பார்வை ஒன்று:
அண்ணணுடைய கோபம் என்ன? தமிழர்கள், இணையத்தில் பாலியல் தகவல்களை தேடுகிறார்கள் என்று தானே? இது எவ்ளோ நல்ல செய்தி, இதற்காக நாம் வருத்தப்பட வேண்டியதில்லை. சந்தோசமே பட வேண்டும். நாம் எப்பொழுது ஒரு பொருளை தீவிரமாக தேடுவோம்? அந்த பொருள் நமக்கு மிக எட்டும் தூரத்தில் இல்லை என்றால் தானே. அப்படி என்றால், இந்த பொருளும் நமக்கு எட்டும் தூரத்தில் இல்லை, நமது சமூகம், இதனை இன்னும் பரவலாக்க வில்லை என்று தானே தெரிகிறது.
பார்வை இரண்டு:
தமிழகத்தில் ஓடும் வயது வந்தவர்களுக்கு மட்டுமே ஆனா சினிமாவில் எத்தனை படம் தமிழ் படம்? என்னால், நான் ஒரு தமிழ் படம் பார்த்தேன் என்று தைரியமாக சொல்ல முடியும், ஆனால் என்னால் மலையாள படம் பார்த்தேன் என்று சொல்ல முடியவில்லையே, ஏன்? என்ன! தான் அவர்கள் வாழ்க்கையை புரட்டி புடம் போட்ட நல்ல படங்களை எடுக்கிறார்கள் என்றாலும்.
தமிழனின் ரசனை அவ்வாறு உள்ளது. அதனால் தான் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்வீர்களே ஆனால், நாம் அந்த மாதிரி படங்கள் வெளி இடப்படும் அரங்கங்களை கண்டாலே தெரியும், நாம் அந்த மாதிரி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று. இன்னும் உங்களின் வாதம் நிறைவு செய்யப்பட வில்லை என்றால், மேலும் கூறுகிறேன். மலையாளப்பட முன்னணி நடிகர்களே அவர்களின் படம் வெளியிடும் நாள் 'இந்த மாதிரி' படம் வெளியிடப்படும் நாளில் அமைவததில்லை என்பதும், அவர்களே அந்த மாதிரி படங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோர்களை கண்டித்திருக்கிறார்கள் என்பதும் நாம் அறியாததா? அந்த கண்டிப்பும், சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல, தமது சம்பாத்தியம் பாதிக்கிறது என்ற அக்கறை என்பதும், நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
ஹிந்தி படங்கள், மற்றும் அவர்களின் காட்சி அமைப்பையும், உடையையும் நான் விளக்க வேண்டியது இல்லை என்று எண்ணுகிறேன். மேலும் தமிழ் திரை உலகிலும் அதிகமான மும்பை நடிகைகள் வந்து இருப்பதன் காரணமும் அவர்களின் "திறமையை" வெளிப்படுத்தும் திறமையே அன்றி வேறில்லை என்றும் நாம் அறிவோமே.
பார்வை மூன்று:
நமது நாட்டின் முக்கிய வருவாயாக இருப்பது சுற்றுலாத் துறை. நம்மை காணவரும் வெளி நாட்டவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பது நமது பாரம்பரிய கட்டிட கலை என்றால், அவர்களுக்கு மிக அதிசயமாக இருப்பது நமது குடும்ப முறையும், உடை கலாசாரமும். பெரு நகரங்களில் இருக்கும், பிற நாட்டு கலாசாரத்தை பேண நினைக்கும் நம் நாட்டு கோமாளிகளை விட்டு விடுங்கள்..ப்ளீஸ்.
இந்த நாட்டு மக்களின் உடையும் சரி, நடையும் சரி பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இல்லையே. பின்னே அவர்களின் பாலியல் வாழ்க்கையும், தாம்பத்யமும் எவ்வாறு இருக்கும் என்பதினை அறியும் முயற்சியாக கூட இருக்கலாமே!
முடிவாக, தேடிய விவரங்கள் தானே உள்ளது. அதன் முடிவு என்ன? என்பது இல்லையே. தமிழில் சமுதாயத்தை சீர் படுத்தும் எண்ணங்களே, செய்திகளே, இலக்கியங்களே இருக்கும். சீர் கெடுக்கும் செய்திகள், பதிவுகள் 'வலை' வீசி தேடினாலும் கிடைக்காது.
