Monday 14 September 2009

இனி என்னை கூப்பிடுவீங்க...!!!(அழகு, காதல், பணம், கடவுள்)


சிங்கபூரில் சிங்காரமாக இருக்கும்
சிங்கபூர் சிங்காரம் அம்மா அப்பா.
சிங்கப்பூரின் சிங்காரமே நீதானே!
அம்மா அப்பா.

ஆமாப்பா...
நீயே அம்மா அப்பா.
பல நற்சிந்தனைகளுக்கு
நீயே அம்மா அப்பா.

அப்பப்பா...!!!
எழுத அழைத்திட்டப்பா!
ஒரு தொடராப்பா...
நானும் தொடர்கிறேனப்பா...!!!

அழகு,
காதல்,
பணம்,
கடவுள்,
என் சிந்தனையில்...!!!(ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

என் சிந்தனை
மட்டுமின்றி
ஊரார் சிந்தனையிலும்
ஊறிப் போனது,
ஊசிப் போனது,
நாறிப்போனது.

இருப்பினும்
புது நாற்றை போல்
முளைத்துக்கொண்டே இருப்பது

இவற்றை நம் சிந்தையில் ஏந்தி தானே
வாழ்வின் பெரும்பகுதி
களிக்கிறோம்,
கழிக்கிறோம்.

எனது பார்வையில் என்று பார்க்க போனால் இத்தனையும் மாயை.

அழகு: வரையறுக்க முடியாதது...

ஒருவனுக்கு அழகாய் தெரிவது மற்றவனுக்கும் அப்படியே தெரியாது. இதில் அழகை எப்படி வரையறுப்பது? அழகை யார் வரையறுப்பது?

பசித்தவனுக்கு கஞ்சிதான் அழகாய் தெரியும்.

ஆக என்னை பொருத்தவரையில் அழகு வரையறுக்க முடியாதது. அட.... அதற்கு எல்லை இல்லாதது என்றும் ஒரு பொருள் வருகிறதே...!!!

காதல் - காவியமாவது, காவி கட்டி அலையவைப்பது.

இளம் விடலைகளுக்கு இதை உண்டு பண்ணுவது நாளமில்லா சுரப்பி. திரைப்பட இயக்குனர்களுக்கு இந்த வார்த்தையே அமுதசுரபி. இளம் இயக்குனர்கள் பலபேரு பல விதமா சொல்லி விட்டார்கள்... இருந்தாலும் நாமும் இயக்குனர்கள் பாணியிலே சொல்லிறேன்

காதல் ஒன்னும் "சைன்சு நோட்டு" இல்லைங்க....
ஒரு பக்கம் படமாவும்
மறுபக்கம் விளக்கமாவும் பதிய
அது "இரண்டு கோடு" நோட்டு....
காதலன், காதலி அப்படிங்குற இரண்டு கோடுகளையும்
வாழ்க்கைங்குற எழுத்தாலே இணைச்சி வாழணும்.


காதல் ஒன்னும் "கிராப் நோட்டு" இல்லைங்க..
நேற்று அப்படி இருந்துச்சி...
இன்னிக்கு இப்படி இருக்கு
நாளைக்கு எப்படி இருக்கும் என்று கணித்து சொல்ல
அது நித்தம் தேவைபடுற "ரூபா நோட்டு"
என்னிக்கும் இருக்கணும்,
ஒரே மதிப்பா இருக்கணும்.


காதல் ஒன்னும் சளி இல்லைங்க
எப்பவாவது வருகிறதுக்கு....
அது "ஒன்னுக்கு" மாதிரி
அடிக்கடி வரணும்,
நிதமும் வரணும்...


காதல் ஒன்னும் "குசு" இல்லிங்கோ...
ஒளிச்சு, நாசுக்காக விட்டு நார அடிக்க
அது "சுவாசம்" மாதிரி,
இருக்குறதே தெரிய கூடாது
ஆனா உசுரோட தொடர்பா இருக்கணும்

(குசு போட்டு... (விட்டு இல்லீங்க)எழுதுனாதான் "பின்" நவீனத்துவ எழுத்தாளர்னு.....)

போதும் நிறுத்திக்குவோம்...

