Friday 24 September 2010

எந்திரன் - கதை மற்றும் கதை வசனம்! முதல் பகுதி

இன்னிக்கு உள்ள நெலமைலே, விலைவாசி உயர்வோ, காஸ்மீர் பிரச்சினையோ, பிள்ளையார் ஊர்வலமோ ஒரு பெரிய பிரச்சினையே இல்லே... ஆனா இந்திய இறையாண்மையின் பெரிய பிரச்சினை எந்திரன் ஓடுமா? ஓடாதா? வசூல் பண்ணுமா? பண்ணாதா? அதனோட கதை என்ன? இதான் பிரச்சினை... இதுலே இருக்குற முதல் ரெண்டு பிரச்சினைக்கு நாம ஒன்னும் சொல்ல முடியாது இப்போ? ஆனா கதை! அதை நாம இப்பவே சொல்லிரலாம்

எந்திரன் கதை என்ன என்ன என்று கோலிவுட்டு, ஜல்லி கட்டு ஆடிகிட்டு இருக்கு... அவங்க மட்டுமா நாமும் தானே.. அதனாலே நம் மக்களின் அறிவு பசி (வேற எதுலையும் நமக்கு அறிவு பசி வரவே வராது) போக்க, நம்ம சிகரட் எஜன்ட் நைனா- நையாண்டி நைனா 003 அவர்களை ஏவி விட்டோம் அவர் சொன்ன கதைய மற்றும் உரையாடலை அப்படியே உங்களுக்கு சமர்பிக்கிறோம்..



கதையோட ஒன் லைன் சொல்றேன் கேட்டு கோங்க...இதை சொல்ல கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தாலும் நம்மா ரசிகர்களுக்காக.. நம்ம தமிலர்களுக்காக.(இங்கே எழுத்து பிழை இல்லே) அவங்க தான், தேர்தல்லே யாரு ஜெயிப்பான்னு தேர்தல் கமிசன் வைக்குற சஸ்பென்சு பிடிக்காமே, கருத்து கணிப்பு வச்சி பிரச்சினை வராமே(?) 'தீர்குற' ஆளுங்க... நாளைக்கு வருற படத்தை இன்னிக்கே பார்குற டெக்னிக்கை சாந்த"சக்குபாய்"...ரிலீஸ் ஆனா காலத்திலேயே உருவாக்குன ஆளுங்க (இதில் எந்த உள்குத்து அரசியலும் இல்லை), இவளோ ஏனுங்க... வயித்திலே இருக்குற குழந்தை ஆணா? பெண்ணா? என்று நம்ம ஆண்டவன் வைக்குற சஸ்பென்சே... பிடிக்காது அதையே ஸ்கேன் செஞ்சி உடைக்குற ஆளுங்க... அதனாலே நானே சொல்லிடுறேன, இது வரைக்கும் எந்த படத்திலேயும் வராத ஒன்னு, அப்படின்னு "இயக்குனர் இடி" சங்கர் சொல்லவே இல்லே நானே சொல்லிக்குறேன் "அநியாயத்தை கண்டு பொங்கி எழுற ரஜினி"

"ஒன் லைனு-ன்னு சொல்லிட்டு இவ்ளோ பெரிய பில்டப்போட சொல்றே? "

"பின்னே சங்கர் படம்னா, தலைவர் படம்னா சும்மாவா.... ஒரு கெத்து வேணாம் ?"

"இதுக்கே இவ்ளோ பில்டப்பா... சரி.. சரி கதைய சொல்லு "
-------------------------------------------------------------------------------------
ஹே.... ஹே.... என்ற சவுண்டோட டைட்டில், தலைவர் பேரு வந்த உடனே சூடன் ஆரத்தி, சிதறு தேங்கா எல்லாம் போட்டு தியேட்டரை ஒரு வழி செஞ்சி, முதல்லேயே ஒரு சண்டை சும்மா அனல் பறந்தது, தணல் தெரித்தது சண்டைலே ஒருத்தன் மண்டை உடஞ்சது, சண்டை முடிஞ்சி படம் ஆரம்பம் (சண்டை ஸ்க்ரீன்லே இல்லைங்க, ஸ்க்ரீனுக்கு முன்னாடி.... வித்தியாசமா இருக்கா?!!! அதான் தலைவர் படம்!!!!)

