Monday 29 September 2008

பயடேட்டா

இது கண்டிப்பாக கோவி அண்ணாவின் பதிவுக்கு எதிர் வினை தான். அவருக்கு பல பேரை தெரியும் அதனாலே அவர் மட்டும் தான் பயடேட்டா போடனுமா என்ன? அதனாலே நானும் போட்டுட்டேன் எனக்கு தெரிந்த பய-டேட்டாவை....

நான் இங்கே சில பய-டேட்டாக் களை கொடுத்து உள்ளேன். இது இங்கே நம்ம வலை உலகில் யார் யாருக்கு என்ன என்ன உள்ளது என்று நீங்களே கும்மி கொள்ளுங்கள். நானே போட்டு இருப்பேன்... ஆனால் வலை உலகில் எனக்கு யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது.. ஆகையால் நான் சொன்னால் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகையால் தெரிந்தவர்கள், தெரிந்தவர்களை கும்மி கொள்ளலாம்,கொல்லலாம்.

(யாரும் இதை சீரியஸா எடுத்து என்னை கும்மிறாதீங்க)

Acarophobia -- fear of skin infestation by mites or ticks
Acousticophobia -- fear of noise
Acrophobia -- fear of heights
Aerophobia -- fear of flying
Agoraphobia -- fear of open spaces
Ailurophobia -- fear of cats
Algophobia -- fear of pain
Amaxophobia -- fear of riding in a vehicles
Androphobia -- fear of men
Anginophobia -- fear of sore throat
Anthropophobia -- fear of people, especially in groups
Apiphobia -- intense fear of bees
Arachnophobia -- fear of spiders
Astraphobia -- fear of lightning
Atelophobia -- fear of imperfection
Automysophobia -- fear or dislike of being dirty
Autophobia- Fear of being alone or of oneself (எனக்கு மற்றும் பல புதிய பதிவர்களுக்கு)
Bacteriophobia -- fear of bacteria
Bathophobia -- fear of bathing
Batophobia -- fear of passing high buildings
Batrachophobia -- fear of frogs and toads
Belonephobia -- fear of pins and needles
Blennophobia -- fear of slime
Bogyphobia -- dread of demons and goblins
Bromidrosiphobia -- fear of having unpleasant body odor
Brontophobia -- fear of thunder and thunderstorms
Carcinophobia -- fear of cancer
Cardiophobia -- fear of heart disease
Cenophobia -- fear of open spaces
Cheimaphobia -- fear or dislike of cold
Chrometophobia -- fear or dislike of money (ஹும்ம்... வரும்... வட்டார போக்குவரத்து அலுவலக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இடும் போது வரும்)
Cibophobia -- fear of food
Claustrophobia -- fear of enclosed spaces
Cnidophobia -- insect stings
Coitophobia -- fear of sexual intercourse
Coprophobia -- fear of excrement/feces
Cyberphobia -- fear of computers ()
Cymophobia -- fear of waves
Cynophobia -- dread of dogs
Cypridophobia -- fear of venereal disease
Demonophobia -- fear of spirits, demons
Demophobia -- dislike of crowds
Dermatophobia -- fear of skin disease
Dipsophobia -- fear of drinking
Domatophobia -- fear of being in a house
Doraphobia -- fear of contact with animal fur or skin
Dysmorphophobia -- fear of deformity
Ecophobia -- fear of home surroundings (அநேக குடும்ப-இஸ்திரி களுக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன்...அதுவும் இப்போ தீபாவளி நேரம் வேற)
Eleutherophobia -- fear of freedom
Elurophobia -- fear of cats
Emetophobia -- fear of vomiting
Enetophobia -- fear of needles or pins
Entomophobia -- fear of insects
Ergophobia -- fear of work
Erotophobia -- fear of sexual feelings and their physical expression
Gamophobia -- fear or dislike of marriage
Gephyrophobia -- fear of crossing a bridge
Gerascophobia -- fear of growing old
Glossophobia -- fear of speaking in public or of trying to speak
Graphophobia -- dislike of writing
Gymnophobia -- fear of nudity
Gynophobia -- fear of women
Hadeophobia -- fear of hell
Hagiophobia -- dislike for saints and the holy
Hamartophobia -- fear of error or sin
Haptophobia -- fear of touch
