Friday, 19 September 2008

பதிவு எழுதுவோர்க்கு தலைப்பு இலவசம்.

ரத்னேஷ் அண்ணாவின் பதிவில் பின்னூடடம் இட்டு இருந்த போது அண்ணன் ஒரு கேள்வி கனையை என்னை நோக்கி ஏவி உள்ளார்கள்.


நையாண்டி நைனா சார்,

//அன்றும் இன்றும் என்றும் புனிததத்தை கெடுக்கும் செயல்களில் பெரியாரோ, பெரியாரின் தொண்டர்களோ செய்வதில்லை.//

வினய நோக்கம் இன்றி தெரிந்து கொள்வதற்காக மட்டும் கேட்கிறேன். பெரியாரோ பெரியாரின் தொண்டர்களோ புனிதம் என்று எவற்றைக் கருதுகிறார்கள் என்று சொல்வீர்களா?


அந்த கேள்வி நெஞ்சில் தைத்ததால், சோர்ந்து, இருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆண்டு இறுதி தேர்விலே கூட இப்படி யோசிக்கலை, அப்படி யோசிக்கிறேன். அதுக்கு முன்னாடி உங்களுக்கும் அந்த கேள்வியை வைக்கிறேன், என் மதிக்கு எட்டாத்தது உங்கள் அறிவிற்கு புலப்படலாம் அல்லவா? நீங்களும் இதற்கென்று தனியாக யோசிக்காமல், பேருந்தில் செல்லும்போதோ, வீட்டில் படுத்திருக்கும் போதோ, இல்லை அரசு அலுவலகத்தில் லஞ்சத்தையும், விண்ணப்பதினையும் உள்ளே அனுப்பி காத்திருக்கும் போதோ அல்லது கழிவறையில் 'இருக்கும்' போதோ, தயவு செய்து யோசித்து இந்த தமிழ் நாட்டுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் அறிவை ஏற்றி வைக்குமாறு உங்களை கேட்டு கொள்கிறேன்.

இவற்றிற்கு நான் பதில் சொல்லும் முன்னே ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நான் பெரியாரும் அல்ல, பெரியவரும் அல்ல. பெரியாரின் தொண்டனும் அல்ல, சிறியாரின் குண்டனும் அல்ல.

"புனிதம் என்றால் என்ன?"

புனிதமானது நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, மனிதனுக்கு மனிதன் வேறுபடும். ஆனால் சகலரும் என்ன விரும்புகிறார்கள்? தன்னை அனைவரும் மனிதனாக நடத்த வேண்டும் என்று எண்ணுவது, அந்த வகையில் பெரியாருக்கும் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் ( உண்மை தொண்டர்கள்) பிற மனிதனின் வாழ்வாதார உரிமை, உரிமை, உரிமை, உரிமை ஒன்றே ( கருவிகளோ மற்ற பொருள்கலோ அல்ல) புனிதமாகும்.எதனையும் ஆராயும் அறிவும், கேள்வியுமே மந்திரமாகும்.


இன்னும் மற்றவர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கலாம்.

No comments: