Monday 24 November 2008

த்தூ... த்தேறி... ஐ. டி நாய்களா.....

த்தூ... தேறி... ஐ. டி நாய்களா..... என்ன மசுருக்குடா... ஐ. டி கம்பனிலே சேர்ந்தீங்க...?

அதான் படிச்சேல்லோ.... பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில். படிச்சிப் புட்டு... இங்கே என்ன மயிர தூக்கி நிறுத்த வந்தே? உங்களுக்கு எல்லாம், நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள்லாம் இங்கே வந்து வெள்ளைக்காரானுங்களுக்கு செருப்பு தொடைகக வந்துட்டா? அந்த பாழாப் போன TNPSC. UPSC, RRB, Bank Probationary Officers இதெல்லாம் எவனுக்குடா நடத்தறது? இந்த தேர்வை எல்லாம் தொங்கி சாகிறது தானேடா உங்க தலை எழுத்து.... அதை யாருடா மாற்ற சொன்னது....

படித்தது ஒன்று செய்வது ஒன்று, வெக்கம் இல்லை..... பரதேசி நாய்ங்களா?

உங்கப்பன் தோப்பிலும் துறவிலும் இருந்து சம்பாதிக்கிறான்.... நீங்களும் அவர்களுக்கு போய் உதவி செய்து வயிரை கழுவ வேண்டியது தானே... உங்களுக்கு எதற்கு பணம் சம்பாதிக்க வேண்டிய எண்ணம்? கஞ்சிகே வழி இல்லாத கூமுட்டைக்கு பொறந்த பண்னாடை நீயி. உனக்கு தன்மானம் இருக்கலாமா?

கஞ்சி, கஞ்சி என கத்தியே பசியை மறந்து கொண்டிருந்த உனக்கு Cathey Pacific-ல் பயணமா?
ஏர் பிடித்து பிழைத்து வந்த உனக்கு Air India ஒரு கேடா...?

என்னது? நீ சம்பாதிச்சி தான் உங்கப்பனை குடிசையில் இருந்து கோபுரத்துக்கு கொண்டு வர போறியா?....ஏண்டா... அறிவில்லெ உனக்கு, அதுக்கு தானேடா.... தேசத்தில் பலபேரு திட்டம் போட்டு, திட்டம் அறிவிக்கிறாங்க... அதை எல்லாம் நீயே செஞ்சுகிட்டா ... போடுற திட்டம் எல்லாம்.. எவனுக்குடா? இந்த சின்ன அறிவு கூட இல்ல... நீ எல்லாம்....த் தூ...

என்னது, இருந்த சின்ன கடையையும் வித்து உன்னை படிக்க வச்சாரா உங்க அப்பா?... என்ன கொடுமைடா ..இது... அவர்தான் புத்தி கெட்டு வித்தார் என்றால்..நீ அவரை விட பெரிய கூமுட்டையா இருக்கே... அவரே வேண்டாம்ணு தானே வித்துட்டார்... நீ அதை திருப்பி வாங்கி அவர் கைலே கொடுக்கணும்னு நினைக்கிறீயே .. நீ எல்லாம் ஒரு பிள்ளை....? உனக்கு ஒரு மூஞ்சி....?

இப்படி பொறாமையில் எத்தனை விமர்சனங்களும், வசவுகளும் வந்தாலும்,
நான் ஐ.டி-இல் சம்பாதித்து, தன்னை தேய்த்து என்னை வளர்த்த என் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த உலகில் என்ன வசதிகள் உள்ளதோ அத்தனையும் அனுபவிக்க செய்வேன், என்ன விலை என்றாலும் கொடுத்து.

நானோ அவர்களோ இறந்த பிறகு சொர்க்கத்தில் அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்று காண முடியாது. அதனால் இப்போ என் கண் முன்னே அத்தனையும் நடத்தி பார்ப்பேன்.

( இதன் பிறகும் ஐ.டி.யை பலவாறு தூற்றி அநேக பதிவுகள் வரும், வரட்டும்...
"வாழ்ந்தாலும் ஏசும்.. வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா...... "
என்ற பாடலை எப்போதும் என் மனத்தில் நிறுத்துகிறேன், அது போல் நீங்களும்....)

41 comments:

கோவி.கண்ணன் said...

என்ன ஆச்சு யார் மீது கோபம் ?

:)

Athisha said...

இதுக்கு பேருதான் நமக்கு நாமே திட்டமா?

Unknown said...

ஹா ஹா ஹா :)))))))
செம குத்து.....அது ஏன் ஐ.டி மக்களை கண்டால் அப்படி ஒரு வெறுப்புன்னு எனக்கும் தெரியல...ஒரு பதிவர் என்னடான்னா ஐ.டி ஆபீஸ்ல சிவப்பு சங்கத்த கொண்டு வந்தா எல்லாத்துக்கும் தீர்வுன்றாரு.... :))

நையாண்டி நைனா said...

