Thursday 21 October 2010

ஆந்தை எழவு அரசனும் அதிசய ஒப்பாரியும்...

பதிவர் "எழவு"அரசன் அவர்கள், அண்ணன் ஜாக்கி அவர்களை நக்கல் செய்து ஒரு பதிவை எழுதி இருக்கிறார்... அதை நான் நூற்றுக்கு ரெண்டாயிரம் சதம் கண்டிக்கிறேன்.

அந்த பதிவு மிக மிக கீழ்த்தரமான ஒரு பதிவு என எண்ணுகிறேன். அந்த பதிவில் அவருடைய மிக கேவலமான எண்ணங்களே வார்த்தைகளாக வார்தெடுக்கப்பட்டுள்ளன.

பதிவர் "எழவு"அரசன், இந்தப் பெயர் முழுக்க முழுக்க கற்பனையே. யார் 'பட்டத்தையும்' புண்படுத்துவது அல்ல. உங்களுக்கு தெரிந்த உயிரோடு இருக்கும், அல்லது இறந்த நபரகள் யாருடைய பெயரின். சாயலோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அது முழுக்க முழுக்க எதேச்சையாக ஏற்பட்டதே. நன்றி

நண்பா.... "எழவு"அரசா...

ஜாக்கி அவர்கள் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வைத்து எழுத வில்லை.. ஆனால்
அவரை சாடி எழுதி உள்ள உங்களை.. எத்தனை பேருக்கு தெரியும்.

இப்படி கேவலமான ஒரு பதிவை எழுதி விட்டு எக்காளம் வேறு... "அவன் அவன் அப்படி அது எழுதி இருக்கிறான், இது எழுதி இருக்கிறான் ஆனா அவரு ஒரு பதிவை வச்சிக்கிட்டு....
" என்று... நண்பரே.... நீங்கள் எழுதி இருப்பது... எதில் சேர்த்தி தெரியுமா? கட்டண கழிப்பறையில் தன வக்கிரங்களை கிறுக்கி இருக்கும் மன நிலை பிறழ்ந்த ஒருவன் செய்யும் காரியமே ஆகும்... இதற்கு வைத்தியம் இருக்கிறது நண்பரே... கவலை வேண்டா! தங்களால் முடிந்தால் தக்க வைத்தியரிடம் சென்று, சிறிது பொருளும் செலவழித்தால்
சீக்கிரமே குணமாகும்... செலவிற்கு பணம் இல்லை என்றால். அப்போது வந்து ஒரு பதிவு எழுதிடுங்கள்... பதிவர்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். அண்ணன் ஜாக்கி அவர்களும் கண்டிப்பாக உதவுவார்..

அவர் தவறாக எழுதுவதாக எள்ளி நகையாடி உள்ளீரே... நீர் தான் முப்பாலுக்கும் தப்பாமல் பொருளுரை எழுதியவரோ? நீர் தான் தொல்காப்பியம் படைத்த தொல் காலத்து புலவரோ? புலவரின், மூலவரோ? அல்ல புலவரின் புதல்வரோ? சற்று எண்ணிப் பாரும்.

தாங்கள் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவராகின், தமிழின் அனைத்து கூறுகளும் அறிந்தவராகின் தமிழறியா பிண்டங்கலாகிய எங்களுக்கு வகுப்பு எடுத்து சொல்லி கொடுங்களேன்... நாங்களும்... தங்களுக்கு வேண்டியது செய்து கற்று கொள்கிறோம்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!

