Monday 27 September 2010

எந்திரன் - கதை மற்றும் கதை வசனம்! பகுதி இரண்டு

எந்திரன் கதை மற்றும் கதை வசனம் - முதல் பகுதி

இங்கே இரண்டாம் பகுதி.....


"ஆள்ரவனை தொழாதேடா" சாங்கு முடிஞ்ச உடனே தலைவர் கான்பரன்சு ரூமுக்கு வாரார்...

தலைவர்கிட்டே "நீங்க தான் முதல்வர், நீங்க தான் முதல்வர்" அப்படின்னு சொல்றாங்க... ஆனா தலைவர் வேணாம் வேணாம் என்று சொல்றார்

"நான் முதல்வர் இல்லே இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன்"

"அப்படில்லாம் நீங்க சொல்ல கூடாது.... இங்கே இருக்குற (வெ. ஆ. மூர்த்தி, மற்றும் கு.முத்தை காட்டி...) இதுங்கெல்லாம் பாடம் நடத்தியும் நீங்க தான் இந்த ஸ்கூல்லே பஸ்டு வந்திருக்கீங்க... அதனாலே தினத்தந்தி பேப்பர்லே இருந்து பிளஸ்டூ முதல்வன் பரிசு கொடுக்குரதுக்காக வந்திருக்காங்க ஆனா நீங்க இப்படி பிடிவாதம் பண்ண கூடாது...இது தமிழ் நாட்டின் முதல்வர் பதவி இல்லே.. நீங்க இப்படி முரண்டு பண்றதுக்கு... "

சூப்பர் ஸ்டார் ஆடியன்சை பார்த்து... இந்த சின்ன பதவியையே வெறுத்தாதான் அப்புறம் பெரிய பதவிய வெறுக்க முடியும், கண்ணா.... இந்த முதல்வர் பதவி எனக்கு தேவை இல்லே.. இதுலே நான் முதல்வனா வரதுலே எனக்கு இஷ்டமே இல்லே..(என்று சொல்லி மேலே பார்குறார் சூப்பர் ஸ்டார்...... அப்படியே தொடர்கிறார்)

அன்பு அம்மாவோட கனவை நிறைவேத்துறதுலே முதல்வனா (கேமரா பக்கத்துலே இருக்குற தமன்னாவை காட்டுது, தமன்னா கண்ணுலே ஓரத்துலே ஒரு துளி ஆனந்த.. கண்ணீர்)

ஆசை காதலி ஆசைகளை பூர்த்தி செய்றதுலே முதல்வனா (கேமரா பக்கத்துலே இருக்குற ஐஸ்வர்யா ராயை காட்டுது, ஐஸ்வர்யா ராய் முகத்துலே ஒரு பெருமித புன்னகை )

இனிய நண்பர்களுக்கு உதவுறதுலே முதல்வனா (கேமரா பக்கத்துலே இருக்குற ஜெய் சங்கரையும், ஜெமினி கணேசனையும் காட்டுது... காட்டுது, அவங்க சந்தோசத்துலே பக்கத்துலே இருக்குற தூணை கட்டிகுறாங்க... அப்புறம் அங்கே பெருக்க வந்த ஆயாவை கட்டி பிடிக்குறாங்க.. அப்புறம் பதறி.. ஒருவரை ஒருவர் கட்டி பிடிச்சுகுறாங்க. )

ஈகையிலே சிறந்த நல்லவங்களை காப்பதிலே முதல்வனா வரணும் என்று சொல்லி ஆடியன்சை பார்த்து கையை காட்டுறார்

வெ. ஆ. மூர்த்தி: தம்ப்ப்ரி.. அதுவா வெல்லாம் அப்புறம் ஆகிக்கலாம் தம்ப்ப்ரி.. இப்ப நீ போய் தம்ப்ப்ரி.., நாளைக்கு முதல்வனா வரணும், அதான் தம்பி எங்க எல்லாருக்கும் ஆசை தம்ப்ப்ரி..

"நீங்க மட்டும் நாளைக்கு முதல்வனா வரலன்னா... அவங்கெல்லாம் நாளைக்கு கொந்தளிச்சு வந்திருவாங்க" என்று ஆடியன்சை பார்கிறார் குமரி முத்து...

வெ. ஆ. மூர்த்தி: யோவ் நீயெல்லாம் ஆடியன்சை பார்காதையா, லேடிஸை பார்குறேன்னு நெனச்சி கொந்தளிசிற போறாங்க..

"சரி இந்த பிரச்சினைய நாளைக்கு நல்ல விதமா தீர்குறேன்.." என்று சொல்லிய ரஜினி உடனே அங்கே இருக்குற ஹிஸ்டிரி டிபார்ட்மெண்டுக்கு போய் அங்கே இருக்குற எல்லா
லாங்க்வேஜ் புக்கையும் எடுத்துட்டு போறார்...போய் நைட்டு பன்னிரண்டு மணிக்கு படிக்க உக்காருறார்

(அவரு படிக்குறதையும் ஒரு பார்பி டால் பொம்மையையும் "ற்றால்லி" ஷாட் வச்சி சுத்தி சுத்தி காட்டுறாங்க...)