டெயில் பீஸ்:
இங்கு மும்பையில், ஒரு கருத்தடை மாத்திரைக்கான விளம்பரம் வருகிறது. அது இன்னும் தமிழகத்தில் வரவில்லை என்று எண்ணுகிறேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மதிப்பிற்குரிய திரு கோவி, அண்ணணுடைய பதிவு: தமிழர்களுக்கு பாலியலில் ஏன் இவ்வளவு ஆர்வம் ?
23 comments:
//பார்வை ஒன்று:
அண்ணணுடைய கோபம் என்ன? //
கோபம் எதுவும் இல்லை, வியப்பு தான் !
//சந்தோசமே பட வேண்டும். நாம் எப்பொழுது ஒரு பொருளை தீவிரமாக தேடுவோம்? அந்த பொருள் நமக்கு மிக எட்டும் தூரத்தில் இல்லை என்றால் தானே. அப்படி என்றால், இந்த பொருளும் நமக்கு எட்டும் தூரத்தில் இல்லை, நமது சமூகம், இதனை இன்னும் பரவலாக்க வில்லை என்று தானே தெரிகிறது//
அதுசேரி, தேடினார்கள் வியாதி வந்தது என்று எய்ட்ஸில் இரண்டாவது மாநிலம் என்பதற்காக பெருமை பட முடியுமா என்ன ?
/பார்வை இரண்டு:
தமிழகத்தில் ஓடும் வயது வந்தவர்களுக்கு மட்டுமே ஆனா சினிமாவில் எத்தனை படம் தமிழ் படம்? என்னால், நான் ஒரு தமிழ் படம் பார்த்தேன் என்று தைரியமாக சொல்ல முடியும், ஆனால் என்னால் மலையாள படம் பார்த்தேன் என்று சொல்ல முடியவில்லையே, ஏன்? என்ன! தான் அவர்கள் வாழ்க்கையை புரட்டி புடம் போட்ட நல்ல படங்களை எடுக்கிறார்கள் என்றாலும்./
'அந்த' மலையாளப்படங்களும் தமிழர்களுக்காகத் தானே எடுக்கிறார்கள் :)
/ஹிந்தி படங்கள், மற்றும் அவர்களின் காட்சி அமைப்பையும், உடையையும் நான் விளக்க வேண்டியது இல்லை/
தமிழில் அப்படி இப்படி நடித்த அசின் கூட அங்கே கவர்ச்சிக்காக சக்கையாக பிழியப்பட்டார்.சரிதான்
/சீர் கெடுக்கும் செய்திகள், பதிவுகள் 'வலை' வீசி தேடினாலும் கிடைக்காது.
//
அதெல்லாம் இருக்கு, நீங்க சரியாக தேடி இருக்க மாட்டீர்கள் :)
/*'அந்த' மலையாளப்படங்களும் தமிழர்களுக்காகத் தானே எடுக்கிறார்கள் :)*/
அண்ணா... இதற்கான பதிலை நான் பதிவிலே கூறி இருக்கிறேனே.
***தமிழனின் ரசனை அவ்வாறு உள்ளது. அதனால் தான் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்வீர்களே ஆனால், நாம் அந்த மாதிரி படங்கள் வெளி இடப்படும் அரங்கங்களை கண்டாலே தெரியும், நாம் அந்த மாதிரி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று. இன்னும் உங்களின் வாதம் நிறைவு செய்யப்பட வில்லை என்றால், மேலும் கூறுகிறேன். மலையாளப்பட முன்னணி நடிகர்களே அவர்களின் படம் வெளியிடும் நாள் 'இந்த மாதிரி' படம் வெளியிடப்படும் நாளில் அமைவததில்லை என்பதும், அவர்களே அந்த மாதிரி படங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோர்களை கண்டித்திருக்கிறார்கள் என்பதும் நாம் அறியாததா? அந்த கண்டிப்பும், சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல, தமது சம்பாத்தியம் பாதிக்கிறது என்ற அக்கறை என்பதும், நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.***
//மரியாதைக்குரிய அண்ணன் திரு.கோவி.கண்ணன் //
மரியாதை, திரு எல்லாம் போட்டு ரொம்ப கேவலப்படுத்துறிங்க, நான் என்ன தப்பு செஞ்சேன்.
