Monday, 12 October 2009

"குயின்பிசர் வழங்கும் ஷேர்பாட்" தீபாவளி ஸ்பெசல் (பகுதி - 1)வரும் தீபாவளியை முன்னிட்டு ஒரு அதிரடி ஆக்சன் படம் தான் போடலாம்னு இருந்தேன், ஆனா ஒரு வாரத்துக்கு முந்தியே வேறு ஒரு அதிரடி படம் ரிலீஸ் ஆகி சக்க போடு போட்டு கொண்டிருக்கிறது, மூக்குக்கு மூக்கு... சாரி, முக்குக்கு முக்கு அதே பேச்சாவும் இருக்கு. அதனாலே இப்ப தான் உங்களுக்காக ஒரு புது புரோகிராம் பண்ணலாம்னு முடிவு செஞ்சி ஆரம்பிச்சது. இந்த புரோகிராம். இது முழுக்க, முழுக்க புன்னகைக்காக, நகைச்சுவைக்காக எழுத பட்டது... எனது மூக்கை பதம் பார்க்க தேட வேண்டாம்... இப்ப ஒழுங்கா இருக்க மூக்கை வச்சே... நான் பார்க்குறதுக்கு கொஞ்சம் சுமாராதான் இருப்பேன்... (ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்)


* * * * * * * * * * * * * * * * * ஓவர் டூ ஸ்டேஜ் * * * * * * * * * * * * * * * *

வெல்கம் வியூவர்ஸ்... இது "குயீன்பிசர்"(அதென்ன? "கிங்பிசர்" தான் இருக்கனுமா?) வழங்கும் 'ஷேர்பாட்'(அதென்ன "ஜாக்(கெட்)பாட்" தான் இருக்கனுமா?அதான்.... அதான் இப்படி...) இந்த புரோகிராமை நமக்கு நடத்தி தர இருப்பது... மதுரை சிங்கம். வைகை கரையின் வேங்கை, வடிவேலு அவர்கள்.

வடிவேலு: நானும் பெரிய ரவடி.. ரவடி.. ரவடின்னு... நிஜ ரவடிங்க கிட்டே எகிறிகிட்டு இருந்தேன்... திடீர்னு ஒரு சாக்கு பைய போட்டு அமுக்கி இங்கே கொண்டு வந்துட்டாங்க.. இருந்தாலும் சமாளிப்போம்... (வெளியிலே எம்பூட்டு தாங்கிட்டோம்!!! ஏன்னா இது!!! எல்லாரும் ஒரு தினுசா இருக்காங்களே???)

* * * * * * * * * வீ வில் ஸ்டார்ட் ஆப்டர் எ சார்ட் கமர்சியல் பிரேக் * * * * * * * *

(வடிவேலுக்கு திடீர்னு ஒரு சந்தேகம், ஒரு வேளை பார்த்திபன் தான் வேஷம் கட்டி நம்மை மாட்டி விட்டாரோன்னு... மொபைலே எடுத்து லண்டன் "லேண்ட் லைனுக்கு" போன் போடுகிறார்)

"வடிவேலு ஹியர்... கேன் ஐ ஸ்பீக் டு மிஸ்டர் பார்த்தி"

"பார்த்திபன் ஹியர்.. வெண்ணை என்னடா வேணும் உனக்கு."

"எப்பா? பார்த்தி... நீ அங்கே தானே.. இருக்கே..."

"டேய்... லூசு... நான் இங்கே இருக்கபோய் தானே போனை எடுத்து பேசுறேன்... அப்புறம் என்ன கேள்வி..."

"என்னனாலும் திட்டிக்க... ஒரு கன்பர்மேசனுக்கு தான் போன் போட்டேன்... என்னோட புரோகிராமு ஒன்னு இப்போ ரெக்கார்டிங் அப்புறமா டீவிலே வரும் பாரு அண்ணன் எப்படி பிச்சி பீராஞ்சிருகேன்னு..."