... என்ற புறநானூற்று பாடல் அடியொற்றி, உங்கள் அடி போற்றி கற்று கொள்கிறோம்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆங்கிலத்தில் பலரும் வியக்கும் வண்ணம் படைப்புகளை தந்தாரே சேக்ஸ்பியர்.. அவரும் உயர் தர ஆங்கிலத்தை சரியாக எழுத வல்லவர் அல்லவாம்! கணித மேதை ராமானுஜம் பள்ளிக் கல்வியில் வல்லவர் அல்லவாம்! அனைவரும் அறிந்த தாமல் ஆல்வா எடிசன் பட்டம் வாங்கி விஞ்ஞானி ஆனவரில்லை என்பதனை தங்களின் கீழ்த்தரமான பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

தங்களுக்கு தமிழாளுமை மிக நன்றாக இருக்கலாம்... ஆனால் மன ஆளுமை?
ஆக அவருக்காவது தமிழ் தான் தெரியவில்லை.... ஆனால் உங்களுக்கு ...????

அவரு அதை எழுதுறாரு.... இதை எழுதுறாரு..... ஆபாசமா எழுதுறாரு என்று "உயர விளக்கு" பிடித்த நீங்கள்... அவருடைய மற்ற செயலுக்கும் "விளக்கு" பிடிப்பீரா?

இதெற்கெல்லாம் மேலாக, மிக மிக மிக கேவலமான எண்ணத்துடன்.... அனைவரும் உங்களை மகா காமெடியன், இரண்டாம் கவுண்டமணி, நகைச்சுவை "எழவல்" இருபத்தி ஏழாம் "எழவு" அப்படின்னு பட்டம் வாங்கும் முயற்சியாக கண்டவாறு வசை பாடி உள்ளீர்கள்...அது என்ன மன நிலை...

நீங்கள் என்ன?
அழகு வடியும் அஞ்சரை பெட்டியா?
ஆணை இடும் ஆணை குட்டியா?
இனிய பேச்சு இருக்கும் இன்குபெட்டரா?
ஈகை புரளும் ஈச்சம் பாயா?
உருண்டு வரும் உலக அழகா?

இதை தாங்கள் சற்று எண்ணி பார்க்க வேண்டும் என்று நினைவு படுத்துகிறேன்..இயலவில்லை என்றால் கண்ணாடியையாவது பார்த்து தெளி(ரி)ந்து கொள்ளுங்கள்.

தமிழாய்ந்த அழகு தம்பிரானே... உங்களுக்கு சில குறிப்புகள்...

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.


இதற்கெல்லாம் அர்த்தம் தாங்கள் படித்தவுடனே புரிந்து கொள்வீர்கள் என்றே எண்ணுகிறேன்... ஏனெனில் நீங்கள் தான் தமிழ் பண்டித மா மா மா மா மா மணியாயிற்றே... யாரையும் கேளாமல் எதனையும் படியாமல் அர்த்தம் தெரிந்து கொள்வீரே..


தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.


தீவினை யகற்று.
(ஆத்திச்சூடி)
சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
(கொன்றைவேந்தன்) ஔவையார் சொன்னதுங்கோ....



பின் இணைப்பு... (தங்கள் பதிவில் இருந்தே.. )
/*எங்க ஆபீஸ்ல நேத்து தெரியாத்தனமா அந்த blogஐ ஓபன் பண்ணிட்டேன். எடுத்தவுடனே அரையும்குறையுமா ப்ரியாமணி நிக்கிது. பக்கத்துல என் மேலாளர் வேற. அய்யயோ கொல்லப்போறாரேனு நினைச்சா, அந்தாளு சொல்றாரு "அட. அண்ணன் ஜாக்கியோட பிளாகா? அனுஷ்கா படத்த மாத்திட்டு ப்ரியாமணி படத்த போட்டாரு போல. ஹிஹி"னு.*/

அவரு இயல்பா இருக்காரு... அதனாலே பெரிய ஆளா ஆகி இருக்காரு.. நீங்க எப்ப ஆக போறீங்க.... குறைந்த பச்சம் மனிதனாக

10 comments:

ஸ்ரீ.... said...

