Monday 30 November 2009

டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...உன்னை கண்டாலே ஆச்சர்யமே...!



மும்பையிலிருந்து நையாண்டி நைனா, வலையுலக சுனாமி அண்ணன் தண்டோராவை காண செல்கிறார். பினாமிகள் வேணா ஊருக்குள்ளே இருக்கலாம், சுனாமி எங்கே இருக்கும்? தண்ணிலே தான் இருக்கும். (இங்கே டபுள் மீனிங் பார்க்குறவங்க பிளாக்கும் கண்ணும் அவிஞ்சி போயிரும் ஆமா நான் சொல்லிபுட்டேன்...)

சென்னையிலே தண்ணி எங்கே இருக்கு? அப்படின்னு சின்னபுள்ளை தனமா அறிவாளி கேள்வி கேட்டா... நீங்க சந்த்ராயன் அண்ணாதுரை கிட்டே வேலைக்கு சேர வேண்டிய ஆளுன்னு அர்த்தம். அதனாலே உடனே இந்த வெட்டி பிளாக்கை மூடிட்டு...
இம்மீடியட்லி காண்டாக்ட் எனி பெர்சன் பட் C/O. மிஸ்டர்.அண்ணாதுரை,

தண்ணி எங்கே இருக்கும்? எங்கும் இருக்கும். டாஸ்மாக்குலே தான் தட்டுபாடு இல்லாமே கிடைக்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்னு சொன்னீங்கன்னா... அல்ரெடி நீங்க அண்டர் எனி பெர்சன் C/O.மிஸ்டர்.அண்ணாதுரைன்னு அர்த்தம்...

பட் அந்த அண்ணாதுரை வேறை, இந்த அண்ணாதுரை வேறைன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணுமா...அவ்வ்வ்வ்.

பார்த்தீங்களா... அண்ணனை பத்தி நெனச்ச உடனே... எப்படி மானிட்டர் நெறையுது... பார்த்தீங்களா... எச்சூஸ் மீ... நான் என்னோட கம்ப்யூட்டர் மானிட்டரை சொன்னேன்... தண்ணி நெறையா இருக்குற எடம், பீச்சு அதானாலே சுனாமியும் அங்கே தான் இருக்கும். அங்கே தான்... அங்கே தான்... அங்கேயே தான், அங்கே பீச்சுலே தான் சந்திக்க போறார்.

"அங்கே என்னா நடந்துச்சு?"

அதை சொல்ல தானே போறேன்... சரி... சுதி கொஞ்சம் ஏத்தி...கோங்க... பாட்டல்னா பாட்டல், ஆர்மோனிய பெட்டினா.. ஆர்மோனியபெட்டி... உங்களுக்கு எது வசதியோ அது...(கஸ்டமர் சேட்டிஸ்பாக்சன், ரொம்ப முக்கியம்)

அப்படியே... மௌன கீதங்கள் பாக்கியராஜை கற்பனை பண்ணிக்கோங்க.. அது தான் "அண்ணே". என்னாது? கற்பனையே பண்ண வேண்டாம், அண்ணன் அப்படிதான் இருப்பாரா? அது உங்க இஷ்டம். ஆனா நையாண்டி நைனா அந்த சின்ன பையன் மாதிரி தான். அதனாலே நையாண்டி நைனாவை சின்ன பையன் மாதிரியே கற்பனை பண்ணிகொங்க... அங்கே என்ன நடந்துச்சி அப்படிங்குறதை... உங்க மன திரையில் காண்க... ஓகே.. ஸ்டார்ட் மீஜிக்.....

நைனா:
டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...
உன்னை கண்டாலே... ஆச்சர்யமே...

டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...
உன்னை கண்டாலே... ஆச்சர்யமே...


தண்டோரா:
நைனா.. நைனா... "நைண்டி".. நைனா...
எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்

நைனா.. நைனா... "நைண்டி".. நைனா...
எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்


நைனா:
உன் பிளாக்கை பார்த்தாலே...,
உன் பதிவை திறந்தாலே...,
கம்..பூட்டரும் எலி போலே...,
ஏன் நாழுது...?

உன் பிளாக்கை பார்த்தாலே...,
உன் பதிவை திறந்தாலே...,
கம்..பூட்டரும் எலி போலே...,
ஏன் நாழுது...?


