Wednesday 14 October 2009

கணவர்களை அடையாளம் காண பத்து வலிகள்..!!!(பிழை இல்லே)



நமது நண்பர்... திரு. கார்த்திகை பாண்டியன் அவர்கள் ஒரு பதிவு போட்டிருக்காரு... அதே பாணியிலே... நம்ம பணி.

இந்த உலகத்தில் அநியாயத்துக்கு நல்லவர்களாகத் திரிபவர்களுக்கு சமூகம் தரக் கூடிய பெயர் - கணவர்கள். "எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடிய" இந்தக் கைப்பிள்ளைகளை அடையாளம் காண எளிமையான வழிகள் இங்கே..

--> கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மனைவியோடு ஷாப்பிங் போவார்கள். திரும்பி வரும்போது கையில் ஒரு ரெண்டு ரூபாய் மட்டுமே மிச்சமாக இருக்கும். அதுவும், வேறு ஒரு 'ரங்ஸ்' கூட்டிகிட்டு வந்த 'தங்க்ஸ்' இவரு வாசல்லே இருந்த நெலமைய பார்த்து பிச்சையா போட்டதா இருக்கும். "கல்யாணம் கட்டிகிட்டா, கைலே நாலு காசு போரளும் " என்று வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள், கடைசியில் திருவோடு எடுத்து தெருவோடு போகும் வரை.

--> மழை பெய்த இரவில் தங்க்ஸ் அருகே போகும்போது, பக்கத்தில் இருப்பவர்கள் காதில் எதுவும் தெறித்து விடக் கூடாதே என மெதுவாகப் போவார்கள். எதிரே வரும் தங்க்ஸ் இவர்களின் மீது ஏழு வீட்டுக்கு கேட்குமாறு லட்சார்ச்சனை செய்து விட்டுப்போனாலும் அசர மாட்டார்கள்.

--> பண்டிகை நாட்களில் மொபைலில் அதிகமாக காசு பிடிப்பார்கள் என்று தெரிந்தும், கவலை இல்லாமல் (தன்னை யாரும் மதிக்கவில்லை என்றாலும் கூட) அவளுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லுவார்கள்.

--> டிராபிக் சிக்னலில் மிகச்சரியாக ஸ்டாப் கோடுக்கு வெகுமுன்பாகவே வண்டியை நிறுத்தி விடுவார்கள். சிவப்பு பச்சையாக மாறும்வரை பொறுமையாகக் காத்திருந்துதான் போவார்கள். இதனால் பின்னால் உக்காந்திருக்கும் தங்க்ஸ் கிட்டே வண்டி வண்டியாய் திட்டு வாங்குவார்கள்.

--> வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.

--> கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அவருக்கு அவரு வீட்லே விழுற இடி நம்ம வீட்டை விட அதிகமா இருந்தாலும் இருக்கும் " என்று ஒதுங்கியே இருப்பார்கள்.

--> பஸ் பிரயாணத்தில் பக்கத்து சீட்டு பயணி அவரது தங்க்ஸ் அவரை மதிப்பும் மரியாதையுமா பேசுவார் என்று அளந்து விடுவதை பொளந்துகிட்டு கேட்டு கொண்டே இருப்பார்கள். இறங்கும் இடம் வரும்போதுதான் முன்னாள் இருந்து ராட்சச தனமா ஒரு குரல் வரும். கடைசியில் பார்த்தால் அது இவர்கள் தங்கஸை விட மிக கொடுமையாக இருக்கும்.

--> ரோட்டில் போகும்போது யாராவது தர்மம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். வாங்கியவர்கள் அவர்கள் கண்முன்னாடியே அதே பொய்யை இன்னொரு ஆளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாலும் திருந்த மாட்டார்கள்.இவனுக்கு இருக்குற தைரியம் கூட நம்ம கிட்டே இல்லியே... இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்

--> ஆபிசில் லீவே போட மாட்டார்கள். மற்றவர்கள் வேலையையும் இவர்களே பார்ப்பார்கள். போதாக்குறைக்கு பக்கத்து சீட்காரர் செய்த தப்புக்கும் சேர்த்து இவர்களே திட்டு வாங்கிக் கொள்வார்கள்.பின்னே வீட்டுக்கு சீக்கிரம் போய் சிக்கலில் மாட்ட அவர்கள் விரும்புவார்களோ...