Harpaxophobia -- fear of robbers
Hedonophobia -- fear of pleasure
Hemaphobia -- fear of the sight of blood
Herpetophobia -- fear of reptiles
Hierophobia -- fear or dislike of sacred objects, fear of priests
Hippophobia -- fear or horses
Hodophobia -- fear or dislike of travel
Homophobia -- fear of homosexuality (same-sex affection)
Hydrophobia -- fear of water
Hydrophophobia -- fear of rabies
Hygrophobia -- fear of liquids
Hypnophobia -- fear of sleep
Iatrophobia -- fear of doctors
Ichthyophobia -- fear of fish
Iophobia -- fear of poisons
Kakorrhaphiophobia -- fear of failure or defeat
Katagelophobia -- fear of ridicule
Keraunophobia-- fear of thunder and lightning
Kinetophobia -- fear or dislike of motion
Kleptophobia --fear of thievery
Kopophobia -- fear of mental or physical examination
Laliophobia -- fear of talking
Linonophobia -- fear of string
Mechanophobia -- fear of machinery
Merinthophobia -- fear of being bound
Microphobia -- fear of germs
Misanthropy -- a hatred of mankind in general
Misophobia -- fear of dirt
Molysomophobia -- fear of infection
Musophobia -- fear of mice
Myxophobia -- fear of slime
Necrophobia -- fear of death or corpses
Neophobia -- fear of new things
Noctiphobia -- fear of the night
Nosophobia -- fear of contracting a disease
Nudophobia -- fear of nudity
Nychtophobia-- fear of darkness
Obesophobia -- fear of gaining weight
Ochlophobia -- fear of crowds
Ochophobia -- fear of vehicles
Odontophobia -- fear of teeth
Odynophobia -- fear of pain
Ombrophobia -- fear of rain
Ophidiophobia -- fear of snakes
Panphobia -- a nonspecific fear of everything
Paraphobia -- fear of sexual perversion
Parasitophobia -- fear of parasites
Pathophobia -- fear of disease
Peccatiphobia -- fear of sinning (இது எனக்கும் இருப்பதால் தான், பதிவு நிறைய போடுறது இல்லை...)
Pedophobia -- fear of children
Peladophobia -- dread of baldness
Peniaphobia -- fear of poverty
Phagophobia -- fear of eating
Pharmacophobia -- fear of drugs
Phasmophobia -- fear of ghosts
Phenogophobia -- fear of daylight
Phobophobia -- fear of fear itself
Phonophobia -- fear or dislike of noise
Photophobia -- fear of light
Phonemophobia -- fear of thinking (இது பல பேருக்கு இருக்கிறதனாலே தான், நெறைய பேரு வலைப்பதிவு பக்கம் வருவதே இல்லை)
Pnigophobia-- fear of choking or smothering
Poinephobia -- fear of punishment
Psychophobia -- fear of the cold
Pyrexiophobia -- fear of fever
Rhabdophobia -- fear of being beaten
Rhypophobia -- fear of filth
Sciophobia -- fear of shadows
Scoleciphobia -- fear of worms
Scopophobia -- fear of being looked at
Scotophobia -- fear of the dark
Socialphobia -- fear of people or crowds
Tachophobia -- fear of speed
Taphephobia -- fear of being buried alive
Telephonophobia -- fear of the telephone
Theophobia -- fear of God (ஹை...இதை ஆன்மிகம்னு சொல்லலாமா?????)
Thanatophobia -- fear of death
Tocophobia -- fear of childbirth
Tomophobia -- fear of surgical operations
Topophobia -- fear of certain places
Toxiphobia -- fear of being poisoned
Trichophobia -- fear of hair
Urophobia -- fear of urine
Vaccinophobia -- fear of vaccines and vaccination
Venereophobia -- fear of venereal disease
Venustraphobia -- fear of beautiful women
Verminophobia -- fear of germs
Vermiphobia -- fear of worms
Xenophobia -- fear of foreigners and strangers
Zoophobia -- fear of animals



Ok... Start the Kummiies..... If you are free....

Friday 26 September 2008

பதிவர்களுக்கு நறுக்குன்னு நாலு கேள்வி....


