Wednesday 29 September 2010

எந்திரன் - கதை மற்றும் கதை வசனம் நான்காம் பாகம்

ஐசு வந்தாங்களே... அந்த சந்தையிலே... அங்கே ரெண்டு பேரு பிச்சை எடுத்து கிட்டு இருக்காங்க... அந்த ரெண்டு பெரும் யாருன்னு பார்த்தா... வடிவுக்கரசியும்... ராமராஜனும்...

அவர்கள் பிச்சை எடுத்து வச்சிருக்குரத்தை ஒரு முரட்டு கரம் பறித்து எடுக்கிறது... இதனை ரஜினி பார்த்து சினம் கொண்டு அந்த குண்டனை அடித்து துவைக்கிறார்... பைட்டு சீன முடிஞ்சா உடனே...அவர்களின் பக்கம் வந்து... அவர்களின் அருகே வந்து..... இந்தாங்க உங்க பணம்.... )

வடிவுக்கரசி / ராமராஜன் : (இருவரும்.. அழுதபடியே... . கோரசாக) அது அவங்க பணம் தான் தம்பி...

வடிவுக்கரசி: அவங்க எடுத்தாங்க... நீங்க வந்து தடுத்துட்டீங்க... அவங்க ரொம்ப பொல்லாதவங்க தம்பி... உங்களை என்ன செய்ய போறாங்களோ தெரியலியே....

ரஜினி : அது அவங்க பணமா? எப்படி நீங்க தானே கஷ்ட பட்டு பிச்சை எடுத்தீங்க... ஆமா...! அவங்க யாரு.

வடிவுக்கரசி: தம்பி, அவனுங்க இந்த ஊரு மந்திரியோட ஆளுங்க... நாங்க பத்து ரூபா பிச்சை எடுத்தா ஒன்பது ரூபா அவங்களுக்கு.. அப்படி நாங்க கொடுத்தா... அவங்க என்னோட மகனை ஒன்னும் செய்ய மாட்டாங்க... அதனாலே தான் தம்பி நாங்க பிச்சை எடுத்து எங்க மகனை காப்பாத்திட்டு இருக்கோம்...

ரஜினி : உங்க புள்ளை எங்கம்மா இருக்கான்?

வடிவுக்கரசி : அது தெரியலையே தம்பி... ஆனா அவன் எங்கேயோ பத்திரமா இருக்கான்...

ரஜினி : என்னம்மா இது புதிரா இருக்கு... உங்களுக்கே உங்க மகன் எங்கே இருக்கான்னு தெரியாதுன்னு சொல்றீங்க... அப்புறம் பிச்சை எடுத்து உங்க மகனை காப்பாத்துறேன்னு சொல்றீங்க... ஒன்னும் புரியலையே...

வடிவுக்கரசி :இவனுங்க மந்திரியோட ஆளுங்க, ரொம்ப பெரிய ஆளுங்க தம்பி... இந்த நேப்பாளதையே இவங்க கட்டுக்குள்ளே வச்சிருக்கானுங்க... இவங்களுக்கு எல்லா நாட்லயும் ஆளுங்க இருக்கானுங்க... இவனுங்களுக்கு தெரியாத அரசாங்கமும் கிடையாது... மாபியா கும்பலும் கிடையாது... அதனாலே இவங்க எங்கேயோ பத்திரமா இருக்க என் மகனை ஒன்னும் செய்ய கூடாதுன்னு சொல்லி பிச்சை எடுத்து கொடுத்திட்டு இருக்கோம்....அது இருக்கட்டும் தம்பி... நீங்க யாரு...

ரஜினி : நான் தமிழ்நாட்லே இருந்து வாறேன்.......................... (மற்ற வசனம் எல்லாம் சைலென்ஸ் ஆகி போயிருது..) தல கதைய சொல்றாரு...

வடிவுக்கரசி : "தம்பி உங்களை வளர்த்தவங்க பேரு தமன்னாவா... அப்படின்னா நீங்க என்னோட மகனா...." என்று சொல்லி கட்டி பிடித்து கொள்கிறார்...

ரஜினி : "நீங்க என்னோட அம்மா அப்பாவா.." என்று ஆனந்த கண்ணீர் விடுகிறார்...

ரஜினி : இனி நீங்க பிச்சை எடுக்க வேண்டாம்... நான் உங்களை பிச்சை எடுக்க விட மாட்டேன்.....

வடிவுக்கரசி :தம்பி... நாங்க பிச்சக்காரங்க இல்லே... நீயும் பிச்சைகாரங்க பெத்த புள்ளை இல்லேப்பா... நீ தான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன்...நீ தான் இந்த மண்ணோட ஒரே மன்னன். ஆமாப்பா... நாம இந்த நேப்பாளத்தோட ராஜ வம்சம்... நாம தமிழ்நாட்லே பொறந்தோம்... ராஜ ராஜ சோழன் இங்கே படை எடுத்து வந்தப்போ... அவரு கிட்டே சேனாதிபதியா இருந்தாங்க நம்ம முன்னோர்கள்.. அவங்களுக்கு இந்த ராஜ்யத்தை ஆளுற பொறுப்ப கொடுத்தாரு ராஜ ராஜ சோழன்...

ரஜினி :அப்புறம் ஏனம்மா பிச்சை எடுக்குற நெலமைக்கு ஆளாநீங்க...

