Tuesday 29 July 2008

பொய்யை பரபரப்பாக்கும் குமுதம்.

இன்றைய உலகில் பத்திரிகையின் வியாபார தந்திரத்தினால், ஜனநாயகத்தின் தூண் என்று வர்ணிக்கபடுகிற பத்திரிகை மிகவும் கீழிறங்கி, ஜாதி, மத உணர்வு என்ற புற்று கொண்டுள்ளது. ஜனரஞ்சகம், பெரும்பான்மை மக்களால் ரசிக்கபடுவது என்று கூறி அதனாலேயே அது தான் சிறந்தது, அதில் சொல்லபட்டுள்ளது எல்லாம் உண்மை. கூறுவோமெயானால், நம்மை போல் மூடர்கள் யாருமில்லை.

சில பத்திரிகைகள் தங்கள் வருமானம் பெருக வேண்டும் என்ற காரணத்திற்காகவும், சமுதாயத்தில் பரபரப்பை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காகவும் சில வேடிக்கை வினோத செய்திகளை வெளியிடுவார்கள். அது போல தான் இதுவும். இதில் பாரதியையும், குஷ்புவையும் நுழைத்துள்ளார்கள்.

பாரதி என்ற பெயர் பாரதியாருக்கு மட்டும் தானா? குஷ்பு என்ற பெயர் அந்த சினிமா நடிகைக்கு மட்டும் தானா? அந்த பெயரிலே வேறு யாரும் இருக்க மாட்டார்களா? இருந்தாலும் அவர்கள் ஜாதி சான்றிதழ் வாங்கவே வரமாட்டார்களா? அப்படியே வந்தாலும் வேறு பெயரில் தான் எடுப்பார்களா? என்ன கொடுமை சார் இது?

அவர்கள் கொடுத்த தகவல் அது பாரதி தான், அது குஷ்பு தான் என்று அருதியிட்டு, உறுதிப்பட கூறுவது எப்படி?

இவர்கள் ஏதோ பரபரப்பை உண்டு பண்ண, இவ்வாறு எழுதி உள்ளார்கள் என்றே எனக்கு படுகிறது. இவர்கள் இவ்வாறு குற்றத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்றால், இவர்களுக்கு சமுதாயத்தின் மீது உண்மையில் அக்கறை உண்டு என்று சொன்னால் இந்த அசிங்கத்தை செய்வோரை கையும் மெய்யுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது தானே. அல்லது இதே நாடகத்தை சம்பந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளின் முன்னே அல்லது ஒரு மாவட்ட ஆட்சியர் முன்னோ, காவல் துறை உயர் அதிகாரிகளின் துணை உடனோ செய்யலாமே.






இது அந்த பத்திரிகையின் கற்பனையே அன்றி வேறில்லை.



இணைப்பு: இதனை முன்னிறுத்தி சில துவேச கருத்துக்கள் பரப்பபட்டதால் இன்னும் சில தொக்கி நிற்கும் கேள்விகளை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளேன்.

1: சில மாதங்களுக்கு முன்னே, ஜனாதிபதி, மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் வழங்கினார்கள், இலஞ்சம் வாங்கி கொண்டு, அது மாதிரி கைது வாரண்ட் பிறப்பித்தவர்கள், திரு. ஹரி சொல்லியது போல் உள்ள தமிழ் நாட்டு அதிகாரிகள் தானா?

2. இந்தியாவின் பாதுகாப்பு/உளவு துறையில் இருந்து கொண்டு இந்தியாவை மற்றவர்களுக்கு காட்டி கொடுக்கிறார்களே அவர்கள் திரு. ஹரி சொல்லியது போல் உள்ள தமிழ் நாட்டு அதிகாரிகள் தானா?

Friday 4 July 2008

அப்படியா சேதி?????

இவ்ளோ நாளும் நாம ஒலக நாயகன் கமல ஹாசனின் தெரமைய புகலோ புகழுண்னு புகழுந்து பொலந்து கட்டுனோம்... நானும் கூட ரொம்ப ஒன்றி போயி யாரை பார்தாளும் கமல ஹாஸனாகவே தெரிய, ஆபீஸுக்கு ஒருநா அல்வா கொடுத்துட்டு.. பார்க்கான்டே உக்காந்து ரொம்ப சிலாகித்துவிட்டு ஏதோ பெரிய கலா ரசிகனாட்டம் பீத்திகிட்டே இருந்தப்போ வருத்த படாத வாலிபர் சங்கத்தை ( இது நம்ம இணையத்தில் உள்ள வ.வா. சங்கம் அல்ல ) சேர்ந்த ரெண்டு பேரு வந்து என்கிட்டெ கேட்டனுங்க... நீங்க திருந்தவே மாட்டீங்கலாண்ணு.... " அடங்கொக்கா மக்கா... நாம என்னடா..செஞ்சோம்னூ யோசிச்சிக்கினு இருக்கும் போது சொன்னான்.. "ரஜினிக்கு வாழ்க்கை கொடுத்ததும் எங்க தலைவரு தான், இப்போ கமலுக்கு வாழ்க்கை கொடுத்ததும் எங்க தலைவர் தான்" என்று சொன்னான் "எப்படி? ..எப்படி?" என்று நானும் கேக்க..

