Wednesday, 21 January 2009

டிஸ்கோ போகும் பெண்கள்...கும்பர் வாழ்க.

மும்பை, ஏழு நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதி, வெள்ளி இரவு.. இளைஞர்களின் கொண்டாட்டம்.. குடும்பஸ்தர்களின் திண்டாட்டம்..(குடும்பத்தோடு போனால் உள்ளே விட மாட்டாங்க.) நிறைய காதலர்கள்.. அதைவிட நிறைய கல்லூரி மாணவ மாணவிகள் குரூப் என பட்டாம்பூச்சி(விட்டில்?)மயம்.. ஆட்டம், பாட்டம், பெல்லி ஆட்டம், பாட்டம் ஆட்டம்..... என அடுத்த கட்ட முயற்சி.. அங்கே தான் நம் கதை நாயகர்கள் நைனாவும் அவனோட மைனாவும் மது கோப்பையை நுனிவிரலில் எடுத்து முன் உதடுகளில் வைத்து..இப்படி நுனிநளினங்கள் எல்லாம் வெளியேதான்..டிஸ்கொ அரங்கினுள் அதே அவர்கள் கெட்ட ஆட்டம் தான்..அட இதில் என்ன ஒரு வாழ்க்கைத் தத்துவம்.

"என்ன...பாலிவுட் பகல் கனவு கன்னி ஜில்லிகா ஜிக்காவத் வருவாளா? நம்ம உள்ள போகலாமா?"

" வருவா.... வெயிட்பண்ண வேண்டாம்...நாம உள்ளே போவோம்....அங்க பார்த்தியா.. குத்து ஆட்டம் போடுற பாக்கி பாவண்த் .." என்று சொல்லிக்கொண்டே ஒரு 'வினோத' சைகை காட்டி சிரித்தாள்.

ஒரு சிகப்பு டீ சர்ட் இளைஞன் க்ராஸ் செய்தான்..

"நல்லா இருக்கான் இல்ல.."
"இல்ல.. செளவ்செளவ் காய் மாதிரி இருக்கான்.. நீ இன்னும் அவன் முகத்தை பார்க்கல....நீதான் சூப்பரு நைனா.... அதனாலே தானே உன்னை புடிச்சேன்." -

"ஹே...நைனா.... ஆமா.. நீ ஏன்? இந்த பக்கமாவே பார்த்து பேசிட்டு இருக்க? அங்கே பாரு ஜில்லிகா ஜிக்காவத் வந்தாச்சு,"
"ஸோ வாட்? நம்ம பக்கத்து பில்டிங் சேட்டு பொண்ணு, வந்திருக்கா, செம செக்சியா இருக்கால்லோ, அவளை பார்த்து கிட்டு இருக்கேன்"

"ஹேய்... ஜில்லிகா ஜிக்காவத்தோட ஹிப் மூவ்மென்டை பாரேன், அவளோட எடுப்பான இடுப்பை பாரேன்..."
"நான் எங்க அதப்பார்த்தேன்.. இன்னும் சேட்டு பொண்ணத்தான் பார்த்துட்டே இருக்கேன்.. "

இதைக் கேட்டுக்கொண்டே இருந்த மைனா....
"ஆமா.. இவரு பெரிய டாஸ்மாக் "டங்குவாரு"... ஒரு ஐட்டம் டேஸ்ட் பண்ணிட்டாருண்னா வேற ஐட்டத்தை தொடவே மாட்டாறு .... காசை கொட்டி வந்தத்துக்கு... கூட நாலு ஃபிகரை ரசிச்சிட்டு போவியா...!."

"என்னோட காசிலே ஓசிக்கு வந்ததும் இல்லாம ஆரம்பிச்சுட்டியா.... ஹே அந்த டாஸ்மாக் "டங்குவாரு" புரியலடி.. எக்ஸ்பைளைன் ப்ளீஸ்.."

"சில டாஸ்மாக் டங்குவாருங்களை சரக்கு அதிகமா அடுக்கி வச்சிருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போய் விட்டாங்கலாம், எதுனாலும் எவ்ளோனாலும் அடிச்சிக்கலாம் என்று சொல்லி. ஆனாலும் அந்த டங்குவாருங்க அதது, அதது அடிக்கிற சரக்கை மட்டுமே எடுத்து அடிச்சிசாம்... அடிச்சி கொஞ்ச நேரததிலையே மட்டையாகி போச்சாம்."