தண்டோரா:
பதிவர்கள் சில பேரு...
செய்கின்ற தப்பை தான்...
அடியேனும் இந்நாளில் செய்றேனப்பா...


நைனா:ஹான்...

தண்டோரா:
பதிவர்கள் சில பேரு...
செய்கின்ற தப்பை தான்...
அடியேனும் இந்நாளில் செய்றேனப்பா...


நைனா:அது என்ன தப்பு... ?

தண்டோரா:"போயம்ஸ்"...!

நைனா:என்கிட்டே சொல்லு...!

தண்டோரா:நோ..நோ..

நைனா:சொல்லாம போனா விட மாட்டேன்பா..

தண்டோரா:வேண்டாம்.. வேண்டாம்...

நைனா:ஹான்...

தண்டோரா:"நைண்டி"... நைனா...

நைனா:ஹான்...

தண்டோரா: அதை சொன்னாலும் புரியாதப்பா...

நைனா:டோரா... டோரா...

தண்டோரா:வலையோர நண்டெல்லாம் தான் பெற்ற குத்தோடு, எப்போதும் கட்டோடு விளையாடுதே...

வலையோர நண்டெல்லாம் தான் பெற்ற குத்தோடு, எப்போதும் கட்டோடு விளையாடுதே...

அது போலே நம்மோடு சும்மாவும் கை கலந்து அன்போட விளையாட மனம் ஏங்குதே...


நைனா:உன் மூக்கை பார்த்து...

தண்டோரா:தேன்க்யூ

நைனா:விடுவேனே குத்து...

தண்டோரா:ரியல்லி...

நைனா:எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:ஹான்

தண்டோரா:"நைண்டி"... நைனா...

நைனா:ஹான்

தண்டோரா:எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்

நைனா:டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...உன்னை கண்டாலே ஆச்சர்யமே...

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:ஹான் ... டோரா.. டோரா..

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:டோரா.. டோரா..

Friday 27 November 2009

சரக்கே உன்னை ஆராதிக்கிறேன்...



போதை என்பதற்கு சரியான இலக்கணம் எது?அது நம் பார்வையை பொறுத்த விஷயம்.. எனக்கு பதிவுகள் மிகவும் பிடிக்கும்.. என் நண்பன்.. என்னா ரசனைடா உனக்கு? வேலை வெட்டி இல்லாமே போடுறது... என்பான்.. சற்றே தீவிரமாய் சிந்தித்து(?) இடதுசாரி, வலதுசாரி அப்பப்ப, ரம்பா சாரி சிலுக்கு சாரி... (சாரி நான் கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேன்...) என உரித்தெடுத்து எழுதி இருப்பார்கள், அவர்கள் (உரிமைதான்) அதுதான் ஒரு வித்தியாசமான அப்பீலை அவர்களுக்கு (தோ..பார்டா) கொடுத்திருக்கும்) லக லக லக..... தளத்தின் நையாண்டி நைனாவை "அவதாரில்" பார்த்தால் கேவலமாக இருப்பார். (ஹேய்... மிஸ்டர் பீன், கல்ல கொண்டு அடிக்காதே... நைனா பாவம்) ஆனால் நேரில்..? மேன்லி & மெஜஸ்டிக்... (ஹேய்... மிஸ்டர் நைனா, சொல்ல கொண்டு அடிக்காதே... பதிவர்கள்.. பாவம்.) ஏன்? 'டங்கள் அன் டங்களில்' எவர்சில்வர் பாத்திரம் எனக்கு அகோரமாய் இருந்தது.ஆனால் என் வீட்டு மண்சட்டி.. அது அழகு..



ஒரு விளம்பர படப்பிடிப்பில் சிறந்த கவிஞர் விருது பெறாத அண்ணன் தண்டோரா அவர்களின் புகைப்படம் பார்த்தேன். மிக எளிமையான கிராமத்து இளைஞன்(?) முகம். வலிகள் தாண்டி கிடைத்தவெற்றியின் தாக்கம் அவர் முகத்தில் ஜொலித்தது.[இப்ப அண்ணி உங்களை அடிக்குறதை நிறுத்திட்டாங்களா அண்ணா... ஓ....... இது பொது தளமா.... மன்னிக்க.. அப்புறமா தனியா இருக்கப்ப... கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை எடுத்து வச்சிக்கிட்டு.. 108 க்கு போன் போடுங்க... (கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு நன்றி... இல்லேன்னா நானும்லோ போய் அடி வாங்கணும்...)] அப்படியொரு களை ..அந்த தன்னடக்கமான ,பெருமிதம் கலந்த மெல்லிய புன்னகையில் பேரழகாய் தெரிந்தார்.