தில் இருந்தால், இந்த என்னோட "நறுக்" கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்போ "நறுக்" கேள்விகள் காலம் போல் இருக்கிறது. எனக்கு வலை உலகில் யாரும் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. ஏதோ நமக்கு தோனியதை எழுதுவோமே என்று எழுத வந்து, ஒண்ணும் சாதிக்கலே. ஏதோ ஆணி புடுங்குற பொழப்புலே இருந்து ஒரு சிறு ஆறுதல் கிடைக்குது. தமிழ் அன்னைக்கு புது ஆபரணம் செய்து போடும் அளவுக்கு அறிவில்லாட்டாலும், கீழே இருக்கிற சாமரத்தை எடுத்து விசிறி விட உடம்பிலே தெம்பு இருக்கு. அந்த முயற்சியா தான் நம்ம பதிவு. (மயிலை பார்த்து ஆட வந்த வான் கோழி நான் என்று எனக்கும் தெரியும்). பின்னூடடமே வரமாட்டேங்குது, பின்னே நம்மை மதித்து யார் பதில் சொல்லுவாங்க? அதனாலே நான் இந்த "நறுக்" கேள்விகளை பொதுவில் வைக்கிறேன்.




தில் இருந்தால் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

1. "நறுக்" கேள்விகள் என்றால் என்ன?

2. "நறுக்" கேள்விகள் யாரிடம் கேட்க வேண்டும், யாரிடம் கேட்க கூடாது?

3. "நறுக்" கேள்விகளை சாய்சில் விடலாமா?

4. காய்கறி வெட்டுவதை நாம் காய்கறி "நறுக்"க போகிறேன் என்று சொல்லும் நாம், முடி வெட்டுவதை மட்டும் முடி "நறுக்"க போகிறேன் என்று ஏன் சொல்வதில்லை?





விடைகளை எதிர் பார்த்து....... இருக்கிறேன்.

Wednesday 24 September 2008

லக்கியின் அல்லக்கையாக தன்னை அறிவித்த பரிசலுக்கு - பதில்.

வாங்க... வாங்க..... வாங்க...... இப்பத்தான் உங்களுக்கு என் வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சுதா..? என்ன அப்படி அடிச்சி பிடிச்சி வந்திருக்கீங்க. கோப படாதீங்க... உங்களை எல்லாம் நாங்க எங்க வீட்டுக்கு பின்னே எப்படித்தான் வரவைக்கிறது. பாருங்க இந்த குடிசை பகவான் பி லாக் க ர் கொடுத்த இலவச மனையிலே கட்டினது தான், பல பேரு பொருளோடு கட்டி இருக்காங்க, நானே நை+ஆண்டி நைனா என்கிட்டெ பொருள் இருக்குமா...அதனாலே உங்கள மாதிரி பொருள் இருக்கிற நாலு பேரு வந்து போனாததானே, நம்ம வாழ்க்கைக்கும் ஒரு பொருள் இருக்கும்.

சரி..சரி..சரி.. சமாச்சாரத்துக்கு வறேன்.

அதுக்கு முன்னே நம்ம அண்ணன் பரிசலாரின் என்ற நான் யாருக்கு அல்லக்கை? இந்த பதிவையும் கொஞ்சம் படிச்சிட்டு வாங்க......

என்ன? படிச்சாச்சா

அல்லக்கை-னா என்னன்னு ஒரு ஆராய்ச்சி வேற.

எவ்ளோ எளிதான விஷயம். இதற்கு போய்.??

அல்லக்கை:
முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் கான்பிபார்கள். அவர்களே பின்னாளில் அள்ள கை என்று அழைக்க பட்டார்கள். பின்னாளில் இதுவே மாறி அல்லக்கை என்றாகி விட்டது. வெகு நாளுக்கு பிறகு ஏவிய வேலை செய்யும் அனைவரையும் அல்லக்கை என்று அழைக்கலானார்கள் மக்கள்.

ஸ்..ஸ்...ஸ்... அப்பா.... இன்னும் என்ன? என்ன? கேள்விலாம் வரப்போகுதோ?

பி. கு: தலைப்பு காலையிலே அண்ணன் கோவியாரின் பதிவை படித்தினால் வந்த பாதிப்பு... ஹி ..ஹி..ஹி...
( இருந்தாலும் பொருந்தி வருதுலொ?)

