Friday 18 April 2008

ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்..............

கும்மி, கும்மி என்று சொல்வார்கள், கேள்வி பட்டதுண்டு. இப்போ நேரே பார்க்கிறேன். அண்ணன் டோண்டு அவர்கள், இருந்துக்குவாராம் அவரோட அல்லக்கை அண்ணன்கள் சில கேள்விகளை கேப்பார்ககலாம், இவர் 'அறிவாலித்தனமாய்' பதில் சொல்வாராம். இதற்கு பேரு கும்மியாட்டம், தானே? ஹி..ஹி... தமாசா இல்லை? இதைவிட பெரிய ரோதனை அதுக்கு பின்னூட்டம் வேற?

அப்படியே அவர்களின் கேள்விகளின் தரத்தை பார்த்தால்????
ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.
அது என்னவோ இவர்களுக்கே ஒரு சிலபஸ் வச்சிக்கிட்டு கேப்பாங்க போலிருக்கு.

பாடம்: 'சர்வதேச வரலாறு'
முதல் பகுதி: மாவீரன் மோடி - புகழ் மாலை ( கடவுள் வாழ்த்து பகுதி - மனப்பாட பகுதி )
இரண்டாம் பகுதி: இந்தியாவில் கம்யூனிசம் - மறு பதிப்பு.
மூன்றாம் பகுதி: திராவிட எதிர்ப்பு கேள்விகள்.
நான்காம் பகுதி: டோண்டுவின் சாதனைகள்/வேதனைகள்/ ரோதனைகள்.
ஐந்தாம் பகுதி: கிச்சு, கிச்சு கேள்விகளும், பதில்களும்.

இன்னன்ன பகுதியில் இருந்துதான் கேள்வி கேக்கப்படும். ( பதில்கள் டோண்டு 'வீண்' பார்வையில்)

என்றைக்காவது இதனை தவிர கேள்வி பதிலில் ஏதாவது வந்துள்ளதா?
இதனை தவிர்த்து ஆக்க பூர்வமா? சமுதாய சிந்தனையுடன் கேள்வி கேட்கப்பட்டு விடை வந்தது உண்டா?

தங்களின் கொள்கைகளை விளக்கி கேள்வி கேட்டும், விளக்கியும் பதில் போடலாம்.
நான் ஏன் சொல்கிறேன் என்றால், கேள்வி பதிலுக்கு அவரே பொறுப்பாளி ஆகிறார். கேள்விகளை தேர்வு செய்யும் உரிமையும் அவருக்கு உள்ளது. வந்த கேள்விகளை தேர்வு செய்து விடை அளிக்கலாமே, தேர்வாகாத கேள்விகளை, கேள்வி கேட்டவர்களுக்கு அறிவிப்பு செய்து விளக்காலாமே?/விலக்காலாமே?

இதற்கு தினதந்தியில் வரும் 'குருவியார் பதில்கள்' எவ்வளவோ மேல்.


ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்...............
நமக்கெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் ரெண்டு பாம்.
காலையில் அண்ணன் டோண்டு விண் "கேள்வி-பதில் பாம்",
அதை படித்துவிட்டு நாம் தேடுவதோ "ஜன்டு பாம்".



பின் குறிப்பு: இதனை நான் வ.வா.ச இரண்டாம் ஆண்டு போட்டிக்காக எழுதவில்லை, தேர்வானால் நான் பொறுப்பில்லை.
திஸ்கி:இது தனி மனித தாக்குதல் இல்லை- இது திரு.டோண்டு அவர்களின் கேள்வி பதில் பகுதிக்கான விமர்சனம்.

1 comment:

Anonymous said...

கலக்கல்