/*கோவி.கண்ணன் said...
என்ன ஆச்சு யார் மீது கோபம் ?*/

அன்பு அண்ணா...
எனக்கு யார் மேலும் கோபம் இல்லை.
முதல் வருகைக்கு நன்றி......

நையாண்டி நைனா said...

/*அதிஷா said...
இதுக்கு பேருதான் நமக்கு நாமே திட்டமா?*/

பொறாமையின் உச்ச கட்டத்தில் பல பேரு இருக்கிறாங்க... அவர்களுக்கு அது புரிந்தால் நல்லது....

நையாண்டி நைனா said...

/*ஹா ஹா ஹா :)))))))
செம குத்து.....அது ஏன் ஐ.டி மக்களை கண்டால் அப்படி ஒரு வெறுப்புன்னு எனக்கும் தெரியல*/

அதான்... பதிவுலே.. சொல்லிட்டேனே... " பொறாமை.. மற்றும் இயலாமை "

Unknown said...

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி.


அடுத்து நெறைய கம்பனிகள் இந்தியாவிற்கும் சர்வீஸ் செய்கின்றன.

Vidhya Chandrasekaran said...

\\ Kamal said...
ஹா ஹா ஹா :)))))))
செம குத்து.....அது ஏன் ஐ.டி மக்களை கண்டால் அப்படி ஒரு வெறுப்புன்னு எனக்கும் தெரியல...\\

ரீப்பீட்டுக்கிறேன்:)

நையாண்டி நைனா said...

வருகை புரிந்த K.Ravishankar அவர்களுக்கும் மற்றும் Vidhya C அவர்களுக்கும் நன்றி...

DHANS said...

யாரோ பொறாமையின் உட்சத்தில் இருக்கின்றார் என்பதற்காக நீங்களும் அப்படியே இருக்க வேண்டுமா?

அய்யா தங்கள் துறை இப்போது உட்சத்தில் இருக்கின்றது அதனால் மற்றவர்கள் பேசியது பேசுவது பொறாமை என்று தோன்றுவது இயற்க்கை..

நீங்கள் படித்தீர்கள் நல்ல முறையில் வேலைகிடைத்து கிடைத்தது எந்த வேலையை இருந்தால் என்ன, நமது வீட்டை குடும்பத்தாரின் பொருளாதாரத்தி மீட்டெடுக்க இந்த வேலை உதவினால் மிக நன்று. அவ்வாறு கஷ்டத்தில் இருந்த வந்து குடும்பத்தை நல்ல நிலையில் கொண்டு சேர்க்கும் எந்த ஒரு ஐ டி மனிதனுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

எல்லோரும் நல்ல இருந்த சரிதான். பொறாமையில் சொல்கிறேன் என்று நினைத்தாலும் பரவாயில்லை..

நையாண்டி நைனா said...

/*யாரோ பொறாமையின் உட்சத்தில் இருக்கின்றார் என்பதற்காக நீங்களும் அப்படியே இருக்க வேண்டுமா? */

நான் ஒன்றும் பொறாமையில் இல்லை

/*அய்யா தங்கள் துறை இப்போது உட்சத்தில் இருக்கின்றது அதனால் மற்றவர்கள் பேசியது பேசுவது பொறாமை என்று தோன்றுவது இயற்க்கை..*/

எதற்குமே வாழ்க்கை சுழற்சி என்று உண்டு. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு துறை மேல் எழுந்து வரும், இறங்கி அல்லது அழிந்து போகும்.

/*நீங்கள் படித்தீர்கள் நல்ல முறையில் வேலைகிடைத்து கிடைத்தது எந்த வேலையை இருந்தால் என்ன, நமது வீட்டை குடும்பத்தாரின் பொருளாதாரத்தி மீட்டெடுக்க இந்த வேலை உதவினால் மிக நன்று. அவ்வாறு கஷ்டத்தில் இருந்த வந்து குடும்பத்தை நல்ல நிலையில் கொண்டு சேர்க்கும் எந்த ஒரு ஐ டி மனிதனுக்கும் நான் தலை வணங்குகிறேன்.*/

எண்ணற்ற ..பேர் இருக்கிறார்கள்.

எல்லோரும் நல்ல இருந்த சரிதான். பொறாமையில் சொல்கிறேன் என்று நினைத்தாலும் பரவாயில்லை.

பொறாமை இல்லா வாழ்த்துக்கு நன்றி, நன்றி, நன்றி.

DHANS said...