* * * * * * * * * * * * * * * * * ஓவர் டூ ஸ்டேஜ் * * * * * * * * * * * * * * * * *

"இங்கே இப்போ ரெண்டு டீமு ஆட வந்திருக்காங்க, இது மொத்தம் மூணு ரவுண்டு உள்ள விளையாட்டு... 'குவாட்டர் ரவுண்டு', 'ஹாப் ரவுண்டு' கடைசியாக 'புல் ரவுண்டு' மேற்படி விதிங்கலாம் உங்களுக்கு நல்லாவே தெரியும் அதனாலே நேரே புரோகிராமுக்கு போவோம்... எல்லாரும் அவங்க அவங்களை அறிமுக படுத்திக்கோங்க.. பஸ்ட்டு டீம் 'அ' சொல்லுங்க..."

எல்லோரும் கோரசாக : 'அ' என்று சவுண்டு விடுகிறார்கள்.

"ஐயோ..! ஐயோ...! இதை சொல்லலே.. 'அ' டீமை சேர்ந்தவங்க உங்களை அறிமுகபடுத்துங்க.. தலைவர்லே இருந்து..ஆரம்பிங்க..."

முக்கு கடை - பிராந்தி
சைடு டிஸ்ஸு - பூந்தி
ஊத்தி கொடுத்தா - சாந்தி
அடிச்சு எடுத்தேன் - வாந்தி
பார்த்து சிரிச்சார் - காந்தி
இப்படியும் கவிதை - எழுதி
போட்டு அடிக்கலாம் -அழுத்தி
தண்டோரா என்று சொல்லலாம்.


"எப்பா... இப்பவே கண்ணை கட்டுதே... எம் பேரு இன்னதுன்னு சொல்றதுக்கு... இப்படி அக்குருவம் பண்ணுதே... சரி அடுத்த தல..."


ஆடியன்ஸ் கும்பல் (கோரசாக): இப்படி பொத்தாம் பொதுவா சொல்ல கூடாது... இங்கே எல்லாரும், எல்லாரையும் "தல"ன்னு...சொல்லுவோம்... அதனாலே குறிப்பா யாருன்னு சொல்லுங்க..


"அடப்பாவிகளா... இது வேறையா....அப்படின்னா... அடுத்த டீம் தலைவர் சொல்லுங்க... நீங்க வேற தலை முதல் கால் வரை மறைச்சிகிட்டு பெரிய அங்கிய போட்டு கிட்டு வந்திருக்கீங்க.."

மொட்டை மாடி
உடைந்த கிளாசு
பிட்டு படம்
விட்ட குசு
யாருமற்ற வெளியில்
கரைந்து காணாமல்
அனைவருக்கும் தெரிகிறேன்


"ஆமா... இப்ப நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன சொல்றீங்க?"

"இன்னுமா நான் யாருன்னு தெரியலே...(என்று ஆடியன்ஸ் பக்கம் திரும்பி பாட்ஷா ரஜினி மாதிரி நின்று...) 'நான் ஒரு கவுஜை சொன்னா... நூறு கவுஜை சொன்னா மாதிரி' சும்மா அதிரும்லே.."

ஆடியன்ஸ் கும்பல் (கோரசாக): குரு...ஜி குரு...ஜி கு....ரூ....ஜீ...

"ஹே... இப்பவே கண்ணை கட்டுதே... எப்பா... அது ஒரு மீஜீக் செர்ச்சிங் வெப் போர்டல்யா..."

"மொழி விளையாட்டு எனக்கு பிடிக்கும்தான்... ஆனால்... உங்கள் விளையாட்..."

