Wednesday 24 September 2008

லக்கியின் அல்லக்கையாக தன்னை அறிவித்த பரிசலுக்கு - பதில்.

வாங்க... வாங்க..... வாங்க...... இப்பத்தான் உங்களுக்கு என் வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சுதா..? என்ன அப்படி அடிச்சி பிடிச்சி வந்திருக்கீங்க. கோப படாதீங்க... உங்களை எல்லாம் நாங்க எங்க வீட்டுக்கு பின்னே எப்படித்தான் வரவைக்கிறது. பாருங்க இந்த குடிசை பகவான் பி லாக் க ர் கொடுத்த இலவச மனையிலே கட்டினது தான், பல பேரு பொருளோடு கட்டி இருக்காங்க, நானே நை+ஆண்டி நைனா என்கிட்டெ பொருள் இருக்குமா...அதனாலே உங்கள மாதிரி பொருள் இருக்கிற நாலு பேரு வந்து போனாததானே, நம்ம வாழ்க்கைக்கும் ஒரு பொருள் இருக்கும்.

சரி..சரி..சரி.. சமாச்சாரத்துக்கு வறேன்.

அதுக்கு முன்னே நம்ம அண்ணன் பரிசலாரின் என்ற நான் யாருக்கு அல்லக்கை? இந்த பதிவையும் கொஞ்சம் படிச்சிட்டு வாங்க......

என்ன? படிச்சாச்சா

அல்லக்கை-னா என்னன்னு ஒரு ஆராய்ச்சி வேற.

எவ்ளோ எளிதான விஷயம். இதற்கு போய்.??

அல்லக்கை:
முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் கான்பிபார்கள். அவர்களே பின்னாளில் அள்ள கை என்று அழைக்க பட்டார்கள். பின்னாளில் இதுவே மாறி அல்லக்கை என்றாகி விட்டது. வெகு நாளுக்கு பிறகு ஏவிய வேலை செய்யும் அனைவரையும் அல்லக்கை என்று அழைக்கலானார்கள் மக்கள்.

ஸ்..ஸ்...ஸ்... அப்பா.... இன்னும் என்ன? என்ன? கேள்விலாம் வரப்போகுதோ?

பி. கு: தலைப்பு காலையிலே அண்ணன் கோவியாரின் பதிவை படித்தினால் வந்த பாதிப்பு... ஹி ..ஹி..ஹி...
( இருந்தாலும் பொருந்தி வருதுலொ?)

12 comments:

Anonymous said...

கொடும கொடுமன்னு கோவிலுக்கு போனா... அங்க ரெண்டு கொடும .... அவுத்து போட்டு கிட்டு ஓடுச்சாம்....

மனதில் நீ எதை நினைத்தாயோ அதற்க்கு தோல்விதான் கிட்டும்.

உருப்படிய எதையாவது எழுத பாருங்க

நையாண்டி நைனா said...

/*மனதில் நீ எதை நினைத்தாயோ அதற்க்கு தோல்விதான் கிட்டும்.*/

சத்தியமா எம் மனசுலே ஒண்ணும் நினைக்கலே....

நையாண்டி நைனா said...

ஹைய்யா... மொத கமெண்டே அநானி கமண்ட்... அப்போ நான் வளர்கிறேனே மம்மி...

வெண்பூ said...

//அவர்களே பின்னாளில் அள்ள கை என்று அழைக்க பட்டார்கள். //

கற்பனையா நிஜமா என்று தெரியவில்லை. ஆனால் அழகாக பொருந்தி வருகிறது.

நையாண்டி நைனா said...

/*கற்பனையா நிஜமா என்று தெரியவில்லை. ஆனால் அழகாக பொருந்தி வருகிறது.*/

கற்பனை தான்.... நான் என்ன தமிழில் முனைவர் பட்டமா வாங்கியிருக்கேன்...

உங்கள் வருகைக்கு நன்றி....

Kumky said...

நைனா என்னா சொல்ல வரீங்கன்னு புரியல்லே....

நையாண்டி நைனா said...

/*நைனா என்னா சொல்ல வரீங்கன்னு புரியல்லே....*/

அல்லக்கை என்பதற்கு விளக்கம் சொல்லி இருக்கேன்
வருகை தந்தமைக்கு நன்றி

முகம்மது அமீன் said...

What a kodumai?????

tamilraja said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மணிவண்ணன் சாரிடம் போயி சொல்லணும் இத மொதல்ல !

உங்க வார்த்தைய ஆராய்ச்சி பண்ணி ஒருத்தர் டாக்டர் ஆகப்போறார்னு !

Anonymous said...

supper aapu nari thalaiva

கோவி.கண்ணன் said...

நைனா,

அல்லக்கைக் கான விளக்கம் அருமை !

பழமைபேசி said...

முன்காண் எழில் மடம், அல்லையிற்காண்
தர்மம் பொழில் மடம்
என்று வள்ளலாரின் ஆசிரமத்தைப் பற்றிய தமிழ்ப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. எனவே அல்லையில் என்பது பக்கவாட்டில் என்பது தெளிவாகிறது. மேலும், எனது ஈழத்து நண்பர்கள் இச்சொல்லைப் பாவிக்கக் கேட்டு இருக்கிறேன். தமிழ்நாட்டிலே, இச்சொல் கொங்கு மண்டலத்தில் வழமையாகப் பாவிப்பார்கள். அல்லக்கை என்ற சொல் பிரபலமடையக் காரணம் அண்ணன் சத்தியராசு அவர்கள் என்பது எம் தாழ்மையான கருத்து.