//நான் ஒன்றும் பொறாமையில் இல்லை//

மிக நல்லது :)

//எதற்குமே வாழ்க்கை சுழற்சி என்று உண்டு. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு துறை மேல் எழுந்து வரும், இறங்கி அல்லது அழிந்து போகும்//

அழிந்துலாம் போகதுங்க, இப்போது பொறியியல் துறைக்கு மவுசு எல்லோரும் படிக்கிறார்கள், கொஞ்ச காலத்தில் மருத்துவர்கள் பற்றாகுரைகரணமாக அவர்களுக்கு சம்பளம் ஏறும், பின்னர் அவர்களுக்கு மவுசு, இன்னும் பாத்து ஆண்டுகளில் விவசாயத்திற்கு வரும் மவுசை பாருங்கள் அப்போது இந்த துறையை கண்டு கொள்ள மாட்டார்கள்.

//எண்ணற்ற ..பேர் இருக்கிறார்கள்//

எண்ணற்ற பேர் இருகிறார்கள் ஒத்துக்கொள்கிறேன் அனாலும் அவ்வாறில்லாமல் குடித்து விட்டு வரும் பணத்தை வீணை செலவு செய்யும் பலரும் இருக்கிறார்கள்.(செலவு செய்வது அவர்கள் இஷ்டம். அனாலும் சிலர் தங்கள் தேவைக்காக தவறுகளை செய்கின்றனர், அதற்க்கு தைரியம் தாங்கள் வாங்கும் சம்பளம் என்றளவிற்கு இருப்பதால் மட்டுமே சொல்கிறேன்.

//பொறாமை இல்லா வாழ்த்துக்கு நன்றி, நன்றி, நன்றி.//

தங்களுக்கும் நன்றி :) நண்பரே. சரியான விவாதங்கள் இருவருக்குமே நிறைய கற்றுக்கொடுக்கும்.

நையாண்டி நைனா said...

/*அழிந்துலாம் போகதுங்க, இப்போது பொறியியல் துறைக்கு மவுசு எல்லோரும் படிக்கிறார்கள், கொஞ்ச காலத்தில் மருத்துவர்கள் பற்றாகுரைகரணமாக அவர்களுக்கு சம்பளம் ஏறும், பின்னர் அவர்களுக்கு மவுசு, இன்னும் பாத்து ஆண்டுகளில் விவசாயத்திற்கு வரும் மவுசை பாருங்கள் அப்போது இந்த துறையை கண்டு கொள்ள மாட்டார்கள்.*/

மிகச் சரியான வார்த்தைகள். அப்படி அவர்கள் சம்பாதிக்கும் போது, மற்றவர்கள் அல்லது நான் முடிந்தால் அவர்கள் துறைக்கு போக முற்படணும் அதை விடுத்து புலம்பித் திரிவது சரியாகுமோ?

/*....குடித்து விட்டு வரும் பணத்தை வீணை செலவு செய்யும் பலரும் இருக்கிறார்கள்.(செலவு செய்வது அவர்கள் இஷ்டம். அனாலும் சிலர் தங்கள் தேவைக்காக தவறுகளை செய்கின்றனர், அதற்க்கு தைரியம் தாங்கள் வாங்கும் சம்பளம் என்றளவிற்கு இருப்பதால் மட்டுமே சொல்கிறேன்.... */

குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதற்கு வருமானம் மட்டுமே ஒரே காரணம் அல்ல. நேற்றும் இன்றும் நாம் அநேகரை காண்கிறோம் அவர்கள் குடித்துவிட்டு செய்யும் ரகளைகளை, அவர்கள் யாரும் ஐ.டி இல் வாங்கி குவிக்கும் அன்பர்கள் அல்ல.... சாதாரண பக்கத்து வீட்டு அன்பர் தான், குடிக்க பணம் இல்லை என்றாலும் சட்டி, பொட்டியை விற்று, பொண்டாட்டி தாலியையும் அடக்கு வைத்து குடிக்கிறார்கள். அவர்களுக்கு ஒழுக்க மீறலை கற்று கொடுத்தது. ஐ.டி துறையோ?

குடிப்பவன் பிள்ளைக்கு வைத்திருக்கும் பாலையும் விற்று சாராயம் குடிப்பான்.
நல்லவன் ........ ( நீங்களே உங்களுக்கு தோன்றியதை போட்டு முடித்து கொள்ளவும் )


/*நண்பரே. சரியான விவாதங்கள் இருவருக்குமே நிறைய கற்றுக்கொடுக்கும்.*/

நன்றி... அன்பரே... வரவேற்கிறேன். காத்திருக்கிறேன்.

DHANS said...

மிகச் சரியான வார்த்தைகள். அப்படி அவர்கள் சம்பாதிக்கும் போது, மற்றவர்கள் அல்லது நான் முடிந்தால் அவர்கள் துறைக்கு போக முற்படணும் அதை விடுத்து புலம்பித் திரிவது சரியாகுமோ//

இது புலம்பல் என்று உங்களுக்கு தோன்றினாலும், அதுஉன்மையாகவே இருந்தாலும், அந்த துறையில் சில தவறுகள் நடப்பது எல்லோருக்கும் மிக விரைவில் தெரிந்து விடுகிறது . நன்றாக சம்பாதிக்க கூடிய துறையில் இப்படி சிலர் தவறான வலிக்கு போகிறார்களே என்ற வருத்தம் பின்னர் புலம்பலாக மாறிவிடுகிறது.