சந்தூரமுகி பட விழாவில் தானே சூப்பெரு இஸ்டாரே சொன்னாரே... "என்கிட்டெ கால்சீட் வாங்கூறது முக்கியமில்லை.. போய் வ.வா சங்கத்தின் தலைவரு கைய்ப்புள்ள கிட்ட பஸ்ட் கால்சீட் வாங்கிகினு வாங்க அப்பாலே நான் தரேன்னு சொன்னேன்" என்று தானே சொன்னாரு....

ஓ... இப்படி ஒரு சேதி இருக்கா....என்று யோசித்து கொண்டே ...... அப்புறம்????..... என்று அடுத்த விடைக்கு கொக்கியை போட....

"இந்த தசாவதாரம் என்ன அவரு கான்செபுட்டா??? இல்லவே இல்லை.... "மனத்தை திருடி விட்டாய்" படம் பார்தீளா.. அதுலெ.. எங்க கைப்புள்ள, பிகர் கிட்டே ரீலு விட்டுக்கிட்டே இருப்பாரு.. அப்ப அந்த காட்சியை பார்த்தீங்கன்னா அதுலெ அவரு அப்பா, அம்மா, அண்ணன், மற்றும் தம்பி என்று நாலு ரோழுலெ வருவாரு.. இதுலே இருந்து பிடிச்சது தான் தசவதார கான்செபுட்டு..." இதை நான் யோசிச்சிக்கிட்டே இருக்கும் போதேய்.. அந்த வ.வா. சங்கத்து ஆளுங்க கெளம்பி போய்ட்டாங்க

தூரத்திலே போய்கிட்டே இருக்கும்போது ஒருத்தன் சொன்னான்... " இந்த தமிழ்நாட்டு மக்க ரொம்ப நல்லவங்க, எத்தனை பேரு எத்தனை தடவை, எதுலெ இருந்து காப்பி அடிசாலும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க, பாத்துட்டு பதிவும் போடுவாங்க".. என்று....

சம்பளத்திற்கு ஆள் வச்சு யோசிப்பாங்களோ?????

Tuesday 1 July 2008

"அஜக்-பஜக்" கதை

ஆஹா... என்ன செய்யிறது....

இவ்ளோ நாளும் தசாவதாரம், தசாவதாரம் என்று பல பதிவர்கள் பல அவதாரம் எடுத்து எழுதினார்கள். தசாவதாரம் படத்தில் தான் சுனாமி வந்து எல்லோரையும் காப்பாற்றியது, சிலரை கொன்று..... ஆனால் வலை உலகில் வந்த தசாவதார சுனாமியோ பலரை கொன்று சிலரை காப்பாற்றி உள்ளது. சரி நம்ம பங்குக்கு ஏதாவது எழுதி போடலாம்னு பார்த்தா, இந்த பாழா போன "கொயாசு" விதியினால் நம்ம விதி "கொயாசு" ஆகி விட கூடாதுன்குற பயந்தான், எழுதாமே விட்டேன்.

சரி திரும்ப வந்து பார்த்தா. அ. ஆ ( நன்றி: எஸ்.ஜே. சூர்யா) கதைகளா வருது. நாமளும் யாரும் பார்க்காமே கதைய படிச்சிட்டு போலாம்னு பார்த்தா, இங்கு எல்லாருமே பெரிய எஸ்.ஜே. சூர்யா-வா இருக்காங்க.... ஆமாங்க.....இருக்கு, ஆனா இல்ல.... இருக்கு, ஆனா இல்லை என்று சொல்லி..... திருப்பு முனை, பருப்பு முனை-ன்னு சொல்லி நம்மை கடுப்பின் முனைக்கே கொண்டு செல்கிறார்கள். அதனாலே நாமும் ஒரு "அஜக்-பஜக்" கதை எழுதி சங்கத்தில் சேர்ந்துவிடுவோம்னு சொல்லி எழுதலாம்னு நெனச்சு தயாராகி, சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று திரும்பி பார்க்கும் போது... என் அருகே என் குழுவை சேர்ந்த பரிசோதகர், "சோதனை செல்வி" நின்று, இந்த பதிவு எல்லாத்தையும் படித்துவிட்டு குறும்பாய் ஒரு பார்வை பார்த்து " அஜக்" என்று ஒரு அடி விட்டார், நானும் "பஜக்" என்று கையை பிடித்து, தப்பினேன், அடியிலிருந்து......

அப்பாடா... நாமும் ஒரு கதை எழுதியாச்சு...