Friday 25 April 2008

புத்திசாலி புருஷன்

A wife mentioned to her husband that for her birthday, she would like something that accelerates from 0 to 100 in four seconds.
She was expecting something like this............

*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*

But her husband presented her with something very different...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

Friday 18 April 2008

ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்..............

கும்மி, கும்மி என்று சொல்வார்கள், கேள்வி பட்டதுண்டு. இப்போ நேரே பார்க்கிறேன். அண்ணன் டோண்டு அவர்கள், இருந்துக்குவாராம் அவரோட அல்லக்கை அண்ணன்கள் சில கேள்விகளை கேப்பார்ககலாம், இவர் 'அறிவாலித்தனமாய்' பதில் சொல்வாராம். இதற்கு பேரு கும்மியாட்டம், தானே? ஹி..ஹி... தமாசா இல்லை? இதைவிட பெரிய ரோதனை அதுக்கு பின்னூட்டம் வேற?

அப்படியே அவர்களின் கேள்விகளின் தரத்தை பார்த்தால்????
ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.
அது என்னவோ இவர்களுக்கே ஒரு சிலபஸ் வச்சிக்கிட்டு கேப்பாங்க போலிருக்கு.

பாடம்: 'சர்வதேச வரலாறு'
முதல் பகுதி: மாவீரன் மோடி - புகழ் மாலை ( கடவுள் வாழ்த்து பகுதி - மனப்பாட பகுதி )
இரண்டாம் பகுதி: இந்தியாவில் கம்யூனிசம் - மறு பதிப்பு.
மூன்றாம் பகுதி: திராவிட எதிர்ப்பு கேள்விகள்.
நான்காம் பகுதி: டோண்டுவின் சாதனைகள்/வேதனைகள்/ ரோதனைகள்.
ஐந்தாம் பகுதி: கிச்சு, கிச்சு கேள்விகளும், பதில்களும்.

இன்னன்ன பகுதியில் இருந்துதான் கேள்வி கேக்கப்படும். ( பதில்கள் டோண்டு 'வீண்' பார்வையில்)

என்றைக்காவது இதனை தவிர கேள்வி பதிலில் ஏதாவது வந்துள்ளதா?
இதனை தவிர்த்து ஆக்க பூர்வமா? சமுதாய சிந்தனையுடன் கேள்வி கேட்கப்பட்டு விடை வந்தது உண்டா?

தங்களின் கொள்கைகளை விளக்கி கேள்வி கேட்டும், விளக்கியும் பதில் போடலாம்.
நான் ஏன் சொல்கிறேன் என்றால், கேள்வி பதிலுக்கு அவரே பொறுப்பாளி ஆகிறார். கேள்விகளை தேர்வு செய்யும் உரிமையும் அவருக்கு உள்ளது. வந்த கேள்விகளை தேர்வு செய்து விடை அளிக்கலாமே, தேர்வாகாத கேள்விகளை, கேள்வி கேட்டவர்களுக்கு அறிவிப்பு செய்து விளக்காலாமே?/விலக்காலாமே?

இதற்கு தினதந்தியில் வரும் 'குருவியார் பதில்கள்' எவ்வளவோ மேல்.


ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்...............
நமக்கெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் ரெண்டு பாம்.
காலையில் அண்ணன் டோண்டு விண் "கேள்வி-பதில் பாம்",
அதை படித்துவிட்டு நாம் தேடுவதோ "ஜன்டு பாம்".



பின் குறிப்பு: இதனை நான் வ.வா.ச இரண்டாம் ஆண்டு போட்டிக்காக எழுதவில்லை, தேர்வானால் நான் பொறுப்பில்லை.
திஸ்கி:இது தனி மனித தாக்குதல் இல்லை- இது திரு.டோண்டு அவர்களின் கேள்வி பதில் பகுதிக்கான விமர்சனம்.

Monday 14 April 2008

யாரடி நீ மோகினி-விமர்சனம்

ஒரு நூத்தி அறுபது ரூபாயில் என்னென்ன செய்யலாம்?

1. தான் குடும்பத்திற்கு எதிர்கால சேமிப்பாய் வைக்கலாம்.

2. வீட்டிற்கு தேவையான பொருள் வாங்கி வைக்கலாம்.

3. பிள்ளைகள் படிக்க தேவையான நூல்கள் வாங்கி அடுக்கலாம்.

4. தான் பெண்டாட்டிக்கு ஒரு புடவை வாங்கி கொடுக்கலாம்.

5. அப்பா, அம்மா விற்கு மருத்துவதிற்கு பயன் படுத்தலாம்.

6. ஏழைக்கு உணவளித்து பசி போக்கலாம்.

7. ஏழை மாணவனுக்கு உடை வாங்க உதவி செய்யலாம்.

8. புண் பட்ட மனத்தாய் இருந்தால் 4,5,6 பாக்கெட் தங்க ராஜா(Gold Kings), வடிகட்டி(Filter), உள்ளம்( Wills), கத்தி (Scissors) என்னாமாவது மனசுக்கு பிடிச்சசத்தை வாங்கி ஊதலாம்.