குடிகாரர்கள் என்று வரும்போது எல்லாம் சரிதான், எல்லோரும் குடுக்கிறார்கள், ஆனாலும் எனக்கு தோன்றும் எண்ணம் என்னவென்றால் உங்கள் துறையில் அதற்க்கு வைப்பு அதிகம், அடிக்கடி நடக்கும் பார்டிகள், அதில் குடிக்காதவனை அவர்கள் பார்க்கும் பார்வை பேசும் பேச்சு எல்லாம் அவனையும் மாற்றி விடுகிறது. உண்மை நிகழ்வுக உதாரணத்திற்கு பார்த்தால் சொல்கிறேன்.

தங்கள் துறையால் சில நன்மைகளும் உண்டு, எல்லோரும் ஐ டி துறைக்கு சென்று விட்டதால் சமீப காலமாக மாற்ற துறைக்கு ஆட்கள் கிடைக்காமல் அவர்களுக்கும் ஊதியம் சிறிது அதிகரித்து உள்ளது, சிவில் துறையில் நல்ல முன்னேற்றம் வந்துள்ளது காரணம் தங்கள் துறை வளர்ச்சியும் ஒன்று

நட்புடன் ஜமால் said...

same side goal

நையாண்டி நைனா said...

/*அதிரை ஜமால் said...
same side goal*/

It is not same side goal. People will make hue and cry due to jealous. we should not care about that. You know your duty, you just do it. Just neglect the unwanted "sounds" made by too intelligent people.

நையாண்டி நைனா said...

/*இது புலம்பல் என்று உங்களுக்கு தோன்றினாலும், அதுஉன்மையாகவே இருந்தாலும், அந்த துறையில் சில தவறுகள் நடப்பது எல்லோருக்கும் மிக விரைவில் தெரிந்து விடுகிறது.*/

இதற்கு பெயர் தகவல் தொழில்நுட்பபுரட்சி மற்றும் ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் வெளிச்சமிடும் தன்மை.
ஊடகங்கள் அநேக நல்ல செய்திகளை மிக விரிவாக வழங்குவதில்லை. ஆனால் அதற்கு நேர் மாறாக மற்ற செய்திகளை பாரா பாராவாக தலைப்பிட்டு விளக்குவார்கள்.

/* நன்றாக சம்பாதிக்க கூடிய துறையில் இப்படி சிலர் தவறான வலிக்கு போகிறார்களே என்ற வருத்தம் பின்னர் புலம்பலாக மாறிவிடுகிறது. */

இது நம்மால் அப்படி இருக்க முடியவில்லை, "ச்..சீ.. இந்த பழம் புளிக்கும்... " என்ற எண்ணம் தானே....

/*குடிகாரர்கள் என்று வரும்போது எல்லாம் சரிதான், எல்லோரும் குடுக்கிறார்கள், ஆனாலும் எனக்கு தோன்றும் எண்ணம் என்னவென்றால் உங்கள் துறையில் அதற்க்கு வைப்பு அதிகம், அடிக்கடி நடக்கும் பார்டிகள், அதில் குடிக்காதவனை அவர்கள் பார்க்கும் பார்வை பேசும் பேச்சு எல்லாம் அவனையும் மாற்றி விடுகிறது. உண்மை நிகழ்வுக உதாரணத்திற்கு பார்த்தால் சொல்கிறேன்.*/

இது பல இடங்களில் நடக்கிறது.
கல்லூரியிலே கூட நடக்கிறது. மிக நன்றாக படிக்கும் மாணவனை "சொம்பு", "பழம்" , மற்றும் இன்ன பிற சொற்கள் கொண்டு அழைப்பார்கள். "அரியர் இல்லா மனிதன், அரை மனிதன்" "டேய் ... என்ன படிச்சு என்ன சாதிக்க போறெ...?" என்பார்கள். இறுதியில் நல்லா படிக்கிறவன் கெட்டு போவான். உசுப் பேத்தி விட்டவன் காசை கொடுத்து பாசாவான் அப்புறம் காசை கொடுத்து ஒரு நல்ல வேலையும் வாங்குவான். அதற்கு தான் ஒண்ணு சொல்வாங்க, சொல்லுறவன் சொன்னாம்னா... கேகுறவனுக்கு புத்தி வேணாமா? என்று.

