Monday, 19 May 2008

மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - அ

Disclaimer: This is published to clarify the certain things and thoughts prevailing in the society. Not to hurt anybody.

இது மருத்துவத் துறையில் சேவை செய்து வரும் சில நல்ல உள்ளங்களுக்கு சமர்ப்பணம்.

சில தினங்களுக்கு முன் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயா. திரு புருனோ அவர்களின் பதிவான முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம்
பதிவில், நான் இட்ட பின்னூட்டம் காரணமாக மிக நீண்ட விவாதம் மற்றும் கருத்து பரிமாற்றம் நடை பெற்றது. அதில் நானும் சில கேள்விகளை விளக்கி கேட்க வில்லை, எனது தவறுக்கு வருந்துகிறேன். மேலும் சில கேள்விகளுக்கு மருத்துவர் ஐயா மலுப்பலான பதில்களே தந்துள்ளார். அதனாலேயே நான் அதை பற்றிய ஒரு விவாத களமாக, கருத்து வெளிப்பாடாக இந்த பதிவினை பதிக்கிறேன்.
அவரது பதிவில் அவரது ஆதாங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்து இருந்தார்.
"
1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார்
1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தால் இன்று அவர் எவ்வளவு ஊதியம் பெறுவார்??? "


இதற்கு எனது பின்னூடடம் "சேவை மனப்பான்மையுடன் வருபவர்கள் மட்டும் வரட்டும். பணம் சம்பாதிக்க தான் ஆயிரம் வழிகள் உள்ளனவே...."

அதனை தொடர்ந்த பின்னூட்ட பகுதியினை படித்து விட்டு வாருங்கள் தொடர்வோம்.......

9 comments:

Anonymous said...

very good discussion

புருனோ Bruno said...

//மேலும் சில கேள்விகளுக்கு மருத்துவர் ஐயா மலுப்பலான பதில்களே தந்துள்ளார்.//

மலுப்பல் என்றால் என்ன.

நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் தெளிவான பதிலைத்தான் தந்தேன்.

ஒரு கேள்விக்கு கூட மழுப்பவில்லை.

எந்த பதில் மழுப்பல் என்று தெளிவாக கூறினால் அதற்கும் பதிலளிக்கத்தயார் :) :)

மேலும் எனது பதிவில் முழுவதும் இருக்கும் விவாதங்களை அப்படியே உங்கள் பதிவில் ”வெட்டி, ஒட்டி” உள்ளீர்கள். பொதுவாக முழு விவாதத்தையும் ”வெட்டி ஒட்டுவது” வரவேற்கத்தக்கது அல்ல. யார் என்ன கூறினார்கள் என்று தெளிவாக தெரியவில்லை. எனவே விவாதம் முதலில் நடந்த சுட்டியை மட்டும் அளித்து மற்ற விஷயங்களை நீக்குவீர்கள் என்று நம்புகிறேன்...

புருனோ Bruno said...

விளக்கமான பதில்கள் என் பதிவில் உள்ளன

http://payanangal.blogspot.com/2008/05/blog-post_20.html
http://payanangal.blogspot.com/2008/05/blog-post_15.html

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...

நானும் பதிவில் அது பின்னூட்ட பகுதி என்று அறிவித்தே , வெளியிட்டேன்... இருப்பினும் தங்கள் எண்ணப் படியே செய்தாகி விட்டது....
தங்கள் பேரன்பிற்கு நன்றி....

புருனோ Bruno said...

தங்கள் அன்பிற்கு நன்றி

cheena (சீனா) said...

ம்ம்ம் இந்த ஆட்டைக்கு நான் வர்லே - நாம் லீவு இன்னிக்கு

புருனோ Bruno said...

//ரொம்ப நல்லா இருக்கு நைனா. இவனுங்க ரொம்ப படிச்சவங்க நல்லா மழுப்புவாங்க.
//

நான் கூறியதில் எந்த வரி மழுப்பல் என்று கூற வேண்டியது தானே

அதை விடுத்து மழுப்புவது நீங்கள் தான்

மருத்துவத்துறை மேல் உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி தான் இங்கு வெளிப்படுகிறது :( :(