Monday 19 May 2008

மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - ஆ

முந்தைய பதிவினை படித்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். படிக்க வில்லை எனில் படிக்க இங்கே சொடுக்கவும். (மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - அ)
மருத்துவர் ஐயா திரு. புருனோ அவர்கள், சொல்கிறார் டெஸ்ட் எடுக்க நீதி மன்றங்கள் வற்புறுத்துகின்றதாம். நீதி மன்றங்கள் அதனிடம் முறை இடப்பட்ட வழக்கு சார்ந்த வகைகளுக்கு மட்டுமே அவ்வாறு வற்புறுத்துகிறது, மற்றைய நேரங்களில் அதன் தலையீடு இருப்பதில்லை, அதாவது, ஒரு சாதாரண பொதுஜனம், நம்ம நையாண்டி நைனா போகிறார் என்று வைத்து கொள்ளுங்களேன் அவரிடம் தேவை இல்லாத சில / பல பரிசோதனைகளை பரிந்துறைப்பது ஏன்? (சோதனைகள் செய்யாமல் எப்படி நோயை கண்டு பிடிப்பது என்று எதிர் கேள்வி கேட்க தேவை இல்லை. மேலும் அது மருத்துவதிற்கு தேவை அற்றது என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்? மாற்று மருத்துவம் நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டு கேள்வியின் நோக்கத்தை திசை திருப்பும் முகமாக
பதிலை நான் விரும்ப வில்லை.)
என் வாழ்வில் எனக்கு நடந்த ஒரு சின்ன அனுபவம். எனக்கு வயது 27 ஆகும் சமயம், அதாவது கடந்த வருடம். எனக்கு கடைவாய் பல்லின் அருகே, வலி வந்தது ஒரு மருத்துவரிடம் சென்றேன் அவர் ஒன்றுமே கேட்காமல், " போய் ஒரு எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் " என்று சொல்கிறார். நானாக ஒரு வலி நிவாரண மாத்திரை எழுதி வாங்கி உட்கொண்டு, பின்னர் என் வீட்டிற்கு போன் செய்து சொன்னதும் எனது தந்தை கூறுகிறார் " உனக்கு கடைவாய் பல் வளரும் பருவம் அது தான் வளர்கிறது, வேறொன்றும் இல்லை" என் தந்தை கூறிய படியே நடந்தது. இதை போல் என் அண்ணனுக்கும் நடந்தது. ஒரு சாதாரண மனிதருக்கு தெரியும் இந்த விவரம் ஒரு மருத்துவருக்கு தெரியாமல் போனது ஏன்? (இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே.)

வேண்டும் என்றே இயற்கையாக வரும் பிரசவ வலியினை மட்டுருத்தி, சிசேரியன் செய்ய வற்புறுத்தாமை வேண்டும் என்று நான் கூறினால், நீங்கள் சொல்கிறீர்கள் "அப்படி சுகப்பிரசவம் ஆக சிறிது நேரம் பொறுக்கலாம். ஆனால் அதில் ஆபத்து அதிகம். பிறகு பிரச்சனை வந்தால் நீங்கள் (அதாவது பொது ஜனம்) என்ன கூறுவீர்கள். முதலிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது என்று தானே"
சுக பிரசவத்தில் சிக்கலா????? அப்படி என்றால் நம் முன்னோர்கள் 10 - 15 பிள்ளைகள் பெற்றார்களே எப்படி?
சரி, அந்த இக்கட்டான நிலமையையும் சமாளிக்க தானே மருத்துவ மனை தேடி வருகிறார்கள். சுகமாய் பிரசவம் ஆகவேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சமாளிக்க தானே மருத்துவ மனைகளே ஒழிய, சுக பிரசவம் ஆகும் முன்னரே சிசேரியன் செய்வதற்கு அல்ல. இயற்கையாக வரும் பிரசவ வலி ( பிரசவ வலி வந்தால், பிரசவம் ஆகிவிடும், அப்படி ஆகும் பொழுது சில சமயம் குழந்தாயின் நிலை மாறிவிடும், வேறு பல சிக்கல்களும் வரும்) வராமல் மட்டுபடுத்தி சிசேரியன் செய்ய அல்ல.
எத்தனை பேர், மருத்துவரின் தவறுக்கு அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள்? அவரவர், அவரவர் விதியினை நொந்து தானே செல்கிறார்கள்.

அடுத்து, சோதனை, டெஸ்ட் என்று நான் சொல்வது ஸ்டெத்-சோதனைகளையும், நாக்கை நீட்டி சோதனை செய்வதையும் கூறவில்லை, ஆனால் அதையும் நீங்கள் கூறி இருப்பது உங்கள் நகைச்சுவை உணர்வை காட்டினாலும், அதில் உங்கள் மழுப்பல் உணர்வே மேலோங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த சோதனைகளை காசில்லாமல் செய்கிறோம் என்ற ஏளனமா? இல்லையே? அந்த சோதனைகளுக்கும் சேர்த்து தானே கட்டணம் வாங்குகிறீர்கள். ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அடுத்த மருத்துவரை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் சொன்னால் நீங்கள் வேறு எதையோ பேசி சமாளிக்கிறீர்கள்.