/*தங்கள் துறையால் சில நன்மைகளும் உண்டு, எல்லோரும் ஐ டி துறைக்கு சென்று விட்டதால் சமீப காலமாக மாற்ற துறைக்கு ஆட்கள் கிடைக்காமல் அவர்களுக்கும் ஊதியம் சிறிது அதிகரித்து உள்ளது, சிவில் துறையில் நல்ல முன்னேற்றம் வந்துள்ளது காரணம் தங்கள் துறை வளர்ச்சியும் ஒன்று*/

இது எதிர் மறையாக நடந்திருக்க கூடிய வாய்ப்பும் உண்டல்லவா? அதாவது மற்ற துறையில் சம்பளம் குறைவாக கிடைப்பதனால் இதற்கு வந்திருக்கலாம் அல்லவா.
எடுத்து கட்டாக ஒன்று:
இன்று தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி உள்ளது. இதில் எத்தனை கல்லூரியில் A.I.C.T.E பரிந்துரையின்படி ஊதியம் வழங்குகிறார்கள்..

Joe said...

ROFL!

Nice post!

அமர பாரதி said...

சபாஷ் நைனா. நச்னு சொல்லியிருக்கீங்க. எந்த வித படிப்பும் இல்லாமல், மூளையும் இல்லாமல், அதிக பட்ச அகங்காரம் கொண்ட திரைப்பட கூத்தாடிகள் சம்பாதிக்கும் போது இவர்களுக்கு இவ்வளவு புகை வரவில்லை. ஆனால் அனைத்து மத்திய தர மக்களுக்கும் வேலை வாய்ப்பும் (வேலை வாய்ப்பு என்றால் 2500 ரூபாய்க்கு ஊற்றிக்கொடுக்கும் வேலை வாய்ப்பு அல்ல) நல்ல சம்பளமும் தந்த ஐ.டி. துறை பழிப்பது அற்பர்களின் வேலை.

ஐ.டி. துறையில் வேலை பார்ப்பதற்கு எந்த படிப்பு படித்திருந்தாலும் பரவாயில்லை, சோம்பேறித்தனம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் போதும். அதே போல ஐ.டி. படிப்பு படித்திருந்தாலும் ஒழுங்காக வேலை செய்யவில்லையென்றால் தூக்கியெறியப்படுவார்கள். உழைப்பாளி எந்த துறையிலும் முன்னேறுவான். அது இவர்களுக்கு புரிவதில்லை.

கலாச்சாரக் கூமுட்டையான்டிகள் யார் என்ன செய்தாலும் தவறாகவே பேசுவார்கள்.

நையாண்டி நைனா said...

வருகை தந்த... திரு. அமரபாரதி மற்றும் ஜோ அவர்களுக்கும் நன்றி....

குடுகுடுப்பை said...

சபாஷ் நையாண்டியார்.

நாந்தான் குடுகுடுப்பை மெக்கானிகல் எஞ்சினியர் படிச்சு ஐடில வேல பாக்கிற மகாபாவி.கலாச்சாரத்தை கெடுத்தவன் சமூக அக்கறை இல்லாம டவுசரெல்லாம் போட்டுக்கினு ஆபிஸ் போறேன். நான் டவுசர் இல்லண்ண இவன் அம்மணமா விட்ட அரசே சொல்லியே எட்டு பேரு கச்சி ஆரம்பிச்சு கும்மிருப்பாங்க

பழமைபேசி said...

//"வாழ்ந்தாலும் ஏசும்.. வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா...... "
என்ற பாடலை எப்போதும் என் மனத்தில் நிறுத்துகிறேன், அது போல் நீங்களும்...//

சரியாச் சொன்னீங்க....

Anonymous said...

தத்தி தத்தி பி.எஸ்ஸி கம்பியூட்டர் சயின்ஸ் படிச்சு.... தாவி தாவி அட்வான்ஸ் கோர்ஸ் படிச்சு....நாயா அலைஞ்சு start up company-la வேலை வாங்கி.... ராப்பகலா பேய் மாதிரி coding எழுதி....5,6 வருஷம் experience gain பண்ணி....நம்ம கஜாவோட கள்ளதோனில அமெரிக்கா வந்து....சோறு கொழம்புக்கு வழி இல்லாம, விக்க விக்க வெஜ்ஜி பிஸா வெஜ்ஜி பர்கர் சாப்பிட்டு...பார்த்து பார்த்து காசு சேர்த்து, அப்பவோட சேமிப்புல கொஞ்சம் சேத்து போட்டு கல்யாணம் ஆகாத தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி, ஆப்பரேஷனுக்கு காத்து இருந்த அம்மாவுக்கு ஆப்பரேஷன் பண்ணி, சைக்கிள் மிதிச்சு வேலைக்குபோற அப்பாவ வீட்ல ரெஸ்ட் எடுக்கச்சொல்லி, நல்ல நாளெல்லாம் வெறும் போன்ல கொண்டாடி...
யப்பா மூச்சு வாங்குது, இனி அவங்க அவங்க விறுப்பு வெறுப்புக்கு ஏத்தாப்ல மேட்டர சேத்துகோங்க..........

Tech Shankar said...

25 ஆம் பின்னூட்டம் அடியேனுடையது.

சரி எல்லாத்தையும் விட்டுடலாம்.

