Thursday 13 November 2008

பொறுப்பை மறந்தது காவல்துறை மட்டுமா????

நேற்று சட்ட கல்லூரியில், மன்னிக்க சென்னை, அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் ( என்ன சரிதானா ? )நடந்த வன்முறை சம்பவம் கண்டனத்திற்கு உரியதே, இதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை.

இதனை நான் மாணவர்களின் மோதலாக கருதவில்லை. மோதல் நடந்த இடம் கல்லூரியாக போய் விட்டதே என்றே வருந்துகிறேன். வேறு எங்காவது இந்த மோதல் நடந்திருந்தால் நாம் என்ன? நினைத்திருப்போம். இரண்டு மாணவ குழுவுக்கு இடையே நடந்த மோதல் என்றா???

இதனை ஒட்டி நம் பதிவர்கள் அனைவரும் தங்கள் கருத்தை வைதாயிற்று, வைத்தாயிற்று. இதில் பலரும் தங்கள் வாதத்தை வைக்கும் போது காவல் துறையையும் தங்கள் வார்த்தை குண்டுகளால் தைக்க தவற வில்லை. அவர்களின் சமூக அக்கறை பெருமிதம் கொள்ள வைக்கிறது. வாழ்க பொது ஜனம்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் அனைவரின் வேண்டுகோளும்/குற்றச்சாட்டும் அந்த காவலர்கள் நம்ம செல்லுலாய்டு நாயகர்கள் போல் பாய்ந்து பிடித்து நிறுத்த வேண்டுமாம். முடியுமா அது? காவலர்கள் வேலையும் சில சட்ட திட்டத்திற்கு அடங்கியே தான் இருக்கும், இருக்கிறது. ( உடனே, அவர்கள் எல்லா விடயத்திலும் சட்ட திட்டத்திற்கு அடங்கியா செய்கிறார்கள் என்று புலி பாய்ச்சல் பாய வேண்டாம், அநேக விடயங்களில் இல்லை என்றே எனக்கும் தெரியும்).

ஒரு கல்லூரியில் சென்று சும்மா ஒரு சில மாணவர்களை கைத்து செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் நீங்களும், மற்ற ஊடாக புலிகளும் விட்டு விடுவீர்களா? "காவல்துறையின் அராஜாகம். காவல்துறையின் ஆணவ போக்கு. காவல் துறையின் திமிர், காவல் துறையின் ... அது.... காவல் துறையின் ..இது..." என்று போட்டு நுங்கு எடுக்க மாட்டீங்க????

மாணவர்களே என்ன சொல்வார்கள்? இன்னைக்கு நாங்க அடிசிப்போம், நாளைக்கு நாங்க ஒண்ணா சேர்ந்ததுப்போம். இடையிலே நீ என்ன? அப்படி என்று தானே கேப்பார்கள். அதே போல் கல்லூரியின் உள்ளே ஹாக்கி மட்டை வைத்திருந்தார்கள், கிரிக்கட் மட்டை வைத்திருந்தார்கள் என்று சொல்லி கைது செய்ய முடியுமா? பின்னே கல்லூரியில் இதெல்லாம் இல்லாமெ வேற என்ன இருக்கும்?

சும்மா கத்தியை வைத்திருப்பதற்கெல்லாம் கைது செய்யிய முடியாது? என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியே கைது செய்யலாம் என்றாலும் அது ஏதும் அறியாத அப்பாவி வேண்டும் என்றால் கைது செய்யலாம். ஆனால் அவர்கள் அப்படியா? அவர்கள் சட்டத்தை அறிந்தததை விட சட்டத்தின் ஓட்டைகளையே அறிந்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? சரி அப்படியே ஒரு காவல்காரார் பாய்ந்து போகிறார் என்று வையுங்கள்; அவர் என்ன ஆயுதம்? யுக்தி கொண்டு அவனை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சுட்டு விடலாமா? தடி கொண்டு தாக்கி விடலாமா? இல்லை நம்ம கைய்ப்புள்ள மாதிரி வேண்டாம் அழுதிருவேன் என்று மிரட்டல்(?) விடலாமா?

சரி அப்படியே ஒருவர் பாய்ந்து ஏதாவது ஆகி விட்டால், அந்த காவலரின் நிலை என்ன? அந்த காவலரின் குடும்பத்தின் நிலை என்ன? இதை கேட்டால் உடனே நீங்கள் அது அவர்களின் கடமை என்று சொல்வீர்கள். அப்படி சொல்லும் நாம் நம் கடமையை சரி வர செய்திருக்கிறோமா? செய்கிறோமா? செய்வோமா? நாம் நம்முடைய குற்றத்திற்கு, இயலாமைக்கு பிறரையே குற்றம் சாட்டி பழகி விட்டவர்கள். அதனாலேயே இப்படியும் சொல்லி கொண்டிருக்கிறோம்.

