ஒரு நூத்தி அறுபது ரூபாயில் என்னென்ன செய்யலாம்?
1. தான் குடும்பத்திற்கு எதிர்கால சேமிப்பாய் வைக்கலாம்.
2. வீட்டிற்கு தேவையான பொருள் வாங்கி வைக்கலாம்.
3. பிள்ளைகள் படிக்க தேவையான நூல்கள் வாங்கி அடுக்கலாம்.
4. தான் பெண்டாட்டிக்கு ஒரு புடவை வாங்கி கொடுக்கலாம்.
5. அப்பா, அம்மா விற்கு மருத்துவதிற்கு பயன் படுத்தலாம்.
6. ஏழைக்கு உணவளித்து பசி போக்கலாம்.
7. ஏழை மாணவனுக்கு உடை வாங்க உதவி செய்யலாம்.
8. புண் பட்ட மனத்தாய் இருந்தால் 4,5,6 பாக்கெட் தங்க ராஜா(Gold Kings), வடிகட்டி(Filter), உள்ளம்( Wills), கத்தி (Scissors) என்னாமாவது மனசுக்கு பிடிச்சசத்தை வாங்கி ஊதலாம்.
9. குவாட்டறோ, ஆப்போ, வாங்கி ஊத்தலாம், நண்டு இறா, சுறா, புறா கோழி கொக்கு, கௌதாரி ன்னு எதையாவது வாங்கி வெட்டலாம்.
10.பணம் அதிகமா இருந்தா. சும்மா ரோட்ல போறவனை கூப்பிட்டு, வடிவேலு மாதிரி வீரம் பேசி முதுகிலே ரெண்டு போட்டு போலீஸுக்கு தண்டமா கூட கொடுக்கலாம்.
ஆனா சும்மா கூட
"யாரடி நீ மோகினி" படத்திற்கு மட்டும் போய்ராதே................
அந்த நூத்தி அறுபது ரூபா, நான் இங்கே மும்பையில் PVR மல்டிபலெக்ஸ்-சில் படம் பார்க்க கொடுத்த தண்டம்.
Monday, 14 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
Aha...
நன்றி திரு.தமிழ் நெஞ்சம்.
:)
நானும் 10 வெள்ளி வீனாக்கிவிட்டேன்.
படம் பார்த்துவிட்டு பரவாயில்லை, ரகுவரனுக்காகவும், நயன் இடைவேளை வரை அசத்துவதற்கும் கொடுக்கலாம் என்று தேற்றிக் கொண்டேன்
தனுஷ் வழக்கமான ஈ என்ற பல்லிளிப்பு அப்பாவி நடிப்புதான், அவர் படத்தில் எல்லாம் ஏன் அவருக்கு வாசு என்று பெயர் வைக்கிறார்கள், இது எத்தனையாவது படம் அது போல் என்று தெரியவில்லை, திருடா திருடியில் வாசு தான் அவர் பெயர்.
பொல்லாதவன் படத்தில் இருக்கும் அதே நடிப்புதான். அவருக்கு அதுதான் வரும் போல.
திருவனந்தபுரத்துல 35 ரூபாய்தாங்க..
இதுல நயன் க்கு 10 ரூபாய், தங்கச்சிக்கு 10 ரூபாய் , பாட்டுக்கு 10 ரூபாய், எப்டி இருந்தாலும் ஒரு 5 ரூபாய் தெண்டம்தான்..
//அவர் படத்தில் எல்லாம் ஏன் அவருக்கு வாசு என்று பெயர் வைக்கிறார்கள்,// இது ஒரு நல்ல கேள்வி...
திரு.கோவி.கண்ணன்
தங்களின் வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி
/*திருவனந்தபுரத்துல 35 ரூபாய்தாங்க..
இதுல நயன் க்கு 10 ரூபாய், தங்கச்சிக்கு 10 ரூபாய் , பாட்டுக்கு 10 ரூபாய், எப்டி இருந்தாலும் ஒரு 5 ரூபாய் தெண்டம்தான்..
*/
குறைந்த செலவில் மொக்கை வாங்கிய நீர், கெட்டிக்காரரே.....
:)
ஹி ஹி ஹி... நாங்க எல்லாம் வெவரம் ;-)
நீங்கள்லாம் வெவரமா இருக்கணும் என்பதுக்காக தான் இந்த பதிவே...
ம்ம்ம்ம் - 160 ரூபாக்கு இவ்ளோ செய்யலாமா - அடேங்கப்பா
ம்ம்ம் நானா இருந்தா தலகானிக்கு கீழே வச்சிட்டு சுகமாத் தூங்கிடுவேன்.
1- 7 வேஸ்ட் - 8 -10 செய்யலாம் -
ஆமா நான் முடி வெட்டிக்க மதுரைல 90 ரூபா கொடுக்கறேன் - 90 ரூபாக்கு என்ன எல்லாம் செய்யலாம் - யோசிக்கணும்
////
பணம் அதிகமா இருந்தா. சும்மா ரோட்ல போறவனை கூப்பிட்டு, வடிவேலு மாதிரி வீரம் பேசி முதுகிலே ரெண்டு போட்டு போலீஸுக்கு தண்டமா கூட கொடுக்கலாம்.
ஆனா சும்மா கூட
"யாரடி நீ மோகினி" படத்திற்கு மட்டும் போய்ராதே................
////
அடடா!!
நான் கொஞ்சம் லேட்
இதவிட அருமையா அந்த படத்தை விமர்சிக்க முடியாது
Post a Comment