அப்படின்னா அந்த கருமாந்திரம் பிடிச்ச காதல் பற்றி என்ன... சொல்ல...?
நல்ல காதல் கிடைத்தால் காவியம் படைக்கலாம், கேடு கெட்ட காதல் கிடைத்தால் காவி கட்டி அலைய வைக்கும்.

((இந்த காதல் பகுதியை, தம்பி லோகுவுக்கும் தம்பி அன்புக்கும் சமர்பிக்கிறேன்))

பணம்: படுத்தி எடுப்பது...

இருப்பவனும் தேடுகிறான் இல்லாதவனும் தேடுகிறான் நிம்மதியை.
மேலுள்ள ஒற்றை வரியே சொல்லுமே அதனுடைய முக்கியத்துவத்தை.

கடவுள் - கலகக்காரர்களின் கை இருப்பு.

நான் மட்டும் அல்ல... இந்த உலகமே தேடிக்கொண்டிருக்கும் ஒரு பயங்கர குற்றவாளி.
பணத்தின் மேல் பற்றுள்ளவன் பணத்தை மட்டுமே தேடுவான்.
பொன்னின் மேல் பிரியமாய் இருப்பவன் பொன்னை மட்டுமே தேடுவான்.
பெண்ணின் மேல் காமமாய் இருப்பவன் பெண்ணை மட்டுமே தேடுவான்.

ஆனால்... கடவுள் விசயத்தில்...
கடவுள் பற்று உள்ளவனும்,
கடவுள் பற்று இல்லாதவனும்
தேடுகிறார்கள்...
.
.
.
கடவுளை.

அடுத்து இந்த தொடரை இழுத்து செல்ல நான் அழைப்பது...

1. இவரு பதிவை படிக்க நல்லா இருக்கும் அவரு அருமை நண்பர் கீத் குமாரசாமி அவர்களை அழைக்கிறேன்.

2. பேரு சும்மா டெர்ரர் பேரு தான்... ஆள் முகம் பார்த்தீங்கன்னா... பிஞ்சு மூஞ்சை வச்சி இருப்பார்... கொழுக் மொழுக் என்று இருப்பார்...இவரு பதிவு பேரு தற்போதும் யூத்து பிள்ளைங்களை ஆடசெயும் பாடல் வரிதான். சரி அவரு வேற யாருமில்லை.. அவரு..... நண்பர் ஸ்டார்ஜன் (தெளிவா படிங்க புள்ளைங்களா... டார்ஜான் இல்லே ஸ்டார்ஜன்)அவர்களை அழைக்கிறேன்.

3. பகடி செய்து பதிவு போடுவது இவருக்கு கை வந்த கலை. அதுவும் சினிமான்னா... சொல்லவே வேண்டாம்... அப்புறம் சினிமாவிற்கு நடிக்க இவரு ஆளுங்களை எல்லாம் ரெகமண்டு பண்ணுவாரு... அருமை நண்பர்... இரும்புத்திரை அரவிந்து அவர்களை அழைக்கிறேன்.

4.இவரு ஒரு புகழ் பெற்ற "பாமக"காரர். இவரை பற்றி நான் சொன்னால் அது நல்லா இருக்காது... நீங்களே இவரோட வலை பதிவுகளை கண்டு அறிந்து கொள்ளுங்க.. அப்புறம் பெயர் கூட சொல்லாமே இருக்க முடியுங்களா... பெயர் திரு.அன்பு மணி அவர்கள்.

"அடங்கொயாலே... உனக்கு அவ்ளோ பெரிய ஆளுங்களை எல்லாம் தெரியுமா?" என்று வாயை பிளக்க வேண்டாம்.

"ஆம் தெரியும்" என்பதே எனது பதில்.

வாருங்கள் திரு குடந்தை அன்புமணி அவர்களே....
( யோவ்... வென்று... "பாமக" அன்பு மணின்னு சொன்னே... ஆமாங்க... இப்பவும் சொல்றேன்.. இவரும் "பாமக"தான்... பாசத்தால் க்களை ட்டியவர்)

5. அகில உலக "அதிரடி எலக்கியவாதி", "அரசியல் அனகொண்டா", விளம்பர உலக "விஜய்"(அதாங்க இளைய தளபதி(என்ன? கொஞ்சம் வயசு தான் கூட...)),ஆனால் தற்போது பதிவுலகின் "கவிதை காட்டேரி".... இப்படி அண்ணனின் பெருமையை மட்டுமே கூறினால் அதுவே ஒரு பெரிய தொடர்பதிவுக்கு "வலி" வகுக்கும் என்ற காரணத்தினால் இதோடு முடித்து கொண்டு அண்ணன் தண்டோரா அவர்களை தண்டோரா அல்ல... முரசு கொட்டி அழைக்கிறேன்...