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். மாங்கு மாங்குன்னு பதிவு எழுதி... கடைசியில் இதெல்லாம் நான் கிடையாது... என்னோட நண்பர் ஒருவரோட அனுபவம்னு டிஸ்க்கி... மட்டும் போட்டா போதும் பாவம் அந்த நண்பர் அப்படின்னு... பின்னூட்டமும் போடுவாங்க... (நம்மள நாமளே வாரி விடுறது..? அட, பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..)


டிஸ்கி: இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. என்னோட நண்பர் ஒருத்தரோட அனுபவம் இது... அதனால யாரும் "நீயும் இளிச்சவாய கணவர்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க சாமிகளா... ஹி ஹி ஹி..

Monday 12 October 2009

"குயின்பிசர் வழங்கும் ஷேர்பாட்" தீபாவளி ஸ்பெசல் (பகுதி - 1)



வரும் தீபாவளியை முன்னிட்டு ஒரு அதிரடி ஆக்சன் படம் தான் போடலாம்னு இருந்தேன், ஆனா ஒரு வாரத்துக்கு முந்தியே வேறு ஒரு அதிரடி படம் ரிலீஸ் ஆகி சக்க போடு போட்டு கொண்டிருக்கிறது, மூக்குக்கு மூக்கு... சாரி, முக்குக்கு முக்கு அதே பேச்சாவும் இருக்கு. அதனாலே இப்ப தான் உங்களுக்காக ஒரு புது புரோகிராம் பண்ணலாம்னு முடிவு செஞ்சி ஆரம்பிச்சது. இந்த புரோகிராம். இது முழுக்க, முழுக்க புன்னகைக்காக, நகைச்சுவைக்காக எழுத பட்டது... எனது மூக்கை பதம் பார்க்க தேட வேண்டாம்... இப்ப ஒழுங்கா இருக்க மூக்கை வச்சே... நான் பார்க்குறதுக்கு கொஞ்சம் சுமாராதான் இருப்பேன்... (ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்)


* * * * * * * * * * * * * * * * * ஓவர் டூ ஸ்டேஜ் * * * * * * * * * * * * * * * *

வெல்கம் வியூவர்ஸ்... இது "குயீன்பிசர்"(அதென்ன? "கிங்பிசர்" தான் இருக்கனுமா?) வழங்கும் 'ஷேர்பாட்'(அதென்ன "ஜாக்(கெட்)பாட்" தான் இருக்கனுமா?அதான்.... அதான் இப்படி...) இந்த புரோகிராமை நமக்கு நடத்தி தர இருப்பது... மதுரை சிங்கம். வைகை கரையின் வேங்கை, வடிவேலு அவர்கள்.

வடிவேலு: நானும் பெரிய ரவடி.. ரவடி.. ரவடின்னு... நிஜ ரவடிங்க கிட்டே எகிறிகிட்டு இருந்தேன்... திடீர்னு ஒரு சாக்கு பைய போட்டு அமுக்கி இங்கே கொண்டு வந்துட்டாங்க.. இருந்தாலும் சமாளிப்போம்... (வெளியிலே எம்பூட்டு தாங்கிட்டோம்!!! ஏன்னா இது!!! எல்லாரும் ஒரு தினுசா இருக்காங்களே???)

* * * * * * * * * வீ வில் ஸ்டார்ட் ஆப்டர் எ சார்ட் கமர்சியல் பிரேக் * * * * * * * *

(வடிவேலுக்கு திடீர்னு ஒரு சந்தேகம், ஒரு வேளை பார்த்திபன் தான் வேஷம் கட்டி நம்மை மாட்டி விட்டாரோன்னு... மொபைலே எடுத்து லண்டன் "லேண்ட் லைனுக்கு" போன் போடுகிறார்)

"வடிவேலு ஹியர்... கேன் ஐ ஸ்பீக் டு மிஸ்டர் பார்த்தி"

"பார்த்திபன் ஹியர்.. வெண்ணை என்னடா வேணும் உனக்கு."

"எப்பா? பார்த்தி... நீ அங்கே தானே.. இருக்கே..."

"டேய்... லூசு... நான் இங்கே இருக்கபோய் தானே போனை எடுத்து பேசுறேன்... அப்புறம் என்ன கேள்வி..."

"என்னனாலும் திட்டிக்க... ஒரு கன்பர்மேசனுக்கு தான் போன் போட்டேன்... என்னோட புரோகிராமு ஒன்னு இப்போ ரெக்கார்டிங் அப்புறமா டீவிலே வரும் பாரு அண்ணன் எப்படி பிச்சி பீராஞ்சிருகேன்னு..."