போதையான விஷயங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்..பதிவு, எதிர் பதிவு, பின்னூட்டம், புண்ணூட்டம், கவுஜை, எதிர் கவுஜை, மொக்கை, மைனஸ் ஓட்டு, எதிர் வினை, தொடர் பதிவு, கதை போட்டி, கவிதை போட்டி, பலாப்பட்டறைகள இன்னும் இத்யாதிகள்.. ஆனால் திருப்தியே வரவில்லை. நண்பர் ஒருவர் சொன்னார். பக்கத்து ஊரில் ஒரு வி'அலம்பரக்காரர்' இருக்கிறார், அவருடன் ஒரு நாள் கழித்து விட்டு வா..

வி'அலம்பரக்காரரின்'எளிமையான அறை.... நாலைந்து ஆட்டு குட்டிகள், கோழிகள், ஒரு நாய். வேறு மனிதர்கள் இல்லை... (அவரு என்னிக்கு கவிதை எழுத ஆரம்பித்தாரோ அன்னிக்கு சுவரு ஏறி குதிச்சு ஓடி காணாமே போனவங்கதானாம்...)அப்புறம் ஒரு ரகசியம்.... அலமாரியின் பின்புறம், யாரோ ஒரு ஆங்கில பெண்மணி போஸ் கொடுத்து இருக்க, பளபள காகிதத்தில்... வெளிநாட்டு அச்சில்...(உங்களுக்கு ஏன் வடியுது எச்சில், அஸ்க்கு புஸ்கு... நீங்க எதிர் பார்க்குற புத்தகம் இல்லே...) கவிதை புத்தகம், இலக்கிய புத்தகம், வரலாற்று புத்தகம். "டேமிக்கோ படாக்கோவ்", "புஸ்க்கன் மிஸ்டா சூங்" போன்று வாயிலே நுளையாதது எல்லாம் அதுக்கு பேராம்.

அவருக்கு எழுபது வயதிருக்கலாம். ஆனாலும் "யூத்து" என்று அவரை சேர்ந்தவர்கள் சொல்லி "கொல்வார்கள்", இவரிடம் என்ன போதைய காண்பது என்று அந்த அறை.. விட்டு வெளியேறி விட்டேன்..



அன்றைய தினம் பொழுது சாய்ந்தது... பாருக்கு கிளம்பினேன்.. அந்த மாலையில், அந்தி வேளையில் எதுவும் அழகாய்த்தான் இருந்தது... ஒரு மரத்தடி. அந்த "யூத்தை" பார்த்தேன்.. அவரா இவர்? என்னால் நம்பமுடியவில்லை.. ஒழித்து வைத்திருந்த ஒரு பேரல் சரக்கை ஒற்றை ஆளாய் முடித்து கொண்டிருந்தார்.. "கொலை வெறி" ராகத்துடன் ஏதோ ஒரு டப்பாங்குத்து பாடல்.. செவி கிழிந்தது... அவர் தலைக்கு பின்னால் கதிரவன்.. என் கோணத்தில் இவர் குரல் "இனிமை" தாங்காது... ஆதவன் அரண்டு ஓடுவதாகவே.....

