பல பேருக்கு, சில பிரச்சினை. சில பேருக்கு, பல பிரச்சினை. பிரச்சினை இல்லாத ஆளு யாரு? உங்களுக்கு இல்லையா? எனக்கு இல்லையா? எல்லாருக்கும் இருக்கு பிரச்சினை. எவ்வளவு! தான் பிரச்சினை இருந்தாலும், நமக்கு அடுத்தவன் பிரச்சினைய எட்டி பார்க்கிறத்துலெ உள்ள சுகமே தனி தான். சரி தானே. இல்லைன்னா, நீங்கள்லாம் நம்ம வலைப்பதிவுக்கு இப்ப படிக்க வந்திருபீங்களா?... ஹி..ஹி.. அதுக்குள்ளே கோவிச்சுக்கிட்டா எப்படி?
அப்போ நான் பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்த நேரம்...
எனக்கு ஒரு பிரச்சினைன்னு சொல்ல முடியாது.
இந்த பக்கத்துவீட்டு 'அல்டாப் அழகேசி'... அவ, கே.ஆர்.விஜயாத் தனமா போட்டிருக்கிற அலங்காரம் எல்லாருக்கும் தெரியனும்னு சாயந்திரம் 4.00 மணிக்கே வந்திருவா மொட்ட மாடிக்கு, படிக்கிறேன் பேர்வழின்னு ஒரு புஸ்தகத்தை தூக்கிக்கிட்டு. அதை பார்த்துட்டு எங்க நைனா, என்னை போட்டு திட்டுவாரு " ஹூம்... அது புள்ளை, இங்க நம்ம வீட்டிலே ஒரு எருமையல்லோ வளர்கிறேன்" என்று. அவருக்கு எங்கே தெரிய போகுது, அவளோட ஓய்.விஜயாத் தனம்.
பக்கத்து தெருவில் இருக்கிற 'முட்டை கண்ணு முருகெசனை' எப்படியாவது காலை வாரி விட்டு அவுட் ஆக்கிட்டா அவுங்க டீம் தோத்திரும், அடுத்த வாரம் நம்ம டீம் தான் சாம்பியன், கபடியிலே.
என்று எனக்கு இருக்கிற சில பிரச்சினைலெ இது ஒண்ணு,அதாங்க.... "இங்கிலீஷூ பீரியடு"
தமிழ் நாட்டில் பிறந்தவன் நான், பேச ஒரு மொழி, அடி வாங்கி கொடுப்பது வேறு ஒரு மொழி என்ற தமிழனின் தலையெழுத்துக்கு...நான் மட்டும் விதிவிலக்கா என்ன? எங்க பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஒரு ஆங்கில ஆசிரியர் தான், அவர் அன்று வகுப்பு எடுப்பதாக இருந்தது. அதனாலே அடியிலே இருந்து தப்பிக்க நெனச்சி லீவ் லெட்டர் எழுதி வழக்கம் போல எங்க நைனா கையெழுத்தையும் நானே போட்டு கொடுத்துட்டேன்.
மறுநாள், கிளாஸ் வாத்தியார் பாடம் நடத்திக்கிட்டு இருக்கும் போது, பியூன் ஒரு சீட்டை கொண்டுவந்து அவர்கிட்டே கொடுத்தார். வாத்தியார்,'டேய், நையாண்டி நைனா, உன்னை ஹெட்மாஸ்டர் கூப்பிடுறார் போய் பார்த்துட்டு வா' என்றார்.எனக்கு அப்பவே கிலி பிடிச்சிட்டு, "ஆகா இன்னைக்கு நமக்கு சங்கு தாண்டா, இங்கே இவரு போட்டு வாங்குவாறு அப்புறம் நம்ம நைனாவும். அட..ச்..சே, பேசாமே வேற எவனையாவது வைச்சு கையெழுத்து போட்டு கொடுத்திருக்கணும், இப்ப அடிவாங்குறததுக்கு அவனும் நம்ம கூட வந்திருப்பான்..." என்று எண்ணியவாறு சென்றேன்.
அங்கே போனால் நான் எதிர் பார்த்தவாறே, ஹெட்மாஸ்டரோட ஒரு கையில் என்னோட லீவ் லெட்டர் , மறு கையில் பிரம்பு. நான் சென்றதும், டக்கென பிரம்பை வீசி விட்டு என் காதை பிடித்து திருக ஆரம்பித்தார், லெட்டரை காட்டியாவாறே
"அதான் அங்கே "ஆஸ், ஐ யெம் ஸபரிங்...." -ன்னு போட்டிருக்கியே, அப்புறம் எதுக்கு? "சோ, ஐ ரிக்வெஸ்ட் ...", -ன்னு இங்கே ஒரு "சோ" போட்டிருக்கே, "சோ" சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டும், நீக்க வேண்டிய இடத்தில் நீக்க வேண்டும் இல்லை என்றால் மண்டை வீங்கி விடும் ( இது ஆங்கில பாடம் தான், அரசியல் பாடம் அல்ல ) என்று சொல்லி, சொல்லி காதை திருகினார். "எத்தனை தடவைடா சொல்லி தாரது...." என்றாவாறே என் தலையிலும் குட்டினார். அன்று என் தலை மாட்டியதா? இல்லை தப்பியதா? என்று எனக்கே தெரியாது. உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? பின்னே வெளியே வரும்போது " அட..ச்...சே... இந்த 'சோ'-வாலே வினையாகி போச்சேன்னு" நொந்து வெளியே வந்தேன்.
Friday, 16 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//
"சோ" சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டும், நீக்க வேண்டிய இடத்தில் நீக்க வேண்டும் இல்லை என்றால் மண்டை வீங்கி விடும்.
//
ரொம்ப சரி. (அந்த இடத்தில்) "சோ" தேவையற்றது தான் (இதில் அரசியல் இல்லீங்க்ணா).
அட.... திருமங்கலம் தேருதலுக்கு பின்னே, 'சோ'-வி ன் மதிப்பும் சரிஞ்சு போச்சா?
வாங்க சகா.... வாங்க......
நன்றி...
//பல பேருக்கு, சில பிரச்சினை. சில பேருக்கு, பல பிரச்சினை. பிரச்சினை இல்லாத ஆளு யாரு?//
ரொம்ப சரி
நல்ல தமாசு தான்....
Post a Comment