கோவி.கண்ணன் என்று போட்டாலே போதும். :)))))
//'இந்த மாதிரி' படம் வெளியிடப்படும் நாளில் அமைவததில்லை என்பதும், அவர்களே அந்த மாதிரி படங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோர்களை கண்டித்திருக்கிறார்கள் //
ஷகீலாவை அவங்க தான் சென்னைக்கு பேக்(கப்) பண்ணி அனுப்பினார்களாமே. மலையாளிகள் தற்பொழுது திருந்திவிட்டார்கள், ஆனால் நம் நகரங்களில் தான் அஞ்சரைக்குள்ள வண்டி 50 ஆவது முறையாக போட்டாலும் பார்ப்பதற்கு ஆட்கள் உண்டு.
/*மரியாதை, திரு எல்லாம் போட்டு ரொம்ப கேவலப்படுத்துறிங்க, நான் என்ன தப்பு செஞ்சேன்.*/
பல பேரு உள்ளத்தை கொள்ளை கொண்டிருகிறீர்கள், அது தான் நீங்கள் செய்திருக்கும் தப்பு.
மேலும் எங்களை மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் இடத்தை நிரப்ப சரக்கு பத்தாது... அதனாலே இப்படி போட்டு ஒப்பேத்திக்கிறேன்.
/*ஷகீலாவை அவங்க தான் சென்னைக்கு பேக்(கப்) பண்ணி அனுப்பினார்களாமே. */
ஏன்? அவர்களின் 'கல்லா' காற்றாடுகிறது என்று தானே.
'பார்வை மூன்றை' பற்றி ஒண்ணும் சொல்லக் காணோமே
// கோவி.கண்ணன் said...
'அந்த' மலையாளப்படங்களும் தமிழர்களுக்காகத் தானே எடுக்கிறார்கள் :)//
இது அநியாயம்..அக்கிரமம்
நல்ல படம் எடுத்தால் அவங்களுக்கு ரசனை அதிகம்..ஆனா அதே அவங்க "அந்த" படம் எடுத்தா அது தமிழர்களுக்காகவா! (மறுபடியும் என் முதல் வரி :-D)
//நமது நாட்டின் முக்கிய வருவாயாக இருப்பது சுற்றுலாத் துறை. நம்மை காணவரும் வெளி நாட்டவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பது நமது பாரம்பரிய கட்டிட கலை என்றால், அவர்களுக்கு மிக அதிசயமாக இருப்பது நமது குடும்ப முறையும், உடை கலாசாரமும். பெரு நகரங்களில் இருக்கும், பிற நாட்டு கலாசாரத்தை பேண நினைக்கும் நம் நாட்டு கோமாளிகளை விட்டு விடுங்கள்..ப்ளீஸ்.
இந்த நாட்டு மக்களின் உடையும் சரி, நடையும் சரி பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இல்லையே. பின்னே அவர்களின் பாலியல் வாழ்க்கையும், தாம்பத்யமும் எவ்வாறு இருக்கும் என்பதினை அறியும் முயற்சியாக கூட இருக்கலாமே!//
இதெல்லாம் உங்களுக்கே ஓவராக தெரியலையா, வெளிநாட்டுக்காரன் தேடினால் indian sex என்று தான் தேடி இருப்பான். tamil, thamil என்றெல்லாம் தேடி இருக்கமாட்டான், வெளிநாட்டுக்காரனுக்கு இங்கே 21 மாநிலங்களுக்கும் அதற்கென்றே தனித்தனி மொழி எல்லாம் இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. குறிப்பாக இந்தியாவை வரலாற்று ரீதியாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிற நாட்டினருக்கு குறைவே
/*கிரி said...
// கோவி.கண்ணன் said...
'அந்த' மலையாளப்படங்களும் தமிழர்களுக்காகத் தானே எடுக்கிறார்கள் :)//
இது அநியாயம்..அக்கிரமம்
நல்ல படம் எடுத்தால் அவங்களுக்கு ரசனை அதிகம்..ஆனா அதே அவங்க "அந்த" படம் எடுத்தா அது தமிழர்களுக்காகவா! (மறுபடியும் என் முதல் வரி :-D)*/
ஆமா... அதானே, நல்லா சொல்லுங்க... கிரி...
