என்னை விஜயின் வில்லிலிருந்து காப்பாற்றிய பதிவுலக தந்தங்களுக்கு....( எத்தனை நாளைக்குத்தான் தங்கங்கள் என்று சொல்வது?)
விஜய் - பிரபுதேவா கூட்டணி கொண்ட "போக்கிரி" நான் பார்க்கவில்லை. அதனால் காத்திருந்தேன் பார்க்க, "வில்லை".
உங்கள் கருத்துக்கு பின் பார்க்கலாம் என்று இருந்தேன். இப்போது அதன் விமர்சனங்களை பார்க்கும் போது " நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்... " என்ற வாத்தியார் பாடல் காதிலே தேன் பாச்சி செல்கிறது.
"சரி என்னதான்?" எடுத்திருக்காங்கன்ணு போய் பார்க்கலாம் என்றால், "பாவி மக்கா....! வச்சிருக்கிற விலை????". "அடங்கொக்கா மக்க" என்று சொல்ல வைக்கிறது. 200 ரூபாயாம்..! மல்டி பிலக்ஸில். இது என்னை போல், பிச்சைக் காசு சம்பளம் வாங்குகிற சாதாரண தகவல் தொழில் நுட்ப பொறியாளனுக்கு சாத்தியமா? C.E.O-வா இருந்தா மட்டும் தான் சாத்தியம், இது சத்தியம் என்று, படம் பார்க்கிற எண்ணத்தை குழி தோண்டாமலே புதைத்தேன்.
அதுலெ ஒரு 100 ரூபாய எடுத்து, ஆதரவற்ற சிறுவர்களுக்கு படிக்க ஏதோ நூலகம் கட்ராங்கலாம் அதுக்கு கொடுத்திட்டு. மீதம் இருக்கிற 100 ரூபாயிலே, சமத்துவபுரம் சென்று ஒரு குவாட்டர் அடிக்கலாம் என்று முடிவு செய்தேன். "சரி... நல்லது எல்லாம் பண்றே, மொத்தமா 200 ரூபாயையும் கொடுத்திட்டு நிம்மதியா இருக்கலாமே...?." என்று தோன்றுகிறதா? உங்களுக்கு. உங்களோட இந்த இந்த நல்ல எண்ணம் தாங்க என்னை உலுக்கி எடுக்குது.
என்னையும், என்னோட 200 ரூபாயையும் காப்பாத்த நீங்க என்ன..! ஒரு மரண வேதனைய அனுபவிச்சிருப்பீங்க... வில்லு படம் பார்த்து. அந்த துக்கம் என் தொண்டைய அடைகிதுங்க, அதை தொரக்க தான் இந்த முயற்சி. கண்டிப்பா உங்க சார்பாகவும் ஒரு கப் வச்சி, அதையும் நானே அடிச்சிறுவேன்.
இங்கு வில்லு படத்தை பார்க்க நான் வைத்திருந்த 200 ரூபாயை காப்பாற்றி, என்னையும் காப்பாற்றிய சக பதிவுலக தந்தங்களே, உங்களுக்கு நன்றி.
Thursday, 15 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
எனக்கு ஆன செலவு $30 ரெண்டு டிக்கெட் மட்டும்.
ஆனா வில்லு பதிவு இன்னும் வெற்றிகரமா ஒடிட்டிருக்கு நம்ம கடையில.
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.
விஜய் படம் போட்ட புத்தகத்தைக் கூட படிக்க நான் ரெம்ப யோசிப்பேன்.
நம்ம வலையுலக நண்பர்களால் நான் பலமுறை காப்பாற்றப்பட்டிருக்கேன்.
ஆனாலும் உங்கள் மதிவு டூ மச்சா சிரிக்க வெச்சிடுச்சு.
:)))))))))))))))
/* குடுகுடுப்பை said...
எனக்கு ஆன செலவு $30 ரெண்டு டிக்கெட் மட்டும்.
ஆனா வில்லு பதிவு இன்னும் வெற்றிகரமா ஒடிட்டிருக்கு நம்ம கடையில.
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.*/
முதல் வருகைக்கு, முதற்கண் நன்றி வருங்கால முதல்வர் குடுகுடுப்பையாரே.
ஆமா நீங்க எந்த கம்பனிலே C.E.O-வா இருக்கீங்க?
உங்க பதிவெல்லாம் படிச்சிட்டு தானே... சரக்கடிக்க போனேன்.
நானும் பார்க்கல... ஆனா எனக்கு வடிவேலு காமிடி பிடிக்கும்...
வருகைக்கு மிக நன்றி.திரு.புதுகைத் தென்றல் அவர்களே
/*விஜய் படம் போட்ட புத்தகத்தைக் கூட படிக்க நான் ரெம்ப யோசிப்பேன்.*/
ஆகா...! அவ்வளவு முன்னெச்சரிக்கையா?
