காரணம்...

இன்று A.R.ரகுமானை வைத்து பலபேரு பல விதமா எழுதுறாங்க. சில பேரு பாராட்டி எழுதுறாங்க, சொல்றாங்க, சில பேரு எதோ சொல்லனுமே, எழுதனுமே என்று. இது அவரை வைத்து ஒரு மலிவான விளம்பரம் தேடும் முயற்சியே. இப்படி ஆளாளுக்கு ஆதாரம் இல்லாமல் எதேதோ சொல்லிகொண்டிருக்கும் இந்த வேளையிலே ரகுமானின் வளர்ச்சிக்கு உண்மையிலே கை கொடுத்து உதவிய நான் சொல்லிக் கொள்ள கூடாதா?

அன்று ஒரு அருமையான நாள், ஆம்! சென்னையின் இரத்த ஓட்டம் போன்று இயங்கும் பல்லவன் பேருந்து இயங்கி கொண்டிருக்க, நான் வழக்கம் போல பள்ளி செல்ல காத்திருந்தேன். பேருந்து நிறுத்தத்தில். அன்று ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடக்க போகிறது என்று எனக்கு தெரியாத காரணத்தால் அது எந்த பேருந்து நிலையம்? எந்த பேருந்து? என்று நான் நினைவில் நிறுத்த மறந்து விட்டேன்.

வந்தாரய்யா... நம்ம பல்லவனாரும், மக்கள் கூட்டத்தை நிரப்பி கொண்டு. நானும் முண்டியடித்து கொண்டு ஏறி படியில் நின்று கொண்டேன். அப்போது ஒரு சிறுவன் தன் கையில் கீ-போர்டு வைத்து கொண்டு, விரைவாக பேருந்தை பிடிக்க வந்தான், அவன் கண்ணிலே அப்போது ஒரு கூர்மை இருந்தது, காலிலே வேகம் இருந்தது, கைகளிலே பரபரப்பு இருந்தது, பேருந்தோ புறப்பட்டு சிறிது, சிறிதாக வேகம் பிடித்து கொண்டிருந்தது, அந்த சிறுவனோ விடுவதாக இல்லை, ஒரு கையில் கீ-போர்டை வைத்து கொண்டு மறு கையை நீட்டியவாறே பேருந்தை பிடிக்க முயன்று ஓடி வந்தான்.

இந்த சமயத்தில் நான் என் கையை நீட்டி அவன் கரத்தை பற்றி இழுத்து அவனை மேலே வர செய்தேன் அவனும் மேலே வந்து படியில் நின்று கொண்டு பயணம் செய்தான். அப்போது அவனிடம் இருந்த படபடப்பு காரணமாயும், அப்போது எனக்கு அது தேவையும் இல்லாத காரணத்தினால் அவனுடைய பெயரை கேட்க மறந்து போனேன்.இன்று நாளிதழை கண்ட போதுதான் அன்று நான் கைதூக்கி விட்ட சிறுவனே இந்த A.R.ரகுமான் என்று தெரிகிறது. ஆகவே இன்று A.R.ரகுமான் ஆஸ்கார் வாங்க நானே காரணம் என்று பெருமையுடன் கூறி கொள்கிறேன்.

அன்று மட்டும் அந்த சிறுவனுக்கு நான் கை கொடுக்க வில்லை என்றால், அவனுக்கு அன்று இசைப்பள்ளியில் அட்மிசன் தவறி போய் இருக்கும். பின்னே எப்படி? இன்று ஆஸ்கார் வாங்க முடியும். ஆகவே ரகுமான் ஆஸ்கார் வாங்க நானே காரணம் என்று மீண்டும் கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன் போன்ற பதிவுகளையும், செய்திகளையும், படிக்காமலும், எழுதாமலும், நேரத்தை விரையம் செய்யாமல் திறமையை நம்பி உங்கள் வேலையை செய்தால், உங்களுக்கும் உங்கள் துறை சார்ந்த விருது கிடைக்கும், அப்போது இந்த மொக்கை பதிவை நான் மீள் பதிவு செய்து நீங்கள் விருது வாங்க நானே காரணம் என்று பதிவு செய்வேன். நன்றி வணக்கம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

15 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!

நையாண்டி நைனா said...

/*ஜோதிபாரதி said...
அருமை!*/
வருகைக்கும் பாராட்டிற்கும், மிக நன்றி.

அவரு விருது வாங்கின பிறகு இங்கே "கொசு தொல்லை தாங்க முடியலை"

Subankan said...

ஸ் ஷபா முடியல.....

நையாண்டி நைனா said...

/*Subankan said...
ஸ் ஷபா முடியல.....*/
எனக்குந்தாங்க...

வருகைக்கு மிக நன்றி நண்பரே...

சொல்லரசன் said...

தொடரட்டும் உங்கள் கைதூக்கி பணி,வளரட்டும் சாதனையாளர்கள்

வெண்பூ said...

யோவ்.. உம்ம நக்கலுக்கு அளவில்ல.. அதுலயும் அந்த கடசி பேரா ஜூப்பரு..

coolzkarthi said...

ஹையோ ஹையோ....எப்படியோ நீங்க உதவி பண்ணி ஆஸ்கார் நாயகனுக்கே நாயகன் ஆகிட்டிங்க....வாழ்த்துக்கள்.....(போதுமா?)

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
தொடரட்டும் உங்கள் கைதூக்கி பணி,வளரட்டும் சாதனையாளர்கள்*/

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*வெண்பூ said...
யோவ்.. உம்ம நக்கலுக்கு அளவில்ல.. அதுலயும் அந்த கடசி பேரா ஜூப்பரு..*/

அண்ணா உங்களின் வருகை மற்றும் கருத்துக்கும் ஆதரவிற்கும் மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*coolzkarthi said...
ஹையோ ஹையோ....எப்படியோ நீங்க உதவி பண்ணி ஆஸ்கார் நாயகனுக்கே நாயகன் ஆகிட்டிங்க....வாழ்த்துக்கள்.....(போதுமா?)*/

நீங்க இந்த மாதிரி எங்களை கைதூக்கி விட்டால், நாங்கள் அந்த மாதிரி பலபேரை கை தூக்கி விட்டு தமிழன் இன்னும் அதிக பரிசும் விருதும் வாங்க வைப்போம்.

பரிசல்காரன் said...

;-)

சி.அ.மு!!!

நையாண்டி நைனா said...

/*பரிசல்காரன் said...
;-)

சி.அ.மு!!!*/
வருகைக்கு நன்றியோ நன்றி தல...!


ஆனா "சி.அ.மு!!!" இதுக்கு என்ன அர்த்தம் என்று தான் விளங்க வில்லை.

Unknown said...

:)))

//ஜோதிபாரதி said...
அருமை!//

Repeattuuuuuuu... :))

நையாண்டி நைனா said...

/*ஸ்ரீமதி said...
:)))

//ஜோதிபாரதி said...
அருமை!//

Repeattuuuuuuu... :))*/

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி

பெசொவி said...

நீங்க அன்னிக்கு கைதூக்கி விட்ட அந்த பையன் ரஹ்மான் இல்லீங்க, நான்தான்.
(அது போகட்டும், அன்னிக்கு என் கையில இருந்த மோதிரத்த காணோமே, அத என்ன பண்ணீங்க, tasmac ல தொலைச்சிட்டீங்களா?)