Friday, 15 October 2010

குந்திரன் - ஒரு குருட்டுபார்வை

இது வரை எல்லா வகை விளம்பரங்களும் கொடுத்து..சமீபத்திய வெற்றி படத்தை வெற்றி படமாக ஆக்க அரும்பாடு பட்டு கொண்டிருக்கு ஒரு கும்பினி... அதன் பல முயற்சியில் எல்லா முயற்சிகளும் முடிந்து விட்ட இந்த நிலையில், எல்லாரும் எல்லாவிதமாக படமும் பார்த்து விட்ட நிலையில்... இப்படியும் ஒரு விளம்பர யுக்தி உள்ளது.. இப்படியும் விளம்பரம் பண்ணலாம் என்று ஒரு ஐடியா கொடுக்கும் ஒரு புதிய(?) முயற்சியாக வாசக அன்பர்களுக்கு தெரிய படுத்தவே... இந்த பதிவு....
.
.
.
.
.
.
.
.
.
.
அட பொறுமையா இருங்க....

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
'பறி'வாலயமே துண
ஜெய் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 'கன்' பிச்சர்ஸாய நமக ஜெய் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 'கன்' பிச்சர்ஸாய நமக
இந்த கடிதம் கண்டவுடன், குந்திரன் படத்திற்கு பத்து டிக்கட் எடுத்து பத்து பேருக்கு இலவசமாக கொடுக்கவும். அப்படி செய்தால் உங்கள் வீட்டில் பானை... பூனை... எல்லாத்திலையும் செல்வம் பொங்கும், மகிழ்ச்சி பாயை பிராண்டி உருளும். இது கட்டுக் கதை அல்ல..

பாளையங்கோட்டைலே ஒரு ஆளு குந்திரன் டிக்கட் ஒரு ஆறு வாங்கி ஆறு பேருக்கு கொடுத்தாரு... அவருக்கு நைஜீரியா லாட்டரிலே இருபத்தி அஞ்சி லச்சம் பரிசு கிடைச்சது... இத்தனைக்கும் அவரு அந்த ஊருக்கு போனதும் இல்லே அந்த லாட்டரிய வாங்கினதும் இல்லே..

பாகிஸ்தான்லே ஒரு ஆளு குந்திரன் டிக்கட்டை பத்து வாங்கி, இலவசமா கொடுத்த மறுநா அவரு அமேரிக்கா குவாண்டனமோ என்கிற எடத்திலே அப்பாயின்மென்ட் கெடச்சி போயிட்டாரு...

எப்போதும் எல்லா படத்தையும் நொள்ளை, பொக்கை, என்று பதிவு போட்டு கொண்டு இருந்தார் ஒரு மொண்ணை பதிவர், அவரு கேபிள் டிவி காமிச்சிட்டு இருந்தார் பேரு கூட எதோ சங்கராம் அவரு குந்திரன் படம் நல்லா இருக்கு என்று பதிவு போட்டார்... போட்டுட்டு மறுநாள் அவரு பதிவை பார்த்தால் லட்சம் பாலோயர்சும் நாலு கோடி ஹிட்சும் பெற்று இருந்துச்சி...


விருதாச்சலதிலே ஒரு ஆளு குந்திரன் படம் நல்ல படம் அப்படின்னு சொல்லி ஒரு நாலு பேருக்கு டிக்கட் எடுத்து கொடுத்தாரு... மறுநாளே அவரை எல்லாரும் கேப்டனாக்கி பெரிய ஆளா ஆக்கிட்டாங்க...

அதே விருத்தாச்சலதிர்க்கு பக்கத்திலே ஒரு ஆளு, ராமன் அடிமையாம்.... அவரு ரஜினி பாபாவை பகைச்சி கிட்டாரு.. இன்னிக்கு அவரோட நெலமைய நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனுமா என்ன?

பேருலே மட்டும் "உண்மை".... "தமிழன்"....னு அப்படின்னு பேரு வச்சி ஒரு ஆளு, 'கனவு' தோலர்களுக்கு பாயிண்ட்டு எடுத்து கொடுக்கிறேன் பேர்வழின்னு குந்திரன் படத்தை எள்ளி நகை ஆடினார்... அப்படி கொடச்சலை கொடுத்துட்டு... அப்பனே.... முருகா.... வேலா.... கந்தா.... கடம்பா.... ன்னு கதறிக்கிட்டு நின்னா முருகன் அருளை கொடுப்பானா? பொருளை கொடுப்பானா.... ? 'பொருளோட' ஆட்களை தான் ஆட்டோலே அனுப்புவான்...

அப்புறம் ஒரு ஆளு ஈரோட்டு ஆளு.. எப்பவும் குடியும் குடித்தனமுமா இருந்த ஒரு ஆளு... பேரு கூட ஆசன வாய்க்கு பக்கத்திலே இருக்குமே அந்த உறுப்போட பேருதான்.. ( அய்யோ... அய்யோ... அந்த உறுப்பு இல்லேங்க ... ஆடு மாட்டுகெல்லாம் அதுக்கு மேலே இருக்குமே அந்த உறுப்புய்யா... ) குந்திரன் படத்தை கொண்டாடுன ஆளுங்களை எல்லாம் கலாச்சி ஒரு பதிவு எழுதுனாரு, இப்ப அவரு குவாட்டரை தொட யோசிக்குற ஆளா ஆயிட்டாரு...

இங்கே சென்னையிலே ஒரு ஆளு... எந்திரன் படத்திற்கே போகாமே... அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தாரு... கடைய்சிலே அவரு ரெத்த வாந்தி எடுத்து செத்து போனாரு...