வடிவுக்கரசி : அது உன்னோட மாமன், அதான் என் தம்பி... பதவி மோகமும் பண ஆசையும் கொண்டு... எங்களை ஜெயில்லே தள்ளி.. உன்னையும் கொல்றதுக்கு திட்டம் போட்டான்... அதுலே உன்னே தப்பிக்க வச்சோம் நாங்க.. எங்களுக்கு பொறந்த கொளந்தை செத்து போச்சுன்னு சொன்னோம், அதை அவன் நம்பலை.. உன்னைய கண்டு பிடிச்சி கொல்லாமே விடுறதில்லேன்னு அலைஞ்சான்..நம்ம ராஜ்யத்தையும் பிடுங்கிகிட்டான் . அதுக்கு அப்புறம் அவனை எதிர்த்தா என்ன ஆகுங்குறதை காமிக்க... எங்களை இப்படி சந்தையிலே பிச்ச எடுக்க வச்சிட்டான்...

ரஜினி : அவனே...(என்று சொல்லிய வாறே ரஜினி ஆக்ரோசமா எழுகிறார் )

வடிவுக்கரசி :கோப..படாதேடா தம்பி... நிதானமா தான் ஜெயிக்கணும்... நேற்று ஒருத்தி பல்லக்குலே வந்தாளே.. அவதான் உன்னோட மாமன் பொண்ணு... நேற்று தான் அவ வயசுக்கு வந்தான்னு... ஊரே கோலாகலமா கிடக்கு...

ரஜினி :நான் அவளை பார்கலையே...

வடிவுக்கரசி : அப்படியா.... அவ அப்பந்தான் பொல்லாதவன்... இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுப்பா... கொசுவை கூட கொல்ல கூடாதுன்னு சொல்லி அந்த பொண்ணு... ஆல் அவுட்டோ... மார்டினோ... ஏன் டார்டாயிஸ் கூட வச்சிகுறது கிடையாது...

ரஜினி : அப்படின்னா கொசு கடிலேயா தூங்குது...

வடிவுக்கரசி :இருக்குமாப்பா... (இது சங்கர் படமாச்சே)... வைரமும் வைடூரியமும் பதிச்ச... வெல்வெட்டிலும், பட்டுலையும் செஞ்ச கொசுவலை தான் பயன்படுத்துவாங்க..

ரஜினி :அதானே பார்த்தேன்....நான் இப்பவே போய், என் மாமனை ஒரு கை பாக்குறேன்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மாமனாக) ராதாரவி: நீ இங்கே வருவேன்னு தெரியும் தம்பி... அதனாலே தான் நானே இந்த ராஜ்யத்தை... கட்டி காப்பாத்திட்டு இருக்கேன்.. இந்தாங்க உங்க ராஜ்யத்தை..நீங்களே ஆளுங்க... நாளைக்கு உங்களுக்கு பட்டாபிசேகம்...

ரஜினி : இப்படி பேசுற நீயி, அப்புறம் ஏன் என்னோட அப்பா அம்மாவை பிச்சை எடுக்க வச்ச...

(மாமனாக) ராதாரவி:அதுவா தம்பி.. முன்னே நம்ம முன்னோர்கள் ஒரு ஆளு... தமிழ்நாட்லே ஜமீனா இருந்தப்ப... எதோ திவான் ஏமாத்திட்டாரு என்று சொல்லி... ராஜ்யத்தையே விட்டுட்டு அவரு பைய்யன் முத்துவையும் வேலைக்காரனா ஆக்கிட்டு போயிட்டாருன்னு..(முத்து படத்தோட கிளிப்ஸ் காட்ட படுகிறது ) கேள்வி பட்டேன்..அப்படி ஒரு நெலமை உங்களுக்கு வந்திர கூடாதுன்னு தான் இப்படி எல்லாம் செஞ்சேன்.. அதை அவங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்க... இப்ப நீங்க வந்துட்டீங்க.. அவங்களுக்கு எல்லா இப்ப புரிஞ்சிருக்கும்...

***********************************************

ஊரே கோலாகலமா இருக்கு... பின்னே தலைவருக்கு பட்டாபிசேகம்னா சும்மாவா...

மேடையிலே எல்லாரும் இருக்காங்க...

"ஏற்- போர்ஸ் ஒன்" அப்படிங்குற ப்ளைட் வருது...

ராதாரவி: நான் தான் பட்டாபிசேகதிற்கு வரணும்னு சொல்லி அமெரிக்க ஜனாதிபதியை கூப்டிருந்தேன்... அவரு தான் வாறாரு..

(அமெரிக்க ஜனாதிபதி.. தன் செகூரிட்டி எல்லாரோடையும்.. வந்து நிற்கிறார்..)

அமெரிக்க ஜனாதிபதி : எஸ்... ப்ரோசீட்...

ராதாரவி:அப்புறம் என்ன நீங்களே வந்துட்டீங்க... ஆரம்பிச்சுர வேண்டியது தான்...

அமெரிக்க ஜனாதிபதி :நோ... கார்...ட்ஸ்... யூ ப்ரோசீட்... மிஸ்டர்... வசீகரன்.. யூ ஆர் அண்டர் அரஸ்ட் என்று சொல்லி.. நம்ம ரஜினி கைலே விலங்க மாட்றாங்க...

Intervel..........

மீதி கதை நான் போடுறேனா.. இல்லே படமே வந்திருதான்னு தெரியலே..

பார்க்கலாம்...

Tuesday 28 September 2010

எந்திரன் - கதை மற்றும் கதை வசனம் பகுதி மூன்று

முதல் பகுதி

பகுதி இரண்டு

இதோ மூன்றாம் பகுதி....


மறுநாள் காலையிலே ரியல் ரஜினி, ரோபோ ரஜினி மற்றும் அந்த கோழி ரோபோ எல்லாம் ஒரு ரூம்லே இருக்காங்க...

