Thursday, 17 September 2009

"குடிக்காதவன்" அதிரடி திரைப்படம் (பகுதி 1)



இந்திய வரலாற்றிலேயே இது வரை வெளி வராத "கவுஞ்சர் திலகம்" தண்டோரா, "புரட்சி யூத்து" கேபிள் சங்கர், "90" நைனா இணைந்து கலக்கும் புத்தம் புதிய திரைப்படம்
"குடிக்காதவன்"
இன்று முதல் உங்கள் "லக லக லக....." தளத்திலே...



Now the film starts.......

(பெரிய செல்வந்தர் அண்ணன் தண்டோரா, அவருக்கு ரெண்டு தம்பிங்க... ஒன்னு "கேபிள்"சங்கர், இன்னொன்னு "90" நைனா எல்லாரும் ஒரு பார்லே உக்காந்து தண்ணி அடிச்சிகிட்டு இருக்காங்க)

"டேய் நைனா... பார்த்து நிதானமா அடிடா... ஓவரா ஏத்தாதே... "

"சரிண்ணே... நான் மட்டுந்தானா... இல்லே கேபிள் அண்ணனுமா"

"ஏய்... நீ ஏண்டா, என் கி..கி..கிளாசுலே மண்ணை அள்ளி போடுற... உன்னை சொன்னாருன்னா அது உனக்கு மட்டுந்தான்டா...பேப்பயலே..."

"கொந்தளிக்குறது இருக்கட்டும்... நீங்க அந்த போஸ்டரை பாத்துகிட்டே... காரச்சேவை சிகரட்டுன்னு நெனச்சி பத்த வச்சிக்கிட்டு இருக்கீங்க..."

(அண்ணன் தண்டோரா அவர்கள் தன்னை (படிக்காதவன்) சிவாஜி மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு)

"இங்கே பாருங்க கண்ணுங்களா... நீங்க ரெண்டு பெரும் என் கண்ணு மாதிரி... உங்களுக்காகவே அண்ணன் கல்யாணம் கூட பண்ணிக்காமே... போற இடத்திலை எல்லாம்... 'கித்தாப்பா' 'செட்டப்பு' மட்டும் வச்சி காலம் தள்ளுனேன்... இப்படி நீங்க சண்டை போடாம ஒத்துமையா இருக்கணும்... இந்த பாழும் உலகத்திலே நீங்க ரெண்டு பெரும் எப்படி ஒண்டியா சமாளிக்க போறீங்கன்னு நெனச்சா... துக்கம் தொண்டைய அடைக்குதே.... (அண்ணனுக்கு இன்னொரு லார்ஜு சொல்லுறா...)"

அண்ணன் தண்டோரா...ஆனந்த கண்ணீர் சொரிய... இருவரையும் தன கரங்களில் அணைத்து... விம்மி... விம்மி அழுகிறார்... ('சாங்கு' சீகுவன்சு ஸ்டார்ட்ஸ்...)

(இந்த 'சாங்கு' சீகுவன்சு... பாரில் தொடங்குது... )

ஒரு பாருப் பிள்ளையாக...ஒரு டேபிள் கிள்ளையாக...ஊத்து... நீயும் ஊத்து
படம் பார்க்கப் பறந்தாலும்... திடநின்றி திரிந்தாலும்... கிளாசு... ஒரே கிளாசு
என்னென்ன தேவைகள்.... அண்ணனை கேளுங்கள்
(ஒரு பாரு)


(அண்ணன், ரெண்டு தம்பிகளையும் கூட்டிகிட்டு தெருவிலே நடந்து போகிறார்... தெருவோரத்திலே டாஸ்மாக் கடை மற்றும் கேனில் வைத்து "கள்" விற்பதை தாண்டி செல்கிறார் )
செல்லும் வழி எங்கெங்கும் டாஸ்மாக்கு வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் கள்ளை தொடலாம்
கிளாசு... அது மாறாமல்.... அளவு... அதை மீறாமல்
நாளும் குடி போடுங்கள் மோட்சம் பெறலாம்
(செல்லும்..)