ஆகையினால் இதை எல்லாம் சிந்திச்சி.. உங்க வீட்டு அண்டா குண்டா எல்லாத்தையும் பாத்திரமா, பத்திரமா சேட்டு கடையிலே ஹிந்தி படிக்க அனுப்பியாவது... குந்திரன் பட டிக்காட்டை வாங்கி பல பேருக்கு கொடுத்து... எல்லாம் வல்ல 'கன்' பிச்சர்சின் அருள் பெறுமாறு வேண்டி கேட்டு கொல்கிறோம், கொல்கிறோம்... மன்னிச்சுகோங்க ... கொள்கிறோம்.. கொள்கிறோம்.

இந்த ஐடியா உருவான விதம் அப்படின்னு ஒரு பதிவு தேத்திகிட்டு இருக்கேன்... அதோட நாளைக்கு வாறேன்...

24 comments:

♠ ராஜு ♠ said...

:-)))))

DrPKandaswamyPhD said...

ஆமாங்க, நானு கூட நாப்பது டிக்கட் வாங்கி நானூறு பேருக்கு கொடுத்தனுங்க. இப்ப ஊட்ல நிக்கக்கூட இடமில்லாம தங்கக்காசுகளா கொட்டிக்கெடக்கு. யாரு வேணுமின்னாலும் வந்து அள்ளிக்கிட்டுப் போகலாமுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

V.Radhakrishnan said...

சரி.

குமரை நிலாவன் said...

:-)))))

VISA said...

:)

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாம் ஓக்கே.சார் ஈரோட்டு பதிவர் யாரு? ஏன்னா நானும் ஈர்ரொடுதான்

வால்பையன் said...

ஆமா யாரு அந்த ஈரோட்டுக்கார பதிவர்!?

வால்பையன் said...

குருட்டு பார்வை எப்படி பாக்குறது தல, எனக்கும் சொல்லி கொடுங்களேன்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இங்கே சென்னையிலே ஒரு ஆளு... எந்திரன் படத்திற்கே போகாமே... அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தாரு... கடைய்சிலே அவரு ரெத்த வாந்தி எடுத்து செத்து போனாரு..//

ஏமாந்துட்டீங்களே, குந்திரனா, அது எந்திரனா?

கார்த்திகைப் பாண்டியன் said...

மதுரையோட பெருமைய சொல்லாத இந்தப் பதிவை எதிர்த்து ங்க்கொய்யால நான் வெளிநடப்பு செய்கிறேன்..

Rafeek said...

தேழு.. வாலு?

மயிராண்டி மைனா said...

குருடனுக்கு பார்வை கிடையாது என்பது எல்.கே.ஜி க்குக் கூடத் தெரியும்.

நையாண்டின்னு எதை வேணா எழுதலாமா ? வெவஸ்த கெட்ட ஜென்மங்களா.

நையாண்டி நைனா said...

/* ♠ ராஜு ♠ said...
:-)))))*/

Thanks

நையாண்டி நைனா said...

/*DrPKandaswamyPhD said...
ஆமாங்க, நானு கூட நாப்பது டிக்கட் வாங்கி நானூறு பேருக்கு கொடுத்தனுங்க. இப்ப ஊட்ல நிக்கக்கூட இடமில்லாம தங்கக்காசுகளா கொட்டிக்கெடக்கு. யாரு வேணுமின்னாலும் வந்து அள்ளிக்கிட்டுப் போகலாமுங்க.*/

வருகைக்கு நன்றி ஐய்யா...
உங்களோட பெருந்தன்மைக்கு ஒரு சல்யூட்.
விலாசம் கொடுங்க ஒரு கோணியோட வந்திடுறேன்.

நையாண்டி நைனா said...

/* T.V.ராதாகிருஷ்ணன் said...
:))*/

Thank you sir.

நையாண்டி நைனா said...

/*V.Radhakrishnan said...
சரி.*/

நன்றி ஐய்யா

நையாண்டி நைனா said...

/* குமரை நிலாவன் said...
:-)))))*/
நன்றி.
என்ன ரொம்ப நாளா ஆளை காணோம்.

நையாண்டி நைனா said...

/* VISA said...
:)*/

வாங்க அண்ணே...
நன்றிண்ணே...

நையாண்டி நைனா said...

/*சி.பி.செந்தில்குமார் said...
எல்லாம் ஓக்கே.சார் ஈரோட்டு பதிவர் யாரு? ஏன்னா நானும் ஈர்ரொடுதான்*/

வருகைக்கு நன்றி தல... அவரு வேற ஆளு.

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
ஆமா யாரு அந்த ஈரோட்டுக்கார பதிவர்!?*/

வாலாட்டுறது தான் பாசு அவரு வழக்கமே...

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
குருட்டு பார்வை எப்படி பாக்குறது தல, எனக்கும் சொல்லி கொடுங்களேன்!*/

அதுக்கு கலிபோர்னியா யுனிவர்சிட்டிலே போய் படிக்கோணும்

நையாண்டி நைனா said...

/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//இங்கே சென்னையிலே ஒரு ஆளு... எந்திரன் படத்திற்கே போகாமே... அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தாரு... கடைய்சிலே அவரு ரெத்த வாந்தி எடுத்து செத்து போனாரு..//

ஏமாந்துட்டீங்களே, குந்திரனா, அது எந்திரனா?
*/

அண்ணே தப்பு நடந்து போச்சிங்கோ...

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கு.... சும்மா சிபிஎஸ் கிட்ட சொல்லுங்க நீங்க தானுண்ணு நானும் அவருக்கு சாணி தப்ப வாறன்...
(ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி)
என்ன சிபிஎஸ் எனக்கு தப்பிறதுக்கு நீங்க என்ன எடுக்கப் போறிங்க...