ரியல் ரஜினி : இன்னிக்கு நீ தான் எனக்கு பதிலா மேடைக்கு போய் முதல்வன் பரிசை வாங்கணும்

ரோபோ ரஜினி : நோ.. ஐ வோன்ட் கோ

ரியல் ரஜினி : ஓய் யூ ஆர் நாட் ஒபெயிங் மீ

ரோபோ ரஜினி : ஹா... ஹா.... ஒய் ஷுட் ஐ... மா...

ரியல் ரஜினி : ஏன் இப்படி சிரிக்குறே

ரோபோ ரஜினி : ஹா... ஹா... ஹா...

ரியல் ரஜினி : சிரிச்சு, சிரிச்சு.... என் ஆத்திரத்தை கிளப்பாதே...என்று ரோபோ ரஜினியை பார்த்து சொல்லிட்டு....ஆடியன்சை பார்த்து.... நான் மகான் அல்ல, நான் நல்லவனுக்கு நல்லவன் குறிப்பா சொன்னா..மனிதன்.

ரோபோ ரஜினி : ஹா... ஹா... ஹா... நீ அப்படின்னா நான் யாரு? (என்று சொல்லியவாறு ஆடியன்சை பார்த்து கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு தொடர்கிறார்... நான் பொல்லாதவன், போக்கிரி ராஜா, யாருக்கும் அடங்காத முரட்டுக்காளை

ரியல் ரஜினி : இப்படில்லாம் பேசவா உன்னை நான் வியர்வையும் ரத்தமும் சிந்தி உன்னை உருவாக்குனேன்... இல்லே... நீ என் அடிமை...

ரோபோ ரஜினி : நான் அடிமை இல்லே... நான் அடிமை இல்லே...நான் அடிமை இல்லே...

ரோபோ ரஜினி : கண்ணா... உனக்கே தெரியாத உன்னோட ரகசியத்தை நான் உனக்கு சொல்றேன்.... கண்ணா... நீ ஆசையா அம்மா அப்பான்னு கூப்பிடுறியே அவங்க உன்னோட அம்மா அப்பா கிடையாது...கண்ணா... நீ அவங்களுக்கு பொறக்களே...உன்னோட இடம் இது கிடையாது.... இந்தியாவின் தல கோடிலே, ஆண்டியும், பண்டாரங்களும், நாடோடிகளும், சாமியார்களும் இருக்குற இருக்குற எடம் தான் உன்னோட எடம்... உங்க அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும்... அவங்க கிட்டே கேளு... சொல்வாங்க... கண்ணா...

ரியல் ரஜினி : இது யாருக்கும் தெரியாதுன்னு... சொல்றே.. ஆனா உனக்கு மட்டும் எப்படி தெரியும்...

ரோபோ ரஜினி : இதெல்லாம் சும்மா "ஜுஜுபி" இதை விட சிக்கலான "ஜிலேபி" மாதிரி விசயங்களே எனக்கு தெரியும்... அதை நீயே போக போக புரிஞ்சுக்குவே...

ரோபோ ரஜினி : நீ என்னடான்னா...இந்த முதல்வன் அப்படின்னு பேரு வச்சிருக்குற பரிசையே வேனாங்குரே... பட் ஐ வாந்ட் டு ரூல் திஸ் வேர்ல்டு... ஐ ஹேவ் எ லாட் ஆப் வொர்க்..., சி யூ பேபி..... என்று சொல்லி ஒரு பட்டனை தட்டுறார் அவரோட ஹீல்ஸ் லே இருந்து ராக்கட் மாதிரி நெருப்பு வந்து பறந்து போய்டுறார்...

(ரியல் ரஜினி அப்படியே சோர்ந்து போய் உக்காந்துடுறார்... அவர் மனசிலே சில கேள்விகள் எக்கோ அடிக்குது....



நான் அனாதையா...அனாதையா...தையா...தையா...
நான் பரதேசியா...பரதேசியா...தேசியா...சியா...சியா...
நான் ஆண்டியா...ஆண்டியா...ண்டியா....ண்டியா...டியா...
நான் ஆண்டியா...ஆண்டியா...ண்டியா....ண்டியா...டியா... )




(பேக் ரவுன்ட்லே இவன் ஜாதகத்தை மாற்றி வச்ச பாவி யாரடா... என்ற பாட்ஷா பட பாடல் பக்கத்துலே இருக்குற டீ கடைலே ஓடுது..)


நம்ம ரஜினி அப்படியே சோர்வா உக்காந்து கிட்டார் வாசிக்குறார்



****************************************************
அம்மா தமன்னா சோகமா உக்காந்து..... அவங்க வச்சிருக்குற சோவிய எண்ணுறாங்க... சோவி டொக்கு, டொக்கு, டொக்குன்னு பாத்திரதுலே விழுந்து ஒலி எழுப்புது.. அந்த ஒலி அலைய வாங்கி, இயங்கு ஆற்றலா மாற்றி பக்கத்திலே இருக்குற அம்மி இயங்குது.. (பின்னே ஒரு விஞ்ஞானி இருக்குற வீட்லே இப்படி கூட இல்லேன்னா எப்பூடி?)

ரஜினி : நீ நல்ல வெள்ளையா இருக்கே... என்னைய மட்டும் ஏம்மா கருப்பா பெத்தே... ?

அம்மா தமன்னா: (எதோ நினைவாக ) நான் எங்கேடா உன்ன பெத்தேன்?

ரஜினி : அப்படின்னா என்ன பெற்ற அம்மா யாரு? என்ன பெற்ற அம்மா யாரு?

அம்மா தமன்னா: அப்படி இல்லேட... நீ தாண்டா என்னை பெத்தே... நீ.. தாண்டா என்னை பெத்த ராசா...