36 comments:

Raju said...

\\அகில உலக "அதிரடி எலக்கியவாதி"\\

ஒரு எலக்கியவாதியே, ஒரு எலக்கியவாதிய எலக்கியவாதின்னு கூப்புடுதே...!அடடே ஆச்சர்யக்குறி.

மணிஜி said...

ஏன் நைனா இவ்வளவு கொலைவெறி?நா கொஞ்சம் டைம் எடுத்துக்கிறேன்

Unknown said...

ஐயோ ஐயோ... எனக்கு நிறைய டைம் வேணுமே.... கவுஜ எல்லாம் எழுதமாட்டேன் நைனா..அவ்ளோதான்.. சொல்லிப்புட்டேன் ஆமா

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
\\அகில உலக "அதிரடி எலக்கியவாதி"\\

ஒரு எலக்கியவாதியே, ஒரு எலக்கியவாதிய எலக்கியவாதின்னு கூப்புடுதே...!அடடே ஆச்சர்யக்குறி.*/

பத்த வைக்கலன்னா... நமக்கு பொழுது போகாதே...

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
ஏன் நைனா இவ்வளவு கொலைவெறி?நா கொஞ்சம் டைம் எடுத்துக்கிறேன்*/

Ok...

இது கொலைவெறி அல்ல... அன்பு அருவி...

நையாண்டி நைனா said...

/*Kiruthikan Kumarasamy said...
ஐயோ ஐயோ... எனக்கு நிறைய டைம் வேணுமே.... கவுஜ எல்லாம் எழுதமாட்டேன் நைனா..அவ்ளோதான்.. சொல்லிப்புட்டேன் ஆமா*/

சரி. உங்களுக்கு முடிஞ்ச பொழுது எழுதுங்க....

தினேஷ் said...

/"பின்" நவீனத்துவ எழுத்தாளர்//

அட அட என்ன ஒரு ”பின்” நவீனத்துவம்

தினேஷ் said...

போதை ஒன்னும் "கிராப் நோட்டு" இல்லைங்க..
நேற்று அப்படி இருந்துச்சி...
இன்னிக்கு இப்படி இருக்கு
நாளைக்கு எப்படி இருக்கும் என்று கணித்து சொல்ல
அது நித்தம் தேவைபடுற "ரூபா நோட்டு"
என்னிக்கும் இருக்கணும்,
ஒரே மப்பா இருக்கணும்.

ஹேமா said...

நைனா அசத்துறீங்க.காதலையும் கடவுளையும் அப்பிடியே புரிஞ்சு வச்சிருக்கீங்க.அருமையா வந்திருக்கு பதிவு.

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
/"பின்" நவீனத்துவ எழுத்தாளர்//

அட அட என்ன ஒரு ”பின்” நவீனத்துவம்*/

பாராட்டிற்கு நன்றி தல.

நையாண்டி நைனா said...

/* சூரியன் said...
போதை ஒன்னும் "கிராப் நோட்டு" இல்லைங்க.......
என்னிக்கும் இருக்கணும்,
ஒரே மப்பா இருக்கணும்.*/

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கேவா.....

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
நைனா அசத்துறீங்க.காதலையும் கடவுளையும் அப்பிடியே புரிஞ்சு வச்சிருக்கீங்க.அருமையா வந்திருக்கு பதிவு.*/

நன்றி அக்கா...

குடந்தை அன்புமணி said...

ஆகா... மாட்டிவிட்டாச்சா...

//இவரும் "பாமக"தான்... பாசத்தால் மக்களை கட்டியவர்)//

ரொம்ப பில்டப்பா வேற இருக்கே...
மவனே மாட்னடி...

ம்... கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க...

தராசு said...

இது எங்க போய் முடியப் போகுதோ!!!!!!

Cable சங்கர் said...

நல்ல வேளை நான் எஸ்கேப்.. ஏற்கனவே தண்டோரா கூப்டதையே இன்னும் எழுதல..:)

கார்க்கிபவா said...

