Tuesday 14 December 2010

அமேரிக்கா, இந்திய தூதர்களை தூர் வாரியது சரியா?

மிக சமீபத்தில் கடந்து சென்ற நாட்களில் அனைவரையும் பதட்டம் கொள் என பதட்டம் கொள்ள வைத்த செய்தி அமெரிக்காவில் நம்ம தூதர்களை தூர்வாரிய செய்தி. ஆமா அதிலே என்ன தப்பு? தப்பே கிடையாது. அது அவன் நாட்டோட பாதுகாப்பு சம்பந்த மான விஷயம் அவன் அப்படி தான் செய்வான்.

அப்படி அவன் சோதனை பண்றது, பிடிக்கலையா... வேண்டாம்ப்பா... உன் சங்காத்தமே வேண்டாம்... இந்த கோட்டை தாண்டி நீயும் வர கூடாது நானும் வர மாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கணும். அதை விட்டுட்டு,. "டேய் அமெரிக்கதொரை... என் தூதன் அங்கே வருவான் ஒரு வெள்ளையனுக்கு பொறந்திருந்தா சோதனை பண்ணி பாரு"-ங்க வேண்டியது. அவன் அன்டர்வேரை கழட்டி சோதனை பண்ண பிறகு "ஒத்துக்கறேன், உன் தாய் பத்தினி தான்னு ஒத்துக்கறேன் உனக்கு உன் நாடு தான் முக்கியம் அப்படின்னு ஒத்துக்கறேன் ஆனா ஒரே ஒரு சாரி மட்டும் சொல்லிரு "ன்னு... சொல்லிக்கிட்டு கூவுறது வின்னர் வடிவேலை விட ரொம்ப கேவலமா இருக்கு

முடிந்தா நீங்க இங்கே ஒபமா டவுசரை கழட்டி பாருங்க, அப்புறம் சாவகாசமா ஒரு சாரி சொல்லுங்க.. அந்த துணிவு உங்க கிட்டே இல்லே அப்படின்னா பொத்திகிட்டு இருங்க.

அவன், அவன் நாட்டோட பாதுகாப்பிலே எந்த வித சமரசத்திற்கும் இடம் இல்லே என்று இருக்கிறான். அதை பார்த்து நாம கத்துகிடனுமே ஒழிய கத்திகிட்டு இருக்கபிடாது.

"நாங்க என்ன சும்மாவா கத்துறோம், அவன் டவுசரை அவுத்து பார்த்தது எங்க நாட்டு தூதரை. சாமானிய ஆளை இல்லே. உனக்கு நாட்டு பற்றே இல்லே" அப்படிங்குறீலா...

ஐயா அவன் அங்கே போற வார ஆளுக டவுசரை கழட்டி பாக்குறது, அவனோட கடமை, வேலை, பொறுப்பு... தேச பற்று அவன் நாட்டு பற்றை பார்த்து நாம பெருமிதம் கொள்ளனும்.

அப்புறம் தூதர், தூதர் அப்படின்னு விண்ணுக்கும் மண்ணுக்கும் சேது மாதிரி குதிசிங்கன்னா அவரை ஏன் சோதனை பண்ண கூடாதுன்னு நீங்க சொல்லணும்,

அவரு பெரிய பொறுப்புலே இருக்குற ஆளு... அவரு அந்த மாதிரி தப்பு தண்டா எல்லாம் பண்ண மாட்டாரு அப்படின்னு நீங்க நெனச்சா மட்டும் போதுமா? அவன், அவன் நாட்டுக்குள்ளே அனுப்புற முன்னே அவன் நெனக்கணும். அவன் நெனப்பானா? அவன் நெனைக்குற மாதிரி நாம நடந்திருக்கமா? அப்படின்னு நாம யோசிக்க முற்படனும்.

நாம இது வரைக்கும் என்ன பண்ணி இருக்கோம்? (இதெல்லாம் செஞ்சது கஞ்சிக்கு காவடி தூக்குற குப்பனோ சுப்பனோ செய்தது இல்லிங்க)

1. உண்மையிலேயே மக்களுக்கு என்ன நல்லது அப்படின்னு பார்த்து ஏதாவது செஞ்சி இருக்கோமா? ஒரு திட்டம் போட்டா அதுலே நமக்கு எத்தனை பெர்சண்டு ஒதுக்க முடியும்? இதை தானே பார்த்து இருக்கோம்?

2. சரி ஒரு திட்டம் போட்டாச்சி, அதிலே எதிர் பாரா விதமா ஒரு விபத்து நடந்து போகுது? அதற்கான இழப்பீடு நாம பொறுப்பா வாங்கி கொடுதிருக்கோமா? நாம தான் குற்றவாளியையும் பாதுகாப்பா அனுப்பி வச்சிடுறோம். அனுப்பி வச்சி அதுலேயும் கொஞ்சம் காசு பார்திடுறோம் இல்லே ஆதாயம் பார்திடுறோம

3. சரி அடுத்து பாப்போம், நம்ம நாட்டுக்கு பாதுகாப்பு கொடுக்குற ராணுவம் அதுக்காவது ஒழுங்கா நேர்மையா இருக்கோமா? அதுக்கும் பெர்சண்டேசு பார்த்து தரம் இல்லாத ஆயுதங்கள தானே வாங்கி கொடுக்குறோம்.