(அண்ணன் சரக்கு போட்டு சலம்பி போலீசிடம் அடி வாங்குகிறார்.. சரக்கு பாட்டிலை போலிஸ் கண்ணிலிருந்தும் அடியிலிருந்தும் தன் நெஞ்சோடு அணைத்து குறுகி குனிந்து காப்பாற்றுகிறார், அடுத்து, அடி வாங்கிய வலி தெரியாமல் இருக்க அந்த காப்பாற்றிய 'ஆப்' சரக்கை 'ராவா' அடித்து மட்டையாகிறார்.)
சரக்கை நீங்கள் காத்திருந்தால்
சரக்கு உங்களை காத்திருக்கும்
நீ தந்த அலும்புக்கும்
நான் தந்த வம்புக்கும்
கைவிலங்கு காத்திருக்கு
(ஒரு பாரு)


(சரக்கு கிட்டாத நாள்களில் இன்ஸ்டன்ட் சரக்கு எப்படி காச்சுவது, எப்படி அதிக விலைக்கு விற்பது என்று ட்யூசன் எடுக்கிறார்)
ஊரல் அதை போடாமல் கள்ளும் வருமா?
ஊறுகாய், அதை தீண்டாமல் போதை தருமா
வெள்ளை இளச்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
(ஊரல்...)


(மறுபடியும் ஒரு பொன்னாளில் குரூப், பாருக்கு வருகிறது அண்ணன் (தனக்கு ஒரு பயலும் பொண்ணு தராததனாலே..) தான் திருமணம் பண்ணாது வாழ்ந்ததை நினைவு கூர்ந்து...ஓவரா மப்பாகி... )
பேதைக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
போதைக்கு வாழ்வது தோல்வி இல்லை
ஆனந்தத் தண்ணீரில் அபிஷேகம்
நான் செய்வேன்
என் இடுப்பில் வேட்டி இல்லை
(ஒரு பாரு)


('சாங்கு' சீகுவன்சு முடிஞ்சு 'சங்கு' சீகுவன்சு, பாட்டு முடியவும் அண்ணன் தண்டோரா, நெஞ்சை பிடிச்சிகிட்டு, தடால்னு கீழே விழுந்து விடுகிறார்)

தம்பிகள் இருவரும் கோரசாக "அம்மா, அப்பாவை நாங்க கண்டதில்லை, எங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலே இருந்து.. உங்க மூஞ்ச பார்த்து, பார்த்தே பார்க்க சகிக்காமே... போதைக்கு அடிமையாகிட்டோம்.. ஆனா இன்னிக்கு நீங்க இப்படி இருக்குற நிலைய பார்த்தா... எங்களுக்கு சரக்கு அடிக்காமலேயே குமட்டிகிட்டு வருது.... அஆவ்வ்வ்....."

(அண்ணன் தண்டோரா பாசமலர் கிளைமாக்ஸ் சிவாஜி மாதிரி...)
"ஆமாண்டா... கண்ணுங்களா... எனக்கு உங்களை விட்டுட்டு போறதை நெனச்சா அழுகையா வருது... நான் உங்களுக்காக சொத்து நெறைய சேர்த்து வச்சிருக்கேன்... ஆனா உங்களுக்கு இன்னும்.. நல்ல சரக்கு எது கள்ள சரக்கு எதுன்னு... கண்டு பிடிக்க தெரியலேயேயேயே..."

தம்பிகள் இருவரும் கோரசாக "அதுக்கு இப்ப நாங்க என்ன செய்யனும்..."

"நீங்க ஒன்ன்ன்ன்னும் செய்ய வேண்டாம்... ஏன்னா... எனக்கே இன்னும் நல்ல்ல்ல சரக்கு எது கள்ள்ள்ள்ள சரக்கு எதுன்னு... கண்டு பிடிக்க தெரியலேயேயே... இல்லேன்னா இப்படி மெத்தனாலை குடிச்சிட்டு இப்படி சாக கிடப்ப்ப்பேனா... அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியும்...என்னோட புத்தி தானே உங்களுக்கும் இருக்கும்"

"நீங்க உங்க சொந்த காசை போட்டு சரக்கு அடிச்சா தான் நல்லது எது டூப்பு எதுன்னு சீக்கிரம் கண்டுக்குவீங்க... அதனாலே... அண்ணனோட சொத்துகளை எல்லாம்... என்னோட சேர்த்து பொதச்சிருங்க...அப்பத்தான் உங்களுக்கு காசோட பெருமையும், சரக்கோட அருமையும் தெரி....." என்றவாறே உயிரை விடுகிறார்.



