Tuesday, 23 December 2008

போதை பொழியும் பானம் - கும்பர்

தமிழ் ஆர்வலர்களும்....
நர்ஸிம் அண்ணாவின் ரசிகர்களும் மன்னிக்க.....

நேற்று தம்பி லண்டனில் இருந்து வந்திருந்தான்.. காலையில் காபியை குடித்துக் விட்டு, காலைக் கடனுக்காக ஆற்றுக்கரை ஓரம் நடந்து கொண்டே ஊர் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்..திடீரென ஓர் இடத்தில் நிறுத்தி.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நேத்து லண்டநிலிருந்து வரும்போது, நீ பல வருஷமா ஏங்கி கொண்டிருந்த ஒரு மேட்டர் கிடைச்சுச்சு.. அத நீ பார்த்தேன்னா அவ்வளவுதான்..என்று சொல்லிக் கொண்டே அந்த பொருளை எடுத்தான்..

பொன் நிறமாக இருந்தது அது, பெரிய பெரிய மனிதர்களும், மேட்டுக்குடி மக்களும் வைத்திருப்பார்களே அது, ஆங்கிலப் படங்களில் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்து ரசித்து, ரசித்து சிப்பி, சிப்பி அருந்துவார்களே அந்த வகையான உயர்தர மது தான் அது... பருகினால் "வருடும் போதையை தரும்" பானம்...

வாரா வாரம் வார இறுதியில், ஏதோ ஒரு கணத்தில் ஆளாளுக்கு கையில் உள்ள காசை போட்டு, காணாதத்திற்கு சில பழைய பத்திரிகைகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி யார் கண்ணிலும் படாதவாறு சரக்கு வாங்கி, ஏதேனும் தோப்பு, துறவு என்று ஒதுங்கி சரக்கடித்து...இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே..அனிச்சை செயலாக ஊறுகாய் தீர்ந்த விரலை நக்கித் தொலைப்பதும்... நடக்கும்..

இப்படி போற்றிப் பாதுகாத்த பழக்கம் அது.. பின்னர் ஒரு நண்பனின் பிறந்தநாள் அன்று, எங்கேயோ யாரிடமோ இருந்து அவன் கெஞ்சி கூத்தாடி கொண்டு வந்திருந்த மிலிடரி சரக்கு தான் , முதன்முதலாய் (முதலும் கடைசியுமாய்:மனசாட்சி..) நான் அறிந்து அடித்த விலை உயர்ந்த சரக்கு.. எட்டாவதாய் நான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்த சமயம் அது...

இப்படிப் பட்ட வரலாற்று பெருமை வாய்ந்த அந்த பழக்கம், (காதலில் தோற்றவுடன் மற்ற பொருள்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து விடுமோ..?). இன்று வரை தேடித் தீர்ந்து போனேன்..ஒரு உயர்ந்த சரக்கையும், நான் முதலில் காதலித்த பெண்ணையும்....

அந்த சரக்கைத்தான் கொடுத்தான்..அதை வாங்கிய நான் எதுவும் சொல்லவில்லை.. அமைதியாக கையில் வைத்திருந்தேன்..அவனை கட்டிப் பிடித்து தேங்ஸ் சொல்லுவேன், .."நண்பா... நீயே உண்மை நண்பா, மச்சி... கலக்கிட்டெ" என்று ஆர்ப்பரிப்பேன்.என்று என்ன என்னமோ எதிர் பார்த்திருந்த அவன்.. என்னுடைய இந்த ரியாக்ஸனை பார்த்து..

எங்களின் சக நண்பணிடம்
"ஏதாவது பிரச்சனையா, அவன் சரக்கடிக்கிறததை விட்டுட்டானா? " என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தான்..

பாவம் அவன் கும்பரை படித்ததில்லை..

கள் பானையை பதுமனிடம் இருந்து வாங்கிய பேதை ஏதேதோ பேச முயன்று ..உதடு குவித்து,விம்மி.. ஆனால் ஏதும் பேசாமல் அதை தன் மார்பில் வைத்துக் கொண்டானாம்.. வாயூரி நின்றானாம்..

அந்த பாடல்..

மோரொக்கும்; உலை வைக்கா தூறலு மயங்கும்; குளிர் நல் நீர்நீக்கி,
நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்நோக்கும்; நுவலக்
கருதும், ஒன்றும் நுவல்கில்லான்;மேக்கு நிமிர் விம்மலன்;
விழுங்கலுறுகின்றான்


(மோரை போன்றது; உலை வைக்க கிடையாது, ஊறலும் கிடையாது, கலந்தடிக்க நீரும் தேவை இல்லை. இதை போன்ற ஒரு சிறந்த பானம் கிடையாது என்று எண்ணி,.கண்ணில் வந்த நீர் திரையை நீக்கி அதை நெடுநேரம் பார்த்தான்.. ஏதும் பேசவில்லை.. ஆனால் உதடுகள் விம்மி, வாயூரி, எச்சில் விழுங்கி நின்றான்..)

மீண்டும்.. கும்பர்.. வாழ்க..!

5 comments:

narsim said...

அது தமிழ் போதைன்னா.. இது கலக்கல் சரக்கு போதை தல..

அந்த பாட்டு .. சான்ஸே இல்ல.. டக்கீலா அடிச்ச மாதிரி இருக்கு..

narsim said...

//நர்ஸிம் அண்ணாவின் ரசிகர்களும் மன்னிக்க//

எனக்கு அண்ணன் இல்லையே தலைவா.

ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...

மிக நன்றி....

உங்கள் அண்ணனாக நான் இருந்து விட்டு போகிறேன்... hee...hee..

நையாண்டி நைனா said...

/*டக்கீலா அடிச்ச மாதிரி இருக்கு..*/
ஷக்கீலா தெரியும்; அது என்ன "டக்கீலா"?