மீண்டும் எழுத ஆரம்பித்து சரியான திசையில் செல்கிறீர்கள். நண்பர் ஜாக்கி பதிவுலகில் எனக்குப் பிடித்தமான எதார்த்தவாதிகளில் ஒருவர். அவரைப் பற்றிய அனாவசியமான, அர்த்தமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் நோக்கம் ஓரளவு புரிகிறது. உங்களின் இடுகை என் மனதைப் பிரதிபலிக்கிறது.

(இதே மாதிரி எழுத ஆரம்பிச்சு உங்க காமெடிய cut பண்ணிடாதீங்க!!!)

ஸ்ரீ....

ம.தி.சுதா said...

பார்த்தேன் சகொதரா.. கருத்து ஏதும் வேண்டாமே...

sriram said...

நைனா..
அருமையா சொல்லியிருக்கீங்க, இதெல்லாம் திருந்தும்னு நெனைக்கறீங்க??

ஒண்ணு மட்டும் தெரியுது, ஒரு வேலைவெட்டி இல்லாத கும்பல் கெளம்பியிருக்கு எவண்டா மாட்டுவான்னு.. பாக்கலாம் எவ்ளோ தூரம் போறாங்கன்னு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நையாண்டி நைனா said...

/*ஸ்ரீ.... said...

மீண்டும் எழுத ஆரம்பித்து சரியான திசையில் செல்கிறீர்கள். நண்பர் ஜாக்கி பதிவுலகில் எனக்குப் பிடித்தமான எதார்த்தவாதிகளில் ஒருவர். அவரைப் பற்றிய அனாவசியமான, அர்த்தமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் நோக்கம் ஓரளவு புரிகிறது. உங்களின் இடுகை என் மனதைப் பிரதிபலிக்கிறது.

(இதே மாதிரி எழுத ஆரம்பிச்சு உங்க காமெடிய cut பண்ணிடாதீங்க!!!)

ஸ்ரீ....*/

Thanks

நையாண்டி நைனா said...

/*ம.தி.சுதா said...

பார்த்தேன் சகொதரா.. கருத்து ஏதும் வேண்டாமே...*/

"அவர் கருத்து... இவர் கருத்து..." போன்றவைகளை நான் ஏதும் சொல்லவில்லை...

ஆனால் ஒரு நபரை திட்டுவது என்பது தவறானது...
தட்டிக் கேட்கா விட்டாலும் சுட்டிக் காட்ட வேண்டும் அதற்கே இந்த பதிவு...

நையாண்டி நைனா said...

/* sriram said...

நைனா..
அருமையா சொல்லியிருக்கீங்க, இதெல்லாம் திருந்தும்னு நெனைக்கறீங்க??

ஒண்ணு மட்டும் தெரியுது, ஒரு வேலைவெட்டி இல்லாத கும்பல் கெளம்பியிருக்கு எவண்டா மாட்டுவான்னு.. பாக்கலாம் எவ்ளோ தூரம் போறாங்கன்னு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்*/

நண்பரே மிக நன்றி..
மேலே நண்பர் ம.தி.சுதா அவர்களுக்கு பதில் சொன்னது போல் சுட்டிக்காட்டவே இது...

சி.பி.செந்தில்குமார் said...

thani wapar தனி நபர் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.பிடிக்கலைன்னா படிக்காம விட வேண்டியதுதானே,அதை விட்டு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி,கல்வித்தகுதி பற்றி விமர்சிப்பது அநாகரீகமானது

Unknown said...

தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாதவரை மட்டுமே, பதிவுலகிற்கு என்று ஒரு தரம் இருக்கும்.
பதிவர்களுக்கு பதிவர்கள் தானே மரியாதை தர வேண்டும்..

Unknown said...

//பிடிக்கலைன்னா படிக்காம விட வேண்டியதுதானே,அதை விட்டு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி,கல்வித்தகுதி பற்றி விமர்சிப்பது அநாகரீகமானது//

Unknown said...

ஏன், இன்ட்லியில் இணைக்க வில்லை..எப்படி வாக்களிப்பது?