Tuesday 1 July 2008

"அஜக்-பஜக்" கதை

ஆஹா... என்ன செய்யிறது....

இவ்ளோ நாளும் தசாவதாரம், தசாவதாரம் என்று பல பதிவர்கள் பல அவதாரம் எடுத்து எழுதினார்கள். தசாவதாரம் படத்தில் தான் சுனாமி வந்து எல்லோரையும் காப்பாற்றியது, சிலரை கொன்று..... ஆனால் வலை உலகில் வந்த தசாவதார சுனாமியோ பலரை கொன்று சிலரை காப்பாற்றி உள்ளது. சரி நம்ம பங்குக்கு ஏதாவது எழுதி போடலாம்னு பார்த்தா, இந்த பாழா போன "கொயாசு" விதியினால் நம்ம விதி "கொயாசு" ஆகி விட கூடாதுன்குற பயந்தான், எழுதாமே விட்டேன்.

சரி திரும்ப வந்து பார்த்தா. அ. ஆ ( நன்றி: எஸ்.ஜே. சூர்யா) கதைகளா வருது. நாமளும் யாரும் பார்க்காமே கதைய படிச்சிட்டு போலாம்னு பார்த்தா, இங்கு எல்லாருமே பெரிய எஸ்.ஜே. சூர்யா-வா இருக்காங்க.... ஆமாங்க.....இருக்கு, ஆனா இல்ல.... இருக்கு, ஆனா இல்லை என்று சொல்லி..... திருப்பு முனை, பருப்பு முனை-ன்னு சொல்லி நம்மை கடுப்பின் முனைக்கே கொண்டு செல்கிறார்கள். அதனாலே நாமும் ஒரு "அஜக்-பஜக்" கதை எழுதி சங்கத்தில் சேர்ந்துவிடுவோம்னு சொல்லி எழுதலாம்னு நெனச்சு தயாராகி, சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று திரும்பி பார்க்கும் போது... என் அருகே என் குழுவை சேர்ந்த பரிசோதகர், "சோதனை செல்வி" நின்று, இந்த பதிவு எல்லாத்தையும் படித்துவிட்டு குறும்பாய் ஒரு பார்வை பார்த்து " அஜக்" என்று ஒரு அடி விட்டார், நானும் "பஜக்" என்று கையை பிடித்து, தப்பினேன், அடியிலிருந்து......

அப்பாடா... நாமும் ஒரு கதை எழுதியாச்சு...

4 comments:

மங்களூர் சிவா said...

/
அதனாலே நாமும் ஒரு "அஜக்-பஜக்" கதை எழுதி சங்கத்தில் சேர்ந்துவிடுவோம்னு சொல்லி எழுதலாம
/

சரி கதை எங்க நைனா?????????

நையாண்டி நைனா said...

இதெல்லாம் தமிழ் சினிமா மாதிரி, கிளிமாக்சு-லே தான் கதை இருக்குதுங்களே..... அவங்க அஜக்குண்னு அடிசாங்க... நான் பஜக்குனு தப்பிச்சென்னு....

நையாண்டி நைனா said...

நையாண்டி நைனா வெற்றி பெற்று விட்டார்....
மற்றவங்க கதையிலே "விஷயத்தை" தான் தேடனும்....
என் கதையிலே.. கதையையே தேடணுமா....???!!!!???
மங்களூர் சிவா அவர்களுக்கு நன்றி...

cheena (சீனா) said...

அஜக்குன்னு அடிக்கறவங்க கிட்டே இருந்து பஜக்குன்னு தப்பிக்க்றது எப்படின்னு ஓரு பதிவு போடு நைனா
இல்லன்னா கொமட்லே குத்து விழும் ஆமா