"(அய்யய்யோ... இவரை பேச விட்டா... இன்னும் குழப்பத்தை உண்டு பன்னிருவாறே...) ஒகே.. ஒகே... எனக்கு மட்டும் இல்லே... எல்லாத்துக்கும் புரிஞ்சி போச்சி... நீங்க யாருன்னு... போதும் நிறுத்திக்குவோம்... டீம் 'அ' அடுத்து உங்கள்ளே இருக்குற அடுத்த ஆளு... "


தாம்பரம் ரயில் நிலையம் அருகில் இருக்குற கைவண்டி இட்லி அருமையா இருக்கும், அதுலே ரெண்டு வாங்கிகிட்டு அப்படியே கோடம்பாக்கம் வந்து பாலத்திற்கு கீழே இருக்குற உடுப்பி ஹோட்டல் சட்னி சேர்த்து, கும்மிடிபூண்டி பஸ் ஸ்டாண்டிலே யூசுப் பாய் கடையிலே ஒரு ஆம்லெட்டும் சேர்த்து வச்சி சாப்ட்டா...


"ஹே... ஹே... நிறுத்து... நிறுத்து... எட்டு ரூபா டிபனுக்கு... எதுக்கு எம்பது ஊரு சுத்த சொல்றே.....போதும்.... நீயாருன்னு... தெரியும் அடுத்த டீமு அடுத்த ஆளு..."

இதே மாதிரி ஒரு சூழலில் தன்னுடன் சொற்ப்போரில் தோற்று, மற்ப்போருக்கு செல்லும் தலைவன் அழுகையை, அழகை, அழகாய் அலகாக அளக்கிறார் 'குறுக்கே பேசினியார்' என்ற சங்கப்புலவர்

சொற் போர் வெருண்ட கையின
மற்போர் வென்றுட லழகால்
கற்போர் கனன்று காமுறலால்
மறுப்போர் கழன்று செல்லேர்


"ஷ்.... எப்பா... நானும் மதுர தான்... ஆனா எப்படி புரியற மாதிரி... தமிழ்லே பேசுறேன்... ஆனா ஏனப்பா நீ மட்டும் இப்படி... ஆமா இப்போ எதுக்கு இதை சொல்லி கூட்டத்தை கலைக்குறீங்க... போதும் அடுத்த டீமு அடுத்த ஆளு..."


குதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி பகடி பறக்கும் தானே…
என் நையாண்டி குதுரை வீரன் தானே

அ…சிங்கம் போலே!
அ…சிங்கம் போலே உருண்டு வரான் டொக்கு நையாண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் மொக்கைலே தாண்டி!

ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
பாட்டை திருத்தி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
பாட்டை திருத்தி போட்டு வாங்கு!

ஏ நைனா நைனா நசுக்கு இவனை
பாண்டிமடம் அனுப்பு
ஏ நைனா நைனா நசுக்கு இவனை
பாண்டிமடம் அனுப்பு

ஏ எலியைப் போல
ஏ எலியைப் போல கொடைஞ்சவண்டா எங்க நையாண்டி


(இந்த எடுபட்ட பயபுள்ளைய விட்டுருந்தா... இப்படி மொக்கை பாட்டை பாடியே... சொர்ணக்காவை கொன்னிருக்கும்... அம்புட்டு சண்டை போட்டிருக்க வேணாம்...) "ஷ்... எப்பா... இப்படி எத்தனி பேருடா கெளம்பியிருக்கீங்க... ஹே.. நிறுத்தப்பா.... போதும்ம்ம்.... எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் நீ யாருன்னு...."

அடுத்து அடுத்த டீம்லே அந்தா டவுசரை புடிச்சும் புடிக்காதே மாதிரி ஒருத்தர் நிக்குறார் பாருங்க நீங்க சொல்லுங்க...அவனும் அவளும்
புணர்தலும்
உணர்தலும்
கொண்டதிந்த வாழ்கை
கை இறுதி வரை
வந்தால் வாழ்கை
அறுந்தால்
வால் அல்ல வாழ்
வாழ்கை பாழ்
இருக்கலாமோ வெறுப்பாக
பற்றியும் பற்றாமலும்
இருக்கலாம் நட்பாக.
(இதை யாரும் பிரசுரிக்காததால் இங்கேயே வெளியானது..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