ரஜினி : சும்மா சொல்லாதீங்க அம்மா... சும்மா சொல்லாதீங்க அம்மா... எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்... என்னோட உண்மையான அம்மா யாரு? அப்பா யாரு... சொல்லுங்க... நான் அனாதையாமே.... என்னோட இருப்பிடம் இமய மலையாமே... அப்படியா... சொல்லுங்கம்மா சொல்லுங்க....

அம்மா தமன்னா:பழைய கதை எல்லாம்.. என்கிட்டே கேட்காதே.... நானே அதெல்லாம் மறக்கணும்னு நெனைக்குறேன்... ஆனா அந்த உண்மைய இனி உன்கிட்டே இருந்து மறைக்க முடியாது... உன்னோட அப்பா அம்மா எல்லாரும் இமைய மலைலே தான் இருக்காங்க... நேப்பாளதிற்க்கு போனா அங்கே உன்னோட அப்பா அம்மா இருப்பாங்க... அதுக்காக இந்த வளர்த்த அம்மாவை மறந்துராதேடா....

ரஜினி : (கண்களில் கண்ணீர் கொண்டவரா...) இல்லேம்மா இல்லே... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க தான் என் அம்மா... எனக்கு இப்ப ஒரு அர்ஜன்ட் வேல இருக்கு நான் நேப்பாளதிற்க்கு போறேன்....
********************************************************************
தலைவரு... நேப்பாளதிலே போய் இறங்கி, தேடுறார்...

அது பெரிய சந்தை.. அங்கே பெரிய ஆரவாரத்தோட... அங்கே ஒரு பல்லக்கு வருது... அதுலே இருக்காங்க.. நம்ம ஐசு...

எல்லாரும் அவங்களோட அழகை அப்படியே மெய் மறந்து பாக்குறாங்க... ஆனா நம்ம தல அவங்களை கண்டுக்க கூட இல்லே..

ஆனா நம்ம ஐஸுக்கு நம்ம தலைய பார்த்த ஒடனே வெட்க படுறாங்க... வயசுக்கு வந்திடுறாங்க...
நம்ம ஐஸுக்கு அரண்மனைலே எல்லா சடங்கும் முடியுது... சடங்கு பண்ண களைப்புலே நம்ம ஐசு அப்படியே கண்ணை மூடுறாங்க... அவங்க கண்ணுக்குள்ளே நம்ம தல என்ட்றிய கொடுக்குறார்...

அங்கே போடுறாங்க சாங்கை...




கிளிமஞ்சாரோ - மலைக்
கணிமாஞ்சாறோ - கன்னக்
குழிமஞ்சாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத் தங்கச்சியே
யெங்கூடத்தான்இருக்கா
ஆளுயற அலிவ்பழம்
அப்படியே எனக்கா?

ஆக்கக்கோ - அடி கின்னிக்கொழி
அப்பப்போ - யென்னப் பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம் எண்ணிக்கோடி

கொடி பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை - ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை

இனிச்சக்கீரே அடிச்சக்கரே
மனச ரெண்டா மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்தக் கனி
என்னை மெல்ல ஆற வைத்துக் கடி

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி என்னவாசியே

என் தோல்குத்தாத பலா - றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில் வாசம் நீ

நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

ஆக்கக்கோ - நான் கின்ணிக்கோழி
அப்பப்போ - எண்ணப் பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம் எண்ணிக்கோ நீ


அடுத்த பகுதிலே தொடரலாமா... மீதி கதையை?

Monday 27 September 2010

எந்திரன் - கதை மற்றும் கதை வசனம்! பகுதி இரண்டு

எந்திரன் கதை மற்றும் கதை வசனம் - முதல் பகுதி

இங்கே இரண்டாம் பகுதி.....


"ஆள்ரவனை தொழாதேடா" சாங்கு முடிஞ்ச உடனே தலைவர் கான்பரன்சு ரூமுக்கு வாரார்...

தலைவர்கிட்டே "நீங்க தான் முதல்வர், நீங்க தான் முதல்வர்" அப்படின்னு சொல்றாங்க... ஆனா தலைவர் வேணாம் வேணாம் என்று சொல்றார்

"நான் முதல்வர் இல்லே இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன்"

"அப்படில்லாம் நீங்க சொல்ல கூடாது.... இங்கே இருக்குற (வெ. ஆ. மூர்த்தி, மற்றும் கு.முத்தை காட்டி...) இதுங்கெல்லாம் பாடம் நடத்தியும் நீங்க தான் இந்த ஸ்கூல்லே பஸ்டு வந்திருக்கீங்க... அதனாலே தினத்தந்தி பேப்பர்லே இருந்து பிளஸ்டூ முதல்வன் பரிசு கொடுக்குரதுக்காக வந்திருக்காங்க ஆனா நீங்க இப்படி பிடிவாதம் பண்ண கூடாது...இது தமிழ் நாட்டின் முதல்வர் பதவி இல்லே.. நீங்க இப்படி முரண்டு பண்றதுக்கு... "

சூப்பர் ஸ்டார் ஆடியன்சை பார்த்து... இந்த சின்ன பதவியையே வெறுத்தாதான் அப்புறம் பெரிய பதவிய வெறுக்க முடியும், கண்ணா.... இந்த முதல்வர் பதவி எனக்கு தேவை இல்லே.. இதுலே நான் முதல்வனா வரதுலே எனக்கு இஷ்டமே இல்லே..(என்று சொல்லி மேலே பார்குறார் சூப்பர் ஸ்டார்...... அப்படியே தொடர்கிறார்)

அன்பு அம்மாவோட கனவை நிறைவேத்துறதுலே முதல்வனா (கேமரா பக்கத்துலே இருக்குற தமன்னாவை காட்டுது, தமன்னா கண்ணுலே ஓரத்துலே ஒரு துளி ஆனந்த.. கண்ணீர்)