பலர் கண்ணை குத்தி, பதமாக மறைந்து, நவிழும் கோப்பையை அழகாய் பற்றி, அதுவும் நழுவினாலும், நழுவி விடும் என்று எண்ணி ஒரு புட்டியில் அடைத்து, ரப்பரும் மாட்டி கையில் பற்றி கொண்டு.. குழந்தைக்கு முதல் முலைப்பாலை ஊட்டும் தாயை போல் அவர் கைகள் போதையில் நர்த்தனம் புரிய எனக்குள் விவரிக்க இயலாத பிரமிப்பு தோன்றியது.. உலகில் இதை விட போதைய காண முடியாது என்றே தோன்றியது.. அவரையே அப்பட்ட காப்பி அடிக்க ஆரம்பித்தேன்.. அப்போது நீங்கள் என்னை பார்த்திருக்க வேண்டும்!! என்னை விட கேனையன் யாரும் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள்... பின்னே.... நான் அவரை காப்பி அடிக்கேறேன் என்று சொல்லி "ஒரிஜினல் காப்பி"யை தானே அடித்துகொண்டிருந்தேன்.. கிளாசு கிளாசாய்..... (ஏதோ ஒரு பதிவுலே.. அப்படின்னு சொல்லி... இன்னும் மொக்கை போட விரும்பலே... இன்றைய பதிவுலே... எழுத்தாளர் தண்டோரா அண்ணன் போட்டத கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன்... உல்ட்டா அடித்திருக்கிறேன்...)

போதை என்பது என்ன?உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்கள்..விதிமுறைகள் இல்லை... நான் அழைப்பது.. வேண்டாம்... நான் கூப்பிடாமலையே... எல்லாரும் காண்டாகி... வந்து கிட்டு இருக்காங்க... இருந்தாலும் பதிவுலக கடமை மீறக்கூடாது... பாருங்க.. அதனாலே அழைசிடுறேன்..

1 . "தமிழ் தாயின், கலைச்செல்வன்" அண்ணன் தண்டோரா.
2 . "மும்பை தாயின், தத்து பையன்" இரும்புத்திரை அரவிந்த்.
3 . "சூரத் கோட்டையின் சிங்ககுட்டி" ராசு...
4 . "கோடம்பாக்கத்தின் கோடை இடி" அண்ணன் கேபிள் சங்கர்.

டிஸ்கி: முன்பு எழுதிய ஒரு மரண சாசனம்:

சமையல் கட்டில் இருக்கிறேன்!!
பயமாய் இருக்கிறது...

அதே வரிகள்தான்..ஆனால்
இந்த முறை
நான் சமைத்ததை பார்த்து..!!

டிஸ்கி : 2
இந்த இடுகையை நீங்கள் படிக்கும் போதும், பின்னூட்டம் இடும் போதும், வாக்களிக்கும் போதும்...அப்படியே மெர்சலாகி என்னை திட்டும்போதும்... .ஆஹா....எவ்வளவு போதை !!

Monday 16 November 2009

பத்து கேட்டவங்களுக்கு ஒரு "பத்து"...



அல்லாருக்கும் வணக்கம், இதுவரை காணாமே போய் இருந்த என்னை, நம்ம தம்பி, திருநெல்வேலியின் திருத்துருவம், மும்பையின் முண்டாசு பையன், கண்ணாடி இதயம் கொண்ட நமது இரும்பு திரை அரவிந்த் அவர்கள் இதில் கோர்த்து விட்டு, உங்க பாவத்தை சம்பாதித்து கொள்கிறார் என்பதனை அறிவித்து...தொடங்குகிறேன், தொடர்கிறேன்...
******************************************************************

அரவிந்த்: வாங்க ஸ்டார்ஜன் அண்ணே... என்ன இந்த பக்கம்!!! இது மொக்கை ராஜாக்கள் எல்லாம் வாக்கிங் போற இடமாச்சே...

ஸ்டார்ஜன்: ஆமா தம்பி, நீங்க நல்லா இருக்கீங்களா... இங்கே மொக்கை ராஜாக்கள் சுத்துற இடம்னு, நீ நிக்குறப்பவே தெரிஞ்சுகிட்டு தான்.... ஓடிக்கிட்டு இருக்குற பஸ்சுலே இருந்து "டகால்னு" குதிச்சி இறங்கினேன்.

அரவிந்த்: (அடச்சே... நம்ம பிட்டை நமக்கே திருப்பிட்டாரே... நாம இனி கவனமா இருக்கோணும்) அமுல் பேபி மாதிரி இருந்துட்டு... அமுக்கி குத்துறே..லே... யாரை பார்க்க வந்தீங்க...

ஸ்டார்ஜன்: நம்ம நைனா, சரக்கை போட்டுட்டு இந்த பக்கம் தான் வருவாராம்.... அவருகிட்டே ஒரு பத்து கேட்கலாம்னு...