Friday 19 September 2008

பதிவு எழுதுவோர்க்கு தலைப்பு இலவசம்.

ரத்னேஷ் அண்ணாவின் பதிவில் பின்னூடடம் இட்டு இருந்த போது அண்ணன் ஒரு கேள்வி கனையை என்னை நோக்கி ஏவி உள்ளார்கள்.


நையாண்டி நைனா சார்,

//அன்றும் இன்றும் என்றும் புனிததத்தை கெடுக்கும் செயல்களில் பெரியாரோ, பெரியாரின் தொண்டர்களோ செய்வதில்லை.//

வினய நோக்கம் இன்றி தெரிந்து கொள்வதற்காக மட்டும் கேட்கிறேன். பெரியாரோ பெரியாரின் தொண்டர்களோ புனிதம் என்று எவற்றைக் கருதுகிறார்கள் என்று சொல்வீர்களா?


அந்த கேள்வி நெஞ்சில் தைத்ததால், சோர்ந்து, இருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆண்டு இறுதி தேர்விலே கூட இப்படி யோசிக்கலை, அப்படி யோசிக்கிறேன். அதுக்கு முன்னாடி உங்களுக்கும் அந்த கேள்வியை வைக்கிறேன், என் மதிக்கு எட்டாத்தது உங்கள் அறிவிற்கு புலப்படலாம் அல்லவா? நீங்களும் இதற்கென்று தனியாக யோசிக்காமல், பேருந்தில் செல்லும்போதோ, வீட்டில் படுத்திருக்கும் போதோ, இல்லை அரசு அலுவலகத்தில் லஞ்சத்தையும், விண்ணப்பதினையும் உள்ளே அனுப்பி காத்திருக்கும் போதோ அல்லது கழிவறையில் 'இருக்கும்' போதோ, தயவு செய்து யோசித்து இந்த தமிழ் நாட்டுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் அறிவை ஏற்றி வைக்குமாறு உங்களை கேட்டு கொள்கிறேன்.

இவற்றிற்கு நான் பதில் சொல்லும் முன்னே ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நான் பெரியாரும் அல்ல, பெரியவரும் அல்ல. பெரியாரின் தொண்டனும் அல்ல, சிறியாரின் குண்டனும் அல்ல.

"புனிதம் என்றால் என்ன?"

புனிதமானது நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, மனிதனுக்கு மனிதன் வேறுபடும். ஆனால் சகலரும் என்ன விரும்புகிறார்கள்? தன்னை அனைவரும் மனிதனாக நடத்த வேண்டும் என்று எண்ணுவது, அந்த வகையில் பெரியாருக்கும் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் ( உண்மை தொண்டர்கள்) பிற மனிதனின் வாழ்வாதார உரிமை, உரிமை, உரிமை, உரிமை ஒன்றே ( கருவிகளோ மற்ற பொருள்கலோ அல்ல) புனிதமாகும்.எதனையும் ஆராயும் அறிவும், கேள்வியுமே மந்திரமாகும்.


இன்னும் மற்றவர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கலாம்.

Tuesday 16 September 2008

எனது பயணத்தை தொடர்கிறேன்...

அப்பாடா.. ஒரு வழியா நம்ம அலுவலகத்திலே போட்டிருந்த புதிய இணைய விதிகளை, சிறிது தளர்த்தி இணைய வீதிகளில் நடமாட அனுமதி கொடுத்ததினால், இப்போது என்னால் இந்த பதிவுலகிற்கு காலடி வைக்க முடிந்தது.

இணைய தொடர்பு மட்டுறுத்தப்பட்டிருந்த காலத்தில் பதிவு செய்ய அதிக தகவல் இருந்தது போலவும், இப்போ வற்றி போனது போலவும் ஒரு மாயை. ( சட்டிலே இருந்தாதானே ஆப்பையிலே வரும் ... என்று யாரோ முணுமுணுகிறார்கள்). இப்போ என்ன பதிவு போடலாம்னு யோசிக்கிற வேளையிலே ஒண்ணுமே வந்து தொலைய மாட்டேங்குது.
சரி மக்கள் தப்பித்தார்கள் என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டு,
நான் மீண்டும் வருவேன் மொட்டை பிளேடு கொண்டு.
என்று அறிவித்து எனது பயணத்தை தொடர்கிறேன்.