சட்டம் என்ன சொல்கிறது? இன்னது செய்தால் நாம் இன்ன தண்டனைக்கு, இன்ன நிலமைக்கு ஆளாவோம் என்று அறியாதவர் செய்தால் அவர்களுக்கு தண்டனை இல்லை என்று சொல்கிறது. (சரிதானே... தவறா இருந்தால், பிழை பொறுத்து அருள்க. அதாவது தான் செய்வத்தின் விளைவு அறியாத குழந்தைகளையும், மன நலம் பாதித்தவரையும் சட்டம் தண்டிக்காது என்று சொல்ல வந்தது...) ஆனால் இவர்கள் அப்படி அல்ல. பொறுத்திருந்து பார்ப்போம் சட்டம் என்ன செய்கிறது என்று?

அந்த இடத்தில், உங்கள் தகப்பனாரோ, மகனோ காவல் பணியில் இருந்திருந்தால் நீங்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் எதிர் பார்த்திருப்பீர்கள்???? ( தயவு செய்து மன சாட்சியுடன் சொல்லவும்.......)

நாம் ரோட்டில் விபத்து இன்றி வாகனம் ஒட்ட " உங்கள் குடும்பம் உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறது" என்று எழுதி வைத்திருக்கிறாரே காவலர், அந்த அறிவிப்பு அவருக்கும் தானே?

19 comments:

குடுகுடுப்பை said...

சமுதாயம்,சாதிவெறி வேற என்னத்த சொல்ல

நையாண்டி நைனா said...

வருங்கால முதல்வரின் வருகை மற்றும் பின்னூட்டதிற்கு நன்றி, நன்றி....

Unknown said...

அந்த காட்சியை பார்ததும் என் தந்தை கொதித்தை கண் எதுரே பார்தேன்... அவரும் ஒரு துனை கண்காணிபாளர்... PCR act இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் என்பது அவர் கருத்து...

நையாண்டி நைனா said...

அன்பின் ராகுல்...
நன்றி...
யாருமே கொதித்து எழுவார்கள். ஆனால் அனைவரின் கோபமும் காவல்துறை பக்கமே இருக்கும்... காவலரும் மனிதர் தானே, என்று யாரும் எண்ணுவதில்லை....

பழமைபேசி said...

இந்த நேரத்துல நான் மூணாம் வகுப்பு படிக்கும் போது, பார்த்த விசயங்கள் நினைவுக்கு வருது. அந்த சிவப்பு கரு நீல தொப்பியக் கண்டு பாம்பைக் கண்டு படை நடுஙுகுதோ இல்லையோ, ஊர் நடுங்கும். காரணம், ஒரு விதமான பயம் அவிங்க மனசாட்சியப் பாத்து. நாம தப்பு செஞ்சி இருப்பமோ? அப்பிடி இருக்குற பட்சத்துல, ஊர் நம்ம பாத்து என்ன சொல்லும் இவர் வந்து பிடிச்சாக்க? இப்பிடியெல்லாம்.....

இப்ப? ஒரு மரியாதை இருக்கா?? ஒன்னா??? காரணம் நாமதேன்.... இதுல ஏராள்மான விசயம் இருக்கு! இதுல கூட, உள்ள வரக் கூடாதுன்னு மிரட்டின சம்ப்வம் இருக்கு போல....சரியாத் தெரியல... ஆனா இது ஒரு கண்ணா மூச்சி விளையாட்டு.... ஒவ்வொரு தனி மனிதன் விழிதெழும் வரை அதற்கு முடிவில்லை.

Diagnose the root cause for complete cure, don't try to treat the symptom!!!

நையாண்டி நைனா said...

வருகைக்கு நன்றி அண்ணா...

அண்ணா.... அன்றைய கால கட்டத்தில் சமுதாய மதிப்பீடுகளும் வேறு மாதிரி இருந்தது..... ஒரு முறை காவல் நிலையம் சென்று வந்தால் ஊரார் அவர்களை மதிக்க மாட்டார்கள்.. ஆனால் இன்றைய மன நிலை எப்படி உள்ளது.
இன்று போலீஸை எதிர்த்து கை நீட்டி பேசுகிறவன் நாயகன் அந்தஸ்தில் கொண்டாடபடுகிறானே....
இது யார் குற்றம் ???

Cable சங்கர் said...

நல்ல பதிவு.. நண்பரே..:):)

Sanjai Gandhi said...