ஆசை காதலி ஆசைகளை பூர்த்தி செய்றதுலே முதல்வனா (கேமரா பக்கத்துலே இருக்குற ஐஸ்வர்யா ராயை காட்டுது, ஐஸ்வர்யா ராய் முகத்துலே ஒரு பெருமித புன்னகை )

இனிய நண்பர்களுக்கு உதவுறதுலே முதல்வனா (கேமரா பக்கத்துலே இருக்குற ஜெய் சங்கரையும், ஜெமினி கணேசனையும் காட்டுது... காட்டுது, அவங்க சந்தோசத்துலே பக்கத்துலே இருக்குற தூணை கட்டிகுறாங்க... அப்புறம் அங்கே பெருக்க வந்த ஆயாவை கட்டி பிடிக்குறாங்க.. அப்புறம் பதறி.. ஒருவரை ஒருவர் கட்டி பிடிச்சுகுறாங்க. )

ஈகையிலே சிறந்த நல்லவங்களை காப்பதிலே முதல்வனா வரணும் என்று சொல்லி ஆடியன்சை பார்த்து கையை காட்டுறார்

வெ. ஆ. மூர்த்தி: தம்ப்ப்ரி.. அதுவா வெல்லாம் அப்புறம் ஆகிக்கலாம் தம்ப்ப்ரி.. இப்ப நீ போய் தம்ப்ப்ரி.., நாளைக்கு முதல்வனா வரணும், அதான் தம்பி எங்க எல்லாருக்கும் ஆசை தம்ப்ப்ரி..

"நீங்க மட்டும் நாளைக்கு முதல்வனா வரலன்னா... அவங்கெல்லாம் நாளைக்கு கொந்தளிச்சு வந்திருவாங்க" என்று ஆடியன்சை பார்கிறார் குமரி முத்து...

வெ. ஆ. மூர்த்தி: யோவ் நீயெல்லாம் ஆடியன்சை பார்காதையா, லேடிஸை பார்குறேன்னு நெனச்சி கொந்தளிசிற போறாங்க..

"சரி இந்த பிரச்சினைய நாளைக்கு நல்ல விதமா தீர்குறேன்.." என்று சொல்லிய ரஜினி உடனே அங்கே இருக்குற ஹிஸ்டிரி டிபார்ட்மெண்டுக்கு போய் அங்கே இருக்குற எல்லா
லாங்க்வேஜ் புக்கையும் எடுத்துட்டு போறார்...போய் நைட்டு பன்னிரண்டு மணிக்கு படிக்க உக்காருறார்

(அவரு படிக்குறதையும் ஒரு பார்பி டால் பொம்மையையும் "ற்றால்லி" ஷாட் வச்சி சுத்தி சுத்தி காட்டுறாங்க...)



பேக் ரவுண்டுலே... ஒரு சாங்



எகிப்து மன்னன் "போரோ"
எங்கும் மன்னன் இந்த "ரோபோ"

ஆப்கானிஸ்தானில் தோரோ"போரோ"
ஹிந்துஸ்தான்லில் இந்த மோட்டார்"ரோபோ"

ஒளியின் விதியை திருப்பும் பெட்டகம் "போரோ"
விதியின் சதியை திருப்பும் கட்டகம் இந்த "ரோபோ"

எதிரியை படுத்தும் அக்க"போரோ"
எளிதாய் படுத்தும் இந்த"ரோபோ"

தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பது "போரோ"
மோகத்திற்கு பன்னீர் கொடுப்பது "ரோபோ"

மூன்றாம் உலகப்போரோ...
தனியா செய்திடுவான் இந்த ரோபோ



மூன்றாம் உலகப்போரோ...
தனியா செய்திடுவான் இந்த ரோபோ

மூன்றாம் உலகப்போரோ...
தனியா செய்திடுவான் இந்த ரோபோ



சாங்கும் முடியுது... பொழுதும் விடியுது... கோழி கொக்கரக்கொன்னு கூவுது...

பார்த்தா தலைவர் ரெண்டு ரோபோ செஞ்சிருக்கார்... ஒன்னு அந்த கொக்கரக்கொன்னு கூவிச்சே அந்த கோழி ரோபோ இன்னொன்னு அச்சு அசலா அவரே மாதிரி ஒரு ரோபோ

**********
காலையிலே, ரஜினி அம்மாவான தமன்னா கிட்டே, ரஜினி பிரண்ட்ஸ் எல்லாரும் கேட்குறாங்க "எப்படி இந்த புக்ஸை படிச்சி ரோபோ செஞ்சாரு அவரு?"

அதுக்கு தமன்னா சொல்றாங்க "சி, பாஸ்கல், ஜாவா லாங்க்வேஜ் புக்கை வச்சி படிச்சிட்டு ரோபோ பண்றவன் சாதா ஸ்டார், தமிழ், தெலுங்கு, ஹிந்தி லாங்க்வேஜ் படிச்சிட்டு போய் ரோபோ பண்றவன் சூப்பர் ஸ்டாரு"


அடுத்த பாகம் வரும் வரை கொஞ்சம் பொறுமையா இருங்க....