அரவிந்த்: ...க்கும்... வெளங்கிரும்.... எவனாவது நல்ல சரக்கு ஊத்தி வச்சிருப்பான் அதை ஆட்டைய போட்டு கள்ள சரக்கா மாத்தி ஊத்திட்டு வருவாரு... அவருகிட்டே... நீங்க பத்து வாங்கவா...

ஸ்டார்ஜன்: அட அது இல்லே தம்பி... இன்னிக்கு காந்தி ஜெயந்தி..., பார்டி சரக்கு இல்லாமே... தெளிவா வருவாரு... அவருக்கு அரசியல்லே, நடிப்புலே... இப்படி யாரை எல்லாம் பிடிக்கும்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு... பதிவு போட சொல்ல தான்...

அரவிந்த் : (ஆமா அவரு பெரிய "சார்லசு இளவரசர்"... இவரு... பெரிய "பாப்பரசி" நிருபர்... பின்னாடி விரட்டி கிட்டே போய் தான், மேட்டரும் படமும் எடுப்பாரு..... அடச்சே... நானே அதுக்கு தானே வந்திருக்கேன்...) ஆமான்னே... நானும் அதுக்கு தான் வந்திருக்கேன், ஆமா இதை ஒரு பொழப்பாவே வச்சி.. எல்லாரையும் கெளப்பி விட்டுகிட்டே தான் இருக்காங்களா.... இன்னும் பதிவுலகத்திலே...

ஸ்டார்ஜன்: தம்பி... அங்கே பாருங்க... அந்த மரதடிலே... நம்ம நைனா... யாருகிட்டயோ.... மொக்கை போட்டுக்கிட்டு இருக்காரு...
----------------------------------------------------------

நைனா: என்ன இப்படி கூட்டமா வந்திருக்கீங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: (ரெண்டு பேரு வந்ததுக்கே... இந்த பில்டப்பா... ) உங்க கிட்டே சில கேள்விகள் கேட்டு பதில் வாங்கிட்டு போலாம்னு... வந்திருக்கோம்....

நைனா: ஒ.. யூ மீன் பேட்டி...

ஸ்டார்ஜன் : (வேட்டிக்கே வக்கில்லாததெல்லாம், பேட்டிய பத்தி பேசுதே... !!!) அப்படியும் வச்சுக்கலாம்....

நைனா: அப்படியா... எந்த பேப்பர், யூ.எஸ்.ஏ.டுடேயா? வால் ஸ்ட்ரீட் ஜர்ணலா? நியூ யார்க் போஸ்டா... ?

ஸ்டார்ஜன் :ஏய்.... அரவிந்து... பார்டி என்னடா...? என்னன்னோவோ பேரெல்லாம் சொல்லுது...

அரவிந்த் : (எனக்கும் இதை கேட்டு ரெத்தம் கொதிக்க தான் செய்யுது...) அதெல்லாம் சும்மா டுபாக்கூரு... தினத்தந்தி பேபரையே பார்டி, சலூன்லையும் டீ- கடையிலையும் மட்டுந்தான் 'பார்த்திருக்கும்'... இருந்தாலும் என்ன செய்ய நம்ம நேரம்...

ஸ்டார்ஜன்: பிளாக்கு... பிளாக்கு ஒன்னு இருக்கு அதுலே, எழுத தான்... நீங்க கூட ஒன்னு வச்சிருக்கீங்க...

நைனா : (காந்தி ஜெயந்தி அன்னிக்கு நாம பிளாக்லே சரக்கு வாங்கினது இவருக்கு எப்படி தெரியும்... ) ஆமா... நீங்க என்ன போலீசா?

அரவிந்த் (விழுந்து விழுந்து சிரித்து கொண்டே) :யோவ்... நைனா... அந்த பிஞ்சு மூஞ்சை பார்த்து... போலிசுன்னு சொல்றே, உன்னோட நகைச்சுவை உணர்வை பல பேரு சொல்ல கேட்டிருக்கேன், ஆனா இன்னிக்கு அது உண்மைன்னு தெரிஞ்சுகிட்டேன்...

ஸ்டார்ஜன் : தம்பி என்ன!!! நீ.... சேம் சைடு கோல் போடுறே? திடீர்னு...