* * * * * * * * * * * * * * * * * ஓவர் டூ ஸ்டேஜ் * * * * * * * * * * * * * * * * *

"இங்கே இப்போ ரெண்டு டீமு ஆட வந்திருக்காங்க, இது மொத்தம் மூணு ரவுண்டு உள்ள விளையாட்டு... 'குவாட்டர் ரவுண்டு', 'ஹாப் ரவுண்டு' கடைசியாக 'புல் ரவுண்டு' மேற்படி விதிங்கலாம் உங்களுக்கு நல்லாவே தெரியும் அதனாலே நேரே புரோகிராமுக்கு போவோம்... எல்லாரும் அவங்க அவங்களை அறிமுக படுத்திக்கோங்க.. பஸ்ட்டு டீம் 'அ' சொல்லுங்க..."

எல்லோரும் கோரசாக : 'அ' என்று சவுண்டு விடுகிறார்கள்.

"ஐயோ..! ஐயோ...! இதை சொல்லலே.. 'அ' டீமை சேர்ந்தவங்க உங்களை அறிமுகபடுத்துங்க.. தலைவர்லே இருந்து..ஆரம்பிங்க..."

முக்கு கடை - பிராந்தி
சைடு டிஸ்ஸு - பூந்தி
ஊத்தி கொடுத்தா - சாந்தி
அடிச்சு எடுத்தேன் - வாந்தி
பார்த்து சிரிச்சார் - காந்தி
இப்படியும் கவிதை - எழுதி
போட்டு அடிக்கலாம் -அழுத்தி
தண்டோரா என்று சொல்லலாம்.


"எப்பா... இப்பவே கண்ணை கட்டுதே... எம் பேரு இன்னதுன்னு சொல்றதுக்கு... இப்படி அக்குருவம் பண்ணுதே... சரி அடுத்த தல..."


ஆடியன்ஸ் கும்பல் (கோரசாக): இப்படி பொத்தாம் பொதுவா சொல்ல கூடாது... இங்கே எல்லாரும், எல்லாரையும் "தல"ன்னு...சொல்லுவோம்... அதனாலே குறிப்பா யாருன்னு சொல்லுங்க..


"அடப்பாவிகளா... இது வேறையா....அப்படின்னா... அடுத்த டீம் தலைவர் சொல்லுங்க... நீங்க வேற தலை முதல் கால் வரை மறைச்சிகிட்டு பெரிய அங்கிய போட்டு கிட்டு வந்திருக்கீங்க.."

மொட்டை மாடி
உடைந்த கிளாசு
பிட்டு படம்
விட்ட குசு
யாருமற்ற வெளியில்
கரைந்து காணாமல்
அனைவருக்கும் தெரிகிறேன்


"ஆமா... இப்ப நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன சொல்றீங்க?"

"இன்னுமா நான் யாருன்னு தெரியலே...(என்று ஆடியன்ஸ் பக்கம் திரும்பி பாட்ஷா ரஜினி மாதிரி நின்று...) 'நான் ஒரு கவுஜை சொன்னா... நூறு கவுஜை சொன்னா மாதிரி' சும்மா அதிரும்லே.."

ஆடியன்ஸ் கும்பல் (கோரசாக): குரு...ஜி குரு...ஜி கு....ரூ....ஜீ...

"ஹே... இப்பவே கண்ணை கட்டுதே... எப்பா... அது ஒரு மீஜீக் செர்ச்சிங் வெப் போர்டல்யா..."

"மொழி விளையாட்டு எனக்கு பிடிக்கும்தான்... ஆனால்... உங்கள் விளையாட்..."

"(அய்யய்யோ... இவரை பேச விட்டா... இன்னும் குழப்பத்தை உண்டு பன்னிருவாறே...) ஒகே.. ஒகே... எனக்கு மட்டும் இல்லே... எல்லாத்துக்கும் புரிஞ்சி போச்சி... நீங்க யாருன்னு... போதும் நிறுத்திக்குவோம்... டீம் 'அ' அடுத்து உங்கள்ளே இருக்குற அடுத்த ஆளு... "


தாம்பரம் ரயில் நிலையம் அருகில் இருக்குற கைவண்டி இட்லி அருமையா இருக்கும், அதுலே ரெண்டு வாங்கிகிட்டு அப்படியே கோடம்பாக்கம் வந்து பாலத்திற்கு கீழே இருக்குற உடுப்பி ஹோட்டல் சட்னி சேர்த்து, கும்மிடிபூண்டி பஸ் ஸ்டாண்டிலே யூசுப் பாய் கடையிலே ஒரு ஆம்லெட்டும் சேர்த்து வச்சி சாப்ட்டா...