4. அந்த வீணா போன பக்கி நம்ம நாட்லே பொறந்து தொலச்சதாலே அதை வச்சி சண்டை போட்டு செத்து போய்டுரான்னு வைங்க, அவனை அடக்கம் பண்ண தேச பக்திய வெதைக்க வாங்குரோமே சவப்பொட்டி, அதுலயும் தானே kai வைக்குறோம்.

5.சரி இந்த எழவு பிரச்சினை எல்லாம் போகட்டும் அவன் கூண்டோடு கைலாசம் போன பிறகு, அவன் குடும்பத்தையாவது நாம ஒழுங்கா கவனிச்சது உண்டா? செத்து போன அவன் பொணத்த காட்டி எல்லா அப்ப்ரூவலும் வாங்கி வீட்டை கட்டி யாரு போய் இருக்கா? நல்ல வாயனுக்கு பாலூத்தி வாக்கரிசி போட்டு நாரவாயனுக்கு தானே ஜவ்வரிசி... பால்...பாயாசம் கொடுக்குறோம்.இதுலே ரொம்ப சுத்தம், செஞ்ச கபோதிங்க எல்லாம் யாருன்னு பார்த்து அந்த எழவு வீட்டுக்காரன் தலைவனா தானே இருக்கான்.

6.அட போங்க சார்... ஒவ்வொன்னா டைப் பண்ண பண்ண பிளட் பிரசர் தான் எகிறுது... அந்த கருமம் பிடிச்ச பிளட் பிரசறை கொறைக்கலாம்னு பார்த்தா...! அவன் நாட்லே தடை பண்ண எத்தனை கெமிக்கல், மருந்து, உரம் என்ற பெயரில் நம்ம நாடலே தங்கு தடை இன்றி விற்பனை செய்து கிட்டு இருக்கோம் என்ற எண்ணம் வருது. இதை எல்லாம் அவனும் தானே தின்னு அங்கே கொண்டு போய் பரப்புவான் அதனாலே தான் அவன் அப்படி சோதனை பண்றான்.

இப்படி சொந்த நாட்டு மக்களையே மதிக்காதவன்களா அங்கே போய் அவன் நாட்டு மக்களை மதிக்க போறாங்க அதனாலே தான் அவன் அப்படி சோதனை பண்றான்.

ஆகையினாலே அமெரிக்கா அந்த மாதிரி சோதனை செய்வது தவறு இல்லே தவறு இல்லே... என்று சொல்கிறேன்.

இதற்க்கு மறுப்பு தெரிவிக்க, என் மீது கல் எறிய வாருங்கள்,

உண்மையிலேயே சுத்தமானவர்கள் வாருங்கள்.

எந்த சூழ்நிலையிலும் தன் நிலை தாழாதவர்கள் வாருங்கள்,

அகத்தாலும் புறத்தாலும் நம் மக்களுக்கு நன்மை செய்தவர்கள் வாருங்கள்

என் மீது எறிய, உங்கள் பொற்கரங்களுக்கு நானே கல்லெடுத்து தருகிறேன்.

8 comments:

பெசொவி said...

நூறு சதம் வழிமொழிகிறேன்

Raju said...

இப்பதிவு யாருக்கு எதிர்ப்பதிவு..?

பெசொவி said...

//முடிந்தா நீங்க இங்கே ஒபமா டவுசரை கழட்டி பாருங்க, அப்புறம் சாவகாசமா ஒரு சாரி சொல்லுங்க.. அந்த துணிவு உங்க கிட்டே இல்லே அப்படின்னா பொத்திகிட்டு இருங்க.//

என்னது சின்ன புள்ளத் தனமா இருக்கு? நாங்கல்லாம் யாரு, ஒபாமா வராருன்னா வர்றதுக்கு நாலு நாள் முன்னாடியே அந்த தெருவையே காலியாக்கி அவனுக்கு வசதியா வழிவிடுற பரம்பர! எங்களைப் பாத்து என்ன கேள்வி இது நைனா?

பெசொவி said...

//♠ ராஜு ♠ said...
இப்பதிவு யாருக்கு எதிர்ப்பதிவு..?
//

அது தெரிஞ்சா எனக்கும் வசதையாதான் இருக்கும்! :)

பெசொவி said...

வசதையாதான் = வசதியாத்தான்

(கமெண்டுக்கு டிஸ்கி போடுவோர் சங்கம்)

பெசொவி said...

நாங்கல்லாம் அமெரிக்கா காரன் என்ன சொல்றானோ, அதைத் தான் கேப்போம்!
ஒரு படி மேல போய் அவன் என்ன நினைக்கிறானோ அதை அவன் சொல்லும் முன்னே செய்வோம்!

pichaikaaran said...

நியாயமான ஆவேசம்தான்

நையாண்டி நைனா said...

Thanks for all who visited and commented.