Thursday 20 November 2008

பெருந்தொகை... ரம்மு.... ஆம் அந்த ஃபேமஸ் பார் தான்....

"அண்ணே..."
"ஹ்ம் என்ன?"
"அண்ணே.. இங்கே உக்காந்துக்கலாமா அண்ணே"
"ஹ்ம்.."
"என்னன்னே.. தனியா உக்காந்து.... சரக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்க..."
"ஹான்..... யாரை நம்பி நான் பொறந்தேன்??? தம்பி... பொம்பளைங்களே நம்பவே கூடாது.. நம்பினே நடு ரோடு தான்.."
"ஆமாண்னே...."

இப்படி தொடங்கும் டாஸ்மாக் உரையாடல் பெரும்பாலும் பேச்சில் தொடங்கி நட்பில் முடிகிறது என்பது வரலாறு.

நண்பனின் வீட்டு திருமணத்தில், உற்சாக பாண விருந்தில், ஏமாற்றிய பெண்ணை நினைத்து (பூ மாதிரி பொண்ணு???)... நினைத்து... நினைத்து.. பார்த்துக் கொண்டே.. சரக்கை போட்டுக்கொண்டு சிகரட்டை... ஊதுவதில்... தொடங்கி

பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, பின் எந்த கல்யாணம் வந்தாலும், முடிந்த வரை சரக்கை போட்டுக் கொண்டு இருந்து, எப்படா இன்னொருவனுக்கு கல்யாணம் வரும் என்றும் காத்திருந்து, அந்த வீட்டு திருமண, உற்சாக பாண விருந்திற்கு எதேச்சையாக செல்வது போல் திட்டமிட்டு(திட்டமிட்டா அப்புறம் என்ன எதேச்சை?) செல்வது.... பின்னர் டேமேஜரிடம் திட்டு வாங்கின, பதவி உயர்வு வாங்கின என்று சகல நிகழ்வுகளுக்கும் சென்று தண்ணி அடித்து..நட்பை தொடர்வது

நார்மலாக கல்பா... இழுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும் பிறர் முன் சிப், சிப்பாக சிப்பி.. முன் உதட்டாலேயே முகர்ந்து கொண்டிருந்து விட்டு, அவர்கள் கை கழுவவோ அல்ல வேறு ஏதேனும் இயற்கை செயலுக்காகவோ எழுந்ததும் இயல்பாய் குடிப்பது போல் பாவனை காட்டி ஒரு கல்பில் இழுத்து விட்டு அடுத்த ரவுண்டை தொடர்வது...

பின்னர் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பொதுநண்பர் மூலம் அறிமுகமாகி, ஒரு சினேகப் புன்னகையில் மெயில் அட்ரஸ் வாங்கி, போன் நம்பர் வாங்கி, ஈ என்று இளித்துக்கொண்டே நீங்க என்ன அடிப்பீங்க? என்று கேட்டு அதை பெற்றும் கொடுத்து, யார் எவர் என்பதை முழுமையாக தெரியாமல் குத்து மதிப்பாக தகவல்களை பரிமாறி..பின் சிகரட் , சைய்டு-டிஸ் பரிமாறிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கிறது..

இப்படி எத்தனையோ சந்தர்ப்பத்தில் யார் எவர் என்றே தெரியாமல் கிலாசோடு கிலாசு உரசி.. சகலமும் பகிர்ந்த... நட்பு... திருமணம் முடிந்தாலும் முற்று பெறாமல் இறுதி வரை செல்வதை பார்த்தோ, அனுபவித்தோ, அனுப‌வத்தை கேட்டோ இருக்கிறோம்...

இந்த மேட்டரை எந்த பிரபலமான பாடலும் விளக்க வில்லை என்றே தெரிகிறது..
அதனால் நானே ஒரு சிறந்த குறுந்தொகை பாடலை உல்டா செய்து விட்டேன்..

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க...
மற்றவர்கள் குடித்து விட்டு ஸ்ட்டெடியா நிக்க...


பாடல்..

நீயும் நானும் யார் ஆகியரோ
பியரும் பிராந்தியும் எம்முறை கேளிர்
யானும் நீயும் வேறு வழி வந்தும்
ரம் மிடை கலந்த கோக் போல
குடியரிடை நெஞ்சம் தாம் கலந்தனவே



ஒரு குடிமகன், இன்னொரு குடிமகனிடம் கூறும் குடிப்பாடல்..
ரம்மி ஆடினார் ரம்மி என்ற புலவர்..(ரம் அடித்துவிட்டு ரம்மி ஆடுபவராக இருக்கும், அதனால் வந்த பெயராக இருக்கும்..)

இது இந்த பதிவின் எதிர் பதிவு அல்ல, அதனை ஒட்டி வந்தது......

12 comments:

narsim said...

மிக ரசித்தேன்.. வால் பையனின் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் இங்கேயும் பொருந்தும்..

செம்புல பெயல் ஆ.. சொம்புல "ரம்"புலம் ஆ..

கலக்கல் பதிவு நைனா.. அதான் பதிவுல உங்க பேரோட முதல் பாதி இருக்கே!!

நையாண்டி நைனா said...

மிக்க நன்றி நர்சிம் அவர்களே.....

கபீஷ் said...

ரொம்ப நல்லாருக்கு நை.நை!
சொந்த நொந்த அனுபவமா?

கபீஷ் said...

ரொம்ப நல்லாருக்கு நை.நை!
சொந்த நொந்த அனுபவமா?

கபீஷ் said...

//தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க...//

மன்னிச்சுட்டேன். போதுமா?

நையாண்டி நைனா said...

/*ரொம்ப நல்லாருக்கு நை.நை!
சொந்த நொந்த அனுபவமா?*/

ஷ்ஸ்.... ரகசியம்... வெளியே சொல்லாதீங்க....

குடுகுடுப்பை said...

ரொம்ப ஸ்டெடியா அடிச்சு ஆடறீங்க..

Mahesh said...

இத்தப் படிச்சுட்டு நர்சிம் வுழுந்து வுழுந்து சிரிச்சிருப்பாரு :))))

நையாண்டி நைனா said...

/*குடுகுடுப்பை said...
ரொம்ப ஸ்டெடியா அடிச்சு ஆடறீங்க..*/

வருகை மற்றும் பாராட்டிற்கு நன்றி

நையாண்டி நைனா said...

/*Mahesh said...
இத்தப் படிச்சுட்டு நர்சிம் வுழுந்து வுழுந்து சிரிச்சிருப்பாரு :))))*/

எல்லாரும் சந்தோசமா இருக்கணும். இது தானே நம்ம எல்லாரோட எண்ணமும்....
நன்றி

கோவி.கண்ணன் said...

கடையில் இருக்கும் குறு(ம்பு)ந்தொகை சூப்பர் !

கல்யாண வீடுகளில் பேச்சிலர் பார்டிகல் எப்போதும் அமர்களமாகவே நடக்கும், என்ன ஒண்ணு தண்ணியடிச்சவனெல்லாம் மதிய சாப்பாட்டுக்குதான் ஆஜராவனுங்க.

நையாண்டி நைனா said...

/*கடையில் இருக்கும் குறு(ம்பு)ந்தொகை சூப்பர் !*/

வருகை மற்றும் பாராட்டிற்கு மிக்க நன்றி அண்ணா....