"ஹே... ஹே... நிறுத்து... நிறுத்து... எட்டு ரூபா டிபனுக்கு... எதுக்கு எம்பது ஊரு சுத்த சொல்றே.....போதும்.... நீயாருன்னு... தெரியும் அடுத்த டீமு அடுத்த ஆளு..."

இதே மாதிரி ஒரு சூழலில் தன்னுடன் சொற்ப்போரில் தோற்று, மற்ப்போருக்கு செல்லும் தலைவன் அழுகையை, அழகை, அழகாய் அலகாக அளக்கிறார் 'குறுக்கே பேசினியார்' என்ற சங்கப்புலவர்

சொற் போர் வெருண்ட கையின
மற்போர் வென்றுட லழகால்
கற்போர் கனன்று காமுறலால்
மறுப்போர் கழன்று செல்லேர்


"ஷ்.... எப்பா... நானும் மதுர தான்... ஆனா எப்படி புரியற மாதிரி... தமிழ்லே பேசுறேன்... ஆனா ஏனப்பா நீ மட்டும் இப்படி... ஆமா இப்போ எதுக்கு இதை சொல்லி கூட்டத்தை கலைக்குறீங்க... போதும் அடுத்த டீமு அடுத்த ஆளு..."


குதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி பகடி பறக்கும் தானே…
என் நையாண்டி குதுரை வீரன் தானே

அ…சிங்கம் போலே!
அ…சிங்கம் போலே உருண்டு வரான் டொக்கு நையாண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் மொக்கைலே தாண்டி!

ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
பாட்டை திருத்தி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
பாட்டை திருத்தி போட்டு வாங்கு!

ஏ நைனா நைனா நசுக்கு இவனை
பாண்டிமடம் அனுப்பு
ஏ நைனா நைனா நசுக்கு இவனை
பாண்டிமடம் அனுப்பு

ஏ எலியைப் போல
ஏ எலியைப் போல கொடைஞ்சவண்டா எங்க நையாண்டி


(இந்த எடுபட்ட பயபுள்ளைய விட்டுருந்தா... இப்படி மொக்கை பாட்டை பாடியே... சொர்ணக்காவை கொன்னிருக்கும்... அம்புட்டு சண்டை போட்டிருக்க வேணாம்...) "ஷ்... எப்பா... இப்படி எத்தனி பேருடா கெளம்பியிருக்கீங்க... ஹே.. நிறுத்தப்பா.... போதும்ம்ம்.... எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் நீ யாருன்னு...."

அடுத்து அடுத்த டீம்லே அந்தா டவுசரை புடிச்சும் புடிக்காதே மாதிரி ஒருத்தர் நிக்குறார் பாருங்க நீங்க சொல்லுங்க...



அவனும் அவளும்
புணர்தலும்
உணர்தலும்
கொண்டதிந்த வாழ்கை
கை இறுதி வரை
வந்தால் வாழ்கை
அறுந்தால்
வால் அல்ல வாழ்
வாழ்கை பாழ்
இருக்கலாமோ வெறுப்பாக
பற்றியும் பற்றாமலும்
இருக்கலாம் நட்பாக.
(இதை யாரும் பிரசுரிக்காததால் இங்கேயே வெளியானது..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


"இதுவரைக்கும் பில்டிங்கு ஸ்ட்ராங், பேஸ் மண்டு வீக்குன்னு உதார் விட்டுட்டு இருந்தேன்... இப்படி ஒரு அணு குண்டை தூக்கி போட்டு மொத்த பிள்டிங்கையும் தரை மட்டமாக்கிட்டரே... இதுக்கு அப்புறம் இவரு யாருன்னு வேறை, அவர் வாயாலே கேட்க்கவா.. நோ... அடுத்த டீம் கடைசி ஆளு..


....
....
....

"ஹே.... இங்கே பாரு... அதுக்கு மேலே எல்லாம் ஏற கூடாது.... எதுக்கு அது மேலே ஏறனும்...மனசுலே பெரிய ஜாக்கி சான்னு நெனப்பா... பறந்து எம்மேலே விழுந்து அடிக்க போறியா..."