பேக் ரவுண்டுலே... ஒரு சாங்



எகிப்து மன்னன் "போரோ"
எங்கும் மன்னன் இந்த "ரோபோ"

ஆப்கானிஸ்தானில் தோரோ"போரோ"
ஹிந்துஸ்தான்லில் இந்த மோட்டார்"ரோபோ"

ஒளியின் விதியை திருப்பும் பெட்டகம் "போரோ"
விதியின் சதியை திருப்பும் கட்டகம் இந்த "ரோபோ"

எதிரியை படுத்தும் அக்க"போரோ"
எளிதாய் படுத்தும் இந்த"ரோபோ"

தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பது "போரோ"
மோகத்திற்கு பன்னீர் கொடுப்பது "ரோபோ"

மூன்றாம் உலகப்போரோ...
தனியா செய்திடுவான் இந்த ரோபோ



மூன்றாம் உலகப்போரோ...
தனியா செய்திடுவான் இந்த ரோபோ

மூன்றாம் உலகப்போரோ...
தனியா செய்திடுவான் இந்த ரோபோ



சாங்கும் முடியுது... பொழுதும் விடியுது... கோழி கொக்கரக்கொன்னு கூவுது...

பார்த்தா தலைவர் ரெண்டு ரோபோ செஞ்சிருக்கார்... ஒன்னு அந்த கொக்கரக்கொன்னு கூவிச்சே அந்த கோழி ரோபோ இன்னொன்னு அச்சு அசலா அவரே மாதிரி ஒரு ரோபோ

**********
காலையிலே, ரஜினி அம்மாவான தமன்னா கிட்டே, ரஜினி பிரண்ட்ஸ் எல்லாரும் கேட்குறாங்க "எப்படி இந்த புக்ஸை படிச்சி ரோபோ செஞ்சாரு அவரு?"

அதுக்கு தமன்னா சொல்றாங்க "சி, பாஸ்கல், ஜாவா லாங்க்வேஜ் புக்கை வச்சி படிச்சிட்டு ரோபோ பண்றவன் சாதா ஸ்டார், தமிழ், தெலுங்கு, ஹிந்தி லாங்க்வேஜ் படிச்சிட்டு போய் ரோபோ பண்றவன் சூப்பர் ஸ்டாரு"


அடுத்த பாகம் வரும் வரை கொஞ்சம் பொறுமையா இருங்க....

17 comments:

ரமேஷ் வைத்யா said...

http://rameshgvaidya.blogspot.com/2010/09/blog-post.html

ரமேஷ் வைத்யா said...

:-)))

உண்மைத்தமிழன் said...

தாங்கலடா சாமி. இதுக்கு படத்தையே பார்க்கப் போயிரலாம்..!

பெசொவி said...

சன் பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்கப் போகிற படத்துக்கு நீங்கதான் கதை வசனம்னு சொல்றாங்களே, அது உண்மையா?
:)))

Unknown said...

நல்லா இருக்கு தல :)
(http://last3rooms.blogspot.com)

மணிஜி said...

வந்தாச்சா? எந்த ஊர்ல இருக்காப்ல?

Unknown said...

நல்லா இருக்கு தல :)
(http://last3rooms.blogspot.com)

Raju said...

ரைட்டு.

ஆ.ஞானசேகரன் said...

வாங்க நண்பா,... வணக்கம்

நையாண்டி நைனா said...

/* ரமேஷ் வைத்யா said...

http://rameshgvaidya.blogspot.com/2010/09/blog-post.html*/

படிச்சாச்சு... பின்னூட்டமும் போட்டாச்சு... வாங்க... வருக.

நையாண்டி நைனா said...

/*உண்மைத்தமிழன்(15270788164745573644) said...

தாங்கலடா சாமி. இதுக்கு படத்தையே பார்க்கப் போயிரலாம்..!*/

500 O.K.Vaaaa

நையாண்டி நைனா said...

/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சன் பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்கப் போகிற படத்துக்கு நீங்கதான் கதை வசனம்னு சொல்றாங்களே, அது உண்மையா?
:)))*/

heheheheehe keep the secret.

நையாண்டி நைனா said...

/*குத்தாலத்தான் said...
நல்லா இருக்கு தல :)
(http://last3rooms.blogspot.com)*/

புதுசா வந்திருக்கீங்க போலே இருக்கே... நன்றி தல

நையாண்டி நைனா said...

/*மணிஜீ...... said...
வந்தாச்சா? எந்த ஊர்ல இருக்காப்ல?*/

அண்ணே... நம்ம ஊருலே தான் இருக்கேன்

நையாண்டி நைனா said...

/* ♠ ராஜு ♠ said...
ரைட்டு*/

ஆனா மெயில் சொல்லுது... "ராஜு ஹெஸ் 'லெப்டு' எ கமண்டு" ன்னு....

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...

வாங்க நண்பா,... வணக்கம்*/

பதில் வணக்கம் நண்பரே.
வருகைக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

செம கலக்கலான பதிவு வாத்தியாரே,இத்தனை நாளா உங்கள மிஸ் பண்ணிட்டனே.