Friday 24 September 2010

எந்திரன் - கதை மற்றும் கதை வசனம்! முதல் பகுதி

இன்னிக்கு உள்ள நெலமைலே, விலைவாசி உயர்வோ, காஸ்மீர் பிரச்சினையோ, பிள்ளையார் ஊர்வலமோ ஒரு பெரிய பிரச்சினையே இல்லே... ஆனா இந்திய இறையாண்மையின் பெரிய பிரச்சினை எந்திரன் ஓடுமா? ஓடாதா? வசூல் பண்ணுமா? பண்ணாதா? அதனோட கதை என்ன? இதான் பிரச்சினை... இதுலே இருக்குற முதல் ரெண்டு பிரச்சினைக்கு நாம ஒன்னும் சொல்ல முடியாது இப்போ? ஆனா கதை! அதை நாம இப்பவே சொல்லிரலாம்

எந்திரன் கதை என்ன என்ன என்று கோலிவுட்டு, ஜல்லி கட்டு ஆடிகிட்டு இருக்கு... அவங்க மட்டுமா நாமும் தானே.. அதனாலே நம் மக்களின் அறிவு பசி (வேற எதுலையும் நமக்கு அறிவு பசி வரவே வராது) போக்க, நம்ம சிகரட் எஜன்ட் நைனா- நையாண்டி நைனா 003 அவர்களை ஏவி விட்டோம் அவர் சொன்ன கதைய மற்றும் உரையாடலை அப்படியே உங்களுக்கு சமர்பிக்கிறோம்..



கதையோட ஒன் லைன் சொல்றேன் கேட்டு கோங்க...இதை சொல்ல கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தாலும் நம்மா ரசிகர்களுக்காக.. நம்ம தமிலர்களுக்காக.(இங்கே எழுத்து பிழை இல்லே) அவங்க தான், தேர்தல்லே யாரு ஜெயிப்பான்னு தேர்தல் கமிசன் வைக்குற சஸ்பென்சு பிடிக்காமே, கருத்து கணிப்பு வச்சி பிரச்சினை வராமே(?) 'தீர்குற' ஆளுங்க... நாளைக்கு வருற படத்தை இன்னிக்கே பார்குற டெக்னிக்கை சாந்த"சக்குபாய்"...ரிலீஸ் ஆனா காலத்திலேயே உருவாக்குன ஆளுங்க (இதில் எந்த உள்குத்து அரசியலும் இல்லை), இவளோ ஏனுங்க... வயித்திலே இருக்குற குழந்தை ஆணா? பெண்ணா? என்று நம்ம ஆண்டவன் வைக்குற சஸ்பென்சே... பிடிக்காது அதையே ஸ்கேன் செஞ்சி உடைக்குற ஆளுங்க... அதனாலே நானே சொல்லிடுறேன, இது வரைக்கும் எந்த படத்திலேயும் வராத ஒன்னு, அப்படின்னு "இயக்குனர் இடி" சங்கர் சொல்லவே இல்லே நானே சொல்லிக்குறேன் "அநியாயத்தை கண்டு பொங்கி எழுற ரஜினி"

"ஒன் லைனு-ன்னு சொல்லிட்டு இவ்ளோ பெரிய பில்டப்போட சொல்றே? "

"பின்னே சங்கர் படம்னா, தலைவர் படம்னா சும்மாவா.... ஒரு கெத்து வேணாம் ?"

"இதுக்கே இவ்ளோ பில்டப்பா... சரி.. சரி கதைய சொல்லு "
-------------------------------------------------------------------------------------
ஹே.... ஹே.... என்ற சவுண்டோட டைட்டில், தலைவர் பேரு வந்த உடனே சூடன் ஆரத்தி, சிதறு தேங்கா எல்லாம் போட்டு தியேட்டரை ஒரு வழி செஞ்சி, முதல்லேயே ஒரு சண்டை சும்மா அனல் பறந்தது, தணல் தெரித்தது சண்டைலே ஒருத்தன் மண்டை உடஞ்சது, சண்டை முடிஞ்சி படம் ஆரம்பம் (சண்டை ஸ்க்ரீன்லே இல்லைங்க, ஸ்க்ரீனுக்கு முன்னாடி.... வித்தியாசமா இருக்கா?!!! அதான் தலைவர் படம்!!!!)

ஒப்பன் பண்ணா ஒரு பேனரு அதிலே "முதல்வரே வருக வருக" என்று வாசகம். அடுத்தும் ஒரு பேனரு "ஆராய்ச்சி பல செய்து, முதல்வர் பதவிக்கு அடுத்து அடுத்த ஜனாதிபதி ஆகபோகும் எங்கள் குல கொழுந்தே வருக வருக"

******************************************************************

"அடுத்த சீன் ஒரு ரூம்லே - அது பெரிய கான்பரன்சு ரூம்"

"யாரெல்லாம் இருக்கா?"

"பாட்ஷா படத்திலே மெடிக்கல் காலேஜி ஓனரா வருவாரே அவரு, இதிலேயும் அவரு கல்வி தந்தையா தான் வாராரு, புரப்போசரா நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி, இன்னொரு புரப்போசரா குமரி முத்து, நம்ம ரஜினி, மற்றும் ரஜினியோட பிரண்ட்ஸ் ரெண்டு பேரு அது யாருன்னா நம்ம ஜெய் சங்கரும், ஜெமினி கணேசனும்"

"ஹே வெறி இன்ட்ரஸ்டிங், ஆனா அவங்க தான் இப்ப இல்லவே இல்லியே..."