//அந்த இடத்தில், உங்கள் தகப்பனாரோ, மகனோ காவல் பணியில் இருந்திருந்தால் நீங்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் எதிர் பார்த்திருப்பீர்கள்???? ( தயவு செய்து மன சாட்சியுடன் சொல்லவும்.......)//

காவல் துறையில் இருபப்வர் போல் நடந்துக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் சட்டப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்க கூடாது. அந்த தெரு நாய்கள் அடித்துக் கொண்ட போது அதை தடுத்திருக்க வெண்டும். அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும். கல்லூரி வளகத்திர்குள் நின்று கொண்டு கத்தியால் குத்தி கொண்டாலும் துபபக்கியால் சுட்டு கொண்டாலும் கூட முதல்வர் அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாது என்று சட்டம் பேசிக் கொண்டிருந்தால், நாளைக்கு எல்லா ரவுடிகளும் த்ங்கள் கொலை களமாக கல்லூரி வளாகத்தை பயன்படுத்துவார்கள்.

Bleachingpowder said...

இந்த சம்பவம் நிச்சயமாக நிகழும் என்று முன்பே போலீஸ்காரர்களுக்கு தெரிந்தே நிலையில் அவர்கள் தேவையான காவலர்கள், அயுதங்கள் எல்லாத்துக்கும் மேலான அந்த பாழா போன உத்தரவுன்னு எல்லா கருமத்தையும் வைச்சு இந்த சம்பவம் நிகழாமல் தடுத்திருக்க வேண்டும்.

நம்ம என்ன செஞ்சாலும் பொதுமக்களும், பத்திரிக்கைகாரர்களுக்கும் குத்தம் சொல்ல தான் போறாங்க அப்புறம் நான் எதுக்கு இத தடுக்கனும்ற எண்ணம் தவறானது நண்பரே.

Bleachingpowder said...

//அந்த இடத்தில், உங்கள் தகப்பனாரோ, மகனோ காவல் பணியில் இருந்திருந்தால் நீங்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் எதிர் பார்த்திருப்பீர்கள்???? ( தயவு செய்து மன சாட்சியுடன் சொல்லவும்.......)
//

அதே போல் இந்த கொடுர காட்சிகளை தொலைகாட்சியில் பார்த்த எத்தனையோ பொது மக்கள், எனக்கும் மட்டும் அதிகாரம் இருந்தால் ரத்தம் கொதிக்க கூறியதையும் மறந்து விடாதீர்கள்...

பொது மக்களுக்கு அடக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கு ஆனா அதிகாரம் இல்லை. போலீசுக்கு அதிகாரம் இருக்கு ஆனா அடக்கனும்னு எண்ணம் இல்லை.

பிரபாகரன் said...

நானும் அக்காட்சியை பாத்தேன். பத்திரிகைகாரங்க போலீஸ்காரங்களோட கேவலமா நடந்துகிட்டங்க. அடிபட்ட ஒரு மாணவன் நடக்க முடியாம எழுந்து ஒரு மர கிளைய புடுச்சி கீழ விழரான் அவன சுத்தி ஐந்தாறு photographers photo எடுப்பதிலேயே இருந்தார்களே தவிர ஒருவரும் உதவவில்லை.

நையாண்டி நைனா said...

/*cable sankar said...
நல்ல பதிவு.. நண்பரே..:):)
*/
தங்களின் வருகை எனக்கு பெருமிதம் அளிக்கிறது .

நையாண்டி நைனா said...

/* பொடியன்-|-SanJai said...
காவல் துறையில் இருபப்வர் போல் நடந்துக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் சட்டப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்க கூடாது. அந்த தெரு நாய்கள் அடித்துக் கொண்ட போது அதை தடுத்திருக்க வெண்டும். அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும். கல்லூரி வளகத்திர்குள் நின்று கொண்டு கத்தியால் குத்தி கொண்டாலும் துபபக்கியால் சுட்டு கொண்டாலும் கூட முதல்வர் அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாது என்று சட்டம் பேசிக் கொண்டிருந்தால், நாளைக்கு எல்லா ரவுடிகளும் த்ங்கள் கொலை களமாக கல்லூரி வளாகத்தை பயன்படுத்துவார்கள்.*/

தங்களின் வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி அண்ணா,

அண்ணா....
கைது செய்ய வேண்டும், முடக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் சொல்கிறீர்களே அன்றி யாராவது ஒரு நல்ல யோசனை சொல்கிறீர்களா?
மேலும் நானே என் பதிவில் கீழே உள்ளவாரும் எழுதி இருக்கிறேனே....
அவர் என்ன ஆயுதம்? யுக்தி கொண்டு அவனை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சுட்டு விடலாமா? தடி கொண்டு தாக்கி விடலாமா? இல்லை நம்ம கைய்ப்புள்ள மாதிரி வேண்டாம் அழுதிருவேன் என்று மிரட்டல்(?) விடலாமா?

