Tuesday 29 July 2008

பொய்யை பரபரப்பாக்கும் குமுதம்.

இன்றைய உலகில் பத்திரிகையின் வியாபார தந்திரத்தினால், ஜனநாயகத்தின் தூண் என்று வர்ணிக்கபடுகிற பத்திரிகை மிகவும் கீழிறங்கி, ஜாதி, மத உணர்வு என்ற புற்று கொண்டுள்ளது. ஜனரஞ்சகம், பெரும்பான்மை மக்களால் ரசிக்கபடுவது என்று கூறி அதனாலேயே அது தான் சிறந்தது, அதில் சொல்லபட்டுள்ளது எல்லாம் உண்மை. கூறுவோமெயானால், நம்மை போல் மூடர்கள் யாருமில்லை.

சில பத்திரிகைகள் தங்கள் வருமானம் பெருக வேண்டும் என்ற காரணத்திற்காகவும், சமுதாயத்தில் பரபரப்பை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காகவும் சில வேடிக்கை வினோத செய்திகளை வெளியிடுவார்கள். அது போல தான் இதுவும். இதில் பாரதியையும், குஷ்புவையும் நுழைத்துள்ளார்கள்.

பாரதி என்ற பெயர் பாரதியாருக்கு மட்டும் தானா? குஷ்பு என்ற பெயர் அந்த சினிமா நடிகைக்கு மட்டும் தானா? அந்த பெயரிலே வேறு யாரும் இருக்க மாட்டார்களா? இருந்தாலும் அவர்கள் ஜாதி சான்றிதழ் வாங்கவே வரமாட்டார்களா? அப்படியே வந்தாலும் வேறு பெயரில் தான் எடுப்பார்களா? என்ன கொடுமை சார் இது?

அவர்கள் கொடுத்த தகவல் அது பாரதி தான், அது குஷ்பு தான் என்று அருதியிட்டு, உறுதிப்பட கூறுவது எப்படி?

இவர்கள் ஏதோ பரபரப்பை உண்டு பண்ண, இவ்வாறு எழுதி உள்ளார்கள் என்றே எனக்கு படுகிறது. இவர்கள் இவ்வாறு குற்றத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்றால், இவர்களுக்கு சமுதாயத்தின் மீது உண்மையில் அக்கறை உண்டு என்று சொன்னால் இந்த அசிங்கத்தை செய்வோரை கையும் மெய்யுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது தானே. அல்லது இதே நாடகத்தை சம்பந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளின் முன்னே அல்லது ஒரு மாவட்ட ஆட்சியர் முன்னோ, காவல் துறை உயர் அதிகாரிகளின் துணை உடனோ செய்யலாமே.






இது அந்த பத்திரிகையின் கற்பனையே அன்றி வேறில்லை.



இணைப்பு: இதனை முன்னிறுத்தி சில துவேச கருத்துக்கள் பரப்பபட்டதால் இன்னும் சில தொக்கி நிற்கும் கேள்விகளை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளேன்.

1: சில மாதங்களுக்கு முன்னே, ஜனாதிபதி, மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் வழங்கினார்கள், இலஞ்சம் வாங்கி கொண்டு, அது மாதிரி கைது வாரண்ட் பிறப்பித்தவர்கள், திரு. ஹரி சொல்லியது போல் உள்ள தமிழ் நாட்டு அதிகாரிகள் தானா?

2. இந்தியாவின் பாதுகாப்பு/உளவு துறையில் இருந்து கொண்டு இந்தியாவை மற்றவர்களுக்கு காட்டி கொடுக்கிறார்களே அவர்கள் திரு. ஹரி சொல்லியது போல் உள்ள தமிழ் நாட்டு அதிகாரிகள் தானா?

11 comments:

Anonymous said...

Thanks to the owner of this blog. Ive enjoyed reading this topic.

கோவி.கண்ணன் said...

அண்ணன் ஹரிஹரன் வைத்த குற்றச்சாட்டு படி முற்பட்ட வகுப்பினர் யாரும் வாங்குவதில்லையாம்.

BC பிரிவு எவரேனும் தனக்கு BC வேண்டும் என்று மாற்றி வாங்குவாங்களா ? அண்ணன் தமாஸ் பண்ணுகிறார். அப்படி பேராசையினால் வாங்கினாலும் FC பிரிவினர் தானே வாங்குவாங்க ? தப்பு எங்கே நடக்கிறது ? அவர் குற்றச்சாட்டே வேலைவாய்ப்புக்காக சாதி பிரிவு மாற்றி சான்றிதழ் வாங்குகிறார்களாம்.

அந்தோ பரிதாபம் ! சுப்ரமணிய பாரதியார் என்கிற ஐயர் நாடார் ஆகி வேலை வாய்ப்புப் பெறப் போகிறாரா ?
:))

கோவி.கண்ணன் said...