ஐடி துறையில் இருப்பவர்களை ஏதோ வேற்று கிரகத்தில் இருந்துவந்தவர்களைப் போலப் பார்க்கிறார்களே ஏன்?

அறை எண் 305ல் கடவுள் - இதில் ஜாவா பொறியாளர்களை முடமாக்கினார்கள்.

என்ன கொடுமை சார் இது?

நையாண்டி நைனா said...

/*சபாஷ் நையாண்டியார்.... */

நன்றி வருங்கால முதல்வரே....

/*நாந்தான் குடுகுடுப்பை மெக்கானிகல் எஞ்சினியர் படிச்சு ஐடில வேல பாக்கிற மகாபாவி.கலாச்சாரத்தை கெடுத்தவன் சமூக அக்கறை இல்லாம டவுசரெல்லாம் போட்டுக்கினு ஆபிஸ் போறேன். .....*/

நானும் இதே இனம் தான்.....

நையாண்டி நைனா said...

/*பழமைபேசி said...
சரியாச் சொன்னீங்க....*/

நன்றி அண்ணா...

நையாண்டி நைனா said...

/*தத்தி தத்தி பி.எஸ்ஸி கம்பியூட்டர் சயின்ஸ் படிச்சு............., இனி அவங்க அவங்க விறுப்பு வெறுப்புக்கு ஏத்தாப்ல மேட்டர சேத்துகோங்க..........*/

பெயரில்லா அநானீ அவர்களே...
தாங்கள் எந்த நோக்கில் சொல்லி இருந்தாலும், இது பல பேர் வாழ்க்கையின் உண்மை....

நையாண்டி நைனா said...

/*Sharepoint the Great said...
25 ஆம் பின்னூட்டம் அடியேனுடையது.....*/

Thank you very much sir.

Sanjai Gandhi said...

//நானோ அவர்களோ இறந்த பிறகு சொர்க்கத்தில் அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்று காண முடியாது. அதனால் இப்போ என் கண் முன்னே அத்தனையும் நடத்தி பார்ப்பேன்.//

நியாயமாத் தானே இருக்கு..

..ஆனா இது மாதிரி நல்ல நோக்கங்கள் மட்டுமே இருந்தா யாரும் திட்ட மாட்டாங்க.. அதைத் தாண்டி அவர்களால் சாமான்ய மக்களுக்கு எவ்ளோ பிரச்சனைகள்னு யோசிச்சி பாருங்க.. அதுக்கு தான் திட்டு.. :)

ஆனா.. உங்க ஆசை ரொம்ப நியாயமானது.. பாராட்டுக்கள். :)

நையாண்டி நைனா said...

/*..ஆனா இது மாதிரி நல்ல நோக்கங்கள் மட்டுமே இருந்தா யாரும் திட்ட மாட்டாங்க.. அதைத் தாண்டி அவர்களால் சாமான்ய மக்களுக்கு எவ்ளோ பிரச்சனைகள்னு யோசிச்சி பாருங்க.. அதுக்கு தான் திட்டு.. :) */

பிரச்சனைகளை ஐ.டி. மக்கள் உருவாக்க வில்லை. அது இந்த சமுதாயமே உருவாக்கி கொண்டது.
எடுத்துக் காட்டாக:
சென்னையின் மூவுருளி கட்டணங்களும் மற்றும் கட்டண கொள்ளைகளும் தாங்கள் அறிந்ததே. அது இன்று நேற்றா அப்படி இருக்கிறது? அவர்களின் குத்து மதிப்பான கட்டணங்களும், சூடு மீட்டர்களும் ஐ.டி துறையினர் வழங்கிய கண்டு பிடிப்புகளோ?
இத்தனை தூரத்திற்கு இத்தனை தான் கட்டணம் என்று முறைபடுத்துவது யார்? அப்படி மீட்டர் காட்டும் கட்டணத்தை விட அதிகமாக வேண்டும் என்றே கொடுக்கும் ஐ.டி துறையினர் யார்?


/*ஆனா.. உங்க ஆசை ரொம்ப நியாயமானது.. பாராட்டுக்கள். :)*/
என்னுடையது மட்டும் அல்ல.... பல பேரின் கனவுகளும் அதுவே... நன்றி...

Sanjai Gandhi said...

நைநை.. ஆட்டோ மேட்டருக்கே வரேன்..

ஒரு குறிபிட்ட இடத்துக்கு போக 50 ரூபாய் ஆகும். ஆனால் ஆட்டோக்கார 200 ரூபாய் கேட்பார். எல்லோருக்குமே தெரியும் சில வினாடிகள் பேரம் பேசிய பின் 50 ரூபாய்க்கு பயணம் செய்ய முடியும் என்று..