9. குவாட்டறோ, ஆப்போ, வாங்கி ஊத்தலாம், நண்டு இறா, சுறா, புறா கோழி கொக்கு, கௌதாரி ன்னு எதையாவது வாங்கி வெட்டலாம்.

10.பணம் அதிகமா இருந்தா. சும்மா ரோட்ல போறவனை கூப்பிட்டு, வடிவேலு மாதிரி வீரம் பேசி முதுகிலே ரெண்டு போட்டு போலீஸுக்கு தண்டமா கூட கொடுக்கலாம்.

ஆனா சும்மா கூட
"யாரடி நீ மோகினி" படத்திற்கு மட்டும் போய்ராதே................


அந்த நூத்தி அறுபது ரூபா, நான் இங்கே மும்பையில் PVR மல்டிபலெக்ஸ்-சில் படம் பார்க்க கொடுத்த தண்டம்.

Friday 11 April 2008

யாராவது... ஒரு யோசனை சொல்லூங்கப்பு.....

தமிழ் கூறும் நல்லுலக சான்றோரே,
பதிவு, பதிவுலகம், பதிவர் என்ற வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டு வந்துட்டேன்.

பதிவு போடலாம். எப்படிப்பட்ட பதிவு போடலாம்? அப்படின்னு யோசிக்கிறேன்.
நமக்குன்னு என்ன கொள்கை வைத்து போடலாம்னு யோசிச்சேன், அதுககப்புறம்தான் தோணிச்சு தமிழ் நாட்டுலெ எவன் கொள்கை வச்சிருக்கான் நாம வச்சிக்கிறததுக்கு?
அதனாலே கொள்கை வச்சுக்கபுடாது என்ற கொள்கை வச்சுக்கிட்டேன். சரிதானே? ( ஐயோ... நம்ம "விசய"காந்து கோவிசுப்பாரோ? )

சரி கொள்கை இல்லைன்னு ஆகி போச்சு
அப்புறம் என்ன எழுதலாம்?
ஏழை, பணக்காரன் வித்தியாசம் எழுதலாமா?, கம்யூனிஸம் தெரியாதே?
முற்போக்கு , பிற்போக்குன்னு அசுரத்தனமா எழுதலாமா? அதுவும் நமக்கு வராதே, நமக்கு அவ்ளோ மூளை இருந்த நான் ஏன் பொட்டி தட்டுற பொழப்புக்கு வறேன். அதை முயலு, இதை முயலாதேன்னு ரத்னமா எழுதலாமா? கோவிலுக்கு போ, போகாதே என்று காலத்தின் வழியை எழுதலாமா?

என்ன ஏலவ பண்றது. ABCD-யே ஒண்ணும் புரியல தயவு செய்து வெலகுங்கன்னு கேக்கலாம். வெலகாம ஊரு வெலெக்கீ வச்சிட்டாங்கன்னா???? அப்புறம் நாம போட்ட கணக்கு தலைகீழ்விகிதமா போய், வவ்வாலாட்டம் ஊருக்கு வெளியே தொங்க வேண்டியது தான்.

ஐயா....குசும்பொன்னும் பண்ணாம, யோசிப்பவர், யோசிக்காதவர்.... யாராவது... ஒரு நல்ல யோசனை சொல்லூங்கப்பு.....
நம்ம குருதி தான் தமிழ்க் குருதி ஆயிற்றே? நமக்கு யாராவது சொன்னால் தானே சுரனையே வரும், புத்தியும் வரும்.

ஒண்ணும் சொல்லவில்லை என்றால் மொக்கை பதிவுதான் வரும்...

Thursday 3 April 2008

அனைத்தும், உள்ளது உம்மிடம்.

வணக்கம்,
என் இனிய என் தாய் நாட்டு மக்களே..!
என்ன இல்லை இத்திரு நாட்டில்?
ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?
என்பது பழைய கூற்று.....

நான் கூறுகிறேன். என்ன திறமை இல்லை உங்களிடம்?
என்ன நலம் இல்லை உங்களிடம்?


அனைத்தும், உள்ளது உம்மிடம்.
ஆணையும் உள்ளது உம்மிடம்.
இணையம் உள்ளது.
ஈகை குணமும் உள்ளது.
உடையும் உள்ளது.
ஊக்கமும் உள்ளது.
எண்ணற்ற வளமும் உள்ளது.
ஏற்ற மிகு சிந்தனையும் உள்ளது.
ஐயமில்லா அறிவும் உள்ளது.
ஒழுக்கமும் உள்ளது.
ஓயா உழைப்பும் உள்ளது.

பின் ஏன் வறுமை?
பின் ஏன் வேலை இல்ல திண்டாட்டம்?


சோம்பேறி தனமும், பொறுப்பற்ற தனமும், சுய நலமும் அதிகம் உள்ளது
மற்றவைகளை, மற்றவர்களை காட்டிலும்