இந்திய அளவில் உள்ளது ஊழல், காசு கொடுத்தால் பிரதமருக்குக் கூட வாரண்ட் பிரப்பிக்க முடியும். அதைத்தான் குமுதம் செய்திருக்கிறது. யாரும் தன்னுடைய பயனுக்காக வேண்டுமென்றே சாதி மாற்றி வாங்கிவிடமுடியாது. அப்படி ஒருவேளை வாங்கினாலும், மாட்டிக் கொண்டால் கம்பி எண்ணனும், இல்லாட்டி கொடுத்த அலுவலர் மீது பழியைப் போட்டு தப்பிக்கலாம். அவ்வளவு ரிஸ்கெல்லாம் பயனர் எடுக்க மாட்டாங்க. குமுதம் பரபரப்புக்காக இந்த வேலை செய்திருக்கிறது. எவ்வளவு நாள் தான் கிசு கிசு எழுதியே அவர்களும் பத்திரிக்கை நடத்துவாங்க ?
:)

மங்களூர் சிவா said...

its like sting operation

/

இது அந்த பத்திரிகையின் கற்பனையே அன்றி வேறில்லை.
/

இது உங்க கற்பனை

Anonymous said...

Both certificates were signed by Deputy Teshildars.

Deputy Teshildars are not empowered to issue community certificates. This rule is applicable not only in Tamilnadu; but in the country as a whole.

In UPSC, many cases come up frequently where such certificates have been signed by Deputy Teshildars. The Commissions, instead of summarily rejecting the qualfified candidates, ask them to produce again a valid community certificates, duly signed by Teshildar or RDO or SDM (Subdivisional Magistrate).

Obviously, Kumudam did play mischieve in Teshildar office; and with the help of some lower functionary, able to get hand on the Rubber stamps of a Dy.Teshildars and made this story!

நையாண்டி நைனா said...

தங்கள் வருகைக்கு நன்றி திரு.கோவி அண்ணா...

நையாண்டி நைனா said...

/*its like sting operation

/

இது அந்த பத்திரிகையின் கற்பனையே அன்றி வேறில்லை.
/

இது உங்க கற்பனை */

பாரதி என்ற பெயர் பாரதியாருக்கு மட்டும் தானா? குஷ்பு என்ற பெயர் அந்த சினிமா நடிகைக்கு மட்டும் தானா? அந்த பெயரிலே வேறு யாரும் இருக்க மாட்டார்களா? இருந்தாலும் அவர்கள் ஜாதி சான்றிதழ் வாங்கவே வரமாட்டார்களா? அப்படியே வந்தாலும் வேறு பெயரில் தான் எடுப்பார்களா? என்ன கொடுமை சார் இது?


இதை நீங்கள் படிக்கவில்லையா? திரு. மங்களூர் சிவா அவர்களே..

அந்த ஆவணம் திருத்தப்பட்டு தானே உள்ளது. பாரதி என்ற பெயர், இடைச்செருகளாகவும், பாரதியின் தந்தையார் பெயர் சின்னராஜ் என்றும் தானே உள்ளது. குஷ்பு- தஹபனார் பெயர் சுந்தர் என்று தானே உள்ளது.

மேலும் இவர்கள் உள்ளே கொடுத்துள்ள, விண்ணப்ப படிவத்தில் உள்ள தகவலும் இல்லை, நகழும் இல்லை.


/*அவர்கள் கொடுத்த தகவல் அது பாரதி தான், அது குஷ்பு தான் என்று அருதியிட்டு, உறுதிப்பட கூறுவது எப்படி? */

நையாண்டி நைனா said...

Thank you Mr. Anony,

/*Obviously, Kumudam did play mischieve in Teshildar office; and with the help of some lower functionary, able to get hand on the Rubber stamps of a Dy.Teshildars and made this story!*/

I am also thinking the same.

புருனோ Bruno said...

இது குறித்த என் கருத்துக்கள்

முற்பட்ட வகுப்பினர் பெறும் போலி பிற்பட்ட வகுப்பு சான்றிதழ்கள்

சாதி சான்றிதழ் வழங்குவது அரசின் எந்த துறை

புருனோ Bruno said...

அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள் “நகல் எதுவும் கிடையாது என்று”.

எனவே அங்கு யாரையும் குற்றம் கண்டுபிடிக்க முடியாது

உண்மையில் இது போலி சான்றிதழ் அல்ல. போர்ஜரி சான்றிதழ்.

நையாண்டி நைனா said...

வருகை புரிந்த மருத்துவர். திரு.புருனோ அவர்களுக்கு நன்றி. நானே தங்களின் அந்த இரண்டு பதிவுகளை படித்துவிட்டு தான் இந்த பதிவையே எழுதினேன்.