"இதுவரைக்கும் பில்டிங்கு ஸ்ட்ராங், பேஸ் மண்டு வீக்குன்னு உதார் விட்டுட்டு இருந்தேன்... இப்படி ஒரு அணு குண்டை தூக்கி போட்டு மொத்த பிள்டிங்கையும் தரை மட்டமாக்கிட்டரே... இதுக்கு அப்புறம் இவரு யாருன்னு வேறை, அவர் வாயாலே கேட்க்கவா.. நோ... அடுத்த டீம் கடைசி ஆளு..


....
....
....

"ஹே.... இங்கே பாரு... அதுக்கு மேலே எல்லாம் ஏற கூடாது.... எதுக்கு அது மேலே ஏறனும்...மனசுலே பெரிய ஜாக்கி சான்னு நெனப்பா... பறந்து எம்மேலே விழுந்து அடிக்க போறியா..."

" இந்தா என்னோட இந்த கேமராவிலே... ஒரு போட்டா புடிக்க தான்... நீங்க கூட அப்படியே ஜார்ஜு புஸ்ஸு மாதிரி இருக்கீங்க... "

"அதான் செட்டை சுத்தி கேமரா வச்சிருக்கு... காணாதுன்னு அகேலா கிறேன்லாம் வச்சி படம் புடிச்சிகிட்டு இருக்காங்க... நீ என்னாத்துக்கு கண்டதுக்கும் மேலே எல்லாம் ஏறி போட்டா புடிக்குறே.... போதும்.... கேமராவோட செட்டுக்குள்ளே வரும்போதே...தெரிஞ்சி போச்சி நீ யாருன்னு...பேசாமே... அங்கே குருப்போட போய் நில்லு...அடுத்த டீமு கடைசி ஆளு.."
......
......
......
"அட நீ ஏன்பா... இப்படி பம்மி பம்மி நிக்குறே... விஜையோட 'ஆதி' படத்தை பார்த்த காமன் மென் மாதிரி நிக்க.."

"அதொண்ணும் இல்லே.. அங்கே ஆடியன்ஸ் கும்பல்லே.. என்னோட தங்க மணி நிக்குறா.. அதான்... என்ன செய்யிறதுன்னு தெரியாமே.. நிக்குறேன்.. "

"ஒ அதான் பிரச்சினையா... தெரிஞ்சி போச்சி... தெரிஞ்சி போச்சி... நீங்க யாருன்னு... அப்படியே கமுக்கமா இருக்கணும்... நான் புரோகிராமை முடிக்குற வரை.."

[ஆட்டம் என்ன ஆடினார்கள், எப்படி ஆடினார்கள் என்பதை அடுத்த பதிவுலே பாப்போம், அது வரைக்கும் எங்கும் காணாமே போயிறாதீங்க...இங்கேயே கும்மி அடிச்சிகிட்டு இருங்க..]

39 comments:

முரளிகண்ணன் said...

தண்டோரா,ஜ்யோவ், கேபிள், நர்சிம் என அனைவரின் அறிமுகமும் கலக்கல்.


அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்

வால்பையன் said...

அருமை தலைவா!

கலக்குறிங்க!

தண்டோரா ...... said...

ம்ம்..ஆகட்டும்டா தம்பிராஜா..நடத்து ராஜா...

நர்சிம் said...

அருமை தல.

குறுக்கே பேசினியார்..கலக்கல்ல்ல்ல்ல்ல்

யோ வாய்ஸ் (யோகா) said...

யப்பா இப்பவே கண்ணக்கட்டுதே..

ஜீவன் said...

;;)

கார்த்திகைப் பாண்டியன் said...

கொலைவெறியோடு களம் இறங்கி இருக்கும் தானைத்தலைவன் நைனாவுக்கு வாழ்த்துகள்.. இனி ஆட்டம் களைகட்டும்.. சீக்கிரமா அடுத்த பார்ட்ட எடுத்து விடுங்கப்பு..