" இந்தா என்னோட இந்த கேமராவிலே... ஒரு போட்டா புடிக்க தான்... நீங்க கூட அப்படியே ஜார்ஜு புஸ்ஸு மாதிரி இருக்கீங்க... "

"அதான் செட்டை சுத்தி கேமரா வச்சிருக்கு... காணாதுன்னு அகேலா கிறேன்லாம் வச்சி படம் புடிச்சிகிட்டு இருக்காங்க... நீ என்னாத்துக்கு கண்டதுக்கும் மேலே எல்லாம் ஏறி போட்டா புடிக்குறே.... போதும்.... கேமராவோட செட்டுக்குள்ளே வரும்போதே...தெரிஞ்சி போச்சி நீ யாருன்னு...பேசாமே... அங்கே குருப்போட போய் நில்லு...அடுத்த டீமு கடைசி ஆளு.."
......
......
......
"அட நீ ஏன்பா... இப்படி பம்மி பம்மி நிக்குறே... விஜையோட 'ஆதி' படத்தை பார்த்த காமன் மென் மாதிரி நிக்க.."

"அதொண்ணும் இல்லே.. அங்கே ஆடியன்ஸ் கும்பல்லே.. என்னோட தங்க மணி நிக்குறா.. அதான்... என்ன செய்யிறதுன்னு தெரியாமே.. நிக்குறேன்.. "

"ஒ அதான் பிரச்சினையா... தெரிஞ்சி போச்சி... தெரிஞ்சி போச்சி... நீங்க யாருன்னு... அப்படியே கமுக்கமா இருக்கணும்... நான் புரோகிராமை முடிக்குற வரை.."

[ஆட்டம் என்ன ஆடினார்கள், எப்படி ஆடினார்கள் என்பதை அடுத்த பதிவுலே பாப்போம், அது வரைக்கும் எங்கும் காணாமே போயிறாதீங்க...இங்கேயே கும்மி அடிச்சிகிட்டு இருங்க..]

Friday 9 October 2009

குடிகாரர்களின் உலகில்..!!!


வழக்கம் போலே உள்ள அறிவிப்பு: இது அண்ணன். கார்த்திகை பாண்டியன் கவுஜைக்கு எதிர் அல்ல.




ஏழு கடையும் நாலு சந்தும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் டாஸ்மாக்கில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
வேப்பமரத்தின் அடியில் உருண்டு கிடக்கிறது
குடிகாரனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை...

குப்பைச்சிறுவன் அதனைத் தேடி எடுத்து
பத்திரபடுத்த யத்தனித்தபோது..

எங்கிருந்தோ வந்த ஏட்டின் குரல் கேட்டு
சிலர் காணாமல் போக..

அசதியில் தூங்கி போகிறான் காவலாளி..!!
இருந்தும் -

எப்போது கடை மீண்டும் திறக்கப்படுகிறதோ
அப்போது தான் சரக்கு கிட்டும்
என்பதை அறியாதவனாக
சந்தின் இருட்டு இடுக்குகளில்
தீராத போதை கொண்டவனாக
உருண்டு கொண்டே கிடக்கிறான் "குடிகாரன்"..!!!


==============================================================




திசைக்கொன்றாய் சிதறிக் கிடந்த
கடலைகளை பொருக்கி
கர்ம சிரத்தையாய் சரகொன்றை
அடித்து கொண்டிருந்தார் தந்தை

"அப்பா!, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.."
பையனின் குரல் கேட்டவுடன்
குற்றம் கொண்டவனாய் நொடிந்து
அதிர்ச்சியுடன் கோப்பையை நீட்டினான்..
பிரவுன் நிற திரவமொன்று
குடித்து முற்றுப்பெறாமல்
ஒழிக்க முடியாத நிலையில்
கோப்பையில் தத்தளித்துக் கொண்டிருந்தது..

"ரம்மு ரொம்ப நல்லா இருக்கும்பா....."
பையன் சொல்ல,
தந்தையின் முகம்
வாடிப் போனது..
"ஐயோ.. டேய்.... அது ரம்மு இல்லை.. பெப்சி.."
மீண்டும் அவன் சொன்னான்..
"இல்லெப்பா.. இது ரம்மு தான்.."
கோபம் கொண்டவனாய்
வெடுக்கென கோப்பையைப்
பறித்துக் கொண்டு சொன்னான்..
"நீ குடிக்குறது என்னன்னு, மீதி வைத்த
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!


Monday 5 October 2009

உன்னை போல் ஒருவன் - ஸ்பெசல் கார்டூன் கமண்ட்ஸ்.