அட அட அட.. காதல் பத்தி உங்க கிட்டதான் கேட்கனும் சகா

நடத்துங்க..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நண்பா, வந்திருவோம் ...

வந்து ஜோதியில ஐக்கியமாயிருவோம் ....

கபடி கபடி கபடி....

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கல் கவிதை

Anonymous said...

nalla nakaisuvaiyaa erukku unga pathilkal.

nadathunga nadathunga

Anonymous said...

nalla nakaisuvaiyaa erukku unga pathilkal.

nadathunga nadathunga

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவு அருமை

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
ஆகா... மாட்டிவிட்டாச்சா...

//இவரும் "பாமக"தான்... பாசத்தால் மக்களை கட்டியவர்)//

ரொம்ப பில்டப்பா வேற இருக்கே...
மவனே மாட்னடி...

ம்... கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க...
*/
மாட்டிவிட்டா தானே நமக்கும் இங்கே பொழுது போகும்...

உங்கள் தொடருக்காக காத்திருக்கிறோம்...

நையாண்டி நைனா said...

/*தராசு said...
இது எங்க போய் முடியப் போகுதோ!!!!!!*/

நல்லபடியா தான் முடியும்.

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
நல்ல வேளை நான் எஸ்கேப்.. ஏற்கனவே தண்டோரா கூப்டதையே இன்னும் எழுதல..:)*/

ரொம்ப நாளைக்கு பிரியா விட மாட்டோம்.

நையாண்டி நைனா said...

/* கார்க்கி said...
அட அட அட.. காதல் பத்தி உங்க கிட்டதான் கேட்கனும் சகா

நடத்துங்க..*/

Nandri Nanbare...

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நண்பா, வந்திருவோம் ...

வந்து ஜோதியில ஐக்கியமாயிருவோம் ....

கபடி கபடி கபடி....*/

வாங்க தல வந்து கலக்குங்க....

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கலக்கல் கவிதை*/

நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/*MAHA said...
nalla nakaisuvaiyaa erukku unga pathilkal.

nadathunga nadathunga*/

Thank you dear friend.

நையாண்டி நைனா said...

/* T.V.Radhakrishnan said...
பதிவு அருமை*/

நன்றி ஐயா.

Unknown said...

Enda yeppadi mokkai poduringa.. nee blog eluthuranu unaku comments vera.. mokkaigal kuttam vazhga

நையாண்டி நைனா said...

/*aruns said...
Enda yeppadi mokkai poduringa.. nee blog eluthuranu unaku comments vera.. mokkaigal kuttam vazhga*/

கோவிச்சுகாதீங்க Brother.... எல்லாரும் ஹீரோ வேஷம் கட்டணும்னு ஆசை பட்டா... படம் எப்படி எடுக்க முடியும்?

துபாய் ராஜா said...

\இனி என்னை கூப்பிடுவீங்க...!!!/

இனிமேல்தான் அடிக்கடி கூப்பிடுவாய்ங்க நைனா... :))

யோ வொய்ஸ் (யோகா) said...

(குசு போட்டு... (விட்டு இல்லீங்க)எழுதுனாதான் "பின்" நவீனத்துவ எழுத்தாளர்னு.....)//

நல்லாயிருக்கு பின் நவீனத்துவ எழுத்தாளரே..

நையாண்டி நைனா said...

/* துபாய் ராஜா said...
\இனி என்னை கூப்பிடுவீங்க...!!!/

இனிமேல்தான் அடிக்கடி கூப்பிடுவாய்ங்க நைனா... :))*/

அப்படியா.....
ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*யோ வாய்ஸ் (யோகா) said...
(குசு போட்டு... (விட்டு இல்லீங்க)எழுதுனாதான் "பின்" நவீனத்துவ எழுத்தாளர்னு.....)//

நல்லாயிருக்கு பின் நவீனத்துவ எழுத்தாளரே..*/

நன்றி நண்பா...

http://machamuni.blogspot.com/ said...

உங்கள் பதிவுகள் எளிதாக அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கிறதென்றால்,பதிவில் உபயோகித்திருக்கும் படம் அதைவிட ஈர்ப்பாக இருக்கிறது.என் பதிவுப் பக்கமும் வந்து பார்த்துவிட்டுப் போங்க.நல்லாத் திட்டுவீங்கன்னு நினைக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்