ட்ரிப்ஸ், சிரிஞ்சு, ஏன் எழுதி கொடுக்கிறீர்கள் என்று தெளிவில்லாமல் கேட்டது என் தவறு தான். நான் சொல்வது தேவைக்கு மீறி, எழுதி கொடுப்பது ஏன்? நான் கேட்ட வரை "இதெல்லாம் கூட கொடுத்தால் தப்பில்லை அவருக்கு தெம்பா இருக்கும்" என்றொரு பதில். பின்னர் அவர் ஒரு மாத்திரை வில்லை எழுதி கொடுப்பார் அது அங்கே இல்லை எனில் (அப்படி பெரும்பாலும் இருக்காது, ஏன் எனில் அவரே அங்கு ஸ்டாக் உள்ளத்தை தானே எழுதியே தருவார் )அங்கே உள்ளவர் மாற்றி ( மாற்றி கொடுப்பது என்பது வேறு ராசாயன கலவை கொண்டுள்ள மாத்திரை அல்ல, எல்லாம் ஒரே ராசாயனம், திறன், அளவு உள்ள மாத்திரை தான்) கொடுத்தாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார். ஆனால் நாம் வெளியே சென்று வாங்கி வந்துவிட்டால்? பிரச்சினை தான்? ஒண்ணும் சொல்ல முடியாத பட்சத்தில் இம்சை வேறு ரூபத்தில் வரும்.


தொடரும்.... இனி வரும் பதிவுகளில்......

11 comments:

ரூபஸ் said...

இது ஏதோ நையாண்டின்னு நெனச்சேன், ஆனா மேட்டர் ரொம்ப சீரியசா இருக்குதே..

மக்களுக்கு நல்லது நடந்தா சரி..

நையாண்டி நைனா said...

ரூப்ஸ் ஐயா.. வருக வணக்கம், பல பேரு இப்படி நினைத்து தான் படிக்காம போய்றாங்க, படிக்கிறவங்களும் சீரியஸா சிந்திக்காம போய்றாங்க

புருனோ Bruno said...

ரூபஸ்

விஷயம் சீரியஸ் தான்.

ஆனால் எழுதப்பட்டிருப்பது பெரும்பாலும் நையாண்டிதான்

விளக்கமான பதில்கள் என் பதிவில் உள்ளன

http://payanangal.blogspot.com/2008/05/blog-post_20.html
http://payanangal.blogspot.com/2008/05/blog-post_15.html

புருனோ Bruno said...

அனைத்து கேள்விகளுக்கும் பதில் http://payanangal.blogspot.com/2008/05/blog-post_20.html

உள்ளது

ஒரு முறை படித்து விட்டு பிறகு உங்கள் கருத்தை கூறவும்

மகேஷ் said...

yove naiyaandi,
muttalthanama naalu kelvi ketkradanala neengal romba arivaalinu ninaikarkalgal!!

புருனோ Bruno said...

முழு தெளிவான பதில்கள் http://payanangal.blogspot.com/2008/05/blog-post_20.html

வேறு சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும்

--

பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்க்கவும்

நையாண்டி நைனா said...

மருத்துவர் ஐயா. திரு. மகேஷ் அவர்களே வருக வணக்கம்.

நான் அறிவாளி அல்ல என்ற காரணத்தினால் தான் கேள்விகள் கேட்கிறேன்.
கேள்விகளை நான் கேட்டு, பலர் தெளிவடைந்தால் சிறப்பு தானே....

நன்றி

மங்களூர் சிவா said...

ரொம்ப நல்லா இருக்கு நைனா. இவனுங்க ரொம்ப படிச்சவங்க நல்லா மழுப்புவாங்க.

நொந்த அனுபவம் நிறைய இருக்கு.

எல்லா மருத்துவரும் மோசம் என்று சொல்லவில்லை 70% மருத்துவர்கள் அப்பிடித்தான் பணத்தாசையோடுதான் சிகிச்சையளிக்கிறார்கள்.

டாக்டர் புருனே பதிவு இதை படிக்கும் முன்னே படித்துவிட்டேன் திரும்ப படித்து பார்க்கிறேன்.

நையாண்டி நைனா said...

வருகை தந்த மங்களூர் ஐயாவுக்கு மங்கலம் உண்டாகட்டும்.

நன்றி.நன்றி.. நன்றி...

cheena (சீனா) said...

உடம்பே நல்லால்லே ! அதனாலே இன்னிக்கும் லீவு - மெடிகல் சர்டிபிகேட் சேரும் போது தாரேன்

புருனோ Bruno said...

//ரொம்ப நல்லா இருக்கு நைனா. இவனுங்க ரொம்ப படிச்சவங்க நல்லா மழுப்புவாங்க.
//

நான் கூறியதில் எந்த வரி மழுப்பல் என்று கூற வேண்டியது தானே

அதை விடுத்து மழுப்புவது நீங்கள் தான்

மருத்துவத்துறை மேல் உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி தான் இங்கு வெளிப்படுகிறது :( :(

-

மருத்துவர்கள் 13 வருடம் படிப்பவர்கள் அதிகம் படித்தவர்கள் என்ற உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் :)