Friday, 26 September 2008

பதிவர்களுக்கு நறுக்குன்னு நாலு கேள்வி....


தில் இருந்தால், இந்த என்னோட "நறுக்" கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்போ "நறுக்" கேள்விகள் காலம் போல் இருக்கிறது. எனக்கு வலை உலகில் யாரும் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. ஏதோ நமக்கு தோனியதை எழுதுவோமே என்று எழுத வந்து, ஒண்ணும் சாதிக்கலே. ஏதோ ஆணி புடுங்குற பொழப்புலே இருந்து ஒரு சிறு ஆறுதல் கிடைக்குது. தமிழ் அன்னைக்கு புது ஆபரணம் செய்து போடும் அளவுக்கு அறிவில்லாட்டாலும், கீழே இருக்கிற சாமரத்தை எடுத்து விசிறி விட உடம்பிலே தெம்பு இருக்கு. அந்த முயற்சியா தான் நம்ம பதிவு. (மயிலை பார்த்து ஆட வந்த வான் கோழி நான் என்று எனக்கும் தெரியும்). பின்னூடடமே வரமாட்டேங்குது, பின்னே நம்மை மதித்து யார் பதில் சொல்லுவாங்க? அதனாலே நான் இந்த "நறுக்" கேள்விகளை பொதுவில் வைக்கிறேன்.




தில் இருந்தால் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

1. "நறுக்" கேள்விகள் என்றால் என்ன?

2. "நறுக்" கேள்விகள் யாரிடம் கேட்க வேண்டும், யாரிடம் கேட்க கூடாது?

3. "நறுக்" கேள்விகளை சாய்சில் விடலாமா?

4. காய்கறி வெட்டுவதை நாம் காய்கறி "நறுக்"க போகிறேன் என்று சொல்லும் நாம், முடி வெட்டுவதை மட்டும் முடி "நறுக்"க போகிறேன் என்று ஏன் சொல்வதில்லை?





விடைகளை எதிர் பார்த்து....... இருக்கிறேன்.

7 comments:

குடுகுடுப்பை said...

இதுக்குதான் "கட்" பண்.. அப்படின்னு தமில்ள சொல்லனும்.

tamilraja said...

நல்லாத்தான் உக்காந்து யோசிக்கிறீங்க!

tamilraja said...

நல்லாத்தான் உக்காந்து யோசிக்கிறீங்க!

நையாண்டி நைனா said...

/*இதுக்குதான் "கட்" பண்.. அப்படின்னு தமில்ள சொல்லனும்.*/

Thankyou very much for your information. I welcome you to my blog always.

Anonymous said...

தினமலரில் நறுக் செய்திகள் போடுவார்கள். அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

benza said...

ஐயா நன்றி ... இதுவரை காலமாக Blog வாசித்து வாய்விட்டு சிரித்தது

இன்று தானையா ... தங்களது கலை ஆர்வம் மேலும் மேம்பட்டடும்

என மனாதார வாழ்த்துகின்றேன்

நையாண்டி நைனா said...

I thank Mr. அழகிய தமிழ்மகன் and Mr. benzaloy.