இப்படி நடந்துச்சோ இல்லையோ.. ஆனா கும்பரோட பார்வையும், வார்த்தைகளும்.. ஒரு சம்பவத்தோட அழக வர்ணிக்கிறதுனா இதைவிட சிறப்பா யாரும் எழுத முடியாதுங்கறதும் மட்டும் உண்மையோ உண்மை..
பேசிக்கொண்டே ஒரு அறைக்குள் நுழைந்து மறைந்துபோனார்கள்..

அந்த பாடல்..


கோர்பெல் கண்டார் கோர்பெலே கண்டார்
கோர்தழல் கங்குணை அன்ன
பகார்டிகண்டார் பகார்டியே கண்டார்
பர்னட்ஸ் கண்டாரும் அஃதே
விழிகொண்ட கண்ணார் யாரே
விடியவிடிய முடியக் கண்டார்



விளக்கம்:
கோர்பெல் சரக்கு அடிப்பவர்கள் கோர்பெலே அடித்தார்கள், அதை மட்டுமே அடித்தார்கள். தன்னை ஒட்டி இருக்கும் அனைத்தையும் கோர்த்து எரியும் கங்கு போன்ற பகார்டி குடிப்பவர்கள் அதனையே குடித்தார்கள், பர்னட்ஸ் சரக்கை சுவைப்பவர்களின் நிலையும் அதுதான்.... விழிப்பாய் இரு என்று பாடம் சொல்லும், விழி கொண்ட கண்களை உடைய, யாரும் விடியும் வரை கூட இருக்க முடியவில்லை? என்னே காதல் மக்களுக்கு, சரக்கின் மேல்.


மிகைப்படுத்தி வர்ணித்தாலும், எத்தனை அழகான சொற்கள்..எவ்வளவு கற்பனை..அதுதான் கும்பர்..!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அனுமதி வழங்கிய திரு.நர்சிம் அவர்களுக்கு நன்றி...

15 comments:

www.narsim.in said...

நக்கலும் நையாண்டியும் மிகக் கடினமான ஒன்று.. அதை திறம்பட செய்து பெயரை காப்பாற்றிக் கொள்கிறீர்கள் நைனா.. கலக்கல்.. மிக மிக ரசித்தேன்..

Vidhya Chandrasekaran said...

நையாண்டி நைனா நீங்க மெய்யாலுமே நையாண்டி நைனா தான்:)

Cable சங்கர் said...

கும்பர் வாழ்க..

சந்தனமுல்லை said...

ROTFL

Anonymous said...

அற்புதம் நைனா

அன்புடன் மண்சட்டி, அமீரகம்.

கபீஷ் said...

சூப்பர்!!!!, நைநை!

நையாண்டி நைனா said...

/*narsim said...
நக்கலும் நையாண்டியும் மிகக் கடினமான ஒன்று.. அதை திறம்பட செய்து பெயரை காப்பாற்றிக் கொள்கிறீர்கள் நைனா.. கலக்கல்.. மிக மிக ரசித்தேன்..*/

நன்றி...
எல்லாம் உங்கள் பெருந்தன்மை.

நையாண்டி நைனா said...

/*வித்யா said...
நையாண்டி நைனா நீங்க மெய்யாலுமே நையாண்டி நைனா தான்:)*/

புதிய வருகை.... உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
கும்பர் வாழ்க..*/

வாங்க அண்ணா....
நன்றி.

நையாண்டி நைனா said...

/*சந்தனமுல்லை said...
ROTFL*/
வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*http://elangovan68.blogspot.com said...
அற்புதம் நைனா

அன்புடன் மண்சட்டி, அமீரகம்.*/

முதல் வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*கபீஷ் said...
சூப்பர்!!!!, நைநை!*/
வருக வணக்கம். நன்றி.

dubukku said...
This comment has been removed by a blog administrator.
முரளிகண்ணன் said...

அட்டகாசம் நைனா

நையாண்டி நைனா said...

/*முரளிகண்ணன் said...
அட்டகாசம் நைனா*/

நொம்ப நன்றி தல...