Monday 30 June 2008

சாதனையா? வேதனையா?

ரொம்ப நாள் ஆணி புடுங்கி, புடுங்கி என்னையும் என் பணி இடத்தில் இவர் பெரிய "புடுங்கி" என்று ஒத்துகொண்டதாலும்,
திட்டுவதெர்கென்றே மேலாளர் ஆனார்போல், என்னேரமும் யாரையாவது திட்டிக்கொண்டே இருக்கும் எனது திட்ட மேலாளரும், என்னை பெரிய "புடுங்கி" என்று ஒத்துக்கொண்டு சில காலமாக வசைப்பாடாமல், இசை பாடி வருவதனாலும்,
"ஆமாம்..... இந்த நைனா பெரிய "புடுங்கி" எப்பவாவது தான் வருவார்", இனி அவரை எதிர்பார்க்க கூடாது. அந்த "புடுங்கி" எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று வலை உலகில் யாரும் வசை பாடி விட கூடாது என்று நினைத்து கொண்டே வலை உலகை மேய்ந்த பொழுது இந்த பதிவு கண்ணில் பட்டது. இதெல்லாம் ஒரு சாதனையா என்றும் என் மனக்கண்ணில் பட்டது. அதனாலேயே உங்கள் கண்களுக்கும் தருகிறேன் சில வரிகளாக

எம் இளைஞனின் சாதனை
முன்னே இது சாதாரணம்.


கண்ணை கொத்தும் வறுமையைசுவாசித்து,
கொடிய விசமுடைய பசியை உண்டு
இன்று சாதிக்க துடிக்கும்

எம் இளைஞனின் சாதனை
முன்னே இது சாதாரணம்.


கண்ணை கொத்தும் வேலை இல்லா திண்டாட்டம்,
நினைத்துப்பார்த்தாலே சாகடிக்கும் விலை வாசி
இரண்டையும் நாசியினால் சுவாசித்து,

இன்று சாதிக்க துடிக்கும்
எம் இளைஞனின் சாதனை
முன் இது சாதாரணம்

இன்னும் நிறைய எழுதலாம், அதனை வாசகர்களின் / பதிவர்களின் பொறுப்பாய் விட்டு ....

நிற்கிறேன் நான்.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்து செல்லுங்கள்.....

1 comment:

cheena (சீனா) said...

ஆமா நம்மூரு இளைஞனுக்கு ஆயிரம் பிரச்னை - சமாளிக்கறான் - இல்லன்னு சொல்லலே - ஆனாலும் சாதனைகள் ஒப்பிட முடியாதே - ஆப்பிளையும் ஆரஞ்சயும் ஒப்பு நோக்கக் கூடாது - ரெண்டும் பழங்கள் - அவ்ளோ தான் - அது தனி - இது தனி