Friday, 11 April 2008

யாராவது... ஒரு யோசனை சொல்லூங்கப்பு.....

தமிழ் கூறும் நல்லுலக சான்றோரே,
பதிவு, பதிவுலகம், பதிவர் என்ற வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டு வந்துட்டேன்.

பதிவு போடலாம். எப்படிப்பட்ட பதிவு போடலாம்? அப்படின்னு யோசிக்கிறேன்.
நமக்குன்னு என்ன கொள்கை வைத்து போடலாம்னு யோசிச்சேன், அதுககப்புறம்தான் தோணிச்சு தமிழ் நாட்டுலெ எவன் கொள்கை வச்சிருக்கான் நாம வச்சிக்கிறததுக்கு?
அதனாலே கொள்கை வச்சுக்கபுடாது என்ற கொள்கை வச்சுக்கிட்டேன். சரிதானே? ( ஐயோ... நம்ம "விசய"காந்து கோவிசுப்பாரோ? )

சரி கொள்கை இல்லைன்னு ஆகி போச்சு
அப்புறம் என்ன எழுதலாம்?
ஏழை, பணக்காரன் வித்தியாசம் எழுதலாமா?, கம்யூனிஸம் தெரியாதே?
முற்போக்கு , பிற்போக்குன்னு அசுரத்தனமா எழுதலாமா? அதுவும் நமக்கு வராதே, நமக்கு அவ்ளோ மூளை இருந்த நான் ஏன் பொட்டி தட்டுற பொழப்புக்கு வறேன். அதை முயலு, இதை முயலாதேன்னு ரத்னமா எழுதலாமா? கோவிலுக்கு போ, போகாதே என்று காலத்தின் வழியை எழுதலாமா?

என்ன ஏலவ பண்றது. ABCD-யே ஒண்ணும் புரியல தயவு செய்து வெலகுங்கன்னு கேக்கலாம். வெலகாம ஊரு வெலெக்கீ வச்சிட்டாங்கன்னா???? அப்புறம் நாம போட்ட கணக்கு தலைகீழ்விகிதமா போய், வவ்வாலாட்டம் ஊருக்கு வெளியே தொங்க வேண்டியது தான்.

ஐயா....குசும்பொன்னும் பண்ணாம, யோசிப்பவர், யோசிக்காதவர்.... யாராவது... ஒரு நல்ல யோசனை சொல்லூங்கப்பு.....
நம்ம குருதி தான் தமிழ்க் குருதி ஆயிற்றே? நமக்கு யாராவது சொன்னால் தானே சுரனையே வரும், புத்தியும் வரும்.

ஒண்ணும் சொல்லவில்லை என்றால் மொக்கை பதிவுதான் வரும்...

8 comments:

ரூபஸ் said...

"திருநெல்வேலிக்கே அல்வா" அப்புடிங்குறது இதுதானா?.. எப்படி நைனா...? கலக்குறீங்க..
நானும் உங்கள மாதிரிதான். அதனால ஒரு யாசனை சொல்றேன். நீங்க எங்க சீனியர் மங்களூர் மா ச்சீ சிவா சார்கிட்ட ஐடியா கேளுங்க.. அவரு காட்டுவாரு பாருங்க படம்.. டிரைப் பண்ணுங்க..

நையாண்டி நைனா said...

ரூப்ஸ் அவர்களே உங்களின் வருகைக்கு நன்றி. யோசனைக்கு மிக்க நன்றி.......
அடுத்து மங்கலூர் அண்ணா -வை போய் விசாரிக்கிறேன்

TBCD said...

இன்னா நைனா, அய்கா ஒரு பதிவு எழுதிக்கின்னு, அப்பாலே, எப்படி எழுதன்னு வேற கூவிக்கின்னு இருக்க..

இத்தாம்மா கண்ணு பதிவு..

அவ்ளோத் தான்...

மனசிலே என்ன தோனுதோ அதை கிறுக்கு..

இத்த வைச்சு எவனும் மார்க் போடப் போறதில்லை, தப்பா எழுதினா தலையயை எடுக்கப் போறதில்லை ( ஒரு சிலரை தாக்கினா அந்த கேரண்டி செல்லுபடியாகாது )..

பின்ன இன்னாத்துக்கு இப்படி கூவிக்கின்னு இருக்கே..

சொம்மா, எழுதி தள்ளும்மா..ராஜா..

நையாண்டி நைனா said...

இன்னா மாமு... பண்றது....நானும் கிறுக்கி, கிறுக்கி பார்த்தேன்... ஒண்ணும் வரமாட்டேங்குது.
"ஒண்ணுக்கு" மட்டும் வந்துரூது நம்ம நெலமையா நெநைச்சா..
இப்போ ரூட்‌டு கையாண்டே சிக்கிக்கிச்சு... டாங்சு T.B.C.D தலீவா ...
அப்பாலிக்கா மீட்டு பண்றேன்...

Tech Shankar said...

சும்மா.. குத்துமதிப்பா எதையாவது எழுதிப்போடுங்க.. 6ஆச்சும் படிப்போம்ல..
படிச்சு அறிவைப் பெருக்கிக்குவோம்ல..

இன்னாப்பு நாஞ்சொல்லுரது

Tech Shankar said...

சும்மா.. குத்துமதிப்பா எதையாவது எழுதிப்போடுங்க.. 6ஆச்சும் படிப்போம்ல..
படிச்சு அறிவைப் பெருக்கிக்குவோம்ல..

இன்னாப்பு நாஞ்சொல்லுரது

நையாண்டி நைனா said...

/*சும்மா.. குத்துமதிப்பா எதையாவது எழுதிப்போடுங்க.. 6ஆச்சும் படிப்போம்ல..
படிச்சு அறிவைப் பெருக்கிக்குவோம்ல..

இன்னாப்பு நாஞ்சொல்லுரது*/

வருகைக்கு நன்றி.

எழுதிவிட தமிழ் நெஞ்சம் உண்டு...
எழுத வினையுக்கி இல்லாதது தான் பிரச்சிணையே....

cheena (சீனா) said...

என்ன யோசனை வேண்டிக்கிடக்கு - என்னாத்த வேணா எழுதலாம் - எல்லா எழவையும் எழுதலாம் - எவனும் கேக்க மாட்டான் - கேட்டான்னா ஜகா வாங்கிக்க - ம்ன்ச்சுடு வாத்யாரே சொல்லிடு - சரியா

வர்ட்டா