ஷாகுல் said...

கலக்கல்

Waiting for அடுத்த Partடு

ஹேமா said...

கும்மி தொடரட்டும்.

ஸ்ரீ said...

:-)))))))))

" உழவன் " " Uzhavan " said...

செம நைனா.. கலக்குங்க

சஹானா beautiful raga said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலி கண்டு போச்சு

ஏன் நைனா இந்த கொலைவெறி..?

குசும்பன் said...

//எட்டு ரூபா டிபனுக்கு... எதுக்கு எம்பது ஊரு சுத்த சொல்றே.//

ஹா ஹா செம கலக்கல் நைனா!
பூந்து விளையாடுறீங்க!

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட்!

cheena (சீனா) said...

செம கலக்கல் - அடுத்த பார்ட் எப்போ நைனா

நல்வாழ்த்துகள் நைனா

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீ நைனா..

உனக்கு ஆப்பு அடிச்சாத்தான் சரிப்படுவ போலிருக்கு..!

சும்மாயிருக்கிறவங்களையும் நீதான் கெடுக்குறதா ஊர் முழுக்க வதந்தி..

ஏதாவது கவிதை போட்டாத்தான எதிர் கவிதை போட முடியும்னு தூண்டிவிட்டு கவிதை போட வைக்கிறதா எல்லாரும் சொல்றாங்க..

என்னிக்காவது ஒரு நாள் அந்தக் கவிஞர்கள் சார்பா நீதான் குத்து வாங்கப் போற..

அ.மு.செய்யது said...

// அழகை, அழகாய் அலகாக அளக்கிறார் 'குறுக்கே பேசினியார்' என்ற சங்கப்புலவர்

சொற் போர் வெருண்ட கையின
மற்போர் வென்றுட லழகால்
கற்போர் கனன்று காமுறலால்
மறுப்போர் கழன்று செல்லேர்
//

ha ha ha ha ha ha !!!
உண்மைத்த‌மிழ‌ன் சொல்வ‌து போலவே ந‌ட‌க்க‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை இறைஞ்சுகிறேன்.

ங்கொய்யால..!!

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்... கலக்கல்..
சூப்பர் கலக்கல் நண்பா

Cable Sankar said...

மதுரை கோனார் கடை கோலா உருண்டை ஒண்ணு பார்சல் நைனாவுக்கு..

நையாண்டி நைனா said...

/* முரளிகண்ணன் said...
தண்டோரா,ஜ்யோவ், கேபிள், நர்சிம் என அனைவரின் அறிமுகமும் கலக்கல்.
அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்*/

நன்றி தல... எழுதுவோம்.

நையாண்டி நைனா said...

/* வால்பையன் said...
அருமை தலைவா!

கலக்குறிங்க!*/

நன்றி தல

நையாண்டி நைனா said...

/* தண்டோரா ...... said...
ம்ம்..ஆகட்டும்டா தம்பிராஜா..நடத்து ராஜா...*/

அண்ணே எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்

நையாண்டி நைனா said...

/* நர்சிம் said...
அருமை தல.

குறுக்கே பேசினியார்..கலக்கல்ல்ல்ல்ல்ல்*/

நன்றி தல

நையாண்டி நைனா said...

/* யோ வாய்ஸ் (யோகா) said...
யப்பா இப்பவே கண்ணக்கட்டுதே..*/

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கும் அப்படி தான் இருக்கு

நையாண்டி நைனா said...

/* ஜீவன் said...
;;)*/

::)))))))

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
கொலைவெறியோடு களம் இறங்கி இருக்கும் தானைத்தலைவன் நைனாவுக்கு வாழ்த்துகள்.. இனி ஆட்டம் களைகட்டும்.. சீக்கிரமா அடுத்த பார்ட்ட எடுத்து விடுங்கப்பு..*/

முயற்சி பன்னுவோமப்பு...