ஆனால் இன்றி நிலை என்ன? ஆட்டோக்காரர் 200 ரூபாய் கேட்டதும் எந்த பேரமும் இன்றி ஐடி பையன் குடுத்து விடுகிறான். இப்போது பேரத்திற்கே வழி இல்லை.. 50 ரூபாய்க்கு 200 ரூபாய் கொடுத்தே ஆக வேண்டி இருக்கு. மனசாட்சியுடன் சொல்லுங்க.. இன்று எத்தனை ஐடி பையன் பணத்திற்கு சரியான மதிப்பளிக்கிறான்.?

ஐடி பசங்களின் வருமானத்தை பார்த்தி தனிப்பட்ட அளவில் எனக்கு எந்த வயித்தெரிச்சலும் இல்லை.. அவனால் முடிகிறது.. சம்பாதிக்கிறான்.. எங்கும் திருடவில்லை.. அவனை வைத்து கோடிகளை சம்பாதிப்பவர்கள் அவனுக்கு லட்சங்களை தருகிறார்கள். அதெல்லாம் எந்த தவறும் இல்லை.

ஆனால் காசு இருக்கிறது என்பதற்காக சாமான்ய மக்களின் வாழ்க்கையை பாதிக்க செய்கிறார்களா இல்லையா?

ஐடி துறையின் வளர்ச்சிக்கு பிறகு வீட்டு வடகையும் அதற்கு முன்னும் எவ்வளாவு இருந்தது என்பதை யோசியுங்கள். இதற்கு யார்க் காரணம்.? 2000 ரூபாய் வாடகைக்கு 10000 ரூபாய் கேட்டதும் யோசிக்காமல் கொடுத்தது யார்? ஏன் 2000 மட்டும் தான் தருவேன் என்று சொல்லவில்லை? அதனால் இன்று எவ்வளவு பாதிப்பு?

காசு இருக்கிறது என்பதால் பொட்டல்காடுகளில் கூட அநியாய விலை கொடுத்து முதலீடு செய்து சாமான்யனின் சொந்த வீட்டுக் கனவை சிதைத்தது யார்?

உங்கள் சம்பாத்தியத்தை யாருமே குறை சொல்லமுடியாது. ஆனால் செலவளிக்கும் விதம் தான் மற்றவர்களை பாதிக்க செய்கிறது.

நையாண்டி நைனா said...

/*நைநை.. ஆட்டோ மேட்டருக்கே வரேன்..

ஒரு குறிபிட்ட இடத்துக்கு போக 50 ரூபாய் ஆகும். ஆனால் ஆட்டோக்கார 200 ரூபாய் கேட்பார். எல்லோருக்குமே தெரியும் சில வினாடிகள் பேரம் பேசிய பின் 50 ரூபாய்க்கு பயணம் செய்ய முடியும் என்று..

ஆனால் இன்றி நிலை என்ன? ஆட்டோக்காரர் 200 ரூபாய் கேட்டதும் எந்த பேரமும் இன்றி ஐடி பையன் குடுத்து விடுகிறான். இப்போது பேரத்திற்கே வழி இல்லை.. 50 ரூபாய்க்கு 200 ரூபாய் கொடுத்தே ஆக வேண்டி இருக்கு. மனசாட்சியுடன் சொல்லுங்க.. இன்று எத்தனை ஐடி பையன் பணத்திற்கு சரியான மதிப்பளிக்கிறான்.?*/

யாருக்கு தெரியும்? சென்னையிலே பிறந்து, சென்னையிலே வளர்ந்த மக்களுக்கு மட்டுமே அது தெரியும்.

சென்னையை தவிர பிற ஊர்களில் இருந்து வரும் பிரயாணிகள் அவர்கள் கேட்ட கட்டணத்தை கொடுப்பதே இல்லையோ? அப்படியானால் சென்னைக்கு வரும் பிற ஊர் மக்களால், கட்டணம் உயர்ந்து விட்டது என்று சொல்வீர்களோ?

சென்னையிலே உள்ளவரை கூட "அந்த ரோட்டை ப்ளாக் பண்ணி இருக்காங்க, அந்த ரோட்டை தோண்டி போட்டிருக்காங்க, இந்த ரோடு ஒரு வழிப்பாதை, அதனாலே அப்படி போகணும், இப்படி போகணும் என்று ஏகப்பட்ட கதைகள் வேறு". அப்படியே மீட்டர் கட்டணம் மட்டுமே கொடுப்பேன் என்று வாதாடி, போராடி ஏறினால் அவர் மேற்கூறிய அதே கதைகளை கூறி ஊரெல்லாம் சுற்றி கூட்டி செல்வார், காணாததிற்கு சூடு வச்ச மீட்டர்... எவ்ளோ கட்ட வேண்டி வரும்? இது காணாதது என்று அவர் பேசும் "செம்மொழியை" வேற கேக்க வேண்டும்...
இது உண்மை தானே...

நீங்களும் கொஞ்சம் உங்க மனசாட்சியை கேட்டு சொல்லுங்க.

நையாண்டி நைனா said...