ஒப்பன் பண்ணா ஒரு பேனரு அதிலே "முதல்வரே வருக வருக" என்று வாசகம். அடுத்தும் ஒரு பேனரு "ஆராய்ச்சி பல செய்து, முதல்வர் பதவிக்கு அடுத்து அடுத்த ஜனாதிபதி ஆகபோகும் எங்கள் குல கொழுந்தே வருக வருக"

******************************************************************

"அடுத்த சீன் ஒரு ரூம்லே - அது பெரிய கான்பரன்சு ரூம்"

"யாரெல்லாம் இருக்கா?"

"பாட்ஷா படத்திலே மெடிக்கல் காலேஜி ஓனரா வருவாரே அவரு, இதிலேயும் அவரு கல்வி தந்தையா தான் வாராரு, புரப்போசரா நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி, இன்னொரு புரப்போசரா குமரி முத்து, நம்ம ரஜினி, மற்றும் ரஜினியோட பிரண்ட்ஸ் ரெண்டு பேரு அது யாருன்னா நம்ம ஜெய் சங்கரும், ஜெமினி கணேசனும்"

"ஹே வெறி இன்ட்ரஸ்டிங், ஆனா அவங்க தான் இப்ப இல்லவே இல்லியே..."

"அட அவசர படாமே கேளுப்பா... உபயம், அமெரிக்க மேக்கப் கலைஞர்கள் இல்லை கிராப்பிக்ஸ் கலைஞர்கள், இதுக்கே முப்பது கோடி காலியாம் இந்த நியூசை சொன்னவரு பிலிம் நியூஸ் ஆனந்தன் இல்ல, டகுல் டம்பி, டமாரம். நம்ம காக்கா ராதா கிருஷ்ணனையும், சொக்கலிங்க பாகவதரையும் தான் பிரண்ட்சா போடலாம்னு முதல்லே ஒரு பேச்சு இருந்துச்சாம், ஆனா அவங்களை போட்டா கதை ஹை ஸ்கூலே நடக்குற மாதிரி எடுக்க முடியாதாம், எளிமன்றி ஸ்கூல்-லே நடக்குற மாதிரி தான் எடுக்க வேண்டி வருமாம், அதனாலே அந்த ஐடியாவை விட்டுட்டாங்கலாம்"

"அட நம்ம பரத், விஷ்ணு இவங்களை போட்டிருக்கலாம்"

"ஹா...ன்....! போட்டா...? காலேஜி சீனு தானே எடுக்க முடியும்...! ஹை ஸ்கூல் சீனா எடுக்க முடியாதுல்லோ... இவங்களை போட்டதுக்கும் ஒரு தத்துவம் இருக்குய்யா... நம்ம பீர்பால் தத்துவம் தான், ஒரு கோட்டை சிறுசா ஆக்கணும்னா பக்கத்திலே இன்னொரு கோடு பெருசா போட்டா போதும்... அப்புறம் இதுலே இன்னொரு முக்கியமான மேட்டரும் இருக்கு... நம்ம சங்கர் அண்ணாச்சி செலவை மிச்சம் பிடிச்சிருக்காரு..."

"என்னய்யா புதிர் போடுறே? எப்படிய்யா மிச்சம் புடிச்சிருக்காரு?"

"தலைவருக்கு மேக்கப் போட்டா செலவு அறுபது கோடி ஆகுதாம் ஆனா தலைவரை அப்படியே வச்சி இவங்களை கிராபிக்ஸ்லே கொண்டு வந்தா செலவு முப்பது கோடி தானாம், பார்த்தியா பாதிக்கு பாதி மிச்சம், நம்ம தலைவரும் அப்படியே வருவாரு... அவங்க பிரன்ட்சும் ரெடி"

"சரி சரி வியாக்கியானத்தை நிறுத்து கதைய சொல்லு..."

முதல் சீனே.. சும்மா அமர்கள படுத்துது....

பாட்ஷா படத்திலே மெடிக்கல் காலேஜி ஓனரா வருவாரே அவரு: "எல்லாரும் முதல்வரை எங்கே முதல்வரை எங்கேன்னு கேட்டிட்டு இருக்குற இந்த நேரத்த்லே அவரு எங்கைய்யா போயிட்டாரு"

வெ. ஆ. மூர்த்தி: இப்படி ஸ்கூல் தொறந்திருக்கிற நேரத்திலே என்னிக்கு அவரு வந்திருக்காரு, நீங்க இன்று பள்ளி விடுமுறை ன்னு போட்டு பாருங்க, டங்குன்னு வந்து நிப்பாரு.