(இடைவேளை....)

அண்ணனை இழந்த தம்பிகள் என்ன ஆனார்கள்? பணம் சம்பாதித்தார்களா? அவர்களின் சரக்கு தாகம் தீர்ந்ததா? என்பதனை காண அடுத்த பகுதி வரை சற்று பொறுத்து இருக்கலாமே...!

அடுத்த பகுதி இங்கே...

45 comments:

இரும்புத்திரை said...

எங்க அண்ணன எங்க தங்கத்த எங்க சிங்கத்த இடைவெளியிலே போட்டுத் தள்ளிய நைனா ஒழிக

அப்ப முடிவிலே கேபிள் அண்ணனுக்கு ஏதோ ஆப்பு இருக்கு போல

வந்தியத்தேவன் said...

இந்தப் படம் எந்த தியேட்டரில் ஓடுகிறது. நல்ல சிரிப்பு ஆனாலும் நம்ம யூத் கேபிளாரை இப்படிக் கவிழ்த்திருக்ககூடாது.

தினேஷ் said...

காமெடி சரக்கு

தினேஷ் said...

//ஒரு பாருப் பிள்ளையாக...ஒரு டேபிள் கிள்ளையாக...ஊத்து... நீயும் ஊத்து
படம் பார்க்கப் பறந்தாலும்... திடநின்றி திரிந்தாலும்... கிளாசு... ஒரே கிளாசு
என்னென்ன தேவைகள்.... அண்ணனை கேளுங்கள்
//

இந்த வரியே போதும் நீங்கள் ஒரு சரக்கு கவுஜர்னு சொல்ல...

கவிஞர்களுக்கு இருக்கு தொட ஆயிரம் தலைப்புகள் , நமக்கோ மூணே மூணு சரக்கு,போதை,வாந்தி....

அதில்தான் எத்தனை விதமா எழுதுரீங்கோ .. நீங்க ரொம்ப சரக்குள்ளவருங்கோ

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்லாயிருக்கு இந்த வாரம் இது கேபிள் நடித்து வெளிவரும் இரண்டாம் படமா?

விசா ஏற்கனவே யுத் கேபிளுக்கு கதை சொல்லியிருந்தாரே?

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

என்னால சிரிப்ப அடக்க முடியல... சூப்பர் நைனா... :))

குடந்தை அன்புமணி said...

அடக் கொடுமையே... அதுக்குள்ள இடைவேளை வந்துடிச்சா...

இடைவேளை வந்த மாதிரியே தெரியலையே படம் அவ்வளவு ஸ்பீடு...
அடுத்து என்ன நடக்கும்...

சீக்கிரம்...

மணிஜி said...

பய புள்ளைகளா
பழத்தை போட்டு
படையலை சாத்து
விதை நான் போட்டது
உதை யார் வாங்குறது
சிதையில கொஞ்சம்
சீமெண்ணெய் ஊத்தாம
திருநீர்மலை சரக்கு
ஊத்தி எரிங்கப்பா

யப்பா கேபிளு
யூத்து,யூத்துன்னு
..த்து கிழிஞ்சிடப்போகுது
பாத்து...

ந்ை

தமிழ் அமுதன் said...

;;))

ஜெட்லி... said...

//யப்பா கேபிளு
யூத்து,யூத்துன்னு
..த்து கிழிஞ்சிடப்போகுது
பாத்து...
//

:))

லோகு said...

குடிக்காதவன் பட விமர்சனம்..

குடிக்காதவன் என தலைப்பை வைத்து விட்டு படம் முழுவதும் குடியை பற்றியே இயக்குனர் சொல்லி இருப்பது அவரது பின் நவீனத்துவ ஆர்வத்தை காட்டுகிறது. பெரிய அண்ணனாக வரும் தண்டோரா நடிப்பில் பின்னி இருக்கிறார். போலீசில் அடி வாங்கையிலும் ஆப் பாட்டிலை மறைக்கும் போது அவர் முகத்தில் 3 சிவாஜி, 4 கமல், 5 விக்ரம் , 7 சூர்யா தெரிகிறார்கள். அடிக்கடி பெல்ஜிய தேசத்து மகா நடிகன் எல்வேன்றோ டைளுக்சி யை நினைவு படுத்து கிறார்..