/*ஐடி பசங்களின் வருமானத்தை பார்த்தி தனிப்பட்ட அளவில் எனக்கு எந்த வயித்தெரிச்சலும் இல்லை.. அவனால் முடிகிறது.. சம்பாதிக்கிறான்.. எங்கும் திருடவில்லை.. அவனை வைத்து கோடிகளை சம்பாதிப்பவர்கள் அவனுக்கு லட்சங்களை தருகிறார்கள். அதெல்லாம் எந்த தவறும் இல்லை.*/

ரொம்ப...ரொம்ப..ரொம்ப.... நன்றி...

நையாண்டி நைனா said...

அவ்ளோ சம்பளத்தையும் வாங்கி கொண்டு, ஒரு அவசர வேலையாக கம்பணிக்கு அழைக்கும் போது உடனடியாக போவது தானே முறை.... அப்போ உக்காந்து ஒரு ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்க்கும் சண்டை போடுவதா கடமையாக இருக்கும்?

நையாண்டி நைனா said...

நான் மேற்கூறிய கருத்துக்கள் வீடு மற்றும் அதை சார்ந்த பொருள்களுக்கும் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

யோசிப்பவர் said...

//அவ்ளோ சம்பளத்தையும் வாங்கி கொண்டு, ஒரு அவசர வேலையாக கம்பணிக்கு அழைக்கும் போது உடனடியாக போவது தானே முறை.... அப்போ உக்காந்து ஒரு ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்க்கும் சண்டை போடுவதா கடமையாக இருக்கும்?
//
If your company needs you in that much urgent, they have to send their own vehicle to pick you up. Or atleast pay the conveyance. Why you have to pay more for you company's urgency?

Note : I'm also a IT guy.;-)
We have rights to establish that our earnings are worthy. But at the same time, we have the responsibilty to spend it in right way!

நையாண்டி நைனா said...

/*If your company needs you in that much urgent, they have to send their own vehicle to pick you up. Or atleast pay the conveyance. Why you have to pay more for you company's urgency?

Note : I'm also a IT guy.;-)
We have rights to establish that our earnings are worthy. But at the same time, we have the responsibilty to spend it in right way!*/

ஐயா... சாமி...
இப்ப பிரச்சிணையே... கம்பனி காரிலே போறதா.. இல்லை நானே போறதா அப்படிங்குறது இல்லை....

Please Read completely.

யோசிப்பவர் said...

//Please Read completely//
I've read completely Naina!!;-))

What I'm supposed to say is that, Bargaining for right amount and denying the over amount on our spending is also our duty(/responsibilty)

As most of IT guys(not all) neglecting this duty, affects the community also.

நையாண்டி நைனா said...

/*I've read completely Naina!!;-))*/

Thank you very much dear friend.

/*What I'm supposed to say is that, Bargaining for right amount and denying the over amount on our spending is also our duty(/responsibilty)*/


Who knows the exact fare? யாருக்கு தெரியும்? சென்னையிலே பிறந்து, சென்னையிலே வளர்ந்த மக்களுக்கு மட்டுமே அது தெரியும்.

சென்னையை தவிர பிற ஊர்களில் இருந்து வரும் பிரயாணிகள் அவர்கள் கேட்ட கட்டணத்தை கொடுப்பதே இல்லையோ? அப்படியானால் சென்னைக்கு வரும் பிற ஊர் மக்களால், கட்டணம் உயர்ந்து விட்டது என்று சொல்வீர்களோ?

சென்னையிலே உள்ளவரை கூட "அந்த ரோட்டை ப்ளாக் பண்ணி இருக்காங்க, அந்த ரோட்டை தோண்டி போட்டிருக்காங்க, இந்த ரோடு ஒரு வழிப்பாதை, அதனாலே அப்படி போகணும், இப்படி போகணும் என்று ஏகப்பட்ட கதைகள் வேறு". அப்படியே மீட்டர் கட்டணம் மட்டுமே கொடுப்பேன் என்று வாதாடி, போராடி ஏறினால் அவர் மேற்கூறிய அதே கதைகளை கூறி ஊரெல்லாம் சுற்றி கூட்டி செல்வார், காணாததிற்கு சூடு வச்ச மீட்டர்... எவ்ளோ கட்ட வேண்டி வரும்? இது காணாதது என்று அவர் பேசும் "செம்மொழியை" வேற கேக்க வேண்டும்...
இது உண்மை தானே...


/*As most of IT guys(not all) neglecting this duty, affects the community also.*/

They are not ready to give just like that. Instead of involving in indecent quarrels, they are doing. That too, people from other cities and states may do. but those who are in chennai won't do this. Sometimes people from chennai also may give, but in lesser numbers that also to avoid unwanted quarrels.

Anonymous said...

Hi,

What happened?

:-)
Insurance Agent

ஷாஜி said...

/பொறாமையின் உச்ச கட்டத்தில் பல பேரு இருக்கிறாங்க... அவர்களுக்கு அது புரிந்தால் நல்லது....//

--ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்