குமரி முத்து : அவரு எங்கே இருப்பாருன்னு உங்களுக்கு தெரியாதா... இன்னிக்கு பக்கத்துலே எங்கேயோ பால்காரங்க எல்லாம் மீட்டிங் போட்டு அம்மனுக்கு கூழு ஊத்துராங்கலாம்... கேள்வி பட்டேன்.. தம்பி அங்கே தான் போய் இருப்பாரு...

-------------------------------------------------------------------------------------

ஒரு பெரிய கும்பல், அதை சுத்தி சுத்தி.. கேமரா காட்டுது... ஏரியல் வியூ லே இருந்து.. அப்படியே கீழே வருது...
கீழே ரெண்டு பேரு:
ஒருவன் : நீ கைய வச்சியா மேல..
மற்றொருவன் : இல்லே.. ஆனா இன்னிக்கு வைக்காமே போறதில்லே...

அந்த கூட்டம் மொத்தம்மா யாரையோ மொத்திகிட்டு இருக்குன்னு நெனச்சா... கும்பல் மொத்தமும் ஒரு ஆளை தொட்டு ... தொட்டு சந்தனம், கலர் பொடின்னு பூசி மஜா பண்ணிட்டு இருக்கு அவருதான் நம்ம சூப்பர் ஸ்டார்... அப்படின்னு நீங்க நெனச்ச... அது உலக மகா தப்பு... அவரு அந்த ஏரியா கவுன்சிலர் "வினு சக்ரவர்த்தி"
என்னை ஒன்னும் பண்ணாதீங்கடா... நம்ம தம்பிய கவனிங்கடா அப்படின்னு சொல்லிட்டு "தம்பி...." அப்படின்னு கூப்பிடுறார்...

வானத்திலே சும்மா பட்டாசு பட படக்க, கழுகெல்லாம் கலங்கி ஓட..., சூறாவளி சுழன்றடிக்க.. எங்கேயோ காட்டிலே இருக்குற சிங்கம் எல்லாம் சிதறி ஓட, நரியெல்லாம் நாலு பக்கமும் தெரிச்சு ஓட.. ஏர்லே...அதுவும்... 'சொமர்சால்டிலேயே' வந்து கின்னுன்னு நிற்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்...



அந்த கும்பல்லே இருந்து வெளியே வந்து ஒரு சாங்கு...


ஆள்ரவனை தொழாதேடா
ஆண்டவனை தொலைக்காதேடா
இது நம்ம வேதம்டா...
நீயே ஒரு தேவன்டா....

ஆள்ரவனை தொழாதேடா
ஆண்டவனை தொலைக்காதேடா
இது நம்ம வேதம்டா...
நீயே ஒரு தேவன்டா....

நீயே ஒரு தேவன்டா....

அடா அடா அடி டா
அநியாயத்தை அடி டா

தடா தடா தடி டா
அக்கிரமத்துக்கு தடி டா


அடா அடா அடி டா
அநியாயத்தை அடி டா
தடா தடா தடி டா
அக்கிரமத்துக்கு தடி டா

பேக்கரிலே பன்னுடா
லாக்கரிலே கண்ணுடா

நானும் நீயும் ஒண்ணுடா - யாரும்
பார்த்தா விழும் கண்ணுடா (இந்த லைனு வரும்போது தல சூப்பர் ஸ்டாரு ஆடியன்சை பார்த்து பாடுறார்)

நானும் நீயும் ஒண்ணுடா - யாரும்
பார்த்தா விழும் கண்ணுடா

நானும் நீயும் ஒண்ணுடா - யாரும்
பார்த்தா விழும் கண்ணுடா (இப்ப அவரு கண்ணுலே ஆனந்த கண்ணீர் வருது)(நமக்கும் தான் டிக்கட் வெல அஞ்சு நூராமே)


(மீதி படம் விளம்பர இடைவேளைக்கு பிறகு அடுத்த பதிவுலே தொடரும்... )

4 comments:

Raju said...

கோடம்பாக்கத்துக்கு புது பாடலாசிரியர் கிடைச்சுட்டாரு போலருக்கு!

பெசொவி said...

ரகளை ஆரம்பமாகட்டும்.................!

நையாண்டி நைனா said...

என்னடா..... இது... எந்திரன்.. அதுலே சாதனை.. இதுலே சாதனைன்னு சொல்றாங்க... ஒரு பின்னூட்டம் கூட வரலியே...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Jackiesekar said...

தம்பி செம பார்ம்ல வந்து இருக்க போல.. கலக்கோ, கல்க்குன்னு கலக்கு அப்பு..