உண்மையான யூத் ஆன கேபிள் அண்ணாவை படம் முழுக்க வீணடித்திருக்கிறார் இயக்குனர். இதில் அவரது நுண்ணரசியல் தெரிகிறது.

இயக்குனர் ஆன நைனா தனக்கே அதிகம் டையலாக் வைத்துக்கொண்டு அதையும் ஓவர் போதையில் சரியாக பேச முடியாமல் உளறி இருக்கிறார்..

பாடல் வரிகள் யாரும் எதிர்கவுஜ எழுத முடியாத கவிதைகள்.. இதை எழுதிய நைனா தஞ்சாவூரில் இதை எழுதி வைத்துக்கொண்டு அதன் பக்கத்தில் உக்கார்ந்து கொண்டால் வருங்கால சந்ததியர்கள் படித்து தெருஞ்சுக்குவாங்க

மொத்தத்தில் குடிக்காதவன் - எவ்வளவு அடித்தாலும் ஸ்டெடி...

Cable சங்கர் said...

யோவ்..சூப்பர்... மெமையா மெட்டுக்கு பாட்டெழுதியிருக்கே.. எனக்கு டயலாக் கொடுக்காத நைனாவிக்கு என்னோட எதிர்ப்பு.. அதனால் கால்ஷீட் கொடுக்க மாட்டேன்.

Anbu said...

:-)

Unknown said...

பாட்டு தாங்க ஹைலைட்டே..

சிரிப்பா அடக்க முடியல..

:-))

Suresh Kumar said...

அண்ணனை இழந்த தம்பிகள் என்ன ஆனார்கள்? பணம் சம்பாதித்தார்களா? அவர்களின் சரக்கு தாகம் தீர்ந்ததா?n //////////////////

இன்னும் அடுத்த பகுதியா ?

ers said...

விவாதத்திற்கிடையே குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும்


புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

பிரபாகர் said...

பதிமூன்று வயதினில்
படம்தனை பார்த்துவிட்டு
இதுதான் உறவுஎன
ஏகமாய் மகிழ்ந்திருந்தேன்.

பத்து மூன்று ஏழு சேர
பதிவினில் நைனாவின்
புதுமையான கற்பனையில்
புல்லரித்து நிற்கின்றேன்.

வரிகளை நீர் மாற்றினாலும்
விதிகளை நீர் மீறவில்லை
பெருமையாய் இருக்கிறது
புதுமை பல செய்வதனால்

சரக்கடிக்கும் நண்பர்களை
சாதுர்யமாய் சேர்த்து
உரிமையாய் விளையாடி
உவகையினை சேர்த்துவிட்டீர்...

பிரபாகர்.

நையாண்டி நைனா said...

/*இரும்புத்திரை அரவிந்த் said...
எங்க அண்ணன எங்க தங்கத்த எங்க சிங்கத்த இடைவெளியிலே போட்டுத் தள்ளிய நைனா ஒழிக
அப்ப முடிவிலே கேபிள் அண்ணனுக்கு ஏதோ ஆப்பு இருக்கு போல*/

என்னப்பா இது படம் இப்பதான் வந்துச்சு அதுக்குள்ளே பெரிய ரசிகர் கூட்டமே இருக்கே...

நையாண்டி நைனா said...

/* வந்தியத்தேவன் said...
இந்தப் படம் எந்த தியேட்டரில் ஓடுகிறது. நல்ல சிரிப்பு ஆனாலும் நம்ம யூத் கேபிளாரை இப்படிக் கவிழ்த்திருக்ககூடாது.*/

இந்த படம் நம்ம லக லக லக..... தளத்திலே தான் ஓடும்...

அண்ணன் கேபிள் அடுத்த பகுதிலே வருவாரு...

நையாண்டி நைனா said...