நாங்கெல்லாம் விஜய் படம் போட்டிருக்கிற தியெட்டருக்கே போறோமே...!
/*நம்ம வலையுலக நண்பர்களால் நான் பலமுறை காப்பாற்றப்பட்டிருக்கேன்.*/
அந்த நன்றிக்கு தான் இந்த பதிவே
/*ஆனாலும் உங்கள் மதிவு டூ மச்சா சிரிக்க வெச்சிடுச்சு.
:)))))))))))))))*/
மிக நன்றி.
கலக்கல்!
/*நானும் பார்க்கல... ஆனா எனக்கு வடிவேலு காமிடி பிடிக்கும்...*/
வாங்க... தலை வாங்க... திரு.VIKNESHWARAN அவர்களே.
வடிவேலு காமெடியும் சிறப்பாக இல்லை என்றல்லவா கேள்விபட்டேன்.
/*narsim said...
கலக்கல்!*/
வருக... வருக.... மதிப்பிற்குரிய அண்ணன் narsim அவர்களே.
நன்றி.
**********************
என்னை வச்சு காமெடி, கீமிடீ பண்ணலையே.....?
//" நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்... " என்ற வாத்தியார் பாடல் காதிலே தேன் பாச்சி செல்கிறது.//
--நானும் பிழைத்து கொண்டேன், நம்ம 'குடுகுடுப்பையர்' புன்னியத்தால்.
30$, why would any1 want to waste so much money on such a crap!
Grow up people! read the reviews before you waste your hard earned cash!
அன்பு ஷாஜி அவர்களே....
வருகைக்கும், பதிலுரைக்கும் மிக நன்றி.
/* ஷாஜி said...
--நானும் பிழைத்து கொண்டேன், நம்ம 'குடுகுடுப்பையர்' புன்னியத்தால்.*/
மிக மிக நன்றி, பதிவர்களுக்கு.
/*Joe said...
30$, why would any1 want to waste so much money on such a crap!
Grow up people! read the reviews before you waste your hard earned cash!*/
வருகைக்கு மிக நன்றி Joe அவர்களே...
நல்ல படம் எடுக்கலாம், ஆனா நடிக்க வருகிற அரை வேக்காடுகள் எல்லாம் முதல் அமைச்சர் ஆகணும் என்ற கனவு இல்லாம நல்ல நடிகன் ஆகணும் என்ற லட்சியததோடு வரணும்.
Nan thappichiten pa.. :-)
தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க
karisak kaattu ponnu .. Sl No: 41
http://tamiluzhavan.blogspot.com/2008/11/blog-post_13.html
Video: kozhi thinnum pasu .. Sl No: 18
http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post.html
kuruvi .. Sl No: 46
http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_1936.html
நன்றியுடன்..
உழவன்
/*" உழவன் " " Uzhavan " said...
Nan thappichiten pa.. :-)
தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க
karisak kaattu ponnu .. Sl No: 41
http://tamiluzhavan.blogspot.com/2008/11/blog-post_13.html
Video: kozhi thinnum pasu .. Sl No: 18
http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post.html
kuruvi .. Sl No: 46
http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_1936.html
நன்றியுடன்..
உழவன்*/
வருகைக்கு நன்றி. திரு." உழவன் " " Uzhavan " அவர்களே,
வாக்களிச்சிட்டா போச்சி.
ஆமா..., திருமங்கலத்திலே கொடுத்த மாதிரி நீங்க தரடமாட்டீங்களா?
ஐயோ...ஐயோ... நான் காசை கேட்டேங்க...
ஹா... ஹா.... மிக ரசித்தேன்.
வருகைக்கு மிக நன்றி திரு.கூட்ஸ் வண்டி அவர்களே....
போக்கிரில ஒரு சிறந்த பாடல் ஆடல் இருந்தது- என் செல்ல பேரு ஆப்பிள் -உமைத் கான்.
வில்லு படத்தில் அது கூட இல்லை போல.
படிக்காதவன் கூட மிகவும் அறுவை என்று கேள்வி.
நான் கடவுள் தான் கொஞ்சம் நம்பிக்கை தருகிறது, பார்ப்போம்.
குப்பன்_யாஹூ
/*குப்பன்_யாஹூ said...
போக்கிரில ஒரு சிறந்த பாடல் ஆடல் இருந்தது- என் செல்ல பேரு ஆப்பிள் -உமைத் கான்......*/
வருகைக்கு மிக நன்றி திரு.குப்பன்_யாஹூ அவர்களே, தங்கள் கருத்துக்கும் மிக நன்றி
"கரிசக்காட்டுப் பொண்ணு" கவிதைக்கு தாங்கள் அளித்த மனமார்ந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி !
எனது தாத்தா, பாட்டியை மனதில் வைத்துத்தான் நானும் இக்கவிதையை எழுதினேன்.
உழவன்
Post a Comment