அரவிந்த் : சாரிண்ணே... மன்னிச்சுகோங்க... இருந்தாலும் அவரு உங்கள போலிசுன்னு நெனச்சி பயப்படுறாரே அதை நெனச்சி சிரிக்கேன்...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அதெல்லாம் ஒன்னும் இல்லே... பிலாக்குக்காகா, அதாவது பதிவுக்காகா வந்திருக்கோம்.

நைனா : சரி என்னமோ போங்க... கேளுங்க..

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அரசியல்வாதி, எழுத்தாளர், கவிஞர், இயக்குனர், நடிகர், நடிகை, விளையாட்டு.. இதில் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க... பத்தி கொஞ்சம் சொல்லுங்க..

நைனா : என்ன? ஏழு தானா?

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: இப்போதைக்கு இவ்ளோ தான்.

நைனா :அண்ணனை டென்சன் பண்ணாதீங்க... நம்பர்லே எனக்கு பிடிக்காத நம்பர் ஏழு மட்டுந்தான். அந்த ஏழு கதை எழுதுறவர் என்னிக்கு திருநெல்வேலிகாரங்களை பிடிக்காதுன்னு சொன்னாரோ அன்னிலேருந்து எனக்கு ஏழு பிடிக்காத நம்பரா போச்சு... சோ, கொஞ்சம் அதிகமா கேளுங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: இதென்னடா பொல்லாப்பா இருக்கு... சரி, பிடிச்ச, பிடிக்காத பேச்சாளர். இதை சேர்த்து எட்டாக்கிகொங்க.

நைனா : அண்ணன் கிட்டே தானே கேட்குறீங்க.. கூட கேட்க வேண்டியது தானே.. நான் என்ன சொல்ல மாட்டேன்னா சொல்ல போறேன்...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: தொழிலதிபர், இசையமைப்பாளர் இதையும் சேர்த்து பத்தா சொல்லுங்க...

நைனா : இவ்ளோ தானா... என்கிட்டே கேட்க இவ்ளோ தான் இருக்கா.. உங்க கிட்டே... அண்ணன் கிட்டே கேட்கனும்னு வந்துட்டீங்க.. தயங்காமே கேளுங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: ஒ.. அப்படியா... பிடிச்ச, பிடிக்காத பதிவு, பாடகர், பாடகி இதையும் சேர்த்துகோங்க... பதி மூணு ஆகிரும்.

நைனா : என்னாது பதிமூனா... விஞ்சானதிலே விஞ்சி இருக்குற வெள்ளைக்காரனே... பதிமூனை பார்த்து அலறுவான், அதனாலே கூட கேளுங்க. பொது அறிவை வளர்த்து கொங்க..

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: என்ன இது...!!!! சரி, 'சமூக சேவகர்' இவரை சேர்த்து பதினாலா ஆக்கிருங்க...

நைனா : என்னாப்பா இது, ஒன்னு ஒண்ணா கூட்டுறீங்க... அண்ணன் கிட்டே என்ன காசு பணமா கேட்குறீங்க... உலக விசயங்களை தானே கேட்குறீங்க... அதனாலே யோசிக்காமே கேளுங்க... யோசிக்க கேளுங்க.

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அப்படியா... நீங்க பல பத்திரிகை பேரு சொல்லும்போதே நெனச்சோம், ... நீங்க பெரிய ஆளாத்தான் இருப்பீங்கன்னு.... முனைவர், வைத்தியர், ஆராச்சியாளர், கேமரா மென், பெண் கவிஞர், பெண் எழுத்தாளர்னு போட்டு இருபது ஆக்கிருங்க... எங்களுக்கும் படிக்க நல்லா பொழுது போகும்.... திடீர்னு எப்படியாது, எங்கேயாவது சண்டை பிச்சுகிசின்னா... இன்னும் ரெண்டு வாரத்துக்கு... மேட்டர் போடாமலேயே.. பொழுதை ஓட்டிரலாம்...