கொஞ்சம் இதற்கும் விளக்கம் கொடுப்பீர்களேயானால், மற்றவர்களை விடுங்கள் நானே கொஞ்சம் தெரிந்து கொள்வேன்.

நையாண்டி நைனா said...

ஐயா... திரு.Bleaching Powder அவர்களே வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக நன்றி.

சட்ட திட்டம் எல்லாருக்கும் உண்டு தானே, ஒரு சாதாரண ஆள் அடிபட்டு கீழே கிடக்கும் போது, யாரும் அவனுக்கு முதழுதவி செய்ய கூட தயங்குகிறார்களே, ஏன்? கண்டும் காணாதது போல் செல்கிறார்களே அவர்களெல்லாம் வேற்று கிரக ஜந்துக்களா.... இல்லை விழுந்து கிடப்பவன் வேற்று கிரக மிருகமா....
இந்த சூழ்நிலையிலும் உதவி செய்து, தாங்கள் கூறியாவாறு ரத்தம் கொதிக்க கூறி இருந்தார்களேயானால் அவர்கள் மேன்மையானவர்கள் நானும் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி பணிந்து வணங்குகிறேன். மற்றவர்கள் செய்வது/சொல்வது வெற்றுக் கூச்சல்.

நையாண்டி நைனா said...

/*பிரபாகரன் said... */
அன்பின் பிரபாகரன்... அவர்களே
நன்றி...

அவரவர்கள் தங்கள் உயிர், உடைமை மற்றும் வேலை இதனை தற்காத்து கொள்ளவே முனைகிறார்கள்.

narsim said...

திரு நைனா..

நல்ல வார்த்தைகள்.. ஆனால் கருத்துடன் நான் ஒத்துப் போக முடியவில்லை..

கண் முன் நிகழும் கொடூரத்தை தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்திருந்தால் இந்த பதிவு சரியாக இருக்கும்.. அவர்கள் முயற்சி என்ன, ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் இருந்ததே தவறாக தெரிகிறது..

சென்ற ஆண்டுகளில் காவல்துறை கல்லூரிக்குள் நுழைந்ததை தவறு என்று சொல்லிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடி கொண்டு ஒரு பயங்கரத்தை பார்த்துக்கொண்டிருப்பதை ஏற்க முடியாது.. அந்த கேட்டில் ஒரு மாணவியை கற்பழித்தாலும் இப்படி நின்று கொண்டிருப்பார்களா? அந்த மாணவன் இறந்தால்(இறக்க கூடாது..)யார் பொறுப்பு??

போலிஸ் நம்மை போல்தானே என்று கேட்கிறீர்கள்.. தவறு.. அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் "பவர்" நம்மைவிட அதாவது பொதுமக்களை விட அதிகம்..

இன்று இருக்கும் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியில் ஒரு நொடியில் அவர்கள் கமிஷ்னருக்கு விபரீதத்தை உணர்த்தி இன்னும் போலிஸ் படையை பெற்று இருக்க முடியும்..

எல்லா வற்றையும் விட.. போலிஸ் துறையில் வேலைக்கு சேரும் போது எடுத்துக் கொள்ளும் சத்தியபிரமாணம் என்ன? " சமூகத்திற்கு இடையூரோ, சட்ட விரோதமோ,குற்றமோ நடந்தால் தடுப்பது என்பதே" முன்னாள் ஆனையர் சேகர் கூற்றுப் படி பார்த்தால் இந்த பயங்கரத்தை தடுப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.. என்பதே..

யார் என்ன சொன்னாலும் .. காவல் துறை அப்படி பார்த்துக்கொண்டிருந்தது தவறு..

நையாண்டி நைனா said...

அண்ணா... கருத்துக்கு நன்றி...

ஆனால் மோதிக்கொண்டது.. அவனோ இவனோ அல்ல..... நான் பதிவிலேயே கூறி விட்டேன்...

சும்மா கத்தியை வைத்திருப்பதற்கெல்லாம் கைது செய்யிய முடியாது? என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியே கைது செய்யலாம் என்றாலும் அது ஏதும் அறியாத அப்பாவி வேண்டும் என்றால் கைது செய்யலாம். ஆனால் அவர்கள் அப்படியா? அவர்கள் சட்டத்தை அறிந்தததை விட சட்டத்தின் ஓட்டைகளையே அறிந்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?

Jackiesekar said...

nina very nice artical.100% true/ then nice writing. you and me same frequence.

நையாண்டி நைனா said...

Thank you Mr. Jackie Sekar