/* சூரியன் said...
காமெடி சரக்கு*/
நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/* சூரியன் said...
//ஒரு பாருப் பிள்ளையாக...ஒரு டேபிள் கிள்ளையாக...ஊத்து... நீயும் ஊத்து
படம் பார்க்கப் பறந்தாலும்... திடநின்றி திரிந்தாலும்... கிளாசு... ஒரே கிளாசு
என்னென்ன தேவைகள்.... அண்ணனை கேளுங்கள்
//
இந்த வரியே போதும் நீங்கள் ஒரு சரக்கு கவுஜர்னு சொல்ல...

கவிஞர்களுக்கு இருக்கு தொட ஆயிரம் தலைப்புகள் , நமக்கோ மூணே மூணு சரக்கு,போதை,வாந்தி....

அதில்தான் எத்தனை விதமா எழுதுரீங்கோ .. நீங்க ரொம்ப சரக்குள்ளவருங்கோ*/

நன்றி தல...

நையாண்டி நைனா said...

/* யோ வாய்ஸ் (யோகா) said...
நல்லாயிருக்கு இந்த வாரம் இது கேபிள் நடித்து வெளிவரும் இரண்டாம் படமா?
விசா ஏற்கனவே யுத் கேபிளுக்கு கதை சொல்லியிருந்தாரே?*/

அட ஆமா. அப்படி பார்த்த கேபிள் பெரிய சூப்பர் ஸ்டார் தான்.

தினேஷ் said...

யோவ் வெயிட்டிங்கயா பெரிய இடைவெளை விடுறீங்க.. ஒரு நாளாச்சுல போதை இன்னுமா தெளியல..

சட்டு புட்டுனு ஓட்டி விடுயா..
எவ்ளோ நேரம் காத்திருக்கிறது..

ஸ்பெஷல் சாங்க் ஐட்டம் சாங்க் இல்லாத படம் நல்லாருக்காது , அதனால் இரண்டாம் பகுதியில் சேர்க்கவும்

தினேஷ் said...

பாட்டு இல்லேனாலும் போட்டாவாச்சும் போடவும் இல்லேனா கொசு கூட லகலக தியேட்டருக்கு நுழையாது...

நையாண்டி நைனா said...

/* Achilles/அக்கிலீஸ் said...
என்னால சிரிப்ப அடக்க முடியல... சூப்பர் நைனா... :))*/

Thanks Nanbaa...

பித்தன் said...

நல்ல சரக்கா டுப்ளிகட் சரக்கா.........

தராசு said...

தாங்க முடியல

நையாண்டி நைனா said...

/* குடந்தை அன்புமணி said...
அடக் கொடுமையே... அதுக்குள்ள இடைவேளை வந்துடிச்சா...

இடைவேளை வந்த மாதிரியே தெரியலையே படம் அவ்வளவு ஸ்பீடு...
அடுத்து என்ன நடக்கும்...

சீக்கிரம்...*/

அப்படியா... என்னை வச்சி, காமெடி... கீமெடி.. பண்ணலையே...

நையாண்டி நைனா said...

/* தண்டோரா ...... said...
பய புள்ளைகளா
பழத்தை போட்டு
படையலை சாத்து
விதை நான் போட்டது
உதை யார் வாங்குறது
சிதையில கொஞ்சம்
சீமெண்ணெய் ஊத்தாம
திருநீர்மலை சரக்கு
ஊத்தி எரிங்கப்பா

யப்பா கேபிளு
யூத்து,யூத்துன்னு
..த்து கிழிஞ்சிடப்போகுது
பாத்து...*/

Ok... செஞ்சிருவோம்...

நையாண்டி நைனா said...

/* ஜீவன் said...
;;))*/

:))

நையாண்டி நைனா said...

/* ஜெட்லி said...
:))*/
:))

நையாண்டி நைனா said...

/* லோகு said...
"குடிக்காதவன்" பட விமர்சனம்..

குடிக்காதவன் என தலைப்பை வைத்து விட்டு படம் முழுவதும் குடியை பற்றியே இயக்குனர் சொல்லி இருப்பது அவரது பின் நவீனத்துவ ஆர்வத்தை காட்டுகிறது.