நைனா :எப்பா... நல்லவங்களா... இப்படி தான் இருக்கணும், அண்ணனோட அறிவுகண்ணை தொறந்து வச்சிட்டீங்க... அதோடு பல வாசகர்களோட அறிவுகண்ணையும் தொறந்துட்டீங்க... அண்ணன் பதில் சொல்லாமலையே... இன்னும் கேளுங்க... கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு எப் எம் ரேடியோ மாதிரி சொன்னாலும், கேட்டு கிட்டே இருந்தீங்களே.... அந்த தன்னம்பிக்கைக்கு இந்த அண்ணன் தலை வணங்குறேன்...

ஒரு கேள்வியா ரெண்டு கேள்வியா... இருபது, இருபது கேள்வி கேட்டிருக்கீங்க... ஆனா அண்ணனுக்கு மொக்கை போடுறது மட்டுந்தானே தெரியும், இப்படிலாம் கேள்வி கேட்டு அண்ணனை பெரிய ஆளா ஆக்கி புட்டீங்களே... இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்னு தெரியலையே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஒன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்... கேள்வி கேட்குறது ஈசி ஆனா பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்னு... இப்போ தெரிஞ்சி கிட்டேன்னு சொன்னா ரொம்பா சாதாரணம்...அதை விட ஒன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்... அது வேற ஒன்னும் இல்லே... " நீங்க ரெண்டு பெரும் ரொம்ப நல்லவங்கன்னு" புரிஞ்சிகிட்டேன்... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


டிஸ்கி 1: அண்ணன் ஸ்டார்ஜன் அவர்களே, மன்னிச்சிகோங்க... சும்மா மொக்கை போடுறதுக்கு தான் செஞ்சிருக்கேன்... காண்டாகிராதீங்க.
டிஸ்கி 2: பதில் சொல்லாமே தப்பிக்க, என்னவெல்லாம் செய்யா வேண்டி இருக்கு...

Thursday 12 November 2009

ஹே... நானும் பெரிய புடுங்கிதான்...


நான் எழுதாத போதும் தினந்தோறும் எனது கடைக்கு, பல பேரு வருகை தந்திருக்கிறார்கள். அதில் இவன் என்ன எழுதி இருக்கிறான்? பார்க்கலாமே! படிக்கலாமே! என்று வந்தவர்கள் விரல் விட்டு எண்ண கூடிய அளவிற்கு வந்திருப்பார்கள் என்று யாரும் பொறாமை பட வேண்டாம், வந்தவர்கள் உலகில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கையிலேயே இருந்திருப்பார்கள். ஆனால் அதே சமயத்தில், நல்ல வேளைடா!!! இவன் ஒன்னும் எழுதலே நாம தப்பிச்சோம் என்று வந்து "கன்பார்ம்" பண்ணிட்டு போனவங்கதான் மிக அதிகம் என்று எந்த உளவு துறை ரிப்போர்ட்டும் சொல்லாமலேயே எனக்கு தெரியும்... ஹி...ஹி...ஹி.... அந்த நல்ல உள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளும். வணக்கங்களும்.



இதுநாள் வரை, நான் பிடுங்கியது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான் என்று அறியப்பட்டது. இப்போது எனது திறமையை (அப்படி ஒன்னு இருக்குன்னு தான் எல்லாரும் நம்பிகிட்டு இருக்காங்க...)மேலும் செம்மை படுத்தும் முகமாக, பல பயிற்சி பட்டறைகளுக்கு சென்று வந்தேன். ஆகையால் தாங்களும், எனது மொக்கை ஏதும் இன்றி மகிழ்ச்சியாக இருந்திருக்க கூடும். ஆனால் என்ன செய்வது...?! விதி வலியது அல்லவா...!!! நான் எனது பயிற்சியாளர்களை படுத்திய பாட்டால், அவர்களும் அவர்கள் தலை தப்பினால் போதும் என்று எண்ணி, என்னை "பெரும்புடுங்கி" என்று ஒப்பு கொண்டு விட்டார்கள்.. ஆகவே...

நான் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற, நல்லவர்கள் பதிவர்கள் பக்கமே வந்து விட்டேன்.
தலைப்பு பதிவுலே வரனுமாமே..!!!
அதனாலே... என்னை, பற்றி என்னோட பயிற்சியாளர்கள் சொல்லியதை சொல்லி முடிக்கிறேன்.

"ஹே... நானும் பெரிய புடுங்கிதான்".



இனி மொக்கைகள் தொடரும்....