அண்ணா.... உலக அதிசயத்தில் இடம் பெற ஓட்டு போட்டியில் தாஜ்மகலுக்கு அடுத்து இந்தியாவில் இருந்து பங்கெடுத்தது தமிழ் வளர்த்த மதுரையில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவில் தான். அதனால் வந்த செல்வாக்காக கூட இருக்கலாம்.
:-)))))
/*அதிஷா said...
:-)))))*/
ஆகா... வாங்க.. வாங்க.. வருகைக்கு நன்றி.
mallu நு தேடி பாருங்க புரியும்
At 20 January 2009 01:17 , Blogger கிரி said...
// கோவி.கண்ணன் said...
'அந்த' மலையாளப்படங்களும் தமிழர்களுக்காகத் தானே எடுக்கிறார்கள் :)//
இது அநியாயம்..அக்கிரமம்
நல்ல படம் எடுத்தால் அவங்களுக்கு ரசனை அதிகம்..ஆனா அதே அவங்க "அந்த" படம் எடுத்தா அது தமிழர்களுக்காகவா! (மறுபடியும் என் முதல் வரி :-D)//
ஷகிலா எறங்குனா மம்முட்டு படம் ஓடாதாம். நானும் DSP மம்முட்டுன்னு ஒரு நல்ல படம் பாக்கபோனேன் ஆனா...ஹிஹிஹி
கோவி பதிவில் நானிட்ட பின்னூட்டம்
http://govikannan.blogspot.com/2009/01/blog-post_20.html
ஹாஹாஹா உங்க பதிவு சரியானதுன்னாலும் பதிவோட கருத்து தப்பானது. :-)
ஏன்னு கேக்குறீங்களா? இதுக்கு நாலு வருசம் நான் பின்னாடி போகனும். நான், ஒரு வடக்கத்திப் பையன், மலையாளி.. மூனு பேரும் நண்பர்களா இருந்தோம். அப்போ நெட்டுல மேட்டர் எப்படித் தேடுறதுன்னு பேசுனோம். மலையாளி நண்பன் மல்லுன்னு போட்டுத் தேடுனான். வடக்கத்தி நண்பன் தேசின்னு போட்டுத் தேடுனான். நமக்குத் தமிழ்தானே. :-)
ஆகா நீங்க மலையாளம்....கேரளான்னு தேடாம malluன்னு தேடிப் பாருங்க. அதே மாதிரி desi. தமிழர்களையும் மலையாளிகளையும் தவிர மத்தவங்கள்ளாம் desiய நீரோட்டத்துல சேந்தாச்சுங்கோவ் :-)
நீங்க என்னடான்னா தமிழன் மட்டுந்தான் இப்பிடின்னு பேசுறீங்க. ஒலகமே இப்பிடித்தான் இருக்குதுங்கோய்.
வருகை தந்த அணாநிக்கு நன்றி
வருகை தந்த குடுகுடுப்பை அவர்களுக்கு நன்றி....
அந்த செய்தி அண்ணனுக்கும் தெரியும்... இருந்தாலும் நம் தமிழ் சமுதாயம் பாழ்பட்டு விடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார்.
வருகை தந்த திரு.G.Ragavan அவர்களே நன்றி.
தங்கள் கருத்தில் உள்ளது அத்தனையும் உண்மை. அதனால் தான் பதிவில் நான் எனக்கு தெரிந்த சில என்று கூறி உள்ளேன்.
தமிழர்கள் என்று இல்லை.. என்னை பொருத்த வரை இந்த விஷயத்தில் எல்லாருமே ஒரே மாதிரிதான்..
nothing sells like sex :)
/*கார்த்திகைப் பாண்டியன் said...
தமிழர்கள் என்று இல்லை.. என்னை பொருத்த வரை இந்த விஷயத்தில் எல்லாருமே ஒரே மாதிரிதான்..*/
வருகைக்கு நன்றி....
தமிழர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகவே உணர்கிறேன்.
/*ஜ்யோவ்ராம் சுந்தர் said...
nothing sells like sex :)*/
பெரியவா சொன்ன கரெக்ட்டா தான் இருக்கும்...
வருகை தந்ததோடு அல்லாமல், முத்திரையும் குத்தி சென்றதற்கு நன்றி.
Post a Comment