"அட அவசர படாமே கேளுப்பா... உபயம், அமெரிக்க மேக்கப் கலைஞர்கள் இல்லை கிராப்பிக்ஸ் கலைஞர்கள், இதுக்கே முப்பது கோடி காலியாம் இந்த நியூசை சொன்னவரு பிலிம் நியூஸ் ஆனந்தன் இல்ல, டகுல் டம்பி, டமாரம். நம்ம காக்கா ராதா கிருஷ்ணனையும், சொக்கலிங்க பாகவதரையும் தான் பிரண்ட்சா போடலாம்னு முதல்லே ஒரு பேச்சு இருந்துச்சாம், ஆனா அவங்களை போட்டா கதை ஹை ஸ்கூலே நடக்குற மாதிரி எடுக்க முடியாதாம், எளிமன்றி ஸ்கூல்-லே நடக்குற மாதிரி தான் எடுக்க வேண்டி வருமாம், அதனாலே அந்த ஐடியாவை விட்டுட்டாங்கலாம்"

"அட நம்ம பரத், விஷ்ணு இவங்களை போட்டிருக்கலாம்"

"ஹா...ன்....! போட்டா...? காலேஜி சீனு தானே எடுக்க முடியும்...! ஹை ஸ்கூல் சீனா எடுக்க முடியாதுல்லோ... இவங்களை போட்டதுக்கும் ஒரு தத்துவம் இருக்குய்யா... நம்ம பீர்பால் தத்துவம் தான், ஒரு கோட்டை சிறுசா ஆக்கணும்னா பக்கத்திலே இன்னொரு கோடு பெருசா போட்டா போதும்... அப்புறம் இதுலே இன்னொரு முக்கியமான மேட்டரும் இருக்கு... நம்ம சங்கர் அண்ணாச்சி செலவை மிச்சம் பிடிச்சிருக்காரு..."

"என்னய்யா புதிர் போடுறே? எப்படிய்யா மிச்சம் புடிச்சிருக்காரு?"

"தலைவருக்கு மேக்கப் போட்டா செலவு அறுபது கோடி ஆகுதாம் ஆனா தலைவரை அப்படியே வச்சி இவங்களை கிராபிக்ஸ்லே கொண்டு வந்தா செலவு முப்பது கோடி தானாம், பார்த்தியா பாதிக்கு பாதி மிச்சம், நம்ம தலைவரும் அப்படியே வருவாரு... அவங்க பிரன்ட்சும் ரெடி"

"சரி சரி வியாக்கியானத்தை நிறுத்து கதைய சொல்லு..."

முதல் சீனே.. சும்மா அமர்கள படுத்துது....

பாட்ஷா படத்திலே மெடிக்கல் காலேஜி ஓனரா வருவாரே அவரு: "எல்லாரும் முதல்வரை எங்கே முதல்வரை எங்கேன்னு கேட்டிட்டு இருக்குற இந்த நேரத்த்லே அவரு எங்கைய்யா போயிட்டாரு"

வெ. ஆ. மூர்த்தி: இப்படி ஸ்கூல் தொறந்திருக்கிற நேரத்திலே என்னிக்கு அவரு வந்திருக்காரு, நீங்க இன்று பள்ளி விடுமுறை ன்னு போட்டு பாருங்க, டங்குன்னு வந்து நிப்பாரு.

குமரி முத்து : அவரு எங்கே இருப்பாருன்னு உங்களுக்கு தெரியாதா... இன்னிக்கு பக்கத்துலே எங்கேயோ பால்காரங்க எல்லாம் மீட்டிங் போட்டு அம்மனுக்கு கூழு ஊத்துராங்கலாம்... கேள்வி பட்டேன்.. தம்பி அங்கே தான் போய் இருப்பாரு...

-------------------------------------------------------------------------------------

ஒரு பெரிய கும்பல், அதை சுத்தி சுத்தி.. கேமரா காட்டுது... ஏரியல் வியூ லே இருந்து.. அப்படியே கீழே வருது...
கீழே ரெண்டு பேரு:
ஒருவன் : நீ கைய வச்சியா மேல..
மற்றொருவன் : இல்லே.. ஆனா இன்னிக்கு வைக்காமே போறதில்லே...

அந்த கூட்டம் மொத்தம்மா யாரையோ மொத்திகிட்டு இருக்குன்னு நெனச்சா... கும்பல் மொத்தமும் ஒரு ஆளை தொட்டு ... தொட்டு சந்தனம், கலர் பொடின்னு பூசி மஜா பண்ணிட்டு இருக்கு அவருதான் நம்ம சூப்பர் ஸ்டார்... அப்படின்னு நீங்க நெனச்ச... அது உலக மகா தப்பு... அவரு அந்த ஏரியா கவுன்சிலர் "வினு சக்ரவர்த்தி"
என்னை ஒன்னும் பண்ணாதீங்கடா... நம்ம தம்பிய கவனிங்கடா அப்படின்னு சொல்லிட்டு "தம்பி...." அப்படின்னு கூப்பிடுறார்...

வானத்திலே சும்மா பட்டாசு பட படக்க, கழுகெல்லாம் கலங்கி ஓட..., சூறாவளி சுழன்றடிக்க.. எங்கேயோ காட்டிலே இருக்குற சிங்கம் எல்லாம் சிதறி ஓட, நரியெல்லாம் நாலு பக்கமும் தெரிச்சு ஓட.. ஏர்லே...அதுவும்... 'சொமர்சால்டிலேயே' வந்து கின்னுன்னு நிற்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்...



அந்த கும்பல்லே இருந்து வெளியே வந்து ஒரு சாங்கு...


ஆள்ரவனை தொழாதேடா
ஆண்டவனை தொலைக்காதேடா
இது நம்ம வேதம்டா...
நீயே ஒரு தேவன்டா....

ஆள்ரவனை தொழாதேடா
ஆண்டவனை தொலைக்காதேடா
இது நம்ம வேதம்டா...
நீயே ஒரு தேவன்டா....

நீயே ஒரு தேவன்டா....