நையாண்டி நைனா said...

/* ஷாகுல் said...
கலக்கல்

Waiting for அடுத்த Partடு*/

அப்படியே செய்வோம் நண்பா

நையாண்டி நைனா said...

/* ஹேமா said...
கும்மி தொடரட்டும்.*/

சரி அக்கா... நீங்க சொல்லிட்டீங்க.... மேலும் அது தான் நம்ம வேலையாவும் இருக்கு...

நையாண்டி நைனா said...

/* ஸ்ரீ said...
:-)))))))))*/

:-))))

நையாண்டி நைனா said...

/* " உழவன் " " Uzhavan " said...
செம நைனா.. கலக்குங்க*/

நன்றி அண்ணாத்தே,,,,

நையாண்டி நைனா said...

/* சஹானா beautiful raga said...
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி கண்டு போச்சு

ஏன் நைனா இந்த கொலைவெறி..?*/

அப்படியா.. நான் எல்லாரையும் காமடி பண்றேன்.. நீங்க என்னை வச்சு... ஹூம் நடத்துங்க..

நையாண்டி நைனா said...

/* குசும்பன் said...
//எட்டு ரூபா டிபனுக்கு... எதுக்கு எம்பது ஊரு சுத்த சொல்றே.//

ஹா ஹா செம கலக்கல் நைனா!
பூந்து விளையாடுறீங்க!

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட்!*/

நன்றி குரு..

நையாண்டி நைனா said...

/*cheena (சீனா) said...
செம கலக்கல் - அடுத்த பார்ட் எப்போ நைனா

நல்வாழ்த்துகள் நைனா*/

நன்றி அய்யா...

நையாண்டி நைனா said...

/* உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பீ நைனா..

உனக்கு ஆப்பு அடிச்சாத்தான் சரிப்படுவ போலிருக்கு..!

சும்மாயிருக்கிறவங்களையும் நீதான் கெடுக்குறதா ஊர் முழுக்க வதந்தி..

ஏதாவது கவிதை போட்டாத்தான எதிர் கவிதை போட முடியும்னு தூண்டிவிட்டு கவிதை போட வைக்கிறதா எல்லாரும் சொல்றாங்க..

என்னிக்காவது ஒரு நாள் அந்தக் கவிஞர்கள் சார்பா நீதான் குத்து வாங்கப் போற..*/

அன்னிக்கு நான் உங்களை இழுத்து விட்டுட்டு ஓடி போயிருவேன்

நையாண்டி நைனா said...

/* அ.மு.செய்யது said...
// அழகை, அழகாய் அலகாக அளக்கிறார் 'குறுக்கே பேசினியார்' என்ற சங்கப்புலவர்

சொற் போர் வெருண்ட கையின
மற்போர் வென்றுட லழகால்
கற்போர் கனன்று காமுறலால்
மறுப்போர் கழன்று செல்லேர்
//

ha ha ha ha ha ha !!!

உண்மைத்த‌மிழ‌ன் சொல்வ‌து போலவே ந‌ட‌க்க‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை இறைஞ்சுகிறேன்.

ங்கொய்யால..!!*/

நன்றி நண்பா...

But ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
கலக்கல்... கலக்கல்..
சூப்பர் கலக்கல் நண்பா*/

தேங்க்ஸ் தோழா

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
மதுரை கோனார் கடை கோலா உருண்டை ஒண்ணு பார்சல் நைனாவுக்கு..*/

நோ... ஒரு குவாட்டரும் வேணும்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எங்க நைனாவா இது !!

ஏன்ராசா கலக்கிபூட்டிங்க நைனா

குத்து குத்து கும்மாங்குத்து ....

கிறுக்கல் கிறுக்கன் said...

நடக்கட்டும் நடக்கட்டும்

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல நகைச்சுவை. ரசிச்சு சிரிக்க முடிந்தது.