மொத்தத்தில் குடிக்காதவன் - எவ்வளவு அடித்தாலும் ஸ்டெடி...*/

மிக சிறப்பா ஒரு விமர்சனம் எழுதி இருக்கீங்க.... அருமை நண்பா... ஆனா உலகத்திலேயே பாதி படம் பார்த்துட்டு... முழு விமர்சனம் எழுதுனது நீங்க தான்...இப்ப ஒத்துக்கறேன்... நீங்க தான் உண்மைலேயே குடிக்காதவன்,

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
யோவ்..சூப்பர்... மெமையா மெட்டுக்கு பாட்டெழுதியிருக்கே.. எனக்கு டயலாக் கொடுக்காத நைனாவிக்கு என்னோட எதிர்ப்பு.. அதனால் கால்ஷீட் கொடுக்க மாட்டேன்.*/

நன்றி... பாராட்டிற்கு...
உங்களுக்கு தான் கிளைமாக்ஸ்...

நையாண்டி நைனா said...

/* Anbu said...
:-)*/
:)))

நையாண்டி நைனா said...

/* பட்டிக்காட்டான்.. said...
பாட்டு தாங்க ஹைலைட்டே..
சிரிப்பா அடக்க முடியல..
:-))*/

நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/* Suresh Kumar said...
அண்ணனை இழந்த தம்பிகள் என்ன ஆனார்கள்? பணம் சம்பாதித்தார்களா? அவர்களின் சரக்கு தாகம் தீர்ந்ததா?n //////////////////

இன்னும் அடுத்த பகுதியா ?*/

ஆமா...

நையாண்டி நைனா said...

/* mix said...
விவாதத்திற்கிடையே குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும்*/

சேர்த்து வைக்க பயமா இருக்கே... இப்படி செஞ்சி, N-Tamil மொத்தமா கொண்டு போயிருச்சி...

நையாண்டி நைனா said...

/* பிரபாகர் said...
பதிமூன்று வயதினில்
படம்தனை பார்த்துவிட்டு
இதுதான் உறவுஎன
ஏகமாய் மகிழ்ந்திருந்தேன்.

பத்து மூன்று ஏழு சேர
பதிவினில் நைனாவின்
புதுமையான கற்பனையில்
புல்லரித்து நிற்கின்றேன்.

வரிகளை நீர் மாற்றினாலும்
விதிகளை நீர் மீறவில்லை
பெருமையாய் இருக்கிறது
புதுமை பல செய்வதனால்

சரக்கடிக்கும் நண்பர்களை
சாதுர்யமாய் சேர்த்து
உரிமையாய் விளையாடி
உவகையினை சேர்த்துவிட்டீர்...

பிரபாகர்.*/

மிக அருமை... மிக அருமை...

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
யோவ் வெயிட்டிங்கயா பெரிய இடைவெளை விடுறீங்க.. ஒரு நாளாச்சுல போதை இன்னுமா தெளியல..
சட்டு புட்டுனு ஓட்டி விடுயா..
எவ்ளோ நேரம் காத்திருக்கிறது..
ஸ்பெஷல் சாங்க் ஐட்டம் சாங்க் இல்லாத படம் நல்லாருக்காது , அதனால் இரண்டாம் பகுதியில் சேர்க்கவும்*/

செய்தாகி விட்டது நண்பா...

நையாண்டி நைனா said...

/* சூரியன் said...
பாட்டு இல்லேனாலும் போட்டாவாச்சும் போடவும் இல்லேனா கொசு கூட லகலக தியேட்டருக்கு நுழையாது...*/
உங்கள் எண்ணப்படியே..

நையாண்டி நைனா said...

/* பித்தன் said...
நல்ல சரக்கா டுப்ளிகட் சரக்கா.........*/
நல்ல சரக்கு தான் பாஸ்

நையாண்டி நைனா said...

/* தராசு said...
தாங்க முடியல*/
இதுக்கேவா...

யாசவி said...

pattaiya kilappiteenga

enakku naakku kuuudjfdjf chee kuzharuthu

:-)

நையாண்டி நைனா said...

/*யாசவி said...
pattaiya kilappiteenga

enakku naakku kuuudjfdjf chee kuzharuthu

:-)*/

Thanks.

முரளிகண்ணன் said...

பட்டய கிளப்பீட்டிங்க நைனா