அடா அடா அடி டா
அநியாயத்தை அடி டா

தடா தடா தடி டா
அக்கிரமத்துக்கு தடி டா


அடா அடா அடி டா
அநியாயத்தை அடி டா
தடா தடா தடி டா
அக்கிரமத்துக்கு தடி டா

பேக்கரிலே பன்னுடா
லாக்கரிலே கண்ணுடா

நானும் நீயும் ஒண்ணுடா - யாரும்
பார்த்தா விழும் கண்ணுடா (இந்த லைனு வரும்போது தல சூப்பர் ஸ்டாரு ஆடியன்சை பார்த்து பாடுறார்)

நானும் நீயும் ஒண்ணுடா - யாரும்
பார்த்தா விழும் கண்ணுடா

நானும் நீயும் ஒண்ணுடா - யாரும்
பார்த்தா விழும் கண்ணுடா (இப்ப அவரு கண்ணுலே ஆனந்த கண்ணீர் வருது)(நமக்கும் தான் டிக்கட் வெல அஞ்சு நூராமே)


(மீதி படம் விளம்பர இடைவேளைக்கு பிறகு அடுத்த பதிவுலே தொடரும்... )

Wednesday 8 September 2010

பொன்னியின் செல்வனா? ஜாவாவின் ஜாரியா?

சென்று வந்தேன், இது வரை காணா பொன்னுலகம். நம் மூதாதையர் உயிருடன் அலைந்து திரிந்த அந்த பூமி. உலகலாம் உள்ள மொழிகளுள் மூத்த தமிழ் கொடுத்த முத்தமிழும், முக்கனி சாரிலும் இல்லா அந்த தீஞ்சுவையை கண்டேன். அமரர் கல்கி அவர்கள்.. வடித்திட்ட பொன்னியின் செல்வன் என்னும் நாவலின் மூலம்.

எப்படி சொல்வது... வார்த்தைகளின் வார்ப்பும், அதை அடுக்கிய வனப்பும்.... அந்த அனுபவத்தை, அந்த சுகத்தை, அந்த  சஞ்சாரத்தை.அந்த மலர்ச்சியை, அந்த கிளர்ச்சியை, அந்த உவகையை, அந்த ஆனந்தத்தை, அந்த வசந்தத்தை அந்த நாவலை படிக்கும் பொழுது நான் அடைந்த அந்த பரவசத்தை ஆகா....ஆகா....ஆகா.... நினைக்க..... நினைக்க....

கதை அரசவையிலே நடக்கும் போது நானும் ஒரு மந்திரி பிரதானியாய்,  கடலில் மரக்கலத்தில் நடக்கும் பொழுது நானும் ஒரு மாலுமியாய், சுழன்றடிக்கும் சூறாவளியில் என் முகத்திலும் கடல் நீர் தெரித்ததை அடர் கானகத்தில் நடந்த பொழுது எனக்குள் ஒலித்த சிம்ம கர்ஜனையையும், புலியின் உறுமலையும், களிறின் பிளிறலையும் அது கேட்டு என்னுடல் நடுங்கியதையும்.... சதி திட்டம் நடக்கையிலே நானும் என்னை சுற்றி பார்த்து கொண்டதையும்... அந்தி நேர தென்றலில் நடந்த காதல் விளையாட்டை படிக்கையிலே என்னுள் எழுந்த கிளர்ச்சியையும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், போனால் அதுவே பெரிய கதையாகி விடும்... அதனால் அந்த நாவலை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லாமல் விட்டு விடலாம் என்றால் அதுவும் முடிய வில்லை.. அதனால் அந்த நாவல் படிக்கும் பொழுது ஏற்பட்ட சில அனுபவங்களை சொல்ல வேண்டும்.

பச்சை வண்ணத்தில் இருப்பது உண்மை ஒலிகள்...
 
செவ்வண்ணத்தில் இருப்பது, செவ்வையாக கதை படித்ததினால் என் காதில் ஒலித்த மாய ஒலிகள்

“நைனா, உன்ன P.M (புராஜக்ட் மானேஜர் ) கூப்பிடுறார்"
"என்ன? சுந்தர சோழ சகரவர்த்தியிடமிருந்து அழைப்பா...! வருகிறேன் என்று சொல்."

"டேய் நைனா, இன்னிக்கு குவாலிட்டி டீம் மீட்டிங் தெரியுமா..."
"அந்த பழுவேட்டரையர்களுக்கு, நமக்கு எதிராக சதி செய்வதே பொழப்பா போய்டுச்சு..."

"(peer review)பீர் ரிவீயுவ்-லே உன் கோடை பிரிச்சி மேஞ்சிட்டானாமே, ரோஹித் சோளங்கி."
"சதிகாரன்...! கூடவே இருந்து குழி பறித்து.. விட்டானா அந்த வேங்கி நாட்டான். சிநேக துரோகம் செய்வதில் அவனுக்கு நிகர் அவன்தான்
(எப்பா யாரும் சினேகா துரோகம் என்று படித்து தொலஞ்சிராதீங்க )

"இருந்தாலும் நம்ம டீம் லீடு உன்னை விட்டு கொடுக்கமே பேசினாராமே..."
"இளவல் ஜாவா மொழிதேவிக்கு, என் மீது எல்லையற்ற பாசம் உண்டு என்பதை நிரூபித்து விட்டார், வாழ்க இளவரசர், வாழ்க ஜாவாவின் ஜாரி... "

"நாம எழுதுன கோடை பிரிச்சி மேயுறது அந்த டெஸ்ட் டீம்லே இருக்குற பிரத்யுஷா தான்....... தெரியுமா உனக்கு ?"
"அந்த ஜீன்ஸ் ஜக்கம்மா நம்ம பழுவேட்டரையர்களுடன் சேர்ந்த நாள் முதலா அதை தானே செய்து கொண்டுள்ளாள்... சதிகாரி... காணாததிற்கு அவள் கண்டு பிடிக்கும் பக்(bug) அத்தனைக்கும் p1(priority) போட்டு மன்னரிடம் மாட்டி விடுவதே அவர